Thursday, June 10, 2010

தனிமை தனிமையோ! கொடுமை கொடுமையோ!!!

ஆஷிஷுக்கு ஹிந்தியில் ஒரு பாடம் சொல்லிக்கொடுத்தது
ஞாபகம் வருது. கிராமங்களை விட்டு மக்கள் பிழைப்புக்காக
நகரத்துக்கு வந்த பின்னால கிராமங்களில் நிலமை எப்படி
இருக்கும்னு? ஒரு பாடம்.

மாடுகள் எழுப்பிய புழுதிகள் இல்லை,  கிராமத்தின்
அஸ்திவாரனமான வயல்வேலை சத்தம் இல்லை,
என எத்தனையோ இல்லைகள்.

அதுமாதிரி இருக்கு இப்ப வீடு. என் ஃப்ரெண்ட்ஸ்
ரெண்டு பேருக்கும் நேத்து ஸ்கூல் திறந்தாச்சு.
அவங்க இரண்டு பேரும் வீட்டுல இருந்தவரைக்கும்
ரொம்ப நல்லா இருந்துச்சு. பிள்ளைகளின் இந்த
விடுமுறையை நல்லா எஞ்சாய் செய்யணும்னுதான்
பதிவு பக்கமே வராம இருந்தேன். இதோ அவங்க
ஸ்கூல் போனதுக்கப்புறம் எனக்கு நாதி இந்த
பதிவுகளும் இந்த நட்புக்களும் தான் :))

3 நேரமும் சேர்ந்துதான் சாப்பிடுவோம். சில சமயம்
அம்மா நான் தோசை சுடறேன், டீ போடுறேன்னு
அவங்க கைவண்ணமும் நடக்கும். ஆஷிஷ் அம்ருதா
ரெண்டு பேரும் லீவு மொத்தமும் வாஷிங் மெஷினில்
துணி போட்டு, காயபோட்டு, மடிச்சு வெச்சு, பாத்திரம்
எடுத்து கவிழ்த்துன்னு ட்ர்ன் போட்டு செஞ்சு கொடுத்தாங்க.

திடும்னு மம்மீஸ் டே அவுட் வித் கிட்ஸ்னு கிளம்பிடுவோம்.
எந்த சந்தேகமும் வராம சமையல் எல்லாம் செஞ்சு வெச்சிட்டு சர்ப்ரஸா
பசங்களை ஐமாக்ஸுக்கு கூட்டிகிட்டு போய் கேம்ஸ்
விளையாட வெச்சு லஞ்ச் மெக்டொனால்ட்ஸ்ல
கொண்டாடினது, சர்பரைஸா பார்க்குக்கு கூட்டிகிட்டு
போனது,  ஊருக்கு போனாலும் கோவில் குளம்னே
போயிடறோம்னு( பசங்களுக்காகன்னு நான் சொல்ல
எனக்கு ஓய்வுக்காகன்னு அயித்தான் சொல்ல) 35 கிமீ
தூரத்துல இருக்கற ரெசார்ட்ல போய் ரெண்டு நாள்
தங்கினோம்.

ரொம்ப நாளைக்கப்புறம் நாங்க நாலு பேரும் நீந்தி
விளையாடி சந்தோஷமா இருந்த தருணங்கள் அது.இரண்டுமாசமா நாங்க அடிச்ச கொட்டம் எல்லாம்
அசைபோட்டுகிட்டு அடுத்த வருஷ லீவுக்காக
சக்கரவாகை பறவை மழைநீருக்காக காத்திருப்பது
போல காத்திருக்க வேண்டியதுதான்.

