Monday, May 24, 2010

திருமயம் கோட்டை பைரவர், திருவீசர், முருகன் தரிசனம்

திருமயம் கோட்டை பைரவர் மிக பிரசித்தம். அந்தப் பக்கம்
போகும் எந்த வண்டியும் நிறுத்தாமல் போகமாட்டார்கள்.
கோட்டை பைரவரை தரிசித்துவிட்டு திருமயத்திலிருந்து
திருப்பத்தூர் செல்லும் சாலையில் போனோம்.
திருமயம் கோட்டை உள்ளே ரொம்ப அழகா இருக்கும்.
ஒரு சிவன் கோவிலும், விஷ்ணு கோவிலும் இருக்கு.
அம்மா வேலைப்பாத்தப்போ அவங்க ஸ்கூல் எக்ஸ்கர்ஷனுக்கு
ஒரு தடவை திருமயம் வந்தாங்க. நானும் போயிருந்தேன்.

அதுக்கப்புறம் போனதேயில்லை. பீரங்கிகள் எல்லாம்
இன்னும் இருக்கு. ஒரு வாட்டி புதுகையிலேயே தங்கி
புதுகையின் அழியாச்சின்னங்களான திருமயம் கோட்டை,
சித்தன்னவாசல் ஓவியங்கள், குடுமியான் மலை எல்லாம்
படம் பிடிச்சு பதிவாக்கணும்.

பசங்க படத்தில் ஷோபிக்கண்ணு செருப்பை தள்ளிக்கிட்டே
வருவாங்க. அது திருமயம் கடை வீதி. அங்கே பெரிய்ய்ய்
தகரக் கொட்டகை இருக்கும். அது திருமயத்துக்கே அடையாளம்
மாதிரி இருந்துச்சு. அத்தப்போய் ஏன் பிரிச்சாங்கன்னு
தெரியலை. வெறிச்சோடி கிடக்கு.



பிள்ளையார்பட்டிக்கு திருப்பத்தூர் போயி போகலாம்.
ஆனா திருமயத்துலேர்ந்து திருப்பத்தூர் போகும் வழியில
ஒரு சின்ன ஷார்ட் கட் ரூட் இருக்கு. அதுல 45 நிமிஷத்துல
பிள்ளையார்பட்டி போயிடலாம். இந்த ரூட்டுல முதலில்
குன்னக்குடி வரும். செட்டிநாட்டு பெரிய பெரிய வீடுகளை
பாத்துகிட்டே போவது நல்லா இருக்கும். ரொம்ப
வாகனங்கள் அந்த பக்கம் இருக்காது.

நாங்க போன அன்னைக்கு (மே 2) சங்கட ஹர சதுர்த்தி.
சாயந்திர நேரத்துல  அபிஷேகம் கண ஜோரா நடந்து
கிட்டு இருந்துச்சு. நல்லா பாத்தோம். முடிஞ்சதும்
தங்ககாப்பு அலங்காரத்துல திருவீசர் காட்சி தந்தார்.
ஆஹா... ஆஹா காணக் கண்கோடி வேணும்.

அடுத்து குன்னக்குடியில் முருகனை தரிசிக்க போனோம்.
அவரும் அன்னைக்கு என்னவோ சந்தன காப்பு
அலங்காரத்துல தரிசனம். அங்கேயிருந்து புதுகை
திரும்பி வரும் வழியில் அன்னலட்சுமி ஹோட்டலில்
குழிப்பணியாரம் சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.

ஊருக்கு போனதிலேர்ந்து அம்மாகிட்ட,” ஞாபகமா
எடுத்துக்கொடுத்திடுமான்னு!” சொல்லிகிட்டே
இருந்தேன். அது வேற ஒண்ணுமில்ல மஞ்சப்பைதான்.
இப்பல்லாம் கையிலேயே ஒரு பேக் எடுத்துகிட்டு
போயிடுவேன். பிளாஸ்டிக் பை கொடுத்தா
வேணாம்னு சொல்லிடறது. ஏதோ என்னால
இந்த பூமிக்கு செய்ய முடிஞ்சது. எங்க ஊருல
இன்னமும் துணிக்கடையில மஞ்சப்பை கொடுக்கறாங்க.
அதுவும் பானுமதி கட்பீஸ் செண்டரில் கண்டிப்பா
மஞ்சப்பை தான். அம்மா அதை ஒரு பெட்டியில
போட்டு சேத்து வெச்சிருப்பாங்க. அதுலேர்ந்து
ஒரு 5 பை ஞாபகமா கொடுக்கச் சொல்லியிருந்தேன்.
 ஒரு காலத்துல மஞ்சப்பை எடுத்துகிட்டு போறதுன்னா
கேவலமா இருந்துச்சு. இப்ப நான் eco friendly  அப்படின்னு
சொல்லிக்குவாங்க பாருங்க.

