மதியம் 4.30 மணிக்கு ஆரம்பிச்சது தூறல். ஆகா
45 டிகிரில காஞ்சு போய்க்கிடக்கோமே அப்படின்னு
சந்தோஷப்பட்டுகிட்டு உக்காந்திருந்தோம். கரண்ட்
கட் ஆனது. இதுவும் சர்வ சாதாரணம். மழை
ஆரம்பிச்சிருக்கு கூலா இருக்கும்னு மழையை
அனுபவிச்சுக்கிட்டு இருந்தோம்.
சரி காத்தோட மழை. சின்னச் சின்ன ஐஸ்கட்டிகளுடன்
விழுந்த மழையை பசங்க ரசிச்சுகிட்டு இருந்தாங்க.
சூடான மசாலா டீயோடு மழையை ரசிச்சோம்.
30 நிமிடம் நல்ல மழை. ஒரு ரூமுக்குள் தண்ணி
வந்திடிச்சு.
5 மணிக்கு மழைவிட்டிடிச்சு. கரண்ட் வரலை
1 மணிநேரம் கழிச்சு வந்திடும்னு இருந்தோம்.
காலையில் ஒரு மணிநேரம், மதியம் 1 மணி
நேரம் இங்க பவர்கட் கடந்த ஒரு வருஷமா
நடக்குது. அதனாலதான் இந்த சம்மரில் வெறும்
2 மணிநேர பவர்கட்டோட போச்சு. இல்லாட்டி
4 மணிநேரம் பவர் கட் இருக்கும்.
6.30 ஆகியும் கரண்ட் வரலை. மொட்டைமாடிக்கு
போய் நானும் அயித்தானும் நடந்துகிட்டு இருந்தோம்.
கூலா இருந்துச்சு கிளைமேட்டு. இரவு 8 மணிஆகியும்
கரண்ட் வர்ற மாதிரி தெரியலை. இரவு சாப்பாடு
சமைக்க கரண்ட் இல்லாததால வெளியில் போய்ச்
சாப்பிடலாம்னு வீட்டுக்கு பக்கத்துல இருக்கற
பாவ்பாஜி கடைக்கு போனோம். போகும் வழியில
மரங்கள் சாஞ்சிருப்பதை பாத்தோம்.
எங்க மங்கிபள்ளியில்(எங்க ஏரியாவில்
குரங்குகள் அதிகம் என்பதால்
நாங்கள் வைத்திருக்கும் பெயர்) மரங்கள் அதிகம்.
சாப்பிட்டுவிட்டு மொட்டைமாடிக்கு வந்து
சுத்தமாக இருந்த மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு
நட்சத்திரங்களை பார்த்துகிட்டு இருந்தோம். மணி 9
ஆகியும் கரண்ட் வரலை. எலக்ட்ரிசிட்டி போர்டு
ஆபீஸுக்கு போயிட்டு வந்த இரண்டு பேர் கரண்ட்
வரது சந்தேகம். மொத்தம் 9 மரங்கள் விழுந்திருக்கு.
அப்படின்னு சொன்னாங்க.
தோமல்குடாவில் இருக்கும் சொந்தக்காரவுங்க
வீட்டுக்கு தூங்கப்போனோம். கொடுமை கொடுமைன்னு
கோவிலுக்கு போனா அங்க 4 கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு
ஆடிச்சாம், அதுமாதிரி நாங்க அங்க போன நேரம்
பாராத்(திருமண அழைப்பு) ஒண்ணு போய்க்கிட்டு இருந்துச்சு.
10 நிமிஷத்துல கடக்கற தூரத்தை 1 மணிநேரமா
டான்ஸ் ஆடி, மேளம் அடிச்சு போய்க்கிட்டு இருந்தாங்க.
12 மணி வரைக்கும் ஆட்டம் நடந்துகிட்டு இருந்துச்சு. :((
காலையில் 5 மணிக்கு கிளம்பி எங்க வீட்டுக்கு வந்தோம்.
அப்ப வரைக்கும் கரெண்ட் வரலை. பேப்பரில் பாத்தா
விஷயம் புரிஞ்சிச்சு. நேத்து மணிக்கு 70 கிமீ வேகத்தில்
காற்றோட மழை பெஞ்சிருக்கு. இதனால ஹைதை
மொத்தத்திலும் 300 மரங்கள் விழுந்திருச்சு.
அதிக பட்ச வெயிலால் அவிஞ்சிகிட்டு இருந்தோம்.
இந்த மழை இதத்தை கொடுத்து கொஞ்சம் மெர்க்குரி
லெவலை குறைச்சிருக்குன்னாலும் கிட்டத்தட்ட 14 மணிநேரம்
எங்க ஏரியா மின்சாரம் இல்லாமல் தவிச்சு போயிட்டோம்.
