நான் இல்லைன்னு சோயப், இவருதான்னு ஆயிஷா
இரண்டு பேரும் சேர்ந்து நடத்தின மெகா சீரியல் 2 நாள்ல
முடிஞ்சே போச்சு. 15 பெரியவங்க சேந்து பஞ்சாயத்து
நடத்தி டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்த போட வெச்சதுக்கு
பின்னாடி ஸ்ட்ராங்கான ஆதாரம் தான் காரணமாம்.
”டைவர்ஸ் செய்யாம சானியாவோட கல்யாணம்
நடந்தா தன்னிடம் இருக்கும் ஸ்ட்ராங்கான ஆதாரத்தை
வெளியிட நேரும்னு” சொன்னதால பயந்து டைவர்ஸ்
நடந்ததாம். என்ன ஒரு ஆதாரம்??? யாருக்கும்
தெரியவில்லை. சோயப் ஆயிஷாவை டைவர்ஸ் செஞ்சு
சானியாவை கல்யாணம் செய்வதால் சானியா இனி
பீவி நம்பர்:2. “என்ன நடந்தது என்பது என் குடும்பத்தாருக்கும்,
இறைவனுக்கும் தெரியும்னு” அறிக்கை விட்டு பத்திரிகை
காரங்க கிட்ட எகிறினாங்க அக்கா!!! இப்ப என்ன
சொல்வாங்க.!!!
**********************************************
நம்ப ரம்பாவுக்கு இன்னைக்கு திருப்பதியில் கல்யாணம்
முடிஞ்சிரிச்சு. மாப்பிள்ளை இந்திரகுமாராம்.
திருமண வாழ்வில் இணையும் இவர்கள் ஆனந்தமான
வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
*********************************************
ஷார்ஷாவுல ஆண்கள் லுங்கியுடன் பொது இடங்களுக்கு
வருவது தடை செய்யப்பட்டிருக்குதுன்னு படிச்சேன்.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் தண்டனைக்கு
ஆளாகிறாங்க. அதுவும் நம்ம இந்தியர்கள் தானாம்.
“உடம்பை மறைச்சுத்தானே இருக்கு இந்த உடை,
இதுல என்ன கஷ்டம்னு கேட்டிருக்காரு” ஒருத்தர்.
இதைப் படிக்கும் பொழுது குமுதம் சிநேகிதிலன்னு
நினைக்கிறேன் படிச்ச ஒரு கமெண்ட் ஞாபகம் வந்துச்சு.
பெண்கள் உடையணியும் பாங்கினால்தான் அவர்களின்
கற்புக்கு பங்கம் வருதா? என்பது போல ஒரு விஷயத்துல
பலரும் கருத்து சொல்லியிருந்தாங்க. அதுல ஒரு
ஆண் வாசகர் சொன்ன கருத்து ரொம்ப பிடிச்சிருந்தது.
“பெண்கள் உடையணிவதைப் போல ஆண்களும்
கவர்ச்சிகரமாகவோ, மேலாடை அணியாமலோ,
பனியனுடனோ காட்சி அளித்தாலும் பெண்கள்
தன் மனதை கட்டுப்படுத்திக்கொள்வது போல
ஆண்களுக்கு மனதை கட்டுப்படுத்திக்கொள்ளும்
தன்மை இல்லாமல் இருப்பதுதான் பிரச்சினைன்னு”
போட்டுத் தாக்கிட்டாரு.
******************************************
திருநங்கைகளைக்கண்டால் எனக்கு பயம் இருந்ததுண்டு.
அந்த பயத்துலேர்ந்து வெளியில வந்ததைக்கூட
பதிவா போட்டிருந்தேன்.
சமீபத்துல சூப்பர் மார்க்கெட்டுக்கு போய்
சாமான் எடுத்துகிட்டு பில்லிங் கவுண்டர் வந்தா
அங்க ஒரு திருநங்கை இருந்தார். நான் பில் போடும்
வரை சும்மா இருந்தவர் பர்ஸை பார்த்ததும் பணம்
கொடு என்று ஆரம்பித்தார். 10 ரூபாய் கொடுத்தால்
போதாதாம். 21/51 வேணும்னு அடம்!!!
கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கன்னு சொன்னா,
“இம்புட்டு சாமான் வாங்குற! எனக்கு பணம்
கொடுத்தா என்ன?”ன்னு எதிர் கேள்வி. ஸ்டோர்
காரங்களும் ஏதும் செய்ய முடியாத நிலை.
