Friday, May 07, 2010

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை....

சிதம்பரத்திலிருந்து ஒன்றரை மணிநேரப்பயணத்தில்
சென்றடடைந்தது திருக்கடையூர் எனும் புனித
கோவிலுக்கு.

இங்கே என்ன விஷேஷம்? அம்மையும் அப்பனும்
தனது பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இடம்.

தனது பக்தனான அபிராமி பட்டரின் உயிரைக்காக்க
தனது காது தோட்டைக்கழற்றி வானத்திலே வீசி
அமாவாசையன்று பொளர்ணமியை வரவழைத்தவள்
ஆயிற்றே இந்த அபிராமி!! அபிராமி பட்டரின் கதை.


அபிராமி அந்தாதி பாடினார் அபிராமி பட்டர்.
அந்தமே ஆதியாக வரும்படி பாடப்படும் பாடல் அது.

அபிராமி கடைக்கண்களால் பார்த்தாலே நாம் பேறு
பெற்றுவிடுவோமாம்.
அபிராமி அம்மை பதிகத்தில் இந்தப்பாடல்
ரொம்பவே விஷேஷம்.

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கம்பீரமான
குரலில் இந்தப்பாடல். கீழே வரிகளும் கொடுத்திருக்கிறேன்.


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராதகொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாதவாழ்வும்
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரோடு கூட்டுக்கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி!அபிராமியே!

தனம் தரும் கல்வித்தரும் ஒரு நாளும்
தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவம் தரும்

நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பவர் என்பவர்க்கே
கணம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!!


அம்மையின் கடைக்கண்களால் அருள் பெறும் பாக்கியம்
தரும் தலம் என்பதுடன் இன்னொரு விஷேஷமும் இதற்கு
உண்டு. அது சிவன் தனது பக்தனுக்காக காலனை
வதைத்த இடம். யார் அந்த பக்தன்? 16 வயதில்
சிவலோகப்ராப்தி அடைய வேண்டும் என்பது
மார்க்கண்டேயனின் ஜாதகம். தன்னைக்காக்க
வேண்டி இந்த கோவிலில் இருக்கும் சிவலிங்கத்தை
கட்டிக்கொள்கிறான்.


பக்தனுக்காக மனம் இறங்கி வந்த சிவபெருமான்
மார்க்கண்டேயனை விட்டுவிடும்படி எமனுக்குகூற
தனது கடமையைச் செய்ய எமன் பாசக்கயிற்றை
வீசுகிறான். மார்க்கண்டேயன் லிங்கத்தை கட்டிக்கொண்டிருப்பதால்
கயிறு சிவனின் மேலும் பட்டது. வெகுண்டு எழுந்த
சிவன் காலனை வதைக்க்கிறார்.



இங்கே இறைவனின் திருநாமம் அமிர்தகடேஷ்வரர்.
அமிர்தத்திற்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம்?
அதற்கும் கதை இருக்கிறது. திருப்பாற்கடலை
கடைந்து அமிர்த கலச வந்த பொழுது பிள்ளையார்
அந்தக் கலசத்தை யாருக்கும் தெரியாமல் திருக்கடையூரில்
கொண்டுவந்து வைத்துவிட்டாராம். காரணம்?
முழுமுதற்கடவுளைத் தொழாமல் எந்த வேலையும்
செய்யக்கூடாது. தேவர்கள் செய்த தவறுக்காக
கள்ளத்தனமாக அமிர்த கலசத்தை கொண்டு வந்ததால்
இவர் இங்கே “கள்ளப்பிள்ளையார்”எனும் பெயரில்
அழைக்கப்படுகிறார்.

இங்கே இருக்கும் லிங்கமே அமிர்த குடத்தால்
செய்யப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.

திருக்கடையூரில் சஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம்
போன்றவற்றை இந்தக் கோவிலில் செய்துக்கொள்வது
சிறப்பு. அதுவும் காலனை வதைத்த சிலை
இருக்கும் மேடையில் விசேஷங்கள் செய்ய 3500 ஆகிறது.
(அர்ச்சகர்கள் செலவு, இத்யாதிகள் தனி)இதற்கு
புக்கிங் ஒருவருடம் முன்பே செய்யப்படுகிறது.

கீழே ப்ராகாரத்திலும் செய்கிறார்கள். அது 1500 ரூபாயாம்.
அபிராமி அம்மையின் ப்ராகாரத்திலும் செய்யலாமாம்.

இந்தக்கோவிலில் இருக்கும் காலனை வதைத்த
சிலையை தரிசித்தால் நவக்கிரக தோஷங்களும் நீங்கும்.
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத்தீர்ப்பு.
அம்மனும் அப்பனும் காப்பாற்றுவார்கள் என்ற
நம்பிக்கையில் அனைவருக்கும் பிரார்த்தித்துக்கொண்டு

அங்கேயிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும்
காரைக்கால் போய்ச்சேர்ந்தோம்.
தொடரும்...




8 comments:

தமிழ் அமுதன் said...

திருக்கடையூர் விளக்கங்கள் அருமை...!


///அங்கேயிருந்து 15 கிமீ தொலைவில் இருக்கும்
காரைக்கால் போய்ச்சேர்ந்தோம்.///

கரைக்கால் லயும் விலை கம்மிதான் ;)

pudugaithendral said...

நன்றி ஜீவன்,

காரைக்காலும் பாண்டிச்சேரியின் கீழ்தானே வருது. :))

ஆயில்யன் said...

ஹம்ம்ம்ம்ம் எங்க ஊரை தாண்டி போயிட்டு இருக்கீங்க காரைக்கல் அப்ப திருநள்ளாறு அடுத்த பதிவா?

pudugaithendral said...

வாங்க பாஸ் வாங்க,

கரீக்கிட்டா சொல்லிப்புட்டீங்க

நன்னி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்த கோவில பத்தி நெறைய கேள்விப்பட்டு இருக்கேன்... சஷ்டியபூப்தி கூட இங்க செய்யறது விசேஷம்னு எங்க பாட்டி சொன்னாங்க ஒரு முறை... பாடல் மற்றும் பதிவுக்கு மிக்க நன்றி... பயணம் தொடரட்டும்... பதிவுகளும் தான்...எப்ப ஊருக்கு வரீங்க?

ராவி said...

இந்த சூறாவளி சுற்று பயணத்தில் புதுகையும் உண்டா?

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

ஊருக்கு வந்து சேர்ந்தாச்சு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ராவி,

கண்டிப்பா உண்டு

வருகைக்கு நன்றி