Monday, May 17, 2010
பச்சடிகள் பலவிதம்
ஆந்திராவில் ஊறுகாய், துவையல் ஆகியவற்றை
பொதுவா பச்சடின்னு சொல்வாங்க. போனதடவை
போட்ட ஆவக்காய் தானமாத்தான் போச்சு. இந்ததடவை
நிறைய்ய வேலை இருந்ததால் ஆவக்காய் போடவேணாம்னு
நினைச்சேன். என் மகனுக்கு திடும்னு புது ஆவக்காய்
போடலியேன்னு தோணிச்சு போல. ”எனக்காக ஒரு
பாட்டிலாவது ஆவக்காய் போடும்மான்னு!!”
ஒரே தொணதொணப்பு. ”ஒரு பாட்டில் கடையில
வாங்கிக்கலாம். நீ போடாதேன்னு !”அயித்தான்.
பிள்ளை கேட்டு மாட்டேன்னு சொல்லமுடியலை.
நாளைக்கு பெரிசாகி படிப்பு,வேலைன்னுஓடினான்னா
பாவமேன்னு பத்தே பத்து மாங்காய் வாங்கிகிட்டு
வந்து ஆவக்காய் போட்டேன். செம குஷி ஆஷிஷுக்கு.
பொடி சேர்த்து கலக்கும்போதே வாசனை கும்முங்குதுன்னு!
பாராட்டு வேற. :))
இன்னைக்கு டீவியில வெல்லம் ஆவக்காய பாத்துட்டு
அது வேணும்னு கேட்டார் ஆஷிஷ். எனக்கு மாமானார்,
மாமியார் கொடுமைல்லாம் இல்லைன்னு யாரும்
சந்தோஷப்பட்டுக்க வேணாம். ஆஷிஷ் ஒரு ஆள்
போதும். ச்சும்மா ஏன் இருக்கேன்னு அது இதுன்னு
வேலை வெச்சிடுவான் என் மகன். :))
வெல்லம் ஆவக்காய் போடும் முறை:
4 மாங்காய், 1 கப் பொடித்த வெல்லம், 1 கப் மிளகாய்த்தூள்,
1 கப் கடுகுப்பொடி, 1/2 கப் உப்பு, ந.எண்ணெய் 1 கப்.
எல்லாம் சேத்து கலந்து வெச்சுகிட்ட சுவையா
நல்லா இருக்கும். 1 வருஷம் தாங்கும்.(அதுவரைக்கும்
காலியாகாம இருந்தா)
ஆந்திரா பெசரட்டு ரொம்ப பேமஸ். பாசிப்பயறு, அரிசி
ஊறவெச்சு அரைச்சு தோசையா ஊத்துவதுதான் பெசரட்டு.
நடுவிலே ரவை உப்புமா வெச்சு மடிச்சு கொடுத்தா
எம். எல். ஏ பெசரட்டு( உப்புமாவுக்கும் எம் எல் ஏவுக்கும்
என்ன சம்பந்தம்?!!)
அதோட சைட் டிஷா ஆந்திரா ஷ்பெஷல் அல்லம் பச்சடிதான்.
அதாவது இஞ்சிப்பச்சடி. செம டேஸ்ட். பருப்பு சாப்பிடுவதால்
வயத்துக்கும் பிராப்ளம் வராது. சரி சரி. செய்முறை
சொல்லிடறேன்.
இஞ்சி- 100 கிராம்,
பச்சைமிளகாய் - 4
மி வற்றல் - 4
புளி - சிறிதளவு.
வெல்லம் - 1 துண்டு.
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செஞ்சு
கட் செஞ்சு வெச்சுக்கணும். சின்ன தாளிக்கும்
பாத்திரத்தில் பச்சை மிளகாய், மி.வற்றல்,
புளி போட்டு வதக்கி வைக்கவும்(1/2 ஸ்பூன்
எண்ணெய் போதும்). ஆறியதும்
எல்லாவற்றையும் போட்டு உப்பு சேர்த்து
அரைக்கவும்.
சின்னக்கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி கடுகு வெடிக்க விட்டு அதில் அரைத்து
வைத்திருக்கும் இஞ்சி விழுதைப்போட்டு
பிரட்டி எடுத்தால் கம கம அல்லம் பச்சடி ரெடி.
மைய்ய அரைக்காமல் கொஞ்சம் பரபரவென
அரைத்தால் ருசி அதிகமா இருக்கும்.
பெசரட்டுக்குன்னு சொன்னாலும் இட்லி,
தோசை, வெண்பொங்கலுக்கும் செம ஜோடி.
சரி இன்னொரு சூப்பர் சட்னியும் சொல்றேன்.
100 கிராம் வேர்க்கடலை, 2 ப.மி, 2 மி.வற்றல்,
புளி கொஞ்சம். வேர்க்கடலையை எண்ணெய்
விடாமல் வறுத்து தோல் நீக்கி வெச்சுக்கணும்.
கொஞ்சம் எண்ணெய் விட்டு மற்ற சாமான்களை
வறுத்து வெச்சுக்கணும்.