பல இடங்களில் மின்சார அலுவலகத்தை மக்கள்ஸ் முற்றுகை
இட்டதா பேப்பரில் படிச்சோம். ஒரு ஈ.பி ஆபிஸ் மேலேயே
மரம் விழுந்து கிடந்துச்சு. பாவம் அவங்களும் என்ன செய்வாங்க.
ஹைதையில் எனக்கு பிடிச்சது மரங்கள்,பசுமை.
பிர்லா மந்திரிலிருந்து பாக்கும்பொழுது கட்டங்களுடன்,
பசுமையா மரங்களும் தெரியும். Anandnagar, Jubilee Hills,
Baghlingampally, Gandhinagar, S P Road,
Vijayanagar Colony, Lower Tank Bund, Abids,
Basheerbagh, Yakutpura, Padmaraonagar,
SBI Colony, Goshamahal, Langar Houz,
Barkatpura, Noorkhan Bazar and Secretariat. இங்கல்லாம்
மரங்கள் விழுந்திருக்கு.
மரங்கள் எலக்ட்ரிக் வயர்களில் விழுந்ததுதான் பிரச்சனையே.
மழை நீர் தேங்குவதனாலும் பிரச்சனை. ராணிகஞ்ச்
பிரிட்ஜுக்கு அடியில் மழை நீர் தேங்கி டிராபிக்
ஜாம் ஆகிடிச்சு.
மழை பெஞ்சதால பகல்நேர வெப்பம் குறைய
வாய்ப்பில்லை, மாலை நேரங்கள் குளுமையா
இருக்கும்னு வானிலை அறிக்கை சொல்லுது.
எப்படியோ மழைக்காலம் ஆரம்பமாகிடிச்சு.
வரும்போதே ஆக்ரோஷமா வர்றாரு வருணபகவான்.
பாப்போம். நல்லபடியா மழை பெஞ்சு, நல்ல விளைச்சலை
கொடுத்து தண்ணிக்கஷ்டம் இல்லாம இருக்கட்டும்.
21 comments:
மே மாத வெயிலில் மழை = ஹை ஜாலி!!!
300 மரங்கள் வீழ்ச்சி = :(( ரொம்ப மோசம்!
14 மணி நேர கரண்ட் கட் = :O அடக்கஷ்டமே!
//நல்லபடியா மழை பெஞ்சு, நல்ல விளைச்சலை
கொடுத்து தண்ணிக்கஷ்டம் இல்லாம இருக்கட்டும்.//
irukkattum irukkattum.
பருவமாற்றங்கள் காலம் தப்பி நடப்பது போலத்தான் உள்ளது. சென்ற மழைக்காலத்தில் எங்க ஏரியாவில் போதுமான மழை இல்லை.. கடுமையான வெயில்.. இப்போதோ அக்னி நட்சத்திரம் காலத்தில் கடுமையான மழை..(15 நாட்களுக்கு முன் ஒரு நாள் மாலையில் ஆரம்பித்த மழை எந்த காற்றுமில்லாமல் நள்ளிரவு வரை உங்கள் புதுகையில் பெய்ததை உங்கள் அப்பாவிடம் விசாரித்து பாருங்கள்..?)கடும் வெயில் காலத்தில் கொஞ்சம் மழை மறுபடி வெயில் என நடப்பது சில disease க்கு காரணமாய் அமையலாம்.. மற்றபடி 300 மரங்கள் மரணித்தன என்பது global warming யுகத்தில் புமித்தாய்க்கு பெரிய இழப்பு..
கடைசியாய்.. ஒரு சாதாரண விஷயத்தை சுவைபட எழுதுவதில் கில்லாடியாய் உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்
உங்கூர்ல மழை ஆரம்பிச்சிடுச்சா.. இன்னிக்கு காலைல மேகமூட்டத்தோட வெய்யில் இல்லாம ஒருமாதிரி க்ளைமேட் இருக்குதேன்னு நினைச்சேன். இதான் விஷயமா. சரி..சரி.. மழையை எஞ்சாய் பண்ணுங்க. மரம் சம்பந்தமா ஒரு தொடர்பதிவுக்கு உங்களை அழைச்சதாக ஞாபகம். இப்பத்தான் மழை பெஞ்சுடுச்சே. மரம் வளருங்க. இதான் அதுன்னு மட்டும் கலாய்ச்சுடாதீங்க :-)))))
அங்கயும் தொடங்கிருச்ச? இங்க தொடங்கி கொஞ்ச நாள் ஆகுது வெளிய போகனும்ன யோசிக்க வேண்டி இருக்குது. மழை பரவாயில்லை
இடி தான் கொஞ்சம் பேஜாரான விஷயம்.