நல்லா பாட்டுவிட்டு 21 ரூபாய் கொடுத்தேன்.
அப்புறம் ஆட்டோவில் போகும் போது பணம்
கேட்ட திருநங்கைக்கு கொடுக்க பணம் எடுக்க
முற்படும் போது ஆட்டோ டிரைவர் அவரை
அதட்டி விரட்டிவிட்டார்.
“தப்பா நினைக்காதீங்கம்மா!! இவங்கள்ல
பாதி பேர் திருநங்கைகளே இல்லை. ஆண்கள்தான்.
கஷ்டபடாம காசு சம்பாதிக்க மீசையை மழிச்சு,
புடவையை சுத்திகிட்டு கிளம்பிடறாங்கம்மா
போலிஸ் சொன்ன தகவல் இது, எனக்கே இந்த
ஆண்கள் மேலே கோவம் வருது”” அப்படின்னு
சொன்னார்.
திருநங்கைகள் வாழ்வு மோசமானது. அதுலயும்
இந்தமாதிரி ஆட்கள் இருந்தால் என்ன செய்வது!!!
புல்லுறுவிகள் மாதிரி ஊடுருவும் ஆண்களை
கண்டுபிடித்து திருநங்கைகள் சமூகத்துக்கு
அரசு ஏதும் செய்யுமா!!! அரசு ஏதும் நடவடிக்கை
எடுத்தால்தான் இவர்களின் அடாவடியிலிருந்து
மக்கள் தப்பிக்க முடியும். :((
************************************************
ப்ரூக் பாண்ட் தேயிலை விளம்பரங்கள் அதுவும்
லேட்டஸ்டா அந்தப் பொய்க்கோழி கணவன்-மனைவி
இருவரும் வருவது போன்ற விளம்பரங்கள் ரசிக்கும்படியா
இருக்கு. இப்ப லேட்டஸ்டா இன்னொரு கப் டீக்காக
காலிங் பெல்லை தானே அழுத்தி யாரோ வந்திருப்பதாகவும்,
அவருக்கு டீ கொண்டு வரும் படி சொல்லி தானே
டீ அந்த டீயை குடிப்பது போலவும் வருது.
ஆனா தன்னுடைய விற்பனையை அதிகரிக்க இந்த
விளம்பரம் வருது. ஆனா அளவுக்கதிகமா தேநீர் குடிச்சா
உடம்பில் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கும் இரும்புச்
சத்து உறிஞ்சப்பட்டு உடல் நிலை மோசமாகும்.
ஒவ்வொரு கப் டீயில் சேர்க்கப்படும் சர்க்கரையின்
அளவு கலோரிகளாக உடலில் சேர்ந்து உடல் பருமனை
ஏற்படுத்தும். அதனால் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப்
தேநீர்/காபி தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கவனம்: உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க
*********************************************
25 comments:
Nice post madame.
வாங்க சுரேஷ்,
முதல் வருகைக்கு மிக்க நன்றி
அருமையாக தொடுத்து இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
வழக்கம் போல ஆவக்காய பிரியாணி செம்ம சூடு, செம்ம டேஸ்டு!
நல்ல தொகுப்பு.
//எகிறினாங்க அக்கா!!!//
சானியாவே உங்களுக்கு அக்காவா!! ;-))
தனக்கு ஒத்துவராதுன்னு தெரிஞ்சதும் (கல்யாணத்துக்கப்புறம் டென்னிஸ் வெள்ளாடக்கூடாதுன்னு சொன்னாங்களாம்), மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு கவலைப்படாம, தைரியமா நிச்சயதார்த்தத்தை முறிச்சுகிட்டு வெளியே வந்ததும்;
தான் தேர்ந்தெடுத்தவனுக்கு ஒரு பிரச்னைன்னு வந்தப்ப ஓடிடாம, துணையா நின்னதும் எனக்குப் பிடிச்சிருக்கு. (அதாவது, இவரின் ‘டேக் இட் ஈஸி’ பாலிஸி) கல்யாணத்துக்கப்புறமும் ஒத்துமையா இருநதாச் சரி.
நன்றி சங்கர்,
கண்டிப்பா அடிக்கடி வாங்க
வாங்க அநன்யா,
ஆவக்காய பிரியாணி செம்ம சூடு, செம்ம டேஸ்டு!
