Wednesday, April 28, 2010

பதின்மவயதுக்குழந்தைகளுக்குச் சத்தான உணவு பாகம்:1

ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.
கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.
அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.
அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?
நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?
எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்
கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பது
போல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா யாருமே
சொல்லவில்லை.

1 வருடம் முன்பு ஆஷிஷ் ரொம்ப மெலிஞ்சு போய்
இருந்தான். சில சமயம் தலை சுத்தி மயக்கம்
போட்டு விழுவான். வகை வகையா சமைச்சு
போடுறேன். சத்தான காய்கறிகள், பழங்கள்னு
பாத்து பாத்து செய்யறோமே! என்னாச்சோன்னு
பயந்து டாக்டர்கிட்ட கூட்டிகிட்டுப்போனா
உடம்பு சத்துல சத்து குறையுது, உயரம் அதிகம்.
அதுக்குத் தகுந்த எடை இல்லை. இதனால
லோ பீபீ வந்து மயக்கம் அப்படின்னு
சொன்னார். இதென்ன கொடுமைடா சாமின்னு
பால், சீஸ், தயிர், பழங்கள்னு இன்னும் அளவுக்
கூட்டிக்கொடுத்தேன். 42 கிலோவிலிருந்து 48 கிலோவுக்கு
கொண்டு வந்தேன். மயக்கம் வருவது குறைஞ்சு,
கொஞ்சம் ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சான்.

எங்க வீட்டுல எல்லோரும் நல்ல உயரம். மாமனார்
6 அடிக்குமேலே. அயித்தானும் நல்ல உயரம்.
என் தம்பியும் அயித்தான் அளவுக்கு உயரம் தான்.
அதனால் வளர்ச்சி நல்லா இருக்கு. ஆனா அதுக்கு
ஏத்த உடல் பருமன் ஆஷிஷுக்கு இல்ல.(பதின்மவயதில்
எடைக்கும் உயரத்துக்கும் இருக்கும் அளவு பெரியவர்களுக்கு
வேறுபடும்) வெறும் சாப்பாடு மட்டும் போதாது.
ஆனா இப்ப ஜிம் அனுப்பும் வயசும் இல்ல.
ஏதாவது செய்யணுமே. மண்டைல குடைச்சல்.

உயரம் அதிகமா இருக்கும் குழந்தைகளைப் பாத்தீங்கன்னா
ரொம்ப ஒல்லியா கூன் போட்டு தெரிவாங்க. அந்த
உயரத்துக்கு நல்லா ஆஜானுபாகுவா தோள்கள்
வலிமையா வந்தா நல்ல உடல்வாகு அமையும்.
பாக்கவும் நல்லா இருக்கும். முகம் கூட சிறுத்துப்போய்
கொஞ்சம் ஒரு மாதிரியா இருப்பாங்க. இது
உயரம் அதிகமான பிள்ளைகளுக்கு.

நார்மல் உயரம் இருக்கும் சில பிள்ளைகள் அதீத
எடையுடன் இருப்பாங்க. இதுவும் கஷ்டம்.

போன மாசம ஆஷிஷை என்னோட டயட்டீஷியன்
கிட்ட கூட்டிகிட்டுப்போனேன். அவங்க கிட்ட
என்னோட டென்ஷனைச் சொன்னேன். இவ்வளவு
தூரம் யோசிச்சதுக்கு பாராட்டினாங்க. ஒரு தாயா
என் மகனின் உடல்வளர்ச்சியும் எனக்கு முக்கியம்.
”ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே
வளர்ச்சி!!”

நல்ல டயட் ப்ளான் போட்டுக் கொடுத்திருக்காங்க.
டயட்டுன்னவுடனே பலரும் கிண்டல் செஞ்சாங்க.
வயசுப்பிள்ளைக்கு எல்லாம் கொடுங்க டயட்டுன்னு
வயத்தக் காயப்போடாதீங்கன்னு அட்வைஸ் வேற.
டயட்டுன்னாலே சாப்பாடுதான்னு புரியாதவங்க கிட்ட
பேசுறது வேஸ்ட். இப்ப மகனுக்கு கொடுப்பது
BALANCED DIET. நாம் உண்ணும் உணவும் இப்படித்தான்
இருக்கணும்.

ஆஷிஷ் இன்னும் உயரம் வளருவான். அதுக்கேத்த
நல்ல உடலமைப்பை இப்ப உருவாக்கினாத்தான் உண்டு.
இந்த சமையத்தில் உடலை கொஞ்சம் வளைக்க முடியும்,
இப்ப முடியாட்டி எப்பவுமே முடியாது. பின்னாளில்
உடல் பருமன் ஏறும். அப்ப அருமையான உடல்வாகு
கொண்டுவர முடியாதுன்னு சொன்னார் டயட்டீஷியன்.

