Friday, April 09, 2010

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சித்திகிட்ட பேசலாம்னு போன் செஞ்சேன்,
மொதல்ல நான் பேசறேன்னு வந்தா பெரிய தங்கை.
நல்லா அர்ச்சனை செஞ்சிட்டு போனை சித்திகிட்ட
கொடுத்திட்டா... :(( அர்ச்சனை எதுக்கு?

முந்தா நேத்து புளிப்பொங்கல் செஞ்சிருக்காங்க வீட்டுல.
எல்லோரும் சாப்பிட உக்காந்திருக்காங்க. எங்க
சித்தப்பா,” இது என் மூத்த பொண்ணுக்கு பிடிச்சதுன்னு!!!”
சொல்ல அதுக்கு அப்ப ஏற்பட்ட கோபத்தை நான்
போன் செஞ்சதும் அர்ச்சனை செஞ்சா தங்கச்சி.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதுக்குத்தான்.

அந்த மூத்த பொண்ணு நான் தான். எஸ் மீ ஒன்லி.
(இதுக்கும் கத்துவாங்க இரண்டு தங்கைகளும்)

ஒரு சாப்பாட்டு ஐட்டம் கூட உன் பேரு சொல்லாம
சாப்பிட விடமாட்டேங்கறாங்க அக்கா!!”” அப்படின்னு
ஒரே புலம்பல்ஸ்.

என் சித்தி திருமதி. உமா. இவங்க என்னை வளத்தவங்க.
கண்டிப்பு கறாரும் ஜாஸ்தி. வெள்ளிவிழா வாணிஸ்ரீ போல
என்னைக் கடிதங்களாலேயே மேம்படுத்தினவங்க. அம்மா
வேலைக்கு போனதால் அதிகமாக அம்மம்மா வீட்டுலயே
இருந்தேன். அப்ப சித்தி தான் வளத்தது. எங்க போனாலும்
அவங்க கொடுக்கு மாதிரி கூடவே போவேன்.

ஊர்ல எல்லோரும் என்னை அவங்க சொந்த பொண்ணுன்னே
நினைச்சிருந்தாங்க.” உமா உன் பொண்ணான்னு கேட்டா!!
ஆமாம் என் பொண்ணுதான், என் அக்கா பொண்ணுன்னா
என் பொண்ணு இல்லையான்னு!! பதில் சொல்லிட்டு போவாங்க”



(சென்ற வருடம் டப்பர்வேர் மேனேஜர்ஸ் மீட்டுக்காக
சித்தி ஹைதை வந்திருந்தாங்க.(சித்தியும் மேனஜர்ல)
அப்போ என் மொபைலில் நான் கிளிக்கிய சித்தி போட்டோ இது.)

அசப்புல அவங்க மாதிரி இருப்பேன்னு பாத்தவங்க
சொல்வாங்க. ஆனா மும்பையில பாட்டிவீட்டுக்கு
பக்கத்துவீட்டுல ஒரு மாமி, “உமா ஏன் எங்கூட பேசலைன்னு!!”
எங்க அம்மம்மா கூட சண்டை போட,”உமா வரவே இல்லைன்னு!!”
அம்மம்மா சொல்ல அங்க வந்த என்னை பாத்து கை காட்ட
“இது என் பேத்தி அப்படின்னு!!” அம்மம்மா அறிமுகம் செஞ்சு
வைக்கும் கூத்து நடந்திருக்கு.

சித்திக்கு அழகா கோலம் போடத்தெரியும். தையல் தெரியும்.
இப்படி ஏகப்பட்ட தெரியும்கள். இன்னைக்கு எனக்கு ஏதாவது
தெரியும்னா அதுக்குக் காரணம் சித்திதான்.

எவ்வளவோ திட்டு வாங்கியிருக்கேன். துணி சரியா மடிக்க,
துணி அலசும் போது பல டெக்னிக்குகள், காய்கறிகளை
கழுவிவிட்டுதான் வெட்டணும், பாத்திரங்களை கழுவி
கவுக்கும் விதத்திலேயே அந்த பாத்திரங்கள் காற்று
உள்ளே போய் சீக்கிரம் காய்ந்து விடவேண்டும்,
உள்ளாடைகள் வெளியே தெரியாமல் காயப்போட
வேண்டும்(அதே சமயம் தேவையான சூரிய ஒளி
உள்ளாடைக்கும் போக வேண்டும்) ம்முச்சு விட்டுக்கறேன்.
இப்படி பல பயிற்சிகள். சரியா செய்யாட்டி திட்டுதான்.