நல்லா என்ஜாய் பண்ணுங்க
வாங்க அநன்யா,
ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்.
வருகைக்கு நன்றி
வருகைக்கு நன்றி சர்வேசன்
வாங்க ஏகேஎம்,
அப்படி ஒரு மழை பெஞ்சபோது நான் திருநள்ளாறில் இருந்தேன். அப்பா கூட இருந்தாங்க.
//மற்றபடி 300 மரங்கள் மரணித்தன என்பது global warming யுகத்தில் புமித்தாய்க்கு பெரிய இழப்பு..//
ஆமாங்க அதான் வருத்தமா இருக்கு. அந்த மரங்களில் சில வாகனங்களின் மேலே விழுந்து பெருத்த சேதம்.
ஒரு சாதாரண விஷயத்தை சுவைபட எழுதுவதில் கில்லாடியாய் உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றிங்க
வாங்க அமைதிச்சாரல்,
எப்பவும் மிருகஷீர்ஷ நட்சத்திரத்தன்னைக்கு மழை ஆரம்பிக்கும். (அதாவது அடுத்த மாசம்)
நேத்தும் மிருகசீர்ஷ நட்சத்திரம் + அட்சய திருதிய. அட்சயமா மழை பெய்யட்டும். அனைவரும் நல்லா இருக்கட்டும்.
வருகைக்கு நன்றி
மரம் சம்பந்தமா ஒரு தொடர்பதிவுக்கு உங்களை அழைச்சதாக ஞாபகம். இப்பத்தான் மழை பெஞ்சுடுச்சே. மரம் வளருங்க. இதான் அதுன்னு மட்டும் கலாய்ச்சுடாதீங்க :-)))))
ஸ்மைலியையும் நீங்களே போட்டுட்டீங்க. உங்க பதிவை படிச்சதுக்கப்புறம் நான் என்ன எழுதுவேன். ரொம்ப அருமையான பதிவு அது.
வாங்க சுதர்ஷினி,
இலங்கையில் செம மழைன்னு கேள்விப்பட்டேன். வெசாக் சமயம் மழை இல்லாட்டி எப்புடி??!!
வருகைக்கு நன்றி
சென்னைக்கு மழையை மட்டும் அனுப்பி வைங்க :)
பருவம் தப்பி மழை பெய்றது சகஜமாப் போச்சு!! இங்கயும் மே மாசம் மழை பெய்யுது, முதல் முறையா!!
//மங்கிபள்ளி//
:-))) நீங்க இருக்க ஏரியா பேர் நல்லாருக்கு!! ;-)
கொஞ்ச மழையை இங்கே அனுப்பி வைங்க தென்றல்!வெந்துக்கிட்டு இருக்கோம்!
வாங்க ஜமால்,
சென்னைக்கு மழை அம்புட்டு சீக்கிரமாவா!!! அக்டோடபர்,நவம்பரில் அதிகம்போனால் டிசம்பர் 15 வரைதான் அங்கே மழைக்காலம். அதுக்குள்ள அனுப்பச்சொன்னா!!
வாங்க ஹுசைனம்மா,
பருவம் தப்பி மழையில்ல. இப்ப மழைக்காலம்தான் சீசன் கொஞ்சம் முன்னாடியே ஆரம்பிச்சிருச்சு.
எங்க ஏரியா பேர் உங்களுக்கு பிடிக்காட்டிதான் ஆச்சரியம் :)
வாங்க அருணா,
கேரளத்துலேர்ந்து, கர்நாடகா போய் இப்பத்தான் இங்க வந்திருக்கு. மும்பைக்கு அனுப்பிவெச்சிட்டு அடுத்து உங்க பக்கம் அனுப்பிடறோம்
//எங்க ஏரியா பேர் உங்களுக்கு பிடிக்காட்டிதான் ஆச்சரியம் :) //
நீங்களும், நானும் ஃப்ரண்ட்ஸானப்பவே தெரிஞ்சிருக்குமே, இனம் இனத்தோடத்தான் சேரும்னு!! ;-))) ஹி..ஹி..
ஆந்திரத்தலைநகரிலும்...14 மணி நேர பவர் கட்டா? அப்பாடி.. இப்பதான் நிம்மதியா இருக்கு! :)
என்ன ஒரு குரூர சந்தோஷம் பாத்தீங்களா? அப்படி ஆகிடுச்சு நிலைமை!
பசங்களை எப்ப லீவுக்கு ஊருக்கு கூட்டி வரப்போறீங்க?
வாங்க சுரேகா,
லீவுக்கு ஊருக்கு வந்து திரும்ப ஹைதை வந்தாச்சு.
Post a Comment