இந்த வயதில் பிள்ளைகளுக்கு சத்துச் செலவு அதிகம்.
எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அதனால கார்போஹைடரேட்
அளவைக் கொஞ்சமா குறைச்சு மத்த அயிட்டங்களையும்
கொடுக்கணும். 3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே
ஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.

ஸ்கூல் போனபோது ஒரு டயட் ப்ளான் இருந்தது.
இப்ப வீட்டில் இருக்கும் போது வேறு ப்ளான்.

பால், பழங்கள்,சீஸ், ப்ரட்,ஃப்ரெஷ் ஜூஸ், மோர், காய்கறிகள்,
பருப்பு,இட்லி/தோசை/உப்புமா,அரிசி/சப்பாத்தி,
சோயா மில்க், வால்நட்,பாதாம் எல்லாம் கொடுக்கணும்.
அசைவம் சாப்பிடறவங்க
முட்டை (அதிக எடை இருப்பவங்க மஞ்சள்கரு
இல்லாம சாப்பிடணும்), இறைச்சி, மீன் எல்லாம்
கொடுக்கலாம்.

இரவு படுக்க போகும் முன் ராகி மாவில் கஞ்சி செய்து
அதில் வெல்லம் பால் சேர்த்து கொடுக்கலாம்.
இதனால ராத்திரியில் நல்லா தூங்குவாங்க.
உடலுக்கும் பலம். குளிர்ச்சியும் கூட.

இரும்புச் சத்து இப்ப ரொம்ப முக்கியம். பேரிச்சம்பழம்
கொடுக்கலாம். பேரிச்சம்பழம் விரும்பாதவங்களுக்கு
அந்த சிரப்பை பாலில் கலந்து கொடுக்கலாம். பீன்ஸ்,
கீரைவகைகள், வால்நட், பாதாம் போன்றவைகள்
நல்லா கொடுக்கணும்.

இரும்புச் சத்தும், கால்சிய சத்தும் இப்ப அதி முக்கியமான
தேவை பிள்ளைகளுக்கு. பெண்குழந்தைகளுக்கு 200mg,
ஆண்குழந்தைகளுக்கு 300 mg அளவு நாளொன்றுக்குத்
தேவை. அதனால பால், தயிர், சீஸ் கொஞ்சம் அதிகமாக
கொடுக்க வேண்டும்.

இதோடு உடற்பயிற்சி முக்கியம். 20 புஷப்ஸ், 20 நிமிடம்
சைக்கிளிங், டான்ஸ், விளையாட்டுக்கள்னு
வைக்கணும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
30 நிமிடங்கள் இந்த மாதிரி விஷயங்களுக்கு
ஒதுக்கி அவங்களை உடற்பயிற்சி செய்ய வைக்கணும்.
இல்லாவிட்டால் உண்ணும் உணவு கொழுப்பாகி
அவஸ்தையைக் கொடுக்கும்.முறையான உடற்பயிற்சி
பதின்மவய்தில் செய்ய துவங்குவதால பின்னாளில்
heart disease, certain cancers, diabetes,
hypertension, bowel problems மற்றும் osteoporosis
போன்ற நோய்களில் இருந்து காக்கப்படுவாங்க.

ஸ்லிம்மா இருக்கணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு
சாப்பாட்டைத் தவிர்க்க பாப்பாங்க பசங்க. அதனால
கவனம் தேவை. பச்சைக்குழந்தைக்கு சாப்பாடு
எப்படி பாத்து பாத்து கொடுப்போமோ அப்படி
பதின்மவயதுக்குழந்தைகளுக்கு கொடுக்கணும்.
இதில் ஆண்குழந்தை, பெண்குழ்ந்தைன்னு
பாகுபாடே இல்லை.


இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உணவு
கொடுப்பதால வயறும் காய்வதில்லை. உடலுக்குத்
தேவையான எல்லா சத்துக்களும் கிடைச்சிடுது.
அப்ப உடல் ஆரோக்கியமா இருக்கும்.
உடல் ஆரோக்கியமா இருந்தா செய்யும் வேலையும்
பளிச், பளிச் தானே!

இந்த வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்,
எமோஷன் அப்சட் குழந்தைகளின் உணவுபழக்கத்தில்
பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பாட்டின் அளவு
குறைஞ்சிடும். இதனால் ரொம்ப பாதிப்புக்கள் வரும்.
உடல் பருமனாகிடும்னு பல பெண்குழ்ந்தைகள்
ரொம்ப கொஞ்சமா சாப்பிடுவாங்க. பழங்கள், ஜுஸ்,
தயிர், மோர், பால், சீஸ் எல்லாத்துக்கு நோ
சொல்லிடுவாங்க. இந்த மாதிரி பிள்ளைகளை
ரொம்பவே கவனிச்சு சாப்பாடு கொடுக்கணும்.
இல்லாட்டி அவர்களின் மாதவிலக்கின் போது
பல பிரச்சனைகள் வருமாம்.

