Monday, May 24, 2010

DHORUKUNA ITUVANTI SEVA

கடப்பா வானொலி மூலமாகத்தான் எனக்கு
தெலுங்குப்பாடல்கள் அறிமுகம். பாடல்கள்
எழுதியது வேடுரி என்று கேட்டிருக்கிறேன்.
அருமையான பாடல்கள். இங்கே வந்த பிறகு
அந்த மகா கவிஞர் எழுதிய பலப்பாடல்கள்
கேட்டு என்ன ஒரு கவிஞர் என வியந்திருக்கிறேன்.


வேடுரி சுந்தரராமமூர்த்தி இது இவரின் முழுப்பெயர்.
22.05.10 இந்தக் கவிஞர் இறைவனடிச்சேந்துவிட்டார்.
74 வயதுவரை தனது படைப்பாற்றலால் படைத்துக்
கொண்டுதான் இருந்திருக்கிறார்.

தெலுங்குக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட பல
படங்களுக்கு வேடுரிதான் பாடல்வரிகள் தந்தது.
மணிரத்தனத்தின் எத்தனையோ படங்களுக்கு
இவர்தான் ஆஸ்தான கவிஞர். அலைபாயுதே கண்ணா
பாடலை தெலுங்கு பதிப்பில் விட்டுவிட நினைத்தாராம்
மணிரத்தன்ம். ஆனால் வேடுரி அதையே அழகான
பாட்டாக எழுதிக்கொடுத்துவிட்டாராம்.

மேகசந்தேசம் (1984)எனும் படத்தில் வேடுரி
அவர்கள் எழுதி ரமேஷ் நாயுடு இசையில்
கானகந்தர்வன் பாடிய இந்தப்பாடல் கானக்கந்தர்வனுக்கு
தேசிய விருதை ஈட்டித்தந்தது.

பாடலைக் கேட்க இங்கே:எனது விருப்பமான டைரக்டர் கே. விஸ்வநாத்தின்
பல படங்களின் பாடல்கள் வேடுரி எழுதியதுதான்.
சங்கராபரணம் படத்தின்
“சங்கரா நாதஸ்வரீராபதா”  பாட்டுக்கு ஆந்திர
அரசின் நந்தி விருது கிடைத்திருக்கிறது. இந்தப்
படத்தின் கடைசி பாடலான ”துரகுனா இடுவண்டி சேவா”
பாடல் அனைவரும் மிகவும் ரசிக்கும் பாடல். 1979ல்
வெளிவந்தப் படத்தின் பாடல்கள் இன்றளவும்
ரசித்துக்கொண்டிருக்கிறோம்.

அந்தப் பாடலைப்பற்றி சுவையான செய்தி ஒன்று
கேள்விப்பட்டேன். இந்த சிச்சுவேஷனுக்கான பாடல்
எழுதும் சமயம் வேடூரிக்கு உடல்நிலை சரியில்லாமல்
போய் சென்னையில் ஒரு மருத்துவமனையில்
ஐஸியூவில் வைக்கப்பட்டிருந்தாராம். கே.விஸ்வநாத்
வேறு ஏதாவது கவிஞரை வைத்து பாடலை எழுதி
படமாக்கத் திட்டமிட வேடூரி விஸ்வநாத்
அவர்களுக்கு போன் செய்து யாரையாவது அனுப்பினால்
பாட்டை தருவதாக சொல்ல, விஸ்வநாத் அவர்களின்
அஸிஸ்டெண்ட் மருத்துவமனைக்குச் சென்று
வேடூரிச் சொல்ல சொல்ல பாடலை எழுதினாராம்.
இந்தப் பாடலின் வரிகள், அதை உணர்ந்து
அற்புதமாகப் பாடியிருக்கும் பாலு... மறக்கமுடியாத
பாடல்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
பூத உடல் மறைந்தாலும் அவரின் பாடல் வரிகளால்
நம்முடன் என்றும் வாழ்ந்திருப்பார்.


7 comments:

அபி அப்பா said...

:-((( என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

துளசி கோபால் said...

எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.

சேதியை தினசரியில் பார்த்தேன்.

Sabarinathan Arthanari said...

பகிர்ந்தமைக்கு நன்றிங்க. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Download

http://www.pradipsomasundaran.com/2007/04/shankara-shankarabharanam-classic.html

அநன்யா மஹாதேவன் said...

பதிவு தலைப்பு மட்டும் இங்கிலீஷுல இருக்கு.. மாற்றவும்.

அநன்யா மஹாதேவன் said...

வேடூரி மறைஞ்சுட்டாரா அக்கா? ரொம்ப வருத்தமா இருக்கு! it is a strange cooincidence that நேத்திக்கி ரொம்ப நேரம் யூட்யூப்ல ஜந்தியாலா படக்கிளிப்ஸ் பார்த்துண்டு இருந்தேன். அதுல ஒரு அருமையான பாட்டு என்னை மிகவும் கவர்ந்தது. ஜந்தியாலாவுக்கும் ஆஸ்த்தான கவிஞர் வேடீரி தான். நீங்களும் பாருங்களேன். உங்களுக்கும் பிடிக்கலாம் இந்த பாட்டு. படம் : ஸ்ரீவாரிக்கி ப்ரேமலேகா
http://www.youtube.com/watch#!v=0j-Bp6STy2s&feature=related

புதுகைத் தென்றல் said...

அபி அப்பா,

துளசி டீச்சர்,
சபரிநாதன் அர்த்தநாரி

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

கண்டிப்பா பாக்கறேன் அநன்யா,

வேணும்னே தான் தலைப்பு ஆங்கிலத்தில் வெச்சேன். கூகுளில் தேடும்போது கிடைக்கும்.

வருகைக்கு நன்றி