நல்ல தொகுப்பு.//
நன்றி
வாங்க ஹுசைனம்மா,
சானியாவுக்கும் சர்ச்சைக்கும் அம்புட்டுபொருத்தம். முந்தைய நிச்சயதார்த்தம் முடிஞ்ச கையோட அந்தப் பையன் சானியாவின் கிட் பேக்(டென்னிஸ்) தூக்கிகிட்டு பிராக்டிஸுக்கு போனது எல்லாம் படமா வந்துச்சு.
இந்தம்மா ரொம்பவே ஃப்ரீ பேர்டு. ஆட்டத்தை விட சர்ச்சைகள் தான் அதிகம். எனக்கென்னவோ சரிப்படலை.
கல்யாணத்துக்கப்புறமும் ஒத்துமையா இருநதாச் சரி.//
ஆமாம் ஒரு பெண்ணாக திருமணம் ஆகும் ஒவ்வொருவருக்கும் என் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.
வருகைக்கு நன்றி
நல்ல தொகுப்பு.
nice!
happy married life sania & ramba.
செய்திகள் லேடஸ்ட்டாக இருக்கு, தேங்க்ஸ்.
http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post_09.html
தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். விரும்பினால் தொடருங்கள். முதல் பின்னூட்டம் அனுப்பும்போது குழறுபடி. ஆகவே இது.
நன்றி வித்யா
வருகைக்கு நன்றி சிவா
வாங்க ஐயா,
லேட்டஸ்டா கொடுத்தா ஆவக்காய காரம் அதிகமா இருக்கும்னு தான் லேட்டஸ்ட் நியூஸ்.
நன்றி
படிச்சு பின்னூட்டம் போட்டுட்டேன் அமைதிச்சாரல்
சானியா பாகிஸ்தான்காரரை கட்டிக்கப்போறார் என்பதால் தான் ரொம்ப மோசமாக மீடியாவில அடிபடுறாங்கனு நினைக்கிறேன். ஒரு வாட்டி அவங்க பேட்டி பார்த்தேன். பிராக்டிஸ் பண்ணும் போது நீளமான ட்ராக்சூட் தான் போடுறேனு சொன்னாங்க (ஏதோ முஸ்லிம் குழுக்கள் ஷோர்ட் ஸ்கேட்டுக்கு நோ சொன்னதால்). அவங்க நல்லா ஆடலைன்னா தப்பு சொல்லலாம். யாரை கண்டின்டா நமக்கென்ன. அது அவங்க இஷ்டம் தானே. பாவங்க. விட்டுடுங்க. நீங்க பெரியவங்க. நீங்களும் அவங்கள பத்தி எழுதுறது நல்லாயில்லங்க.
நீங்க பெரியவங்க. நீங்களும் அவங்கள பத்தி எழுதுறது நல்லாயில்லங்க.//
அவ்வ்வ்வ்வ்வ்வ் மொதல்ல இதுக்கு பதில் சொல்லிட்டு மத்ததுக்குபதில் :))
நான் இன்னும் 40 கிட்ட கூட வரலீங்க. அப்புறம் எப்படி பெரியவங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அனாமிகா
சானியா பாகிஸ்தான் காரருடன் திருமணம் செய்வது பிரச்சனை இல்லை. பிரச்சனையான மனிதருடன் பிரச்சனைகளுடன் திருமணம் செய்து கொள்வதுதான் பிரச்சனை. நம் தேசப் பெண் பாகிஸ்தான் சென்று வாழப்போகுது.சரி துபாய் போறாங்கன்னே வெச்சுக்குவோம். என்னதான் ஊரறிந்த் பெண் என்றாலும் பாதுகாப்பு எப்படி இருக்குமோ என்பதே என் யோசனை.
சானியா ஆடி பெயர் பெற்றதைவிட காண்ட்ரவெர்சிகளால் பெத்த பெயர் பெற்றவர் என உலகம் அறியும். அவரது திருமணத்தின் போதும் நிகழ்ந்து கொண்டிருப்பது இதுவே.
அவங்க பேட்டில சொன்னதெல்லாம் நம்பிட்டீங்களா. ட்ரெஸ் பத்தி சொன்னது அவர் சார்ந்த மத அமைப்பு. மத்தவங்க ஏதும் சொல்லவில்லை. டென்னிஸ் கோர்டில் சேலை கட்டி ஆட முடியாது. எங்கு என்ன உடை தேவையோ அதுதான் அணிய முடியும்.
