தங்கமணிகளுக்கு எதிரா சர்வேசனும் பதிவு போட
ஆரம்பிச்சிட்டாரு. விடலாமா. அதான் எதிர் பதிவு.
:))
எங்க அவ்வா சொல்லும் கதை இரண்டு இருக்கு
அதை இங்கே கொடுக்கிறேன்.
கதை: 1
நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு பழகிய ரங்க்ஸுக்கு
நல்ல வெந்தயக்குழம்பு வெச்சு சாப்பிடணும்னு ஆசை.
மனுஷன் தங்க்ஸ் கிட்ட ,” உனக்கு இந்த வெந்தயக்குழம்பு
வைக்கத் தெரியுமா!” ன்னு கேட்க. ”தெரியாதுங்க.
ஆனா உங்களுக்காக செய்யக் கத்துகிட்டு செஞ்சு தர்றேன்னு
சொல்றா”
ஆசையா கேட்ட ஊட்டுக்காரருக்காக வெந்தயக்குழம்பு
செஞ்சு வைக்கிறா.
மனுஷன் சாப்பிட உக்காந்து வக்கணையா சோத்தைப்போட்டு,
குழம்பு போட்டு, கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கலந்து
வாய்க்குள்ள போடுறார்.
செம ருசி!!! இன்னொரு கவளம் எடுத்து போடுறார்.
அப்ப ஏதோ குறையற மாதிரி இருக்கு.
கீழே விழுந்து புரண்டு கோபப்பார்வை வீசுறார்..
பயந்து போன தங்க்ஸ்,”என்னங்க ஆச்சு”ன்னு கேக்க
“வெந்தயக்குழம்பு செஞ்ச ஏன் கீரை பருப்புபோட்டு மசியல்’
செய்யலைன்னு” கேட்டு ஒரே ஆர்ப்பாட்டமாம்.
இதுதாங்க பல தங்க்ஸ்களின் நிலமை.
சொன்னது செஞ்சா அதுக்கும் மேலே, அதுக்கும் மேலேன்னு
ரொம்பத்தான் பேராசை இந்த ரங்க்ஸ்களுக்கு.
இதை தெலுங்கில ”புண்யானிகி புலுசு அன்னம் பெடிதே
தோட்டக்கூரன்னு தொல்லி தொல்லி ஏடிசினட்டா”
(போனாபோகுதுன்னு குழம்பு சோறு போட்டா
கீரை வேணும்னு விழுந்து விழுந்து அழுவது)அப்படின்னு
சொல்வாங்க.
கதை:2
இதுவும் கீரைக்கதைதான்.
ஒரு ரங்க்ஸுக்கு நல்லா கீரை மசியல் சாப்பிடணும்னு
ஆசை. தங்க்ஸ்கிட்ட அதைச்சொல்ல ,”அதுக்கென்னங்க
மத்தியானம் சாப்பாட்டுக்கே நல்லா தேங்காய், பச்சைமிளகாய்
சீரகம் அரைச்சு, பருப்பு போட்டு கீரை மசியல் செஞ்சு
வைக்கிறேன்னு” சொன்னாங்க.
வேலைக்கு போன இடத்துலயும் கீரை ஞாபகமாகவே
இருந்திருக்காரு. அதனால் 1 மணிக்கு சாப்பிட போகவேண்டிய
மனுஷன் 12.30க்கே வூட்டுல.
மத்த சமையலை முடிச்சிட்டு தங்க்ஸ் அப்பத்தான்
கீரைக்கு அரைச்சுவிட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுக்கொதிக்கும்
வாசனை ரங்க்ஸ் பசியை அதிகமாக்க தட்டைவெச்சுகிட்டு
உக்காந்திட்டாரு.
“இருங்க இன்னும் கொதிக்கலை. கொதிச்சு, கொஞ்சமா
சூடு ஆறினதும் போடுறேன்னு” சொன்னா ரங்க்ஸ்
கேட்டத்தானே!!!
இல்ல போடுன்னு சொல்ல வேற வழியில்லாம
பரிமாற ஆரம்பிக்க ஆவி பறக்கும் கீரையைப் பாத்து
குஷியாகி அது சூடு என்பதையும் மறந்து ஓரமா
எடுக்காம டக்குனு நடுவுல கைவிட சுடச்சுட இருந்த
கீரை கையை பொசுக்கிடுச்சி.
வந்துச்சே கோபம் ரங்க்ஸுக்கு. அப்படியே ஒரு உதை
கீரை மசியல் இருந்த ஏனத்தை. கீரை சுவத்துல போய் ஒட்டிக்கிச்சு.
தங்க்ஸும் பயந்து ஓரமா போய் உக்காந்து அழ ஆரம்பிச்சிட்டாங்க.