மதியம் சோறு தனியே தன்னந்தனியேன்னு தான்.
எப்படா மணி 2.45 ஆகும். பசங்க வருவாங்கன்னு
காத்திருப்புக்கள், காலை நேர அவசரங்கள் எல்லாம்
ஆரம்பமாகிடிச்சு. இப்ப அயித்தானுக்கு ஆபீஸ்
கிட்டத்துல தான்னாலும் நேரத்துக்கு வர மாட்டாரு.
ப்ரியமானவளே படத்துல விஜய் டயலாக் அடிக்கும்
முன்னாடியே கல்யாணமான புதுசுலேயே அயித்தான்
கராறா சொல்லிட்டாரு,” எனக்காக காத்திருந்து
உடலை கெடுத்துக்காதே, உனக்கு பசிச்சா சாப்பிடணும்னு!”
அவங்க வேலை அப்படி. சில நாள் ஊரில் பல நாள்
டூரில். தெலுங்கில் “பதுக்கு பஸ்ஸ்டாண்ட்” ஆகிடிச்சு
அப்படின்னு சொல்வாங்க. அதாவது வாழ்க்கை
பஸ்ஸ்டாண்டில் என்பது போல. அயித்தானுக்கோ
பதுக்கு முன்னே  ரயில்வே ஷ்டேஷன்களிலும்
இப்போ ஏர்போர்டுகளிலும்மு ஆகிப்போச்சு.

பசங்களுக்கு லீவு விட்டா பல வீட்டுல அலறுவாங்க.
எனக்கு அப்பத்தான் கொண்டாட்டம். :) இப்ப
இப்படி தனிமை தனிமையோன்னு புலம்பாம
வேலைக்கு போகலாம்னு தோணும். வாய்ப்புக்களும்
வருது. நல்ல ஸ்கூல்ல கூப்பிட்டாங்க. மனசு
வரலை. பதினம் வயதில் இருக்கும் பையன்,
10 வய்தில் மகள். இப்போது என் தேவை இவர்களுக்குத்தான்அதிகம் தேவை.

பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள்எவ்வளவோ
விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. தூக்கம்,
பசி, ஊர் சுற்றுதுல என பலதும்  குழந்தைகளின்
அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப எத்தனையோ
விட்டுக்கொடுப்புக்கள். அதனாலே தனிமையை
துணையாக்கிக்க கற்றுக்கொண்டுவிட்டேன்.

பள்ளிகள் விடுமுறை விட்டதும் ஒரு மாதிரியான
அமைதி இருக்கும். அங்கே இருக்கும் கரும்பலகைகளும்,
(இப்போ வொயிட் போர்டுகள்) பெஞ்சுக்களும்
பேச ஆளில்லாமல் தன்னை உபயோகிப்பாளர்
இல்லாமல் போரடித்து கதறி அழுமோ என நினைப்பேன்.
பள்ளிகள் திறந்ததும் அவற்றிற்கு சந்தோஷமாக
இருக்கும். 

ஆஷிஷுக்கு ஸ்கூல் லீவு விட்டால் பிடிக்காது.
ஒரு நாள் இரண்டுநாள் என்றால் சரி. ஆனால்
இப்படி தொடர்ச்சியாக லீவு கொடுத்தால் போரடிக்குது,
எப்பத்தான் என் ஃப்ரெண்ட்ஸுக்களைப் பார்ப்பேனோன்னு
இருக்கும்மா! என்பான்.  பிள்ளை பிராயத்தின் சந்தோஷமே
நட்புக்களுடன் தானே. நேற்று இரண்டும் சந்தோஷமாக
ரெடியாகி வேன் ஏறி கையசைத்து கிளம்பி விட்டார்கள்.

எனக்கு அப்படியே கொசுவத்திச்சு. 11 வருடங்களுக்கு
முன்னால் முதன் முதலாக ஆஷிஷை பள்ளிக்கு
அனுப்பி வைத்த அந்த நாள். நங்கநல்லூர் டீ.ஏ.வி
பள்ளிதான் ஆஷிஷ் முதலில் படித்தது. அட்மிஷன்
போட்டு ஸ்கூல் திறந்த அன்று  ஸ்கூல் பஸ்ஸில்தான்
போகவேண்டும். முதல் நாள் அழுது ஆர்ப்பாட்டம்
செய்வானோ என்று குழம்பிக்கொண்டிருந்தேன்.