மிக்ஸியில் முதலில் மிளகாய், புளி போட்டு
கொஞ்சம் அரைத்துவிட்டு தோல் நீக்கி
வெச்சிருக்கும் வேர்க்கடலையை போட்டு
மைய்ய அரைச்சா வேர்க்கடலை சட்னி ரெடி.
இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.
எல்லோருக்கும் மாங்காய் ஒரு துண்டு எடுத்துக்குங்க.
எங்க ஊருல மாம்பழம் கிலோ 25ஏ ரூபாய் தான். :))
இன்னைக்கு டின்னர் ஆம்ரஸ் + பூரி.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நல்லா ருசியா சமைச்சுச் சாப்பிட்டு போட்டோவும் புடிச்சுப் போட்டு, எங்களைக் கடுப்பேத்தறீங்களா? கர்ர்ர்ர்ர்ர்!
ஃபார்வேர்டட் டூ ரமா.! (ஆமா.. படிச்சு கிழிச்சு செஞ்சு.. ஹூம்)
வாங்க சேட்டைத் தம்பி,
நான் ஹைதையில் தான் இருக்கேன். இங்க வந்தா எல்லாம் செஞ்சே தர்றேன்.
வாங்க ஃப்ரெண்ட்,
(ஆமா.. படிச்சு கிழிச்சு செஞ்சு.. ஹூம்)//
அப்புறம் எதுக்கு ஃபார்வேர்ட் செஞ்ச்சீங்கலாம்!!!
இன்னிக்கு எங்க வீட்டுல பெசரட்ன்னு உங்களுக்கு எப்டீங்க தெரிஞ்சது. பொதுஜன பெசரட்தான் செஞ்சேன். அதாவது உப்புமா இல்லாம :-)))))
அப்பூஸ் இப்போ சீசனுக்கு வந்திடுச்சு. நானூறு ரூபாய் கிலோ. ஆர்கானிக் வகைங்கிறதால இந்த விலை :-)))
வாங்க அமைதிச்சாரல்,
வாசம் மூக்கை துளைச்சு பதிவுபோட்டேன். மும்பை மாம்பழங்களை ஞாபகப்படுத்தீட்டீங்களே! மாமா சீசன் மொத்தமும் மாம்பழம் வாங்கி வருவார். நல்லா எஞ்சாய் செய்வோம். அடிக்கடி ஆம்ரஸ் தான்
வருகைக்கு நன்றி
பார்க்கவே மிகவும் நன்றாக உள்ளது கடலை சட்னிக்கு பச்சை மிளகாய் போட்டு செய்தது இல்லை.
வாங்க சுமதி,
பச்சைமிளகாய், மி வற்றல் ரெண்டும் சேர்த்து செய்யும்போது சுவையில் வித்தியாசம் இருக்கும். இது ஆந்திரா டைப்.
வருகைக்கு நன்றி
//நல்லா ருசியா சமைச்சுச் சாப்பிட்டு போட்டோவும் புடிச்சுப் போட்டு, எங்களைக் கடுப்பேத்தறீங்களா? கர்ர்ர்ர்ர்ர்!//
ரிப்பீட்டு.. கர்ர்ர்ர்ர்ர்ர்.. ஆஸ்ரேலியாவுக்கு ஒரு பார்சல் ப்ளீஸ்.
உப்புமான்னாலே பத்து கிமீ ஒடுவேன். ஆனா பெசரட் + உப்புமா ரொம்ப பிடிக்கும். திருப்பதி வரும்போது சாப்பிடறதுதான். வீட்டுல எல்லாம் செய்யறது இல்லை :(.
ஊறுகாய் எல்லாம் சாப்பிட ஆசையாய் இருக்கு. வடுமாங்காய் ஆவக்காய் ரெண்டும் ஒண்ணுதானே தென்றல்
வாங்க தாரணிப்ப்ரியா,
வடுமாங்காய் வேற ஆவக்காய் வேற.
வடுமாங்காய் சின்ன சைஸ் மாங்காய். கட் செய்யாமலே இருக்கும். ஆவக்காய் கொட்டையுடன் கட் செஞ்சு இருக்கும்.
வடுமாங்காய் தண்ணி போதும்.
வருகைக்கு நன்றி
ஆஸ்ரேலியாவுக்கு ஒரு பார்சல் ப்ளீஸ்.//
அனுப்பிடறேன் அனாமிகா. :))
ஒரு ஏரியாவையும் விட்டு வைக்காதீங்க
:)
ஆஹா... இப்ப தான் தயிர் சாதம் சாப்பிட போறேன் லஞ்ச்க்கு... இப்படி வெறுப்பேத்தறீங்களே ஞாயமா
வாங்க ஜமால்,
செய்வதை திருந்தச் செய்னு அம்மம்மா சொல்லிக்கொடுத்திருக்காங்களே.
வருகைக்கு நன்றி
ஆஹா... இப்ப தான் தயிர் சாதம் சாப்பிட போறேன் லஞ்ச்க்கு... இப்படி வெறுப்பேத்தறீங்களே ஞாயமா//
appaadi nimmathiya iruku
Post a Comment