Wednesday, May 05, 2010

புதுச்சேரிக்கு ஒரு கலக்கல் ட்ரிப்...

பாசக்கார நண்பர்கள் அயித்தானுக்கு அதிகம். நாங்க போட்டு
வெச்சிருந்த திட்டத்தை மாற்றி எங்களை வம்படியாக அவங்க
வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டார் அயித்தானோட நண்பர்.
செண்ட்ரல் ஷ்டேஷனுக்கே வந்திட்டாரு. அவங்க வீட்டுக்குப்போய்
குளிச்சு, சாப்பிட்டு கிளம்புவதற்கு 2 மணிநேரம் தாமதமாகிடிச்சு.
தம்பி அப்துல்லாவோட தங்க்ஸும் பிள்ளைகளும் சென்னையில்
இருப்பதாக சொன்னாரு. ரொம்ப நாளா அவங்க தங்க்ஸை மீட்
செஞ்சு ”பேசணும்”னு முடிவு செஞ்சிருந்தேன். இந்தமுறையும்
அப்துல்லா தப்பிச்சிட்டாரு. :)

அங்கேயிருந்து நேராக காரில் பாண்டிச்சேரிக்கு புறப்பட்டோம்.
போறவழியில் முதலைப்பண்ணை வரும், ஆஷிஷ்
அப்பாகிட்ட கெஞ்சி கூத்தாடி அங்கே போக ஒப்புதல்
வாங்கினாரு.(இதனால வேற எங்க பயணம் லேட்டாகிடிச்சு)
சரி போவோம்னு போனா போனதடவையை விட செம
மாறுதல். பரமாரிப்பே இல்லாத மாதிரி இருந்துச்சு.
சின்ன முதலையை கையில் பிடிச்சு போட்டோ எடுத்துக்கலாம்னு
தைரியம் வந்து அம்ருதா கேட்ட நேரம் 5 மாசமா அதை
தடை செஞ்சிட்டாங்களாம்!!




அங்கேயிருந்து மாங்கா பத்தை, வெள்ளரிக்காய் எல்லாம் உப்பு,காரம்
போட்டு வாங்கிட்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பினோம்.
இதோ வரவேற்கும் வளைவு.


பாண்டிச்சேரியில் எனக்கு பிடிச்சது அழகான சாலைகள்.
எங்க புதுக்கோட்டை மாதிரி ஒவ்வொரு தெருவும் அளந்து
கட்டியிருப்பாங்க. அமைதியா இருக்கும். கொழும்புவை
நினைவுப்படுத்தும் சாலைக்கு அருகில் பீச். பாண்டிக்கு என்னுடைய
இரண்டாவது விசிட் இது. பத்துலட்சத்துக்கு குறைவான
மக்கள் வசிக்கும் பாண்டிச்சேரியில் நான்கு மாவட்டங்கள்
பாண்டி, காரைக்கால், யாணம், மாஹே. இது
ஒரு தனித்துவம் என்ன என்றால் 4 மாவட்டங்களில்
காரைக்கால் இருப்பது தமிழ்நாட்டில், யாணம் இருப்பது
ஆந்திராவுக்கு அருகில், மாஹே இருப்பது கேரளாவுக்கு
அருகில். 281 வருடங்கள் ஃப்ரெஞ்சு ஆட்சியின்
கீழ் இருந்ததால் அந்தத் தாக்கம்
இன்னமும் இங்கே இருக்கு. ஃப்ரெஞ்ச் கலாச்சாரங்கள்,
உணவு, கட்டிடக்கலைன்னு அந்த தாக்கத்தை பாக்கலாம்.

இங்கே ஃப்ரெஞ்ச் பேசுபவர்களும் இருக்காங்க.
கிளம்பும்போதே லேட், முதலைப்பண்ணை போனதுன்னு
நிறைய்யவே தாமதம் ஆனதால பாண்டி வந்து சேர்ந்த
பொழுது மதியம் 1 மணி. உறவினர் வீட்டுக்குபோய்
சாப்பிட்டுவிட்டு அவங்களோட பேசிகிட்டு இருந்தோம்.
3மணிக்கு கிளம்பியாச்சு.




பாண்டிச்சேரியில் முக்கியமா நாங்க போனது இரண்டு
இடத்துக்கு. ஒண்ணு மணக்குளவிநாயகர் கோவில்.
4 மணிக்கு மேலத்தான் கோவில் திறப்பாங்க. அதனால
வெளியிலேயிருந்து தரிசிச்சிட்டு நேரா அன்னை ஆஸ்ரம்
போனோம்.



மிர்ரா அல்ஃபசா இதுதான் அன்னையின் பெயர்.,
1878ல பிறந்தவங்க.1914ல் ஸ்ரீ அரவீந்தரை சந்திக்க
பாண்டிச்சேரிக்கு வந்தாங்க.11 மாதம் அரவீந்தருடன்
இருந்து ஆன்மீக ஞானம் பெற்று
ஃப்ரான்ஸுக்கு திரும்பச்செல்லும் நிர்பந்தத்தை
தந்தது முதலாம் உலக யுத்தம். 1 வருடம் கழித்து
ஜப்பானில் 4 வருடங்கள் இருந்தார்.