நானும் அயித்தானும் எந்த உணர்ச்சிகளையும்
காட்டாமல் தயார் செய்து பஸ்ஸில் ஏற்றி
விட்டோம். அழகாக ஏறி உள்ளே சென்று
விண்டோ சீட்டில் உட்கார்ந்து கொண்டு
டாடா காட்டிவிட்டு போய்விட்டான்!!
வீட்டுக்கு வந்து அழுது தீர்த்தேன். முதன்
முதலில் குழந்தையை விட்டு பிரிந்த
அழுகை அது. ஆஷிஷ் ஆர்ப்பாட்டம் செய்திருந்தால்
நான் அழுதிருக்க மாட்டேனோ என்னவோ. :))

11 மணிக்கு பள்ளிக்குச் சென்று அழைத்து
வரப்போனேன். அவன் வகுப்பில் அனைவரும்
அழுது கொண்டிருக்க அடக்க முடியாமல்
ஆயாக்களும், ஆசிரியைகளும் கஷ்டப்பட
ஐயா ஹாயாக என்னைப்பார்த்து ஓடிவந்து
கட்டிக்கொண்டார். ஆஷிஷால் மட்டும்தான்
எங்களுக்கு பிரச்சனையில்லை என்றார் டீச்சர்.

அம்ருதாவும் ஸ்கூலுக்கு போக அழுததில்லை.
ஆனால் ஒரே ஒரு கண்டீஷன் தான். அண்ணா
போல தானும் வேனில் போகவேண்டும். அப்போது
நாங்கள்  இருந்தது கோடம்பாக்கத்தில். ஆஷிஷ்
பீ.எஸ் மூத்தா பள்ளியில் சேர்ந்திருந்தான். அம்ருதா
படித்தது டீ.ஏ.வீ சக்கரவர்த்தி பள்ளி. அருகே இருந்த
பள்ளிக்கு வேனில் சென்று வந்தாள்.

பிள்ளைகள் அழுவது எதனாலே? இப்போ நான் புலம்புவது
எதனாலே!?! எல்லாம் பிரிவு செய்யும் மாயம் தான்.
புலம்பினாலும் அந்தப் பிரிவை எதிர்கொள்ள
பெரியவர்கள் நமக்குத் தெரியும்.

பிள்ளைகள் அழாமல் பள்ளிக்குச் செல்வதுதான்
எல்லோருக்கும் நல்லது. அதற்கு எப்படி தயார்
செய்வது என்பதற்கான பதிவுகள் நாளை முதல்
பேரண்ட்ஸ் கிளப்பில் வெளியாகும்.


சீ யூ தேர்28 comments:

butterfly Surya said...

இப்படி தனிமையில் இருந்தால் தானே பதிவு எழுத முடியும்..

குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சூர்யா

வெங்கட் நாகராஜ் said...

குட்டீஸ்களுக்கு பள்ளி திறந்தாச்சா? இங்க ஜூன் 28 தான், சோ, அதுவரை எங்க வீட்டுல அம்மிணியும், பொண்ணும் ஒரே லூட்டி தான்! நல்ல பகிர்வு.

புதுகைத் தென்றல் said...

எங்க வீட்டுல அம்மிணியும், பொண்ணும் ஒரே லூட்டி தான்!//

ஆஹா அப்படியா சந்தோஷம்.

வருகைக்கு நன்றி

க‌ரிச‌ல்கார‌ன் said...

ஒரு நெடிய‌ பிரிவுக்க‌ப்புற‌ம் வ‌ரும் கொண்டாட்ட‌ம் தான் அதிக‌ம் இனிக்கும் இல்ல‌?

அமைதிச்சாரல் said...

அப்பாடா...வனவாசம் முடிஞ்சு தென்றல் வீச ஆரம்பிச்சுட்டது.

Vidhoosh(விதூஷ்) said...

அதானா ஆளை அடிக்கடி காணுமேன்னு பாத்தேன். நலமா.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் கரிசல்காரன்,

காத்திருப்பதின் சுகமும் தனி.
வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

வனவாசம், ஓய்வு முடிஞ்சு வந்துட்டோம்ல

வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

//பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள்எவ்வளவோ
விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.//

ஆமாப்பா; பிள்ளைகளுக்காக தனிமையைக் கூட துணையாக்கிற மனசு கிடைச்சது கிரேட்!!

/பிள்ளைகளின் இந்த
விடுமுறையை நல்லா எஞ்சாய் செய்யணும்னுதான்
பதிவு பக்கமே வராம இருந்தேன்.//

பெரிய மனசுதான் உங்களுக்கு!!

சந்தோஷம்ப்பா!!

Porkodi (பொற்கொடி) said...

:-) welcome back!

நானானி said...

