Friday, April 23, 2010

அம்மா.. வயிறு வலிக்குதே...

ஒவ்வொரு திங்கக்கிழமையும் ஸ்கூல் வேனிலிருந்து
இறங்கும்பொழுதே ஆரம்பமாகிவிடும் வயிற்றுவலி.
காரணம் வேறொன்றுமில்லை. அன்று வெள்ளவத்தையில்
இருக்கும் டீச்சர் வீட்டில் ஆங்கில ட்யூஷன். இதற்கு
elocution என்று பெயர்.

ஆங்கிலம் ஆஷிஷுக்கு பிடித்த பாடம்தான். ஆனா
அந்த டீச்சர். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்ட்ரிக்ட். இதை
(இன்வேர்டர் கமாஸ் போட்டு, போல்ட்லெட்டரில்
போட்டு படித்துக்கொள்ளவும்)

வாரம் ஒரு முறை மட்டும் elocution வகுப்பு. அதுவும்
ஒருமணிநேரம் என்று பேர்தான். ஆனால் பல நாட்கள்
4 மணிநேரம் கூட காத்திருந்திருக்கிறேன். கிட்டத்தட்ட
8 புத்தகங்கள். அவற்றை முடிக்காமல் விடமாட்டார்.
அந்த டீச்சர் சொல்லிக்கொடுக்கும் டெக்னிக் கொஞ்சம்
வித்தியாசமானது.

கணக்கு மாடல் சம் சொல்லிக்கொடுத்து மற்றவற்றை
நீங்களே போடுங்கள் என்று சொல்வார்களே அந்த ரகம்.
ஆங்கிலமும் அப்படித்தான் இவரிடம். ”நீ டிக்‌ஷனரி தேடு,
என்னவோ செய் ஆனால் எனக்கு விடை வேண்டும்”
அதற்குத் தேவையான டிக்‌ஷனரி,தெசாரஸ் போன்ற
புத்தகங்களும் வகுப்பில் வைத்திருப்பார். அதைத் தேடி
விடையைக் கண்டு பிடிக்க வேண்டும். சில சமயம் 2
மணிநேரத்தில் முடித்து விடுவார் அண்ணா. சில சமயம்
ஆஷிஷை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு அம்ருதாவை
மட்டும் அழைத்து வந்திருக்கிறேன். பிறகு போய் அழைத்து
வருவேன்.

ஒரு நாள்,”வெள்ளவத்தை கிளாசுக்கு நான் இனி
வரமாட்டேன்!” என்று அண்ணா சொல்லிவிட்டார்.
அவனுக்கு பிடிக்கவில்லை என்று பியானோ, நீச்சல்,
கம்ப்யூட்டர் வகுப்புக்களை நிறுத்தினேன். ஆனால்
என்ன ஆனாலும் சரி இலங்கையை விட்டு வரும்
வரை இந்த வகுப்பை மட்டும் விட மாட்டேன் என்று
கங்கணம் கட்டி இருந்தேன்.

”அம்மா உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்துவதற்காக
திட்டிக்கொண்டு இருந்தாலும் இருப்பாய். இப்போது
வருத்தப்படும் நீ பின்னாளில் இதற்காக மகிழ்வாய்.
அதனால் இந்த வகுப்பிலிருந்து மட்டும் நாம்
உன்னை விலக்க மாட்டேன்!” என்று கறாராய்ச்
சொன்னேன்.

வீட்டில் ஆங்கில புத்தகங்கள்,இதழ்கள் வாசிக்கச்
சொன்னேன். vocabulary முன்னேற்றத்துக்கு இது
உதவும். அப்போது ஒவ்வொரு வருடமும் வரும்
elocution பரிட்சை வந்தது. IWMS COLOMBOவால்
நடத்தப்படும் பரிட்சை இது. மொத்தமும் வாய்மொழி
தேர்வு. poem, அப்புறம் சில வார்த்தைகள் (things in
the bedroom, things in the kitchen) போன்றவற்றை
திக்காமல் திணறாமல் டகடகவென சொல்ல வேண்டும்.




உச்சரிப்பு, நம் உடை, நாம் நடந்துகொள்ளும் விதம்,
மனன சக்தி இப்படி எல்லாம் பார்த்து மதிப்பெண் கிடைக்கும்.
அந்த தேர்வுக்கு இந்த டீச்சர் தனது மாணவர்களை
அனுப்புவார். வயதுக்கு ஏத்தமாதிரி பரிட்சை. அந்த
வயது மாணவர்கள் மட்டுமே அந்த பரிட்சை செய்வார்கள்.