முறையான சாப்பாடு, போதுமான உடற்பயிற்சி
கொடுத்தா ஸ்ட்ரெஸ் ஓடி போயிடும். அதோட
நாம கொடுக்கும் அன்பும், ஆதரவும் இருக்கறப்போ
பிள்ளையை ஏதும் அண்ட முடியுமா என்ன??

குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜ் வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம். பலர் பள்ளி போகும் பருவம்
வரை பாத்து பாத்து செஞ்சிட்டு அப்புறம் விட்டுவாங்க.
பதின்மவயதின் மனவளர்ச்சியும், உடல்வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம்.

முடிஞ்சா உங்க குழந்தையையும் நல்லதொரு
டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டுப்போய் பேசுங்க.
அவங்க கொடுக்கும் உணவுமுறை (நாமும் கொஞ்சம்
அவங்களுக்காக ஆரோக்கியமான உணவு எடுத்துக்கலாமே,
நாமதானே அவங்களுக்கு ரோல் மாடல்) பிள்ளைக்கு
கொடுக்கலாம். டயட்டீஷியன்ஸ் அடம் பிடிக்கும்
குழந்தைகளுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் செஞ்சு
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு கொண்டு வருவாங்க.
(ராகி கஞ்சிக்கு நோ சொன்ன ஆஷிஷை டயடீசீயனின்
கவுன்சிலிங் தான் எஸ் சொல்ல வெச்சுச்சு)இல்ல
மேலே சொல்லியிருக்கும் உணவுகளை சரியா
கொடுக்கலாம்.


இப்ப ஆஷிஷிடம் நல்ல முன்னேற்றம். இப்பவே
என் உயரம் வந்தாச்சு.(5.4) அதுல அவருக்கு ரொம்ப
சந்தோஷம். இனி அப்பா உயரத்தை எட்ட டார்கெட்
வெச்சிருக்காரு. ஆஷிஷோட கால் சைஸும்,
அயித்தானின் கால் சைஸும் சமம். அப்பாவோட
ஷூஸ் எனக்குத்தானு டெர்ரர் மெசெஜ் கொடுக்கறாரு.


வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.

இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.
இந்த வெப்பேஜில் பார்த்தால் நிறைய்ய ஐடியாஸ்
கிடைக்கும்.


16 comments:

நாஸியா said...

எவ்வளவு உபயோகமான தகவல்கள்!!

ரொம்ப நன்றி சகோதரி!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி நாஸியா

ஆயில்யன் said...

ம்ம் சொல்லியிருக்கறதையெல்லாம் படிச்ச பிறகு சொல்ல தோணுச்சு

ஏதோ நல்லது செஞ்சீங்க! :)

pudugaithendral said...

வாங்க பாஸ்

நல்லதை நல்ல நேரத்துல செஞ்சிடணும்னு ஒரு கொள்கை பாஸ் அதான்.

வருகைக்கு நன்றி பாஸ்

ஹுஸைனம்மா said...

நேற்றைய பதிவுக்குப் பின்னூட்டணும்னு நினைச்சுகிட்டி இருக்கப்பவே அடுத்த பதிவு!! என்னா ஃபாஸ்ட்!!

இவ்வளவும் நீங்க உங்க குழந்தைக்குன்னு செஞ்சாலும் எல்லாருக்கும் சொல்லித் தரும் அளவு பெரிய மனசு உங்களுக்கு!! சிறப்பான பதிவு.

ஆமா, குழந்தைகள்னு நாம நிறைய உணவு கொடுக்கிறோம், ஆனா சத்தான உணவு கொடுக்கணும்கிறதை மறந்துடறோம். எல்லாத்துலயும் பேலன்ஸ் வேணும் நிச்சயம்.

ரொம்ப நன்றி தென்றல்!!

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

என் பிள்ளை மட்டும் நல்லா இருந்தா போதுமா? மத்தபிள்ளைங்களுக்கு நல்லது கிடைக்கணும். அப்பத்தானே நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க முடியும். என் பங்காக இந்தச் சின்ன உதவியை பெற்றோருக்குச் செய்யத்தான் இந்தப் பதிவு.

//எல்லாத்துலயும் பேலன்ஸ் வேணும் //

ஆமாம் ரொம்ப முக்கியமான விசயம் இது.

வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே
ஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.]]