தென்றல்,
சுவாரஸ்யமான பதிவு. குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்.

என் பேரன் இப்போதுதான் எல் கே ஜி போகவாரம்பித்திருக்கிறான்.

எம்.எம்.அப்துல்லா said...

அக்கா,

லெப்ட்லையும்,ரைட்லயுமா இரண்டு குட்டீசும் கடந்த 45 நாளா இருந்திட்டு இப்போ இப்போ லீவ் முடிஞ்சு புதுகை போய்ட்டாங்க.

இந்த நள்ளிரவு 12.15 மணிக்கு பின்னூட்டம் போடயிலேயே என் நிலமை புரியும்னு நினைக்கிறேன் :((

அப்பாவி தங்கமணி said...

வாங்க புதுகை... என்னை ரெம்பவே கொசுவத்தி சுத்த வெச்சுடீங்க.. எங்க ம்மா சொன்னதை நீங்க republish பண்ணின மாதிரி இருந்தது எனக்கு... இப்பவே பழகிகோங்க....உங்கள தயார் படுத்திகொங்க.... நிரந்தரமானது உறவுகள் மட்டுமல்ல பிரிவுகளும் தான்.... நல்ல பதிவு...

புதுகைத் தென்றல் said...

வாங்க வித்யா,

நலமோ நலம். இனி வந்திட்டோம்ல

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

ஆஷிஷ் மேல் படிப்புக்கு வெளி ஊருக்கு போக நேர்ந்தால் என்ன செய்யன்னு இப்பமே மனசை செட் செஞ்சுக்க ஆரம்பிச்சிட்டேன். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி பொற்கொடி

புதுகைத் தென்றல் said...

வாங்க நானானி,

வாழ்த்துக்களை சொல்லிடறேன். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

இந்த நள்ளிரவு 12.15 மணிக்கு பின்னூட்டம் போடயிலேயே என் நிலமை புரியும்னு நினைக்கிறேன்//

நல்லா புரியுது அப்துல்லா,

பசங்களுக்காகவும், வேலை நிமித்தமாவும் குழந்தைகளை விட்டு பிரிய வேண்டியது சில ஆண்களுக்கு தலைவிதியாகிடுது. அயித்தான் கூட பசங்களை ரொம்ப திட்டமாட்டாங்க. காரணம் நான் ஊரில் இருப்பதே கொஞ்ச நாள் தான் அப்படின்னு சொல்வார்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

இப்பவே பழகிகோங்க....உங்கள தயார் படுத்திகொங்க.... நிரந்தரமானது உறவுகள் மட்டுமல்ல பிரிவுகளும் தான்...//

ஆமாம் புவனா,

நல்லா சொன்னீங்க. வருகைக்கு நன்றி

துளசி கோபால் said...

வெல்கம் பேக்

புதுகைத் தென்றல் said...

thanks tulsi teacher

மாதேவி said...

இங்கும் "சக்கரவாகைப்பறவை" ஒன்று விடுமுறைக்காகக் காத்துக்கிட்டு இருக்கு.:)

ராமலக்ஷ்மி said...

குழந்தைகள் இருவருக்கும் இந்தக் கல்வியாண்டு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்:)!

வல்லிசிம்ஹன் said...

தென்றல், இந்தத் தனிமையை இனிமையாக மாற்றிக் கொள்ளத் தெரியாமல் நான் தவித்தது சரியாக 20 வருடங்களுக்கு முன்னால்.
பிறகு , ஏதோ ஒரு வேலை கிடைத்து மனத்தைச் சமாதானம் செய்து கொண்டேன்.பிறகு திருமணங்களுக்காக அலைந்தது என்னை முச்சுவிடாமல் வேலை செய்ய வைத்தது.
இப்போது மீண்டும் இடைவெளி. அவ்வப்போது தென்றல்( :) )
காலங்கள் மாறும் தென்றல். தெளிவும் தானே வரும்.

புதுகைத் தென்றல் said...

அப்படியா மாதவி,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி ராமலக்‌ஷ்மி,

பசங்களுக்கு சொல்லிடறேன்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் வல்லிம்மா,

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் மாற்றத்துக்கு தகுந்தாற்போல் நம்மை நாமும் மாற்றிக்கவேணும்னு கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்.