பாக்கணும்னு நினைச்ச படம் பாத்தாச்சு.
படத்தை பாத்தவங்கள்ல பலர் படம் ஃபாளாப்ன்னு
சொன்னாலும் பாத்திடணும்னு நினைச்சுப்போனேன்.
எனக்குப் பிடிச்சிருந்தது வருடு. கதை என்னன்னு
பாப்போம்.
நவீன இளைஞனான சந்தீப்(அல்லு அர்ஜூன்) தனது
திருமணம் பெற்றவர்களால் நிச்சயக்கப்பட்டதாக இருக்க
வேண்டும் என்று சொல்ல அதிர்ச்சி ஆவது அவங்க
பெற்றோர். (சுகாசினி- ஆஷிஷ் வித்யார்த்தி.
சுகாசினிa சிந்து பைரவிக்கால இளமையுடன்
இப்பவும் அழகா இருக்காங்க)
பொண்ணு பாக்கும் படலம் நடக்குது. இண்டர்நெட்சம்பந்தம்,
ப்ரோக்கர்கள் ஏதுமில்லாம நீங்களே தேடுங்கன்னு சொல்ல
அப்பா, அம்மா தேடி கொண்டு வரும் பெண்ணை
பார்க்காமலேயே மணம் முடிக்க சம்மதிக்கிறார்.
அதாவது தெலுங்கு பத்ததியில் மணமகன்,
மணமகள் இருவரும் பார்த்துக்கொள்வது
மணமேடையில் முகூர்த்த நேரத்தில் தான்.
அந்தக்காலம் போல உறவினர்கள் அனைவரையும்
அழைத்து 5 நாள் திருமணம் செய்ய வேண்டும்
என்று கட்டளையிடுகிறார் ஹீரோ. மணப்பெண்ணும்
மணமகனின் போட்டோ பார்க்காமலேயே மணமேடைக்கு
வருகிறார். கூடையில் மணப்பெண் வந்து மணமேடையில்
அமர்ந்து, ”நாதிச்சராமி” மந்திரம் சொல்லி, ஜீரகம்-வெல்லம்
வைத்து, கண்பார்த்து, கன்யாதானம் முடிந்து தாலி
கட்டும் நேரத்தில் வருகிறார் வில்லன் ஆர்யா(நம்ம
நான் கடவுள் ஆர்யாவே தான். வில்லனாக
கலக்கியிருக்கிறார்.சைக்கோ கேரக்டர் கொஞ்சம்
கலந்த கேரக்டர் இவருடையது)
மணப்பெண்ணை தூக்கிப்போய்விடுகிறார்.
மணமகளை கண்டுபிடிக்கிறாரா? தாலிகட்டும் சடங்கு
நடக்குமா இது வெள்ளித்திரையில் பார்க்கவும்.
இயக்குனர் குணசேகர் ஹீரோயின் முகத்தைக் கூட
காட்டமல் வைத்திருந்து மணமேடையில்தான்
முகத்தைக் காட்ட வைக்கிறார்.
வேலை காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டி
இருப்பதாலும், தன் மகள் இனி கிடைக்கும்
வாய்ப்பு குறைவு என்பதாலும் வேறொரு பெண்ணை
மணம் முடிக்கும் படி ஹீரோயினின் தகப்பனாக
வரும் நரேஷ்(சூப்பர் ஸ்டார் க்ருஷ்ணாவின் மூத்த
தாரத்து மகன்) சொல்ல ஹீரோ வெடிக்கும்
காட்சி ரொம்ப பிடித்திருந்தது.
”தாலி ஒன்றுதான் கட்டவில்லை. மற்ற சடங்குகள்
எல்லாம் நடந்துவிட்டது. அதானல் உங்கள்மகள்
தான் என் மனைவி, என் மனைவியை நான்
தேடிக்கொண்டு வருகிறேன்” என அல்லு அர்ஜுன்
சொல்லும் பொழுது ஒரு வயதானவர் ஜீரகர-பெல்லம்
வைக்கப்படும் காரணத்தைச் சொல்கிறார்.(இது
இந்தப்படம் பாக்கும் வரை எனக்குத் தெரியாது.
இனி எல்லோருக்கும் எடுத்துச் சொல்வேன்)
ஜீரகம்-பெல்லம் இரண்டும் சேர்ந்து ஒருவித
மேக்னட் பவர் உருவாகிறது. அதை மணமகன்,
மணமகள் ஒருவருக்கொருவர் தலையில் வைக்கும்
பொழுது(பிறப்பதற்கு சற்று முன்னரே மூடிக்கொள்ளும்
உச்சித் தலை) அதாவது ஸஹஸ்ரா சக்கரா
எனப்படும் crown chakra வில் பட்டு அந்த
காந்த சக்தியால் ஆஜ்ஞா சக்கரம்( இருபுருவத்துக்கும்
மத்தியில் அமைந்திருக்கிறது) மூலம் இருவரும்
பார்த்துக்கொண்டு கண்ணும் கண்ணும் கலந்து
இருவர் ஒருவர் ஆகிறார்கள். இந்தச் சடங்கு
முடிந்தாலே திருமணம் முடிந்ததாக அர்த்தம்
என்று பெரியவர் சொல்கிறார்.(உண்மையும் அதுதான்)
அப்புறம் ஹீரோ ஹீரோயின் இருக்கும் இடத்தைக்
கண்டுபிடித்து, வில்லனுடன் போராடி அழைத்து
வந்து, தாலிகட்டி, தலம்பராலு கொட்டி முடித்து
வில்லனுடன் சண்டை போட்டு சுபம்.