1920ல் பாண்டிச்சேரிக்கே திரும்ப வந்துவிட்டார்.
1926ல் ஆஸ்ரமம் தொடங்கப்பட்டது. அன்னையின்
முழுபொறுப்பில் ஆஸ்ரமத்தை விட்டார் அரவிந்தர்.
சர்வேதச டவுன்ஷிப்பான அரோவில்லை அன்னை
1968ல் அன்னை உருவாக்கினார். 1973ஆம் ஆண்டு
நவம்பர் 17ஆம்தேதி அன்னை இந்த உலகைவிட்டு
நீங்கினார்.

அன்னையின் சமாதி அங்கேயே இருக்கிறது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பலரும் தியானம்
செய்யும் இடமாக இருக்கிறது.




காலையில் ட்ரையினில் இருக்கும்போதே ஆத்தா போனை போட்டுடாங்க.
காலை வணக்கம்னு இனிய தமிழில் சொல்லிகிட்டே போனை
எடுத்தது அயித்தான் தான். “எங்கண்ணா இருக்கீகன்னு! கேட்டிருக்காக
இப்ப ட்ரெயினில். மாலை வணக்கம் சொல்ல உங்கவீட்டுக்கு வந்திடுவோம்னு
சொல்லிட்டாரு. போகாட்டி அம்புட்டுதான். அதனால் கிளம்பிட்டோம்ல...

வரவேற்கும் வளைவைப்போல டாடா பை பை சொல்லவும்
பாண்டியில் வளைவு. அங்கேயிருந்து நேரா போனது.....
அடுத்த பதிவுல.



18 comments:

ஹுஸைனம்மா said...

//ரொம்ப நாளா அவங்க தங்க்ஸை மீட்
செஞ்சு ”பேசணும்”னு முடிவு செஞ்சிருந்தேன். இந்தமுறையும்
அப்துல்லா தப்பிச்சிட்டாரு.//

என்ன நீங்க, இப்படி விட்டுட்டீங்க!! ஃபோன் நம்பரையாவது வாங்கிப் “பேசுங்க”. நீங்க ”பேசுறதுக்கு” பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுக்க நானும் ரெடி!!

ஹுஸைனம்மா said...

//ஆத்தா //

யாருங்க இது?

ஹுஸைனம்மா said...

பாண்டிச்சேரிக்காப் போனீங்க, திருச்சிக்கு நினைச்சேன்!! சொல்லிருந்தா இன்னொரு வி.ஐ.பி. அட்ரஸ் தந்திருப்பேன்!!

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

அப்துல்லா எப்படியோ தப்பிச்சிடறாரு. :)) ஒரு நாள் பேசுவேன்

//”பேசுறதுக்கு” பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுக்க நானும் ரெடி!!//

ஆஹா நாம் கூட்டு சேர்ந்தது தம்பிக்கு மட்டும் தெரியவே கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்

pudugaithendral said...

சொல்லிருந்தா இன்னொரு வி.ஐ.பி. அட்ரஸ் தந்திருப்பேன்!!//

ஆஹா

//ஆத்தா //

யாருங்க இது?//

அடுத்த பதிவுல சொல்றேன் :))

Ananya Mahadevan said...

//மிர்ரா அல்ஃபசா இதுதான் அன்னையின் பெயர்., 1978ல பிறந்தவங்க.//
அக்கா பிழை திருத்தவும். ஆரு ஆத்தா? நைஸ் ரைட்டப்பு

ராமலக்ஷ்மி said...

பகிர்வு அருமை தென்றல்.

அடுத்த சென்றது..? சஸ்பென்ஸா:))? தொடருங்கள்!!!

pudugaithendral said...

மாத்திட்டேன் அநன்யா

நன்றி ஆத்தா ஆருன்னு அடுத்த பதிவில் தெரியும்

pudugaithendral said...

சஸ்பென்ஸா:))? தொடருங்கள்!!!//

:)) வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

நேசமித்ரன் said...

பகிர்வு அருமை

சாந்தி மாரியப்பன் said...

ஊருக்குப்போயிட்டு வந்தாச்சா.. ரைட்டு.

ஆத்தாவுக்காக வெயிட்டிங். சீக்கிரம் ம(வ)லையேத்துங்க.

Menaga Sathia said...

ஆஹா எங்க ஊரைப்பத்தி அழகா சொல்லிருக்கிங்க...ஊர் நினைப்பை அதிகப்படுத்திட்டீங்க...

pudugaithendral said...

நன்றி நேசமித்ரன்

pudugaithendral said...

இதோ போடறேன் அமைதிச்சாரல்

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

சந்தோஷம் மேனகா சாத்தியா

மங்களூர் சிவா said...

நல்லவேளை அம்ருதாட்ட இருந்து குட்டி முதலை தப்பிச்சது!

:)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் பயண கட்டுரை புதுகை... புதுகைக்கு நான் ரெண்டு வாட்டி போய் இருக்கேன் காலேஜ் படிக்கறப்ப காலேஜ் ட்ரிப் எல்லோரடவும் சேந்து. என்னால மறக்க முடியாதது அங்க அன்னை ஆசிரமம், ஆரோவில் மற்றும் பீச். நெறைய போடோஸ் புடிச்சுட்டு வாங்க. கொசுவத்தி சுத்த வெச்சுடீங்க. நன்றி. நல்லா சுத்தி என்ஜாய் பண்ணிட்டு வாங்க

நட்புடன் ஜமால் said...

முதலைகளை போட்டு மிரட்டறீங்க