Monday, April 26, 2010

சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி

நான் முதன் முதலில் டான்ஸுன்னு ஆட ஆரம்பிச்சது
இந்தப்பாட்டுக்குத்தான். எதிர்வீட்டுல ஒரு அக்கா
டான்ஸ் கத்துகிட்டு வந்து வீட்டுல ஆடிப்பாப்பாங்க.
நான் அவங்களைப்பாத்து கத்துகிட்டு ஆடின பாட்டு.
அதைவிடவும் இந்தப்பாட்டின் வரிகள்....
கம்பீரக்குரலில் குழைஞ்சு பாடியிருப்பார் சீர்காழி
கோவிந்தராஜன்.

ஸ்பீக்கர் கட்டி நடக்கும் திருவிழாக்களில் இந்தப்பாடல்களை
கேட்டிருக்கேன். அதுக்கப்புறம் வாய்ப்பு இல்ல.
இப்பத்தான் வலையில் எதுவும் ஈசியா கிடைக்குதே.
நீங்களும் கேட்டுப்பாருங்க.


அபிராமி பட்டருக்காக தன் தோட்டைக்கழற்றி
வானத்தில் எறிந்து அமாவாசையன்று பொளர்ணமியை
வரவழைத்தாள். இந்த அபிராமி அந்தாதியும்
சீர்காழி அவர்களின் குரலில் பக்தி ப்ரவாமாக இருக்கும்.


என்னப்பன் கந்தப்பன் மீது கோவிந்தராஜன் அவர்கள்
பாடிய இந்தப்பாட்டும் என் ஆல்டைம் ஃபேவரைட்.

நீயல்லால் வேறு தெய்வமில்லை.. எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை- முருகா




9 comments:

Raghav said...

ஆஹா.. இந்த நாள் இனிய நாள் தான்!!

கேட்க/பார்க்கத் தந்தமைக்கு நன்றிகள் பல..

வல்லிசிம்ஹன் said...

எத்தனை நாட்கள் ஆச்சு இந்தப் பாடல்களைக் கேட்டு. ஊரில் எந்தத் திருவிழாவோ,கல்யாணமோ லௌட் ஸ்பீக்கரில் கேட்டுக் கேட்டு மனப்பாடமான முருகன்பாடல்களில் இவைகளும் உண்டு. அபிராமி அந்தாதியின் சிறப்புச் சொல்லவே வேண்டாம் நன்றி தென்றல்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ராகவ்

pudugaithendral said...

ஆமாம் வல்லிம்மா,

மனதுக்கு இதமான பாடல்கள்.

வருகைக்கு நன்றி

நிகழ்காலத்தில்... said...

சீர்காழியாரின் வெண்கலக்குரலில் பாடல்கள்..

மிக்க நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சீர்காழி அவர்களோட குரல் தனித்தன்மை வாய்ந்தது சினிமால தவிர அதிகம் கேட்டதில்ல ஆனா, பகிர்ந்ததுக்கு ரெம்ப நன்றிங்க புதுகை. TMS அவர்களோட முருகன் பாடல்கள் கூட கேட்க ரெம்ப இனிமையா இருக்கும்

pudugaithendral said...

வருகைக்கு நன்றி நிகழ்காலம்

pudugaithendral said...

டீ எம் எஸ் பாடல்கள் ரொம்ப நல்லா இருக்கும், உள்ளம் உருகுதய்யான்னு அவர் பாடினா கண்டிப்பா நம்ம உள்ளமும் சேர்ந்தும் உருகும்.

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

சாந்தி மாரியப்பன் said...

//வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்//

நான் வரல்லைன்னாலும் என்னை ஞாபகம் வெச்சிருக்கீங்களே... உங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா!!! :-)