Friday, June 18, 2010

எம்டன் வாழ்க :)

”லீவு எடுத்து 3 நாள் ஆச்சு, இன்னும் லீவு லெட்டர் தரலை! சீக்கிரமா
கொண்டுவந்து கொடு!” லலிதாம்பாள் டீச்சர் கறாரா சொன்னாங்க.
சரின்னு விடுமுறை விண்ணப்பம் எழுதிக்கொண்டு போய் கொடுத்தேன்.

தலையில அடிச்சுகிட்டாங்க. :((” படிக்கறது இங்கிலீஷ் மீடியம்,
தமிழ்ல லெட்டர் கொடுத்தா?? இங்கிலீஷ்ல எழுதிக்கொண்டுவா!”
அப்படின்னு திட்டினாங்க.

4ஆம் வகுப்புல தான் ஆங்கிலமே படிக்க ஆரம்பிச்சேன். 6ஆவது
ஆங்கில மீடியத்துல் ராணி ஸ்கூல்ல சேத்துட்டாங்க. அங்க இருப்பது
எல்லாம் சைல்ட் ஜீஸஸ் கான்வெண்ட்ல ப்டிச்சிட்டு வந்தவங்க.

வீட்டுல போய் அப்பாவை கேட்டேன். அம்மாவுக்கு அம்புட்டு
இங்கிலீஷு தெரியாது. ”லெட்டர் எல்லாம் நான் எழுதித் தர
மாட்டேன், நீயா எழுது!!” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்குத்
தெரியலைப்பா! ஒரு வாட்டி சொல்லிக்கொடுங்க. அடுத்த
வாட்டியிலேர்ந்து நானா எழுதறேன்!” ம்ம்ஹூம் மனுஷன்
கேக்கலை. அம்மாவை வழியில் பாத்து லலிதாம்பாள் டீச்சர்
சொல்லி அம்மா அப்பாகிட்ட கெஞ்சி அப்புறம் பேப்பர்
எடுத்துகிட்டு வான்னு சொன்னார் அப்பா.

அவருதான் எழுதித் தரப்போறாருன்னு நினைச்சு பேனாவையும்
பேப்பரையும் கொடுத்திட்டு கொஞ்சம்தான் நகர்ந்திருப்பேன்
எந்திரிச்சு வந்து சீப்பை திருப்பி உச்சந்தலையில் ஒரு
“டொட்டொய்ங்” அடிதான் வேற என்ன. அப்பா ஸ்டைல்
சீப்பின் கணமான பகுதியில் உச்சந்தலையில் அடிப்பது
மட்டும்தான்.

அழுதுகிட்டே அப்பா சொல்ல எழுதி அதை கரெக்‌ஷன்
செஞ்சு கொடுக்கச் சொல்லி சரியா வேற பேப்பரில் எழுதி
அப்பா கையெழுத்து வாங்கி கிட்டு டீச்சரிடம் கொடுத்தேன்.
அந்த லீவ் லெட்டரை ஒரு காப்பி தனியா என் கிட்ட
வெச்சிருந்தேன். அடுத்த வாட்டி லீவு எடுத்தா உதவுமே!!

அதுக்கப்புறம் வீட்டுக்கு யார் லெட்டர் போட்டாலும் உடனே
போஸ்ட் ஆபீஸ் போய்(பாய் கடைல வாங்கினா 10 பைசா
சாஸ்தி கொடுக்கணும்) இன்லெண்ட்லெட்டரோ, போஸ்ட்கார்டோ
(மேட்டரைப் பொறுத்து) வாங்கி வந்து அப்பா, அம்மா, பாட்டி
சொல்படி எழுதி போஸ்ட் போடுவது என் வேலை. அதையும்
தபால் பெட்டியில் போடுவது என் வேலைதான். இவங்க
யாருக்கும் எழுத மாட்டாங்க. ஆனா உடன் பதில் கேட்டு
எழுதிப் போடாட்டி திட்டு, அடி விழுகும். :(

இதுல திருப்பதில இருக்கற அத்தை பையன் இங்கிலீஷ்லதான்
எழுதுவாரு. அவருக்கு தமிழ் தெரியாது நமக்கு தெலுங்கு
படிக்கத் தெரியாது அதான் ரீசன். (அப்பா பேருக்கு வர்ற சாதாரணமான லெட்டர்தான். அத்தை பையன்ன உடனே கற்பனையை தட்டி விட்டுக்காதீங்க!)
அவருக்கு இங்கிலீஷில் பதில் லெட்டர் எழுத அப்பா கொஞ்சம் உதவுவார். இப்படி படாத கஷ்டமெல்லாம் பட்டு லெட்டர் எழுதறதுல எக்ஸ்பர்ட்
ஆனேன். வீட்டில் உறவினருக்கு, இல்லை வேறெதுக்குமோ
கடிதம் எழுதணும்னா அது நாந்தான் செய்யணும்னு
எழுதப்படாத சட்டம் போட்டுட்டாரு அப்பா!!!

அப்போ இங்க்லீஷில் வொர்க் புக்குன்னு ஒண்ணு இருக்கும்.
அதுல நிறைய்ய லெட்டர் ஃபார்மேட்டுக்கள் இருக்கும். அதை
பத்திரமா வெச்சிருந்து கவர்ண்மெண்டுக்கு எப்படி லெட்டர்
எழுதறது, வீபீபில புக் எப்படி வரவைக்கறது, அப்படின்னு
ஃபார்மல், இன்ஃபார்மல் லெட்டர்ஸ் எல்லாம் எழுத பழக்கம்
ஆனது. (மிஸ்டர் ரமணி (அதான் எங்கப்பா) என்னை
கத்துக்க வெக்க நினைச்சது இதுதான். ஆனா ஐயா
எப்பவுமே அதிரடி மன்னன்) :)) அப்போ அப்பா புதுக்கோட்டை
கூட்டுறவு வங்கியில கிளார்க்கா வாழ்க்கையை ஆரம்பிச்சு
ரிட்டயர்ட் ஆகும்போது மேனேஜர். நடுவில் அதிகாரிக்கு
பர்சனல் செக்கரட்டரியாவும் இருந்திருக்காரு. கையெழுத்து
அவ்வளவு அழகா இருக்கும். லெட்டர் ட்ராஃப்டிங்கில் அப்பாதான்
கிங். அடிச்சு சொல்லிக்கொடுப்பது அப்பாவோட ஸ்டைலா
இருந்துச்சு. ஆனா அது எனக்கு ரொம்பவே ஹெல்பாவும்
இருந்திருக்கு. எங்கே எப்போ என்ன லெட்டர் எழுதணுமோ
நிமிஷத்துல ரெடி.

என்னை BSRB எக்ஸாமுக்கு பயிற்சி வகுப்பில் சேர்த்திருந்தாரு அப்பா.
அப்ஜக்டிவ் டைப் கேள்விகள் தவிர ஆங்கிலத்தில் ஏதாவது
ஒரு டாபிக் கொடுத்து அதுக்கு நாம லெட்டர் எழுத வேண்டும்.
அதுக்கு ப்ராக்டிஸும் அதுல கொடுப்பாங்க. இப்போ புதுகை
ஸ்டேட் பாங்க்ல வேலை பாக்கும் எங்களுக்குத் தெரிஞ்ச
அண்ணாவோட அப்பாதான் ஆங்கிலம் ட்ரையினிங்.

அவரு வங்கியில் இருக்கும் கணக்கை இன்னொரு ஊருக்கு
மாற்