Monday, April 26, 2010

நானொரு விளையாட்டு பொம்மையா....

சிறுவாச்சூர் மதுர்காளியம்மன். இது அம்மாவின் தாத்தாவுக்கு
இஷ்ட தெய்வம்.தாத்தா வாயைத்திறந்தாலே காளி,காளி
பத்ரகாளி என்று தான் எப்போதும் வரும். என்னைக்
கூப்பிடுவதும் காளி என்றுதான். (நம்ம ஆட்டத்துக்குத்தான்
தாத்தா காளின்னு கூப்பிடுறாருன்னு ஒரு சந்தேகம்
எப்பவும் இருக்கும். வீட்டுக்கு மூத்த பேத்தின்னு எப்பவும்
அல்லி ராணி ரேஞ்சுக்கு நடந்துப்போம்ல)

சிறுவாச்சூரில் தாத்தாவுக்கு நிலங்கள்,
வீடு இருந்ததுன்னு சொல்லக் கேள்வி. என்னாஆச்சோ
தெரியாது.பத்து வயது இருக்கும். அம்மம்மாவீட்டில் அனைவரும்
எங்கள் குடும்பம் எல்லோருமாக சேர்ந்து கோவிலுக்கு
வேன் எடுத்துச் சென்றது ஞாபகம் இருக்கு.
வெயில்காலத்தில் கூரைவீட்டின் குளிர்ச்சியில் ஹாயாக
அமர்ந்திருந்தேன். அம்மா, சித்தி, அம்மம்மா மாவிளக்கு
போட மாவிடுத்துக்கொண்டிருந்தனர்.

பொங்கல் எல்லாம் ஏற்பாடு செய்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள். பச்சை
மஞ்சளை அரைத்து கொண்டுவந்திருந்தார் அம்மா.
அதை நீரில் கரைத்து அபிஷேகம் செய்யும் பொழுது
கிளர்ந்தெழும் வாசம்....

அம்மா நல்லா பாடுவாங்க. குரலும் இனிமையா
இருக்கும். பாட்டு கத்துகிட்டவங்க ஆச்சே.
அம்மா இந்தப் பாட்டை பாடினாங்க. பாட ஆரம்பிச்ச
கொஞ்ச நேரத்துலேயே அழ ஆரம்பிச்சிட்டாங்க.

சாமிகிட்ட போய் யாராவது அழுவாங்களான்னு
அறியாத அந்த வயசுல நினைச்சிருக்கேன்.
சாமியைப்பாத்ததும் உள்ளும் உருகி கரையும்னு
இப்ப அனுபவம் கத்துக்கொடுத்திருக்கு.

அம்மா பாடிகிட்டே அழுத இந்தப்பாட்டு
எனக்கு ரொம்ப பிடிச்சிது. அருமையான
வரிகள்.


நானொரு விளையாட்டு பொம்மையா...
ஜகன் நாயகியே உமையே

நாநிலத்தில் பலபிறவி எடுத்து
திண்டாடினது போதாதா

அருளமுதைப்பருக அம்மா அம்மா
என்றலருவது கேட்பதுஆனந்தமா!!!
ஒரு புகழினிர் உன் திருவடி அடைந்தேனே
திருவுள்ளம் இறங்காதா - உனக்கு

அவ்வளவுதான் பாடல்வரிகள்.
பாபநாசம் சிவன் அவர்கள் எழுதியது.
பாடலைக்கேட்டுப்பாருங்கள் உங்கள்
உள்ளம் கண்டிப்பாய் உருகும்.


13 comments:

கானா பிரபா said...

அருமையான பாட்டு

புதுகைத் தென்றல் said...

பாட்டுன்னா ஓடி வந்திடுவீங்களே பாஸ்

ரொம்ப நன்னி

Jeeves said...

இதை பட்டம்மாள் குரலில் இன்னும் அருமையாக இருக்கும். எனக்குப் பிடித்த பாட்டுக்கோவ்

புதுகைத் தென்றல் said...

எனக்கு எங்கம்மா குரலில் கேட்க ரொம்ப பிடிக்கும். இருங்க ஒரு வாட்டி அவங்க பாடி வலையேத்தறேன்.

அம்மா பாடி நான் கேட்க விரும்பும் சில பாடல்கள் இருக்கு. அவையும் வரும்.

வருகைக்கு நன்றி ஜீவ்ஸ்

அநன்யா மஹாதேவன் said...

I prefer Visalakshi Nityanandham. இன்னும் உருக்கமா இருக்கும். எனக்கும் ஃபேவரைட். :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

கடவுளினும் இசை பெரிது. நித்யஸ்ரீயின் குரல் தெய்வீகம். அவரது குரலில் பாரதியார் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா.? பின்னியிருப்பார். இன்னிக்கெல்லாம் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

மணிநரேன் said...

அடிக்கடி கேட்க விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று.
பகிர்வுக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க அனந்யா,

நெட்டில் தேடிய பொழுது இவங்க பாடியதுதான் கிடைச்சது. அதான் போட்டேன்

புதுகைத் தென்றல் said...

வாங்க ஃப்ரெண்ட்,

நலமா? என்ன ஆளையே காணோம்.
இசையால வசமாகா இதயம் எது? நித்யஸ்ரீ குரலில் சில பாடல்கள் கேட்டிருக்கேன். எனக்கென்னவோ யேசுதாஸ் தான். மற்றவர்களையும் கேட்க ஆரம்பிக்கவேண்டும்

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி மணிநரேன்

வித்யா said...

மதுரகாளியம்மன் அப்பா வழி குலதெய்வம். அந்த உச்சிக்கால பூஜையைப் பார்க்க சின்ன வயதில் மிகவும் பயந்ததுண்டு:)

புதுகைத் தென்றல் said...

வாங்க வித்யா,

உச்சி பூஜையின் போது சிலருக்கு சாமி வரும்னு நினைவு. நான் ஒரு தபா ஓடி வேன்ல புகுந்துகிட்டு அழுததா ஞாபகம்.

வருகைக்கு நன்றி

நானானி said...

பாட்டை ரசித்தேன். பிடித்தபாட்டு. மஹாராஜபுரம் சந்தானம் அருமையாகப் பாட்டிய பாட்டு.