அந்தத் தேர்வுக்கு ஆஷிஷை அனுப்பினார் ஆசிரியை.
அம்ருதாவும் தான். 3 மாதங்கள் கழித்து ரிசல்ட் வரும்.
அதுவும் டீச்சருக்குத்தான். சஸ்பென்சாக உள்ளே அழைத்தார்
ஆசிரியை போனேன். Do you know how much your son and
daughter scored?" என்றார். மொளனமாக இருந்தேன்.
மதிப்பெண் தாளை கொடுத்தார். இன்ப அதிர்ச்சி இருவரும்
100 மதிப்பெண்கள் வாங்கியிருந்தனர். இலங்கை மொத்தமும்
நடைபெறும் தேர்வில், மொத்த இலங்கையிலும் 400 பேர்தான்
100/100. அதிலும் இந்த டீச்சரின் வகுப்பிலிருந்து 10 பிள்ளைகள்
சென்றதில் ஆஷிஷ் மட்டும்தான் 100. அம்ருதா வயதுக்குழந்தைகளிலும்
அம்ருதாதான் 100.. ஆசிரியைக்குமிக சந்தோஷம்.

வெளிநாட்டிலிருந்து வந்து எங்கள் ஊர் தேர்வில்
உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார்கள் உன் பிள்ளைகள்
என்று பாராட்டினார். இந்த மாதிரி ஒரு தருணத்துக்காகத்தான்
காத்திருந்தேன். இந்த பரிசு பெற்ற மாணவர்களை கொழும்புவில் இருக்கும்
BANDARANAYAKE MEMORIAL INTERNATIONAL CONFERENCE HALLல்
சான்றிதழும் கோப்பையும் கொடுப்பார்கள்.


பரிசளிப்பு விழாவுக்கு போய் அங்கே போட்டோவெல்லாம்
எடுத்து வீட்டுக்கு வந்ததற்கப்புறம் ஆரம்பித்தேன்.
“இப்போ எப்படி ஃபீல் செய்யற”
ரொம்ப பெருமையா, சந்தோஷமா இருக்கும்மா”

குட். நீத்து மிஸ் கிளாசுக்கு போகமாட்டேன்னு
சொன்னீங்க. அங்க போனதாலதான இந்த கொளரவம்!”

”ஆமாம்மா, அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கறதால
அப்படி சொன்னேன். ஆனா அவங்க அவ்வளவு
ஸ்ட்ரிக்டா இருப்பது என் நல்லதுக்குன்னு புரிஞ்சிச்சுமா!”

நல்லது. சரி வெள்ளவத்தை கிளாசை நிப்பாட்டிலாமா”

”ஐயோ! அடுத்த வருஷமும் நான் இதுமாதிரி பரிசு
வாங்கணும். நானும் அம்ருதாவும் கண்டிப்பா போறோம்”
பெருமை பொங்க ஆஷிஷும் அம்ருதாவும்.





இப்படி எல்லாம் பேசி அந்த வகுப்பை மட்டும்
விட்டுவிடாமல் அழைத்துச் சென்றதன் பலன்
இப்போது வகுப்பில் இருவரும் ஆங்கிலத்தில் கிளாஸ் டாப்பர்.
"Ashish excells in english" "Amrtha's vocabulary is good"
என்று ரிப்போர் கார்டில் வரும்பொழுது மறக்காமல்
நினைவு கொள்வது அவர்களது எலோக்யூஷன் டீச்சர்
திருமதி. நீத்து டிசெல்வா அவர்களைத்தான். போன் போட்டு
தங்களின் மகிழ்ச்சியை ஆசிரியையுடன் பகிர்ந்துகொள்வார்கள்
இருவரும். அவருக்கும் மகா ஆனந்தம். இன்னமும்
என்னை மறக்காமல் இருக்கிறீர்களே பிள்ளைகளே என
உருகுவார்.

ஆங்கில பரிட்சைக்குமுதல் நாள் மட்டும் டீச்சர்
இலங்கையில் பாடம் நடத்திய புத்தகங்களை
செய்வார்கள் இருவரும். அவ்வளவேதான்.
ரொம்ப மெனக்கடல் இல்லை. அதான்
அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்டு
வழியமைத்துக்கொடுத்துவிட்டாரே ஆசிரியை.