10 நிமிஷம் கழிச்சு கோபம் தணிஞ்சு சாப்பிட வந்த
ரங்க்ஸ் தன் ஆசை கீரை சுவத்துல இருப்பதை பாத்து
கொஞ்சமா எடுத்து சாப்பிட்டுப்பாத்தாராம்.
சூடு ஆறி சுவையா இருந்துச்சாம். உடனே ஒரே
குஷியாகி தங்க்ஸைப்பாத்து,”சுவத்துக்கறியை வழிச்சுபோடடி
சொரணகெட்ட பொண்டாட்டின்னாராம்”
யாருக்கு சொரணை இல்லன்னு படிக்கறவங்களுக்கு
புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
இந்தக் கதையெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா!!
ஆரம்பத்துலேயே சொல்லியிருக்கேன் இது சர்வேசன்
அவர்களின் பதிவுக்கு எதிர் பதிவுன்னு. அங்க போய்
ஒரு தபா படிச்சாப்புரிய போவுது.
24 comments:
//தங்க்ஸும் பயந்து ஓரமா போய் உக்காந்து அழ ஆரம்பிச்சிட்டாங்க//
ஓவருங்க! இதெல்லாம் 1970-80கள்ல வந்த படங்கள்லதான் இருக்கும், இப்போ போய்....
//சுவத்துக்கறியை வழிச்சுபோடடி சொரணகெட்ட பொண்டாட்டின்னாராம். யாருக்கு சொரணை இல்லன்னு படிக்கறவங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்//
இதுக்கு "சொரணகெட்ட(வன்) பொண்டாட்டி"னே சொல்லியிருக்கலாம் :))
aajar.
பழமொழி ரெண்டும் சூப்பரா இருக்கு.. நல்ல வேளை ரங்குக்கு இதெல்லாம் பண்ண தெரியலை. தப்பிச்சேன். அப்படி வேணுன்னா அவங்களே பண்ணி சாப்பிட்டுக்க வேண்டியது தானேங்கறேன்?! ;)
வோட்டு போட்டாச்சுங்கோ...
:)
சரி..சரி..கம்பேனி சீக்ரெட்டை வெளில சொல்லி மானத்தை வாங்காதீங்க !
:)))
வாங்க ரகு,
இதுதான் என் வலைப்பூக்கு முதல் வருகை போல இருக்கு.
வருகைக்கு நன்றி.
1970-80கள்ல வந்த படங்கள்லதான் இருக்கும், இப்போ போய்....//
பாட்டி சொன்ன கதைன்னு சொல்லியிருந்தேனே.
இதுக்கு "சொரணகெட்ட(வன்) பொண்டாட்டி"னே சொல்லியிருக்கலாம்//
ஆமாம்ல :)))))))))
அப்படி வேணுன்னா அவங்களே பண்ணி சாப்பிட்டுக்க வேண்டியது தானேங்கறேன்?!//
ஹலோ ரங்க்ஸ் மனசுல சிம்மாசனம் வேணும்னா ஈசி வழி வயிற்றுவழியா நுழைவதுதான்னு எங்க அம்மம்மா சொல்வாங்க.
தாங்க்ஸ் ஜமால்
சரி..சரி..கம்பேனி சீக்ரெட்டை வெளில சொல்லி மானத்தை வாங்காதீங்க !//
ஓகே. :))
வருகைக்கு நன்றி தலைவரே
என்ன கொடுமைங்க இது?
இவ்ளோ கஷ்டப்பட்டு எல்லாரும் ரத்தம் சிந்தி வேலை செய்யறோமே எதுக்குங்க? சாப்பிடத்தானே? நல்லா நச்சுனு இருக்கணும்னு எதிர்பாக்கரது இம்புட்டு தப்பா?
நல்லா வரிஞ்சுகட்டிக்கிட்டு வரீங்களே, சப்போர்ட்டுக்கு. ரங்க்ஸ் கூட்டணி ஆரம்பிச்சாதான் எல்லாரும் வழிக்கு வருவீங்க. :)
//அப்படி வேணுன்னா அவங்களே பண்ணி சாப்பிட்டுக்க வேண்டியது தானேங்கறேன்?! ;)// இதுகள் குக் பண்றதையெல்லாம் யார் சாப்பிடறது? இதுகளே முதல்ல திங்காது.. ஏதாவது சாக்கு சொல்லிட்டு எஸ்கேப்பாகி விடும்!
//"நம்பாதே நம்பாதே, ஆண்களை நம்பாதே"
//
அயித்தானையும் சேர்த்தா??
// ஏனத்தை //
தற்போது வழக்கில் மறந்து போன அழகு தமிழ் வார்த்தைகளில் ஒன்று ஏனம். இப்பல்லாம் யாரு பாத்திரத்தை ஏனம்ங்குறாங்க???