சாப்பாடு கட்டக்கூட ப்ளாஸ்டிக் வேணாம்னு நானும்
மகளும் சேர்ந்து வாழ இலை வாங்கப்போனோம்.
பக்கத்துலே தான் பெருமாள் கோவில் மார்கெட்.
வாங்கிகிட்டு அப்படியே ஒரு வாக் போனோம்.
அம்ருதா கிட்ட பாலையா ஸ்கூலை காட்டி
“இதுதான் அப்துல்லா மாமா படிச்ச ஸ்கூல்னு”
சொன்னேன். ஐயோ மொபைலை வீட்டுல வெச்சுட்டோமே!
ஒரு போட்டோ பிடிச்சு ப்ளாக்குல போட்டிருக்கலாமேன்னு
சொன்னாங்க(இன்னொரு ப்ளாக்கர் உருவாகிறார்) :))

அம்மா வீட்டுலேர்ந்து கிளம்பியாச்சு. போறவழியில
அந்தக்கோவிலுக்கு மறக்காம கூட்டிகிட்டு போங்கன்னு
அயித்தான் கிட்ட அப்ளிகேஷன் போட்டிருந்தேன்.
எங்க கூட்டிகிட்டு போனார்!! அடுத்த பதிவுல.

19 comments:

ஹுஸைனம்மா said...

//ஒரு காலத்துல மஞ்சப்பை எடுத்துகிட்டு போறதுன்னா
கேவலமா இருந்துச்சு. இப்ப நான் eco friendly//

காலச்சக்கரம் சுழலுகிறது!!

//இன்னொரு ப்ளாக்கர் உருவாகிறார்//

ஒரு வீட்டில ரெண்டு பதிவர் கூடாதுன்னு சங்க விதிமுறைகள் சொல்லுது!! ஓ, அது கணவன்-மனைவிக்குத்தானாம், அம்மா-மகளுக்கில்லியாம்!! அப்ப நடத்துங்க!!

எம்.எம்.அப்துல்லா said...

//ஷோபிக்கண்ணு //


அக்கா அது சோப்பிகண்னு (சிகப்பி கண்ணு என்பதன் சுருக்கம்)

:)




//“இதுதான் அப்துல்லா மாமா படிச்ச ஸ்கூல்னு”
சொன்னேன். //

நான் மட்டுமா படிச்சேன்...

தென் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி, ஜெமினி கணேசன், ஏ.வி.எம்.ராஜன், முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமன், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி இன்னும் எத்தனை பெரிய ஆளுங்க அந்த ஓட்டுக் கொட்டகையில் இருந்து!!!

அப்துல்லா மாமா ஸ்கூல்னு நீங்க எழுதிய வரிகளைப் படிக்கையிலேயே ஓரோன் ஒன்னுன்னு வாய்ப்பாடு மனசுக்குள்ள ஓடுது :)

இன்னோரு முக்கியமான விஷயம் பிராமணர்களால் துவங்கப்பட்ட அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராய் சுமார் 27 வருஷம் எங்க அப்பா இருந்தாரு. அதேபோல இஸ்லாமியப் பள்ளியான ஹஜனாதுல் ஜாரியாவில் ரொம்ப வருஷமா மெய்யப்பச் செட்டியார் இருக்காரு. இந்த மாதிரி அதிசயம் எல்லாம் நம்ப ஊரில் மட்டுமே நடக்கும்.

:)

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

காலச்சக்கரம் சுழலன்று கொண்டே இருந்தாத்தானே நல்லது. அப்ப பானுமதி அம்மா போட்டுகிட்டு ஆடினதுதான் இப்ப பட்டியாலா :)

pudugaithendral said...