சென்றமுறை கொழும்பு போனபோது ஆசிரியையை மறக்காமல்
சந்தித்து வந்தோம். பிள்ளைகள் இருவரையும் கட்டித்தழுவிக்கொண்டார்.
”முன்பு என்னைக்கண்டாலே பயப்படுவார்கள்,
இப்போது என் தோழர்கள் போல போன் செய்து
பேசுகிறார்கள். " you both were angels in my class!" என்ற
ஆசிரியரை ஆச்சிரியமாக பார்த்தனர் இருவரும்.

ஈன்ற பொழுதில் பெரிதுவப்பது அன்னை. ஆனால்
அதே அளவு பெருமை கொள்வது ஆசிரியரும் தான்.
எந்த ஆசிரியரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்
,”என் ஸ்டூடண்ட் அங்கே பெரியவேலை, எப்படி
இருக்கிறான் தெரியுமா!!” என் பெருமை பொங்க
பேசுவார்கள். அது அன்னையின் பாசத்தைப்போன்றது.

இங்கே வந்த பிறகு அறிவியலுக்கும், கணக்குக்கும்
மட்டும் ட்யூஷன் வைத்தேன்.(இந்திய பாடத்திட்டத்தில்
படித்திராத காரணம், நமக்கு சொல்லிக்கொடுக்கும்
அளவுக்கு கணக்குத் தெரியாது என்பது முக்கிய
காரணம் :) ) ஆண்டவனருளில்
அவரும் மிக நல்ல திறமையான ஆசிரியையாக்
கிடைத்தார்.

இருவரின் வளர்ச்சியிலும் அவரின் பங்கு அபாரம்.
ஆஷிஷ் தன் கனவாக aeronautical engineering
படிப்பு என்று சொன்னதும் உன்னை BITS PILANI
கல்லூரியில் சேர்த்துவிட்டுத்தான் ஓய்வேன் என்று
சொல்லி அதற்காக ஏற்பாடுகள், பயிற்சி கொடுக்க
என்னென்ன செய்யலாம் என அவரே கேட்டு,
அறிந்து எல்லாம் செய்கிறார்.

”உன் கனவு நனவாக வேண்டும ஆஷிஷ்.
கை நிறைய்ய சம்பாதித்து, பெரிய வீடு
கட்டி வாழ வேண்டும். அப்போது நான் என்
பிள்ளைகளை அழைத்துவந்து இந்த அண்ணா
என் ஸ்டூடண்ட், நீயும் இவரைப்போல வரவேண்டும்
என சொல்வேன்” என்பார் ட்யூசன் டீச்சர் சந்தனா.

என்னைப்போலவே படிப்பு மட்டும் போதாது,
மற்ற குணாதிசயங்களும் நல்லவையாக இருக்க
வேண்டும் என நினைக்கும் ஆசிரியை இவர்.
அம்ருதாவுக்கு வெளியுலகோடு இன்னமும்
நிறைய்ய எக்ஸ்போஷர் வேண்டும் என்று
அடிக்கடி சொல்லி அவளுக்குத் தைரியம்
கொடுப்பார்.

நல்ல ஆசிரியர் கிடைப்பது ஆண்டவனருள்.
எனக்கு கிடைத்த இந்த இரண்டு ஆசிரியைகளையும்
சிறம் தாழ்த்தி வணங்குகிறேன். உன்னதமான
பணியில் தன்னை ஈடுபடுத்தி அதன் பெருமையை
உணர்ந்து அதை செயல்படுத்தி காட்டும் இவர்களைப்
போன்ற ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.

21 comments:

PPattian said...

Nice..:)

ப.கந்தசாமி said...

நல்லாசிரியர் கிடைப்பது ஒரு பெரும் பேறாகும்.

அன்புடன் அருணா said...

/இவர்களைப்
போன்ற ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்./
ஹையா!எனக்குமா???

pudugaithendral said...

thanks puttiyan

pudugaithendral said...

aamam ayya

sathyam athu oru maha bagyam.

aandvanrul en pillaaigalukuirupathil magizchi.

thangal varugaikum nandri

pudugaithendral said...

ஹையா!எனக்குமா???//

santhehama aruna. kandipaga en valthukalum vanakangalum ungal asirya paniku.

sorry for tanglish. computeruku virus juram vanthu ippathan saria agi iruku

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதிவு. நம் எல்லோரின் வாழ்விலும் ஆசிரியர்களின் பங்கு மிக பெரியது. அதை உங்கள் செல்வங்கள் இந்த வயதிலேயே புரிந்து கொள்ள செய்தது இன்னும் அழகு. வாழ்த்துக்கள்

Porkodi (பொற்கொடி) said...