”நீ பர்ஃபெக்டா இருக்கணும், செய்யும் வேலையிலும்
அது தெரியணும்” சித்தி சொல்லிக்கொடுத்தது இது.


சித்தியோட பல குணாதிசயங்கள் என் கிட்டயும் இருக்குன்னு
நல்லாத் தெரியும். ரேடியோ கேட்டுகிட்டே வேலை செய்யும்
குணம், நிறைய்ய படிப்பது,சூடா இல்லாட்டி சோறே வேணாம்னு
பட்னி கிடப்பது, ஏன் இப்ப கோர்வையா எழுதுவது
எல்லாம் அங்கேயிருந்து வந்ததுதான்.(சித்தியும் பல இதழ்களுக்கு
எழுதியிருக்காங்க.) அவங்களை மாதிரி நான்னு எல்லோரும்
சொல்லி சொல்லி அப்படியே ஒரு வாரிசாக நான் ஆகிட்டேன்.

இதெல்லாம் என்னாத்துக்கு இப்பன்னு கேக்கறீங்களா??
எங்க சித்திக்கு தினமும் டெய்லி அர்ச்சனை நடக்குது.
அப்பப்ப சித்தப்ஸுக்கு நடக்குது. :)) நடத்துபவர்கள்
என் அருமை தங்கைகள் தான். காரணம்??? அங்க தான்
இருக்கு மேட்டர். காலேல எழுந்துலேர்ந்து ஒரு நாளாவது
அவங்க பேரைச் சொல்லி சித்தி கூப்பிட்டதே இல்லை. :))
ஆரம்பிக்கும் போதே கலா.... தான்.

பல நாள் தங்கசிங்க பதிலே சொல்லாம் இருக்க, ஏண்டி
காட்டு கத்தல் கத்திகிட்டு இருக்கேன், பதில் பேசாம
இருக்கிங்க ரெண்டு பேரும்னு சித்தி சொல்ல, “நீங்க
கூப்பிட்டது உங்க அருமை பொண்ணை எங்களை இல்ல,
எங்க பேரைச்சொல்லி கூப்பிட்டா நாங்க வருவோம்,
உங்க பொண்ணு வரும் வரை வெயிட்டுங்க!!”” அப்படின்னு
சொல்லியிருக்காங்க. :))))

தங்கச்சிங்க பேரு நித்யா, ஸ்வேதா. பெரிய தங்கச்சி
காலேஜ் முடிக்க போறாங்க. சின்னவங்களுக்கு இன்னும்
ஒரு வருஷம் இருக்கு. இப்ப வரைக்கும் இதே கதைன்னா
என் பேர்ல கோவம் வரும் தானே!!! (செல்லக் கோபம் தான்)

நான் போன் பேசினா இன்னும் கோவம் வரும்.:))
காரணம் சித்தி லைன்ல வரும் போதே “கண்ணம்மா!”
அப்படின்னு கூப்பிடுவாங்க. (என்னைத்தான் :)) )
”ஒரு நாளாவது அப்படி எங்களை கூப்பிட்டிருக்காங்களா!”
அப்படின்னு புலம்பல்ஸ் தான் இரண்டு பேரும்.

சித்திக்கு கல்யாணம் நடந்த போது எனக்கு 16 வயசு.
கல்யாணம் முடிந்து சித்தி மதுரைக்கு பஸ்ல கிளம்பிட்டாங்க.
கல்யாண சத்திரத்தில் அவங்களை கட்டிகிட்டு உக்காந்திருந்து
பஸ்ல ஏத்திவிட்டு வந்தப்புறம் ஒரு வெறுமை. உடனே
ஓடினேன் பஸ்டாண்டுக்கு. நிஜமாவே ஓடினேன். 2 கிமீ
தூரம் இருக்கும். பஸ்ஸ்டாண்டில் இருந்த சித்தியை
கட்டிகிட்டு அழுதேன். எங்க சித்தப்பா இப்பவும்
இதை சொல்லிகிட்டு இருப்பாங்க.