நீங்க வேற ஹுசைனம்மா,

ஆஷிஷ் அம்ருதா ரெண்டுபேரும் ஏற்கனவே ப்ளாக்கர்கள்தான். அவங்க ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து ஒரு காலத்துல பதிவு போட்டுகிட்டு இருந்தாங்க. இப்ப ஆங்கிலத்தில் ப்ளாக் வெச்சிருக்காங்க.

கோமதி அரசு said...

மதுரைக்கு காரில் போகும் போது இறங்கி கும்பிடாமல் போவது இல்லை.

பஸ்ஸில் போகும் போதும் கும்பிடாமல் போவது இல்லை.

Sabarinathan Arthanari said...

/ஒரு போட்டோ பிடிச்சு ப்ளாக்குல போட்டிருக்கலாமேன்னு
சொன்னாங்க///
வாழ்த்துக்கள் ;)

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

ஒரே ஒரு தடவை நவம்பர் 14க்காக டான்ஸாட பாலையா ஸ்கூல் வந்திருக்கேன். அப்ப ஓட்டுக்கொட்டகை தான். இப்ப அபார்ட்மெண்ட் மாதிரில்ல கட்டியிருக்காங்க. அம்ருதாவுக்கு அன்னைக்கு போட்டோ பிடிக்கலையேன்னு செம வருத்தம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோமதி அரசு

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சபரிநாதன் அர்த்தநாரி

வல்லிசிம்ஹன் said...

நல்ல வத்தி. வாசம் மிகுந்து வருது. ஒரு நிமிஷம் கூட விடாம எல்லாக் காலங்களையும் பதிஞ்சிருக்கீங்க தென்றல்!
நாங்க புதுக்கோட்டையில் இருந்தபோது நீங்க பிறக்கலை. இல்லாட்ட நாம அப்பவே பதிவு போட்டு இருக்கலாம். :)
புதுக்கோட்டை டிவிஎஸ் கம்பனில எங்க வூட்டுக்காரர் அஸ்ஸிச்டண்ட் மேனஜரா இருந்தார்.
அறந்தாங்கி ரோடில ஒரு வீட்டு மாடில இருந்தோம். அந்த வீட்டுப் பெயர் கூட அன்பு நிலையம்னு நினைவு. பக்கத்தில ஒரு வொர்க்ஷாப் கூட இருக்கும்.
அழகான பால்கனி...ம்ம்.எங்கியோ போயிட்டுது நினைவுகள். நன்றிப்பா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//(இன்னொரு ப்ளாக்கர் உருவாகிறார்) :))//

ஆஹா... வாரிசு அரசியல் மாதிரியா??????????/ சூப்பர்..................
கோவில் பற்றிய பதிவு அழகு

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ஒரு நிமிஷம் கூட விடாம எல்லாக் காலங்களையும் பதிஞ்சிருக்கீங்க தென்றல்!//

நன்றிம்மா
நாங்க புதுக்கோட்டையில் இருந்தபோது நீங்க பிறக்கலை. இல்லாட்ட நாம அப்பவே பதிவு போட்டு இருக்கலாம். //

:))))))))))
வருகைக்கு நன்றிம்மா

pudugaithendral said...

நன்றி புவனா

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

சாந்தி மாரியப்பன் said...

உங்களுக்கு ஒரு விருது. மஞ்சப்பை கொண்டாந்து பத்திரமா எடுத்துட்டுப்போலாம் :-)))))

http://amaithicchaaral.blogspot.com/2010/05/blog-post_28.html

Porkodi (பொற்கொடி) said...

என்ன ஆச்சு தென்றல், தினமும் வந்து பாத்துட்டு போறேன், அடுத்து என்னனு சொல்ல மாட்டேங்கறீங்க?!

pudugaithendral said...

தினமும் வந்ததுக்கு நன்றி பொற்கொடி,
இன்னைக்கு ஒரு போஸ்ட் போட்டிருக்கேன் பாருங்க.

selva said...

You know Thirumayam gave the great patriotic leader Sathyamoorthy to Us

pudugaithendral said...

வாங்க புதுகை செல்வா,

திருமயம் பஸ்ஸ்டாண்டேலேர்ந்து நேரா போனா சத்தியமூர்த்தி அவர்களின் சிலையே வெச்சிருப்பாங்களே. எப்படி மறக்க முடியும்?

வருகைக்கு நன்றி