ஐயோடா, உங்க பதிவுகளில் ஒரு நேர்மை இருக்கு. வெளிப்படையாக பேசும் குணம் இருக்கு. யாரையும் கம்ரமைஸ் பண்ணாத துணிவு இருக்கு. அப்படி செய்றவங்க பெரியவங்க தான். சமாளிச்சுட்டேன். ஹா ஹா. ஆனா சொன்னதெல்லாம் உண்மை தானே. அதை விட அனுபவஸ்தர்னு தெரியுது. வேற என்ன வேணும்.
வாங்க அனாமிகா,
ஹைதையில் 42 டிகிரி வெயிலுக்கு இதமா இருந்துச்சு உங்க ஐஸ்...
ரெண்டு தும்மல் கூட போட்டுட்டேன்னா பாருங்களேன்.
உங்கள் அக்கறை மனதை தொடுகிறது. நான் சானியா பத்தி ஒரு கட்டுரை எழுதிட்டிருக்கேன். இன்னும் எழுதி முடியல. அதில நான் சேத்தது இது. நிறைய இடத்தில பசங்க பேசினத வைச்சு எழுதி இருக்கேன். கூகிள்ல டைப் பண்ணி பாருங்க. எவ்ளோ பேர் கேவலமா எழுதி இருக்காங்கனு.
//சானியா எக்கச்சக்க பிரியாணியை முழுங்குவாராம் (ஏதோ அவன் வீட்டு காசில் வாங்கி கொடுத்த மாதிரி எப்படி பேசுகிறான் பாருங்கள்), படிக்கும் காலத்தில் அவரிடம் வீசும் துர்நாற்றத்தால் மற்றவர்களுக்கு அவர் அருகே இருக்க விரும்பமில்லையாம், Fake Accent உள்ளவராம், ஏதோ முஸ்லீம் குழு குட்டை பாவாடை போட எதிர்த்த போது இவன் சானியாவுக்கு சப்போட் பண்ணினானாம், (ஏன் என்றால் சானியாவின் தொடைகள் சில் சுமிதாவின் தொடைகளைப் போல இருந்தனவாம்), சானியா Nose Ring உடன் இருக்கும் போது Sl*t போல இருக்கிறாராம்.
இனிமேல் சானியாவை "HOT" என்று சொல்ல மாட்டாராம், இனிமேல் பட்மின்டன் விளையாடும் சானியாவுக்கு சப்போட் செய்வாராம் (சரியான சைக்கோ இவன். சப்போட் செய்ய காரணம் அவ HOT??!!?? ), இனிமேல் மந்திரா பேடிதான் ஆன "Favourite Sportswoman"னாம். அவங்க எங்கப்பா விளையாடினார்?
அதை விட நிறைய தடவை Veer-Zaara பாத்தியா, Lakshya என்ற படம் வீட்டில் இல்லையா என்று வேற கேட்கிறான். கொஞ்சம் புகழ் வெளிச்சத்தில் இருந்தாலே அவர்கள் ஏதோ இவர்களது கைப்பாவை போல நடத்த எண்ணுவது சரியா? Veer-Zaara படம் வந்த போது ஆஹா ஓஹோ என்று ஓட வைத்தவர்கள் நிஜத்தில் அது நடக்கும் போது ஏன் ஏற்றுக்கொள்வதில்லை.//
இங்க படிக்கிற இந்திய மாணவர்கள் சரியான கடுப்பில ரொம்ப மோசமாக ஸ்டேட்டஸ் மெசேஜ் எல்லாம் எழுதிட்டு இருக்காங்க. பாவம் சானியா.
ஏனுங்க,உங்ககிட்ட உண்மை சொன்னா ஐஸ்சா. இது தான் நல்லதுக்கு காலமே இல்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்
சானியா பத்தி நிறைய்ய பொதுவுல எழுதறாங்க. ஜனவரியில் திருமணத்தை முறிச்சு உடன் திருமணம் அதுவும் நிச்சயதார்த்தம் முறிந்த அதே ஹோட்டலில் என எல்லாமே பேச்சுத்தான்.
பிரபலமாவதற்கு அவர்கள் கொடுக்கும் விலை பர்சனல் வாழ்க்கையும் திறந்த புத்தகமாகிப்போவதுதான்.
ஏனுங்க,உங்ககிட்ட உண்மை சொன்னா ஐஸ்சா. இது தான் நல்லதுக்கு காலமே இல்லை. அவ்வ்வ்வ்வ்வ்வ்//
ஆஹா ஃபீல் பண்னாதீங்க. டமாசுக்கு சொன்னேன்
Post a Comment