Tuesday, May 11, 2010

குருவே சரணம்

ஹோட்டல் ரம்யாஸிலேயே அப்பா இந்தகோவிலுக்கு
எப்படி போகணும்னு ரூட் போட்டு வாங்கிட்டாரு.
திருநள்ளாறு, பேரளம், திருவாரூர், ஆலங்குடி.
ஒன்னரை மணிநேரத்துல போய்ச் சேர்ந்துடலாம்.
திருநள்ளாறிலிருந்து கிளம்பும்போதே மணி 10.
12 மணிக்குள்ள கோவிலுக்கு போயிடணும்னு
அடிச்சு பிடிச்சு ஓடினோம். அப்பா வந்த காரோட
டிரைவர் ”வரும் வராது” டிரைவர் மாதிரி.
செம ஸ்லோவா ஓட்டினார். எங்க டிரைவருக்கு
ரூட் தெரியாது. சென்னையை விட்டு இப்பத்தான்
இந்த ரூட்டில் வர்றாராம். சிவனேன்னு அப்பா
காரைத் தொடர்ந்தோம். சில சமயம் மாப்பிள்ளை
அழைப்பு ஊர்வோலம் ஏதும் போறோமோன்னு
இருந்துச்சு.

ஒரு கட்டத்துல கடுப்பாகி திருவாரூர் வரைக்கும்
வண்டியை விடுங்க தம்பின்னு சொல்லிட்டேன்.
அங்கன போய் வெயிட் செஞ்சுக்கலாம்னு.
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின்
மெயின் கோபுரத்துக்கு கிட்டயே இருக்கு
தியாகய்யர் பிறந்த வீடு.

நீடாமங்கலம் போகும் பாதையில் போகாமல்
அதற்கு வலது பக்கம் போகும் பாதையில்
போனால் 6 கிமீட்டரில் ஆலங்குடி.

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்.
அம்மை ஏலவார்க்குழலி அம்மை.
தக்‌ஷீணாமூர்த்தி சுவாமி. இவர்களுடன்
கலங்காமற் காத்த பிள்ளையாரும் அருள்
புரியும் கோவில்.
இனையதள முகவரி


சிவன் கோவில்தான். ஆனால் இது குருபரிகாரஸ்தலம்.
குரு நல்லதே செய்வார்னு எல்லோரும் நினைச்சுகிட்டு
இருக்கோம். சனீஸ்வரர் ஆட்டும் அந்த 71/2 வருடங்கள்
தான் கஷ்டம்னு நினைக்கிறோம். ஆனால் உண்மை
அது இல்லையாம். குரு எல்லோருக்கும் நல்லது
செய்வதில்லையாம். 16 வருடங்கள் குரு தசை.
போட்டு புரட்டி எடுத்துவிடும். :( சனீஸ்வரராவது
இம்புட்டு பாடு படுத்தினோமேன்னு போகும்போது
நல்லது செஞ்சிட்டு போவார். சரின்னு குருவுக்கு
ஒரு வணக்கத்தை போட்டுகிட்டு கிளம்பினோம்.

12 மணிக்கு கோவில் சாத்திடுவாங்கன்னு அடிச்சு
பிடிச்சுஓடினோமே! கோவில் 1 மணி வரை திறந்திருக்குமாம்.

அங்கேயிருந்து கும்பகோணத்தை டச் செய்யாமல்
தஞ்சாவூர் போகும் வழி இருக்கு. இந்த வழியெல்லாம்
எங்க டிரைவருக்குத் தெரியாது. அதனால திரும்ப
அந்த தாத்தாவை தொடர்ந்து போனோம். ஆஷிஷுக்கு
அழுவாச்சியா வந்துச்சு. இனோவா வண்டியை
40 கிமீ ஸ்பீடுல ஓட்டுறது நாமளாத்தான் இருக்கும்னு
ஒரே புலம்பல்ஸ். அம்ருதா அம்மம்மாகூட அந்த
கார்ல வந்துக்கினு இருந்தாக. ஆஷிஷ் தான்
அம்பாசிடர்ல ஏற மாட்டாரே! 1 .30க்கு தஞ்சாவூர்
புது பஸ்ஸ்டாண்டில் இருக்கும் ஹோட்டல்
ஆர்யாவில் லஞ்ச். செம கூட்டம். அதைவிட்டா
புதுகை போக 1 மணிநேரம் ஆகும். லேட்டாகிரும்னு
வெயிட் செஞ்சு சாப்பிட்டோம்.