ஐந்து நாள் திருமணம் இதுதான் இந்த படத்தின்
ஹைப். ஆனால் அதை ஒரு பாட்டிலேயே
முடித்துவிட்டார்கள்.(இதற்கு இயக்குனர் சொல்லும்
காரணம் இல்லாவிட்டால் திருமண சீடி பார்க்கும்
எஃபக்ட் வந்திடும்) வழக்கமான மசாலாத்தனம்,
சினிமாத்தனம் இல்லாமல் இருந்திருந்தால்
இந்தப் படம் இன்னும் அதிகம் பேசப்பட்டிருக்கும்.
ஆனாலும் மறைந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தை
நினைவு படுத்தி இப்பொழுது ஒவ்வொருவரும்
வருடு சினிமா போல் 5 நாள் திருமணம் வேண்டும்
என்று சொல்ல வைத்த சினிமாவுக்கு பாராட்டுக்கள்
குணசேகர்.
இந்த சம்மரில் ஆந்திராவில் திருமண சீசன்.
அனைத்து மண்டபங்களிலும் ஐது ரோஜுல பெல்லி
பாட்டு இல்லாமலே இருக்காது. இன்று நடந்த
ஆந்திரா ஹோம் மினிஸ்டர் இந்திரா சபீதா ரெட்டி
அவர்களின் மகனின் திருமணம் பற்றி டீவி9
சேனலில் தொகுப்பு காட்டிய பொழுது கூட அந்தப்
பாட்டுத்தான் போட்டார்கள்.
இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக சொல்லியிருக்கலாம்.
13 comments:
நல்ல விமர்சனம்:)
thanks vidya
//தலம்பராலு//
இது என்னங்க?..விளக்குங்களேன்.
http://www.google.co.in/imgres?imgurl=http://www.sirishavikram.net/wedding/images/talambralu1_small.jpg&imgrefurl=http://www.sirishavikram.net/wedding/talambralu.html&h=540&w=720&sz=129&tbnid=CHrd36vEJjVZVM:&tbnh=105&tbnw=140&prev=/images%3Fq%3Dtalambralu&hl=en&usg=__-Vcz6OWlzg7eofkaZsQoerV4UR0=&ei=z0q8S-bZOom8rAe4t8zJBw&sa=X&oi=image_result&resnum=4&ct=image&ved=0CBQQ9QEwAw
இந்த லிங்குல பாருங்க அமைதிச்சாரல்.
போட்டோ கூட இருக்கு
யக்கா அது என்ன பெல்லம்!??
படத்தை பார்க்கலாமுன்னு ஒரு டவுட்டுல இருந்தேன் இப்போ முடிவு பண்ணிட்டேன். ;)
வாங்க கோபி,
அது வெல்லம். படம் பாக்கறதுன்னு முடிவு செஞ்சீங்களா இல்ல....
ஒரு வாட்டி கண்டிப்பா பாக்கலாம்
வீட்டில் அல்லு அர்ஜூன் இரசிகர்க் கூட்டம் இருக்கிறது.
இப்படம் வருவதற்குள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.இந்தப் படத்தை மட்டும் பார்க்காமல் விட முடியுமா ?
வாங்க திகிழ்,
அல்லு அர்ஜூன் டான்ஸ் சூப்பரா இருக்கும் என்பதால் எனக்கும் அவர் படம் பிடிக்கும். இதுலயும் ரேலாரே ரேலாரே பாட்டு சூப்பர். (ஐதுரோஜுல பெல்லி பாட்டுல அதிசயமா ஒரே ஒரு பிட்டுக்கு மட்டும் சுனில் ஆடும் டான்ஸ் சான்சே இல்ல) :))
கண்டிப்பா பாருங்க. குடும்பத்தின் அருமைகளை உணர்ந்தவங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.
வருகைக்கு நன்றி
//மணமகளை கண்டுபிடிக்கிறாரா? தாலிகட்டும் சடங்கு
நடக்குமா இது வெள்ளித்திரையில் பார்க்கவும்//
ஆஹா இப்படி முடிச்சுட்டீங்களே... suspense கொல்லுது... சீக்கரம் படம் பாத்துடறேன். ஜீரகம்-பெல்லம் குறின்சி சால பாக செப்பேரு... வந்தனமண்டி
நல்ல விமர்சனம்.
ஆஹா வாங்க தங்க்ஸ்,
வருகைகு நன்றி
நன்றி இராமசாமி கண்ணன்
Post a Comment