Sunday, April 11, 2010

ஐஸ்... ஐஸ்.. கூல்... கூல்ல்

பாலேஸ், கப்பைஸ் அப்படின்னு வெள்ளக்கலர்
கைவண்டில வெச்சு ஐஸ்கிரீம் வித்துகிட்டு போவாங்க.
ஆனா வீட்டுல வாங்கிக் கொடுக்க மாட்டாங்க.
தயாரிப்பு எப்படி இருக்கும்னு ஒரு டவுட் தான்.
கீழ3ல நாங்க இருந்தப்ப பின் வீதியாக கீழ 4ல
முருகன் ஐஸ்கீரிம்னு ஒரு கடை. அவ்வா போய்
அங்க செக் செஞ்சு பால் ஐஸ் மட்டும் வாங்கிக்கலாம்னு
பர்மிஷன் கொடுத்தாங்க.

குச்சி ஐஸ் தான். பால் சுவை. குச்சி ஐஸை
சாப்பிடும் சுகமே தனி... சேமியா, ஆரஞ்ச்னு
பலவகை இருதாலும் பால் ஐஸ் மட்டும் தான்
வாங்கிக்கொடுப்பாங்க.

வண்டி வாசலில் வராத பொழுது ஒரு டம்ப்ளரும்
காசும் அவ்வா கொடுத்தனுப்புவாங்க. ஐஸ் வீட்டுக்கு
வருவதற்குள் உருகிவிடாம டம்ப்ளரில் போட்டு
எடுத்துகிட்டு வருவேன்.

அந்த ஃபேக்டரி இடம் மாறிப்போனதும் அம்மம்மா
வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் மாடர்ன் ஸ்கூல்
பக்கத்துலேர்ந்து ஒருத்தர் கோன் ஐஸ் கொண்டு
வருவார். அது வாங்கிக் கொடுத்தாங்க. நம்ம நேரம்
டான்சில்ஸ் வந்ததால ஐஸ் வண்டி போகும் பொழுது
ஜொள்ளு விடுவதோட சரின்னு ஆச்சு. டான்சில்ஸ்
கரைஞ்ச பின்னாடியும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கல.
சில சமயம் சாப்பிட உடனே தலைவலி வந்திடும்.
அதனாலயும் வேணாம்னு விட்டுடேன்.

மும்பை போன பிறகு மாமா ஐஸ்கிரீமை தலைவலி
மருந்தா மாத்திட்டாரு. ”வால்ஸ் ஐஸ்கிரீம் சாப்பிடு
ஒண்ணும் செய்யாதுன்னு” வாங்கித் தருவார் மாமா.
அப்புறம் ஐஸ்கீரீம் ஐஸ்கீரிம் தான். செம ஜாலியா
இருந்துச்சு.

கல்யாணத்துக்கு அப்புறம் கூட வால்ஸ் ஐஸ்கிரீம்னாதன்
சாப்பிடுவேன்.(இப்ப வரை) ஹோட்டல், திருமண
வீடுகளில் கொடுக்கும் ஐஸ்களை தவிர்த்துவிடுவேன்.
எனக்கு பிடிச்சது சாக்கோபார்தான். மேலே சாக்லட்
கிரிஸ்ப் உள்ளே அவ்வா வாங்கிக்கொடுத்த பால் ஐஸ். :)
வெந்நிலா ஃப்ளேவரும் பிடிக்கும்.



கொழும்புவில் வால்ஸ் கிடைச்சது. ஆனாலும்
elephant house நல்லா இருக்கும். வகை வகையா
ஐஸ்கிரீம்னு ஒரே எஞ்சாய் தான். கொழும்பு மெக்டொனல்ட்ஸில்
கிடைக்கும் ஐஸ்கிரீம் சண்டே( வெந்நிலா +சாக்லேட் சாஸுடன்
ம்ம்ம்ம்ம் யம்மி :) )




பத்து வருஷம் முன்னாடி OUTLOOK MAGAZINEனு நினைக்கிறேன்.
ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தாங்க. பல கம்பெனி ஐஸ்கிரீம்களை
பரிசோதனை செஞ்சு எது சிறந்ததுன்னு? கட்டுரை.
தயாரிக்கும் விதம், தயாரித்த பின் பதப்படுத்தும் முறை,
மென்மைத் தன்மை, ஃப்ரீஸரில் வைக்கப்படவேண்டிய
விதி முறைகள், ஃப்ரீஸரில் இருந்து எடுத்த பின்
ஐஸ்கிரீம் இருக்க வேண்டிய தன்மை எல்லாம் ஆராய்ஞ்சிருந்தாங்க.