எனக்கு 2 விதமான அனுபவமும் இருக்கு. :)

Anonymous said...

எனக்கு இன்னும் ஸ்கூலுக்கு போகணும்னா வயறு வலிக்கும் :)

pudugaithendral said...

நன்றி நசரேயன்

pudugaithendral said...

ஆமாம் அப்பாவி தங்க்ஸ்,

பசங்க டீச்சரைப்புரிஞ்சிக்காம அவங்களைப்பத்தி தப்பாவே நினைக்க விட்டுட்டா நான் எப்படி ஒரு நல்ல டீச்சராக இருக்க முடியும். நான் சார்ந்த சமூகத்துக்கு என்னால் ஆன ஒரு உதவி இது :)

pudugaithendral said...

எனக்கும் உண்டு பொற்கொடி,
ட்யூஷன் எனும் பேரில் வீட்டுக்கு வரவழைத்து தன் வீட்டு வேலைகளை எங்களை வைத்து செய்துகொண்டு அதற்காக மதிப்பெண்கள் கொடுத்த எங்கள் வகுப்பு மாத்ஸ் டீச்சர் ஞாபகமும் வரும். ஆனால் பலர் நல்லவர்கள்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

ஹுஸைனம்மா said...

என் சின்னவன் எல்.கே.ஜி. படிக்கும்போது நான் என் நகைகளைக் கழட்டி வைத்தால், அதைத் தன் டீச்சருக்குக் கொண்டுபோய்க் கொடுக்கப் போவதாகப் பையில் வைத்துக் கொள்வான். திருப்பி வாங்குவதே போராட்டமாகினாலும், எனக்கு ரொம்ப சந்தோஷமாருக்கும் நல்ல டீச்சர் என்பதால்தானே இதெல்லாம் செய்கிறான் என்று!!


//இப்போது வருத்தப்படும் நீ பின்னாளில் இதற்காக மகிழ்வாய்.//
பெரிய பிள்ளைகளுக்குத்தான் சில சமயம் ஆசிரியைகளின் அருமையை நாம்தான் எடுத்துச் சொல்லவேண்டியும் இருக்கிறது.

இரசிகை said...

santhoshamum vaazhthukalum.....:)

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

நாமளே சொல்லாட்டி பசங்க தப்பாத்தானே புரிஞ்சுக்குவாங்க.

வருகைக்க் நன்றி

pudugaithendral said...

நன்றி ரசிகை

Ahamed irshad said...

//பணியில் தன்னை ஈடுபடுத்தி அதன் பெருமையை
உணர்ந்து அதை செயல்படுத்தி காட்டும் இவர்களைப்
போன்ற ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.///

உண்மைதான்.. அருமையான பகிர்வு...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அருமையான பதிவு.
ஒரு மனிதனின் குணக் கட்டமைப்பில் பெற்றோரின் பங்கு 75 சதம் எனில் அறிவுக் கட்டமைப்பில் 75 சதம் ஆசிரியரின் பங்கு என்று அடித்துச் சொல்லலாம்..

எனது சில ஆசிரியர்களை என்றும் மறக்க முடியாது;இத்தனைக்கும் யோசித்துப் பார்க்கும் போது நான் மாணவணாக அவர்களுக்கு என்ன செய்து விட்டேன் என்று வெட்கப்படத் தோன்றுகிறது..ஆனாலும் அவர்கள் என்னைப் பார்க்கையில் சந்திக்கையில் பெருமை கொள்ளத் தவறுவதில்லை.

ஈன்ற பொழுதில்...ஆசிரியருக்கும் பொருந்தும்.

{சிறம் தாழ்த்தி வணங்குகிறேன்}

சிரம் தாழ்த்தி...தமிழுக்கும் நல்ல வாத்தியார் வந்திருக்கலாமோ?
:))

pudugaithendral said...

சிரம் தாழ்த்தி...தமிழுக்கும் நல்ல வாத்தியார் வந்திருக்கலாமோ?//

வாங்க அறிவன்,

நான் தமிழில் இவ்வளவு நல்லா டைப் செஞ்சு கட்டுரையெல்லாம் எழுதி 4 கதை வேற எழுதியிருக்கேன்னு எங்க தமிழ் ஆசிரியைக்கு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவாங்க.

கொஞ்சம் தப்பாகிடுச்சு.

சுட்டியதுக்கு நன்றி