குழந்தை என்றில்லை - இது தான் சிறந்த டயட் (சொல்றேன் எங்கே ...)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல இருக்குங்க தென்றல். ரெம்ப உபயோகமான பதிவு. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு..பகிர்வு தென்றல்.

வால்நட், பாதாம் இவற்றுடன் முளைகட்டின பயறு வகைகள் கொடுப்பதும் மிக நல்லது.

தொடருங்கள். நன்றி.

pudugaithendral said...

ஆமாம் ஜமால்,

அப்படித்தான் சாப்பிடணும். ஒரே வேளை ஃபுல்கட்டு கட்டினா உடலுக்கு பிரச்சனை. வேலை, அவசரம் இதனால சாப்பிடாம இருப்பதும் தவறு என்ன செய்யலாம். நம்ம வாழ்க்கை முறையை கொஞ்சமா மாத்த முடிஞ்சா நல்லது

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்பாவி தங்க்ஸ்,

இந்தப் பதிவில் இருப்பதையே 2 பதிவா போடணும்னு ஆரம்பிச்சு பாகம் 1ன்னு பதிவு போட்டேன். ஆனா எல்லாத்தையும் ஒரே பதிவுல சொல்லிட்டேன். மத்த ஐடியா ஏதும் யாரும் கொடுத்தா நல்லா இருக்கும்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் ராமலக்‌ஷ்மி,

அதுவும் நல்லது.

வருகைக்கு நன்றி

Ananya Mahadevan said...

very informative post! thanks akka

Anonymous said...

ஆக்சுவலி, சிக்ஸ் பாக்ஸ்சுக்கு பட்டினி இருக்கத்தேவை இல்லை. அதை விட சாதம் சாப்பிட்டாலும் சிக்ஸ் பாக்ஸ் வரும். என்ன, ஒரு 15 / 16 வயசிலேயே கொஞ்சம் கொஞ்சம் அதற்குரிய எக்சர்சைஸ் பண்ணனும். எங்க வீட்டில இருக்கிற 3 பசங்களும் எல்லாமே சாப்பிடுவாங்க. சாதம் சில நாட்கள் இரண்டு வேளை கூட சாப்பிடுவாங்க. எந்த ப்ரொம்பளமும் இல்லை. நல்லா சாப்பிட்டு நல்லா எக்சர்சைஸ் பண்ணினால் சரி. என்ன தொடர்ந்து ஒழுங்கா எக்சர்சைஸ் பண்ணாவிட்டால் 6/7 மாசத்திலேயே பாக்ஸ் போய்விடும். எதுக்கு சூர்யா காய்கறி மட்டும் சாப்பிட்டு 6 பாக்ஸ் எடுத்தார்னு எழுதுறாங்கனு தெரியல. இந்த பசங்க கிட்ட, சாதம் சாப்பிட்டே உங்களுக்கு 6 பாக்ஸ் இருக்குதுனு ஆதாரத்துக்கு உங்க படம் கொடுங்கடானு கேட்டா, ஓடி ஒழியுறாங்க.

இப்பவே Jogging, Push Ups செய்து தொந்தி விழாமல் வைக்கச் சொல்லுங்க. அப்புறம், தட்டையான வயிறு இருந்தாலே போது, 6 பாக்ஸ் எல்லாம் தேவை இல்லைனு பையன் கிட்ட சொல்லுங்க.

என் சகோதரன் 13 வயசிலேயே கொஞ்சம் கொஞ்சம் டம்பெல்ஸ் தூக்கத் தொடங்கிட்டான். அப்டி பண்ணினா கட்டையாயிடுவாங்கனு சொல்றது எல்லாம் சும்மா. அது அவர் அவர் ஹோர்மோன்சைப் பொறுத்தது. அவன் 6 அடி உயரம். எதுவுமே அளவா சாப்பிட்டு அளவா எக்சர்சைஸ் பண்ணினால் போதும்.

தோளுக்கு மேலே பையன் வளர்ருவதை பார்த்தா அம்மாக்களுக்கு சந்தோசம் தானே. வீட்ல பாத்திருக்கேனே. I can feel that her too. =))

Anonymous said...

அப்புறம் காலையில் இரண்டு ஹாவ் போயில்ட் எக் அம்மா எங்க இரண்டு பேருக்கும் கொடுப்பாங்க. 25 வயசு வரைக்கும் மஞ்சள் கரு ஒதுக்கத்தேவை இல்லைனு தாத்தா சொல்லுவார். சாக்லட் கூட சாப்பிடலாம். அதை காலையில் சாப்பிட்டால் குண்டாக மாட்டார்கள் என்று எங்க டயடீஷன் சொன்னார்.

Anonymous said...

here. Not her =))