அதில் அமுல் ஐஸ்கிரீம் நிறுவனம் தான் முதல் இடம்.
என் ஃபேவரீட் வால்ஸ் இரண்டாம் இடம். 3ஆவதா இன்னொரு
கம்பெனி ஞாபகமில்லை. மத்த தயாரிப்புக்கள் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு
ஆணையத்தின் எந்த பிரிவுக்குள்ளும் வரவில்லை. மார்க்கெட்டில்
விற்பனைக்கே லாயக்கற்றவைன்னு சொல்லியிருந்தாங்க.
இப்ப எப்படியோ தெரியலை.

போன வாரம் இங்க லோக்கல் நியூஸ் சேனல் TV9ல்
ஹைதையின் 5 இடங்களிலிருந்து ஜூஸ், லஸ்ஸி போன்றவற்றிற்கு
உபயோகப்படுத்தப்படும் ஐஸ் பார்களை எடுத்து பரிசோதனை
செஞ்சு அதிர்ச்சி ரிப்போர்ட் வந்ததை காட்டினாங்க.

வெயிலுக்கு இதமா இருக்க இந்த ஜூஸை மக்கள்
குடிக்கறாங்க. ஆனா இதம் பாக்க போய் உடல்
பாதகமாயிடும் நிலமை இருக்குன்னு அறிக்கைகள்
சொல்லுது. ஐஸ் பார்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும்
தண்ணீர் சுத்தமில்லையாம். contaminated water,
bore water இவற்றைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.



இப்படி தயார் செய்யப்படும் ஐஸ்பார்கள் பாதுகாக்கும் வகையோ,
விற்பனையாளரிடம் செல்லும் முறையோ எதுவுமே
சுகாதரமாக இல்லை. சில இடங்களில் ஜூஸ் பார் எதிரில்
டயரில் கட்டி உடைத்து தெர்மாகோல் பெட்டியில் போடுவதை
பார்த்திருக்கிறேன். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட
இப்படித்தான் இருக்குமாம்!! அலாரம் அடிச்சிருக்காங்க
அந்த சேனல் காரங்க. வெயிலின் தாக்கத்தை தாங்க
ஜூஸ் குடிக்கப்போனா, அந்த ஜூஸே எமனாகும்
வாய்ப்புக்கள்தான் அதிகம்.

இங்கன்னு இல்லை. எல்லா ஊர்களிலும், மாநிலங்களிலும்
இப்படித்தான் இருக்கும். எடுத்து பரிசோதனை செஞ்சு
பாத்தாத்தான் தெரியும்.

உங்க அனைவருக்கும் என் வேண்டுகோள் என்னன்னா?
எங்கயும் இப்படி ஜில் ஜில் பானங்களை தவிர்த்திடுங்க.
ஐஸ் போடாமல் செஞ்சு தரச்சொல்லி குடிங்க.
கல்யாண வீட்டில் தரப்படும் சர்பத்தும் வேணாம்.
எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கோ!!!
நம்மை நாமதானே பாத்துக்கணும்!!!!

16 comments:

தமிழ் அமுதன் said...

வெய்யில் நேரத்துல இப்படி ஐஸ் மேல ஒரு பயத்த காட்டுறீங்க ..?

Jayashree said...

8/9 வயசுல முதல் முதல மெட்ராஸ் போனப்போ சித்தப்பா சாந்தோம் பீச் ல வாங்கிதந்த ரீடா (ரீ...ட்ட அயி....ஸ்) அப்புறம் திருநெல்வேலி ப்ஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கடைல ஃபலுதா, டூட்டி ஃப்ரூட்டி ( பிஸ்தா, பதாம், செர்ரி எல்லாம் போட்டிருக்கும்!இன்னிக்கி வரை அதே மாதிரி ஃப்லேவர் ல இன்னும் சாப்பிடலை. இப்ப வேற என்னத்தையோ தராங்க கேட்டா:((( )
கல்யாணமாகி டெல்லி போனப்புறம் ப்ரெக்னன்ட் ஆ இருந்தப்போ இவர் வாங்கி தந்த க்வாலிட்டி இலாச்சி பிஸ்தா ஐஸ்க்ரீம்: சிங்கை ல ஹேகன் டாஷ், அப்ப நியுஸில டிப் டாப் ஹோக்கி போக்கி
: இப்ப நியுசில மூவன் பிக் - மேபில் அண்ட் வால்னட், டிப் டாப் குக்கீஸ் அண்ட் க்ரீம், ஆசம் ஃபோர்சம்,குடி குடி கம் ட்ராப்ஸ் , மொரிட்ஸ் டார்க் சாக்கோலேட் , மாக்னம் பிக் நட்.. ம்..... இப்பல்லாம் பாக்கும்போதே வார்னிங்க் கொடுத்துடுவேன்.. அளவோடு உண்டு நெடு நாள் அனுபவினு :)))

pudugaithendral said...

வாங்க ஜீவன்,

அந்த நிகழ்ச்சியைப் பாத்தப்போ எனக்கும் பயம்மா இருந்துச்சு. இதை எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரியுமான்னு ஜுஸ் குடிச்சுகிட்டு இருந்த ஒருத்தரை கேக்க அவர் சொன்னது,” தாகத்துக்கு குடிக்கறேன்”
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆஹா வாங்க ஜெயஸ்ரீ,

உங்களுக்கும் ஐஸ்கிரீம் கொசுவத்தி சுத்திடிச்சா.

வெயில் காலங்களில் மட்டும் ஐஸ்கிரீம் அதுவும் நீங்க சொல்வது மாதிரி அளவா ஆசைக்கு அம்புட்டுதான்.

வருகைக்கு நன்றி

பனித்துளி சங்கர் said...

//////வண்டி வாசலில் வராத பொழுது ஒரு டம்ப்ளர்
காசும் அவ்வா கொடுத்தனுப்புவாங்க. ஐஸ் வீட்டுக்கு
வருவதற்குள் உருகிவிடாம டம்ப்ளர் போட்டு
எடுத்துகிட்டு வருவேன்.////



உண்மைதான் எனக்கும் இந்த அனுபவங்கள் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் . மீண்டும் வருவேன் .

பாலராஜன்கீதா said...

பாலைஸ்! கோனைஸ்! கப்பைஸ்!
http://agaramuthala.blogspot.com/2006/04/blog-post_21.html

GEETHA ACHAL said...

சூப்பப்ர் பதிவு..எனக்கும் பழைய நினைவுகள்...பால் ஐஸ் என்றால் சூப்பர்ப்...எங்க அவ்வா வீட்டில் நாங்கள் லீவுக்கு செல்லும் பொழுது, இதே மாதிரி தான் செய்வோம்...சில சமயம் இலையில் கூட ஐஸ் வாங்கியாதாக நியாபகம்...

சாந்தி மாரியப்பன் said...

வால்ஸ் ஐஸ்ன்னா வால்ஸ் ஐஸ்தான்.. போய் வாங்கிட்டு வாங்கன்னா வாங்கிட்டு வாங்களேன்.

தென்றல்,.. அயித்தானிடம் சொன்ன டயலாக் இது :-D

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சங்கர்

pudugaithendral said...

இதோ பார்க்கிறேன் பலராஜன் கீதா அவர்களே

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆஹா வாங்க கீதா ஆச்சல்,

இலையிலே வாங்கி வருவீங்களா?? ரொம்ப நேக்காத்தான் இருப்பீங்க போல.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

அயித்தானுக்கும் சேர்த்து நான் வாங்கிவெச்சாத்தான் உண்டு. இதுஅல் எங்க அவரை வாங்கிக்கிட்டு வரச்சொல்வது. நம்ம நேரம் அப்படி. அய்யா ஒன்லி ஆபீஸ்... ஆபீஸ்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐஸ் ஐஸ்.... அழகான நினைவுகள்

Anonymous said...

வெளியே போனால் நான் எதுவுமே கூலாக குடிப்பதில்லை. டேஸ்ட் பாப்பது கூட அபூர்வம் தான். வீட்டிலேயே தயாரிப்பது தான் நல்லது. இப்ப தான் ஈசியா ஐஸ்கிறீம் செய்யலாமே. ஒரு காலத்தில ஜெலட்டின் எல்லாம் போட்டு நாலு மணி நேரம் பீரிசலில் வைத்து திருப்ப எடுத்து அடிச்சு, திருப்ப வைச்சு, திருப்ப அடிச்சுனு ஒரே அலட்டல் பண்ணுவாங்க. இப்ப எதுவுமே இல்லாமல் ஐஸ்கிறீம் செய்யலாம். வீட்டிலேயே செய்யுங்க. வெளியே போகும் போது பெரிய போத்தலில் சுத்தமான தண்ணி எடுத்திட்டு போங்க. அது தான் நல்லது. யாராவது பாத்து சிரிச்சா சிரிச்சிட்டு போகட்டும். உங்க உடல் நீங்க தான் பொறுப்பு.

ரெஸ்ட்டோரன்ட் போனா, சாப்பிட்டமா, மினரல் வாட்டர் குடிச்சமானு வந்து சேருங்க. அது தான் நல்லது.

pudugaithendral said...

வாங்க அப்பாவி தங்க்ஸ்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அனாமிகா,

நீங்க சொல்லியிருப்பது எல்லாம் யூஸ்ஃபுல் டிப்ஸ். மிக்க நன்றி