//இதுகள் குக் பண்றதையெல்லாம் யார் சாப்பிடறது? இதுகளே முதல்ல திங்காது.. ஏதாவது சாக்கு சொல்லிட்டு எஸ்கேப்பாகி விடும்!//
என்னக்கா.. உங்களை நீங்களே அஃறிணைல கூப்புட்டுக்குறீங்க? இங்க போர் வர்றதுக்கு முன்னாடி மூடிடணும்னு தான் தென்றல் வேக வேகமா அடுத்த பதிவை போட்டாங்களோ?
தென்றலக்கா.. அது சரி தான். ஆனா அந்த காலத்து மனுஷங்க சாப்பிட்ட மாதிரி எல்லாம் இப்போ எல்லாரும் ருசிச்சு சாப்பிடறது இல்லியே. லிவ் டூ ஈட் போய் ஈட் டூ லிவ்னு நிறைய பேரு கட்சி மாறிட்டாங்க. அது தங்கமணி வருகையால் கட்டாய கட்சி மாற்றமான்னு கேட்டா.. :))
மேடம்,
கதை சூப்பரு..!!
ரங்க்ஸ்களுக்கு ஆத்திரம் அதிகம், அறிவு கம்மி..!!
மன்னிசுடுங்க பாவம் ரங்ஸ்கள்>>!!
நீங்களும் எதிர்பதிவா,,,,
ஈஸ்வரா, இது எங்க போய் முடியப் போகுதோ.......
ரொம்பத்தான் பேராசை இந்த ரங்க்ஸ்களுக்கு//
ஏங்க, ஒரு கீரை கேட்டதுக்காங்க? ரைட்டுங்க, ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல, நம் தங்க்ஸ் இந்தப்பக்கம் வராம் பாத்துகிறது தான் என்னோட மொதல் வேல.
அப்படியே ஒரு உதை
கீரை மசியல் இருந்த ஏனத்தை//
இதெல்லாம் இப்ப ரங்க்ஸ் பண்றதில்லைங்க ஒன்லி தங்க்ஸ் தான் பண்றாங்க.
இதுகளே முதல்ல திங்காது.//
நான் வரலை இந்த ஆட்டத்துக்கு. :)
நல்லா நச்சுனு இருக்கணும்னு எதிர்பாக்கரது இம்புட்டு தப்பா? //
எல்லாத்துக்கும் அம்மாவோட கம்பேர் செய்யாம மனைவி செய்வதும் ருசியாத்தான் இருக்குன்னு நினைச்சா கண்டிப்பா நல்லாவே இருக்கும்.
பைதவே உங்க தங்க்ஸ் உங்க நல்லதுக்காகத்தான் சட்னியில் தாளிச்சு கொட்டலே. எண்ணெய் இல்லாம தாளிச்சு கொட்டும் கலை இதுவரை வரலை. எண்ணெய் அதிகமானா கொழுப்பு அதாங்க கொலஸ்ட்ரால் வந்திடுமேன்னு தாளிக்காம விட்டிருப்பாங்க அதுக்காக எங்கம்மா மாதிரி செய்யலைன்னு புலம்பினா வேற என்ன செய்ய??
:))
வருகைக்கு நன்றி அனந்யா
அயித்தானையும் சேர்த்தா??//
எதிர் பதிவு என்பதால் பரபரப்புக்காக தலைப்பு அப்படி வெச்சேன். அயித்தானை நம்பாம என்ன செய்ய முடியும். பாவம் நல்ல மனுஷன்.
வருகைக்கு நன்றி அப்துல்லா
லிவ் டூ ஈட் போய் ஈட் டூ லிவ்னு நிறைய பேரு கட்சி மாறிட்டாங்க. அது தங்கமணி வருகையால் கட்டாய கட்சி மாற்றமான்னு கேட்டா..//
தங்க்ஸ் வந்ததுக்கப்புறம் நல்லா சாப்பிட்டு நல்லாத்தான் இருப்பாங்க. ஆனாலும் அம்மா செய்வது மாதிரி வரலைன்னு புலம்பி அம்மாவை சாடிஸ்ஃபை செஞ்சு பொண்டாட்டியை டார்ச்சர் செய்யாட்டி போனா தின்னது செமிக்காது பொற்கொடி.
:)
வருகைக்கு நன்றி ரங்கன்
இது எங்க போய் முடியப் போகுதோ.......//
:))) வருகைக்கு நன்றி தராசு அண்ணேன்
நம் தங்க்ஸ் இந்தப்பக்கம் வராம் பாத்துகிறது தான் என்னோட மொதல் வேல.//
இது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூங்க. அப்படித்தான் இருக்கும்.
:))
நல்ல எதிர்பதிவு:))! எழுத்து நடை அருமையா இருக்கு.
Post a Comment