பாவம் சித்தி. என்னால ரொம்ப திட்டு வாங்கறாங்க.:))
”வாயத்தொரந்தாலே உன் பேருதான் வருதும்மா, நான்
என்ன செய்யன்னு கேக்கறாங்க,!!””
பெற்றால்தான் பிள்ளையா!!! இல்லையே வளர்த்த பாசம்
இன்னும் அதிகமாச்சே. கிருஷ்ணனை பெற்றவளை விட
வளர்த்தவள் பாசம் பன்மடங்கு ஆச்சே. என்ன்னைப் பெத்த
மகராசி மேல என் மூத்த தங்கைக்கு பாசம் அதிகம்.
பெரியம்மா, பெரியம்மான்னே கிடக்கும்.

க்ராஸ் மல்டிபிளேகஷன் மாதிரி அன்பு க்ராசாகிடுச்சு இங்க.
அம்மாவின் மேல் வைத்திருக்கும் அந்த அன்பு, மரியாதை,
பாசம் என் சித்திமேலும் எனக்கு உண்டு.

என் தம்பிக்கும் சித்தி என்றால் ரொம்ப பிடிக்கும்.
சிங்கையிலிருந்தாலும் அடிக்கடி போன் போட்டு
பேசிவிடுவான். நானும் தம்பியும் சேர்ந்து சித்திக்கு
ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்தோம். சித்திக்கு
மகா சந்தோஷம். என் பசங்க வாங்கிக்கொடுத்தது
எனும் சந்தோஷம் அது.

என் சித்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதாலேயே
இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். அவங்களுக்காக
இந்தப் பாடல் இங்கே: (இந்தப் பாட்டு என் ஃபேவரீட்டுன்னு
எனக்கே மறந்துப்போச்சு என்பதுதான் சித்தியின் சமீபத்திய
கமெண்ட் :)))



Get Your Own Hindi Songs Player at Music Plugin

9 comments:

சாந்தி மாரியப்பன் said...

என் சித்தியை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். அவங்களும் இதேமாதிரிதான் என்மேல் பாசம் கூடுதல்.

அப்புறம் புளிப்பொங்கல் ரெசிபி ப்ளீஸ்....

நானானி said...

தங்கைகளிடமிருந்து அந்த, “அவ்வ்வ்வ்வ்வ்” கேக்கும் போது உண்மையிலேயே உங்க மனசு பொங்கும்தானே!!??
பாசம் வழியும் பதிவு!!

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

குழந்தை என்று முதலில் வளர்த்தது என்னைத்தான். கிட்டத்தட்ட 13 வருடங்கள் வளத்திருக்காங்க. அப்புறம் தான் அவங்க மும்பைக்கு வேலைக்குப்போனது, கல்யாணம் ஆனதும் எல்லாம்.

புளிப்பொங்கல் ரெசிப்பியா!!!
எத்தனையோ முறை சொல்லிக்கொடுத்திட்டாங்க. இது நீங்க செஞ்சாதான் நல்லா இருக்கும்னு சொல்லி சொல்லியே கத்துக்கல.

இப்ப ரெசிப்பி கேட்டு செஞ்சு உங்களுக்காக பதிவு போட்டிடறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் நானானி,
அம்மா உன் பேர் சொல்லித்தான் என்னைக் கூப்பிடறாங்கன்னு சொல்லி சண்டை போடும்போது உள்ளே பொங்குதுதான்.

சித்தியின் அனு அனுவிலும் நான் எனும் நினைப்பு சந்தோஷமா இருக்கு.

வருகைக்கு நன்றி

ஸாதிகா said...

இப்படியும் ஒரு சித்தியா?எனக்கில்லையே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

வாங்க ஸாதிகா

வருகைக்கு நன்றி

Radhakrishnan said...

மிகவும் நெகிழ வைத்த பதிவு. சித்தி பாராட்டுக்குரியவர். இதுக்கா அவ்வ்வ்வ்? தலைப்பு சிரிக்க வைத்தது.

Anonymous said...

Touched =))

pudugaithendral said...

thanks anamika