சாப்பிட்டு வண்டியை கிளப்பியாச்சு. காரிலிருந்து
தஞ்சை பெரிய கோவிலை சுட்டோம். போட்டோ
தாங்க.தஞ்சாவூர் புதுக்கோட்டை போகும் வழியில் ஆதனக்கோட்டைன்னு
ஒரு ஊர் வரும். இது முந்திரிக்கு பெயர் போன இடம்.
கொழும்பு கண்டி செல்லும் பாதையில் வரும் காஜூகிராமாவில்
கடை மாதிரி கட்டி முந்திரி விப்பாங்க. எங்க ஆதனக்கோட்டையிலும்
அதுமாதிரி கடை போட்டிருந்தாங்க. இறங்கி முந்திரி
வாங்கினேன். இங்க பச்ச முந்திரி கிடைக்காது. வறுத்தது
தான் கிடைக்கும். அப்படியே முந்திர்ப்பழம் பாத்ததும்
வாங்கிட்டேன். இந்தோ உங்களுக்கும். செம டேஸ்ட்.
உடம்புக்கும் நல்லதாம்.அங்கேயிருந்து பெரம்பூர் வீரமாகாளி கோவில்
தரிசனம் முடிஞ்சதும் மெயின் ரோட்டுக்கு வந்ததும்
எங்க டிரைவர் கிட்ட தம்பி இது என் ஏரியா,
தெகிரியமா அந்த தாத்தாவை ஓவர் டேக்
செஞ்சு போங்கன்னு சொல்லிட்டேன். அப்பா
போன போட்டு நேரா ராதா கபே போயிடும்மா!
அப்படின்னு சொன்னார்.

ஸ்ரீநிவாஸா தியேட்டர், மச்சுவாடி, சர்ச்,
அப்பா பேங்க் வந்து வலதுல திரும்பினா
ராதா கபே. அங்க போய் சூடா டீ, ஆனியன்பஜ்ஜி
சாப்பிட்டோம். கொஞ்சம் நேரத்துல அப்பா
காரும் வந்து சேந்துச்சு. அப்பா அவசர வேலை இருக்குன்னு
காபி சாப்பிட்டுட்டு முன்னாடியே கிளம்பினதால பில்லை என் கிட்ட
கொடுக்கச் சொல்லி சொன்னேன்.

அப்பத்தான் அவரு அந்தக் கேள்வியைக் கேட்டாரு.
கிட்டத்தட்ட 18 வருஷம் கழிச்சு இந்தக் கேள்வியை
என் கிட்ட கேட்டதும் ஆஹா இன்னமும் இந்த
ஊரு மாறலடா சாமின்னு நினைச்சேன்.

“ரமணி சார் மகளாம்மா நீ” என்பதுதான் அந்தக்
கேள்வி. அவர் கேட்ட விதம் முகத்துல ஆச்சரியம்,
சந்தோஷம் எல்லாம் கலந்து இருந்துச்சு. வீட்டுக்கு
போய் ரெஸ்ட் தான்.

அடுத்த நாள் எங்க போனோம் அடுத்த பதிவுல சொல்றேன்.

24 comments:

ttpian said...

i would have helped u to dharshan san bhagavan(i am nearby his temple)

அமைதிச்சாரல் said...

ஹை.. முந்திரிப்பழம். நாலஞ்சு துண்டுகளாக்கி, லேசா உப்பு போட்டு பிசிறி, ஊறவெச்சு தின்னா...ஸ்ஸ்ஸ். செம டேஸ்ட்டா இருக்கும். உப்பு போடாம தின்னா லேசா கமறல் வரும். போட்டோ பாத்ததும் கொதியா இருக்கே.என்ன செய்வேன் :-)))

வெங்கட் நாகராஜ் said...

பன்ரூட்டி பக்கம் சென்று இருக்கிறீர்களா? அங்கேயும் முந்திரி பழம் நிறைய கிடைக்கும். தஞ்சாவூர் போல அல்லாமல் இங்கே பச்சை முந்திரியும் கிடைக்கும். நல்ல ஒரு பதிவு.

வெங்கட் நாகராஜ்

வடுவூர் குமார் said...

முந்திரி ப‌ழ‌ம் சாப்பிட்டு ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாலிவிட்ட‌து.

புதுகைத் தென்றல் said...

அயித்தானுக்கு தெரிஞ்ச அமைச்சர் மூல ஏற்பாடு செஞ்சிருந்தாரு டீடிபியன்

வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

பன்ரூட்டி பக்கம் போனதில்லை. வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

புதுகைத் தென்றல் said...

போட்டோ பாத்ததும் கொதியா இருக்கே.என்ன செய்வேன் //

ஒருத்தருக்காவது வயிறெரிய வெச்சதுல சந்தோஷம். :)

புதுகைத் தென்றல் said...

ஆமாம் வடுவூரார்,

அதனாலதான் பாத்ததும் வாங்கியாந்துட்டேன்.

ஹுஸைனம்மா said...

உங்க வண்டி பின்னாடிதான் நானும் வந்துட்டிருக்கேன். ஃபாஸ்டாப் போங்க!!

ஆயில்யன் said...

மே மாத விடுமுறையில் புதுகை வாசத்தின் ஸ்பெஷல் ஐட்டம் முந்திரி பழம்தான் காலையில கூடைக்கார அம்மாவிடம் வாங்கி உப்பு போட்டு சாப்பிடுவோமே நாக்கில் சொட்டும் ஜொள்ளுடன்
ஆயில்யன்

புதுகைத் தென்றல் said...

ஃபாஸ்டாப் போங்க!!//

:))

புதுகைத் தென்றல் said...

வாங்க பாஸ்,

எனக்கும் முந்திரிப்பழம் பாத்ததும் கொசுவத்தி சுத்திச்சு. ஸ்கூல்ல படிக்கும்பொழுது கந்தர்வக்கோட்டை பக்கத்துலேர்ந்து வரும் ஃப்ரெண்ட்ஸ் எனக்காக கொண்டு வந்து கொடுத்தது ஞாபகம் வந்துச்சு.

வருகைக்கு நன்னி பாஸ்

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

ஆலங்குடி பக்கம் இருக்கும் மன்னார்குடி ராஜ கோபால சாமி கோவில் போகலையா...?

மன்னார்குடி-மதுக்கூர் (எங்கூரு) பட்டுக்கோட்டை-ஆவனம் -புதுகோட்டை

இப்படி கூட போகலாம் ...!

அபி அப்பா said...

உங்க அப்பா பேங் வச்சிருக்காங்களா? சொல்லவேயில்ல:-)))

அது போலத்தான் நாங்க இப்பவும் எந்த சோழன் பஸ் போனாலும் அப்பா பஸ் அப்பா பஸ்ன்னு சொல்லுவோம்!

இராமசாமி கண்ணண் said...

நல்ல பயண கட்டுரை. நல்லா எழுதிருகீங்க.

அப்பாவி தங்கமணி said...

//கிட்டத்தட்ட 18 வருஷம் கழிச்சு இந்தக் கேள்வியை
என் கிட்ட கேட்டதும் ஆஹா இன்னமும் இந்த
ஊரு மாறலடா சாமின்னு நினைச்சேன்//

எந்த நாடு தேசம் சுத்திட்டு போனாலும் இந்த கேள்விக்கு இருக்கற மதிப்பு தர்ற சந்தோஷம் தனி தாங்க கலா... நானும் அனுபவிச்சு இருக்கேன்.. என்னமோ மறுபடியும் அந்த நாளுக்கு போயிட்டா மாதிரி ஒரு ஸ்பெஷல் தருணம் அது

AKM said...

மேடம்..
ஸ்ரீநிவாஸா தியேட்டர் அல்ல
அது சரவணா தியேட்டர்..
தற்போது அந்த தியேட்டர் மூடப்பட்டு நர்சிங் காலேஜ் நடப்பதாய் நிணைக்கிறேன்..அது சரி நல்லபிள்ளையாய் வீடுண்டு காலேஜ்உண்டு என இருந்தவருக்கு தியேட்டர் பெயர் தெரியாததில் வியப்பில்லை..வாழ்த்துக்கள்

புதுகைத் தென்றல் said...

வாங்க ஜீவன்,

அந்த ரூட்டிலயும் போயிருக்கலாம். ஆனா ஆலங்குடியிலேர்ந்து தஞ்சாவூர் போறபாதை கிட்டத்துலே இருந்துச்சு. ஒரே அலைச்சல் என்பதால் சீக்கிரம் புதுகை சேர்ந்திடனும்னு ப்ளான். தம்பி ராஜகோபாலசாமி திருவிழாவுக்கு போயிருவான். அவன் ஃப்ரெண்ட்ஸ் அங்கதான் இருக்காங்க.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

உங்க அப்பா பேங் வச்சிருக்காங்களா? சொல்லவேயில்ல:-)))//

:)) புதுகை மத்தியக் கூட்டுறவு வங்கியே எங்க அப்பாதுதான்னு ஒரு நினைப்பு.

வருகைக்கு நன்றி அபிஅப்பா

புதுகைத் தென்றல் said...

நன்றி இராமசாமி கண்ணன்

புதுகைத் தென்றல் said...

என்னமோ மறுபடியும் அந்த நாளுக்கு போயிட்டா மாதிரி ஒரு ஸ்பெஷல் தருணம் அது//

ஆமாம் புவனா,

எத்தனையோ மாத்தங்களை பார்த்திருச்சு புதுகை. ஆனாலும் சிலர் அப்பா, அம்மா, தாத்தாவை நினைவில் வெச்சிருக்காங்க என்பதே சந்தோஷமா இருக்கு.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஏகே எம்,

சரவணா தியேட்டருக்கு பின்னாடிதான் அம்மம்மாவீடு(சுந்துசார் தெரியுமா). தியேட்டருக்கு அஸ்திவாரம் போட்ட நாளிலிருந்து அங்கனதான் சுத்திகிட்டு இருந்தேன். புதுகையை விட்டு வந்து ரொம்ப வருஷமாச்சு. அந்தப்பக்கம் அதிகம் போறதில்லை என்பதால் மறந்திட்டேன்.

புதுகைத் தென்றல் said...

நல்லபிள்ளையாய் வீடுண்டு காலேஜ்உண்டு என இருந்தவருக்கு தியேட்டர் பெயர் தெரியாததில் வியப்பில்லை..வாழ்த்துக்கள்//

என்னையும் நம்பினதுக்கு நன்றி. நான் படிச்சது பள்ளத்தூர் காலேஜ். நன்றி

pressramesh said...

this is old quick fast