லீவுவிட்டாச்சு. போர் அடிக்குது அவ்வா!! என அவ்வாவை
தொண தொணத்த நாட்களை நினைச்சுப்பார்க்கிறேன்.
கூட ஆட யாருமில்லாமல் வெளியே போகக்கூடாது
எனும் அம்மாவின் கட்டளையை மீளவும் முடியாத
என்னுடன் அவ்வாதான் விளையாடுவார்.
பல்லாங்குழி, தாயம், பரமபதம் எல்லாம் விளையாடுவோம்.
பல்லாங்குழியில் காசிதட்டி லாபம் எடுக்கும் போது ஏதோ
சொத்தே கிடைத்தது போல ஒரு குஷி வரும்.
தாயம் ஆடும்பொழுது
”அய்யோ என்னை வெட்டாம போ அவ்வான்னு” கெஞ்சி
கூத்தாடுவேன். ஒரு தடவையாவது வெட்டினாத்தான்
பழம் எடுக்க போக முடியும்னு சொல்வதால சரின்னு
வெட்டு படுவதுன்னு ஜாலியா இருக்கும். அவ்வாதான்
எனக்கு கதை சொன்னதெல்லாம்.
ரொம்ப சீக்கிரமா ஏணியில ஏறின அதே ஜோருல
பாம்பு வாயில் கடிபட்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கீழே இறங்கும்போது
அவ்வா சொன்னது,”இது தான் நிஜ வாழ்க்கையிலையும்
நடக்கும்னு”
இப்படி நம்ம பாரம்பரிய ஆட்டங்கள் மணக்கணக்கு,
கவனமாக இருத்தல், எண்ணிக்கை ஆகியவற்றுடன்
வீட்டுக்குள்ளேயே உக்காந்து ஆடுவதை சொல்லிக்கொடுத்துச்சு.
இப்ப இங்க வெயில் செம ஹாட். இரவு நேர வெப்பமே
35 டிகிரி. பகலில் 44. பசங்களுக்கு விடுமுறை. எங்கே
வெளியே விளையாட அனுப்புவது? ஆனா அவங்களுக்கும்
போர் அடிக்கக்கூடாது. என்ன செய்யலாம். ஐடியா!!
வீட்டிலேயே சம்மர் கேம்ப்.அப்பாவோட சேர்ந்து
செஸ் விளையாடுறாங்க. தனது வரையும் திறமையை
அண்ணா தூசு தட்டி தினமும் ஒண்ணா வரைஞ்சுகிட்டு
இருக்காரு. கைவேலையும் நடக்குது. அம்ருதம்மா
எம்ப்ராய்டரி போட கத்துக்கறாங்க.(நானே சொல்லிக்
கொடுத்துகிட்டு இருக்கேன்) அப்பப்போ LITTLE CHEF'S IN
ACTION னு சமையற்கட்டுல நுழைஞ்சிடுவாங்க இரண்டு
பேரும். ஆனாலும் தினமும் ஒரே மாதிரின்னா போர்
அடிக்குமே!
வித்தியாசம் வேணுமே! நான் விளையாடின விளையாட்டுக்களை
சொல்லித்தரலாம்னா பலது மறந்தே போச்சு. தாயம்,
பரமபதம், சீட்டுக்கட்டுதான் ஞாபகத்துல இருக்கு. நம்ம பாரம்பரிய
விளையாட்டுக்களை இப்படி மறந்துட்டா எப்படி? பல்லாங்குழி
விளையாட்டில் என் குருவான அவ்வாவும் இப்போ
உயிரோடு இல்ல. நம்ம கூகுள் ஆண்டவரைக்
கேக்கலாம்னு கேட்டேன்.
அட ராமா! இப்படி கூட உண்டா. நம்ம பாராம்பரிய
விளையாடுக்களான கிச்சு கிச்சு தாம்பாளம், பச்சைக்குதிரை,
கலர் கலர் என்ன கலர் இப்படி நிறைய்ய வெளி விளையாட்டு,
உள்விளையாட்டுன்னு பிரிச்சு தனித் தனியா எப்படி
விளையாடுவதுன்னு அழகா தொகுத்துகிட்டு வர்றாங்க
Traditional games அப்படிங்கற வலைத்தளக்காரங்க.
என்ன மாதிரி மறந்த பலரும் இங்க ஒரு விசிட்
அடிச்சா ரெஃப்ரெஷ் செஞ்சுகிட்டு பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுக்கலாம்.
அம்ருதம்மாவுக்கு நொண்டி விளையாட
அதாங்க பாண்டி விளையாடச் சொல்லிக்கொடுத்தேன்.
சாக்பீஸால வரைஞ்சு நானும் எங்க அம்ருதம்மாவும் சேர்ந்து
நொண்டி விளையாடினோம். அம்மாவுக்கு
ரொம்ப சந்தோஷம்.
பசங்களுக்கு போரடிக்காமல் வீட்டுல உக்காந்து விளையாட
வெளியே போய் விளையாண்டாலும் வெரைட்டியா
விளையாட சொல்லிக்கொடுக்கலாமே. கோலி, கில்லிதண்டா,
எல்லாம் ஞாபகம் இருக்கா. ஒருவாட்டி மேலே சொல்லியிருக்கும்
வலைதளத்துக்கு விசிட் அடிச்சு பாருங்க.
12 comments:
ம்ம். பழைய நினைவுகளைக் கிளறி விட்டது பதிவு.
//
இப்படி நம்ம பாரம்பரிய ஆட்டங்கள் மணக்கணக்கு,
கவனமாக இருத்தல், எண்ணிக்கை ஆகியவற்றுடன்
வீட்டுக்குள்ளேயே உக்காந்து ஆடுவதை சொல்லிக்கொடுத்துச்சு.//
உண்மை.
நீங்க சொன்ன தளத்துக்குப் போய் பார்க்கிறேன்:)!
இப்போது உள்ள குழந்தைகள் எல்லாம் தொலைக்காட்சி பெட்டி முன்னாலேயே உட்கார்ந்து இருக்கிறார்கள். பழைய விளையாட்டுகள் பற்றி நீங்கள் கொடுத்த சுட்டி பார்த்தேன். மிகவும் பயனுள்ள ஒரு தளம். நன்றி.
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
வாங்க ராமலக்ஷ்மி,
கண்டிப்பா போய் பாருங்க. வருகைக்கு நன்றி
வாங்க வெங்கட் நாகராஜ்,
அந்த டீவி கிட்டேயிருந்து வெளியேத்தத்தான் இப்படி புதுசு புதுசா ஏதாவது கொடுத்தா நல்லாயிருக்குமேன்னு ஐடியா.
வருகைக்கு நன்றி
:)
மலரும் நினைவுகள்
ஆமாம் நேசமித்ரன்,
இப்படியெல்லாம் ஓடி விளையாடியதால்தான் அப்போது பிள்ளைகள் அதிக எடை இல்லாமல் ஆரோக்கியமா இருந்தாங்க.
வருகைக்கு நன்றி
இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து பல வருடங்கள் ஆகிப்போனாலும் . உங்களின் பதிவு மீண்டும் ஒரு மகிழ்ச்சிதான் எனக்கு .
நன்றி சங்கர்,
மனதுக்கு மகிழ்ச்சி
நொண்டி விளையாட்டு எல்லாம் ஞாபகத்துக்கு வந்திட்டுது
அவ்வ்வ்வ்வ். பல்லாங்குழி, பாண்டி, சில்லான் (கூழாங்கற்கள் வைத்து), ஐஸ்பால், பூப்பறிக்க வாரீங்களா...
இப்பல்லாம் கொசுவத்தி சுத்தி சுத்தி ரொம்ப ஏங்க ஆரம்பிச்சிட்டேன்!! நீங்களும் ஏத்தி விடுறீங்களே!!
வாங்க பாஸ்
வருகைக்கு நன்றி
சரி விடுங்க ஹுசைனம்மா,
ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செஞ்சு இந்த விளையாட்டெல்லாம் விளையாடி மகிழலாம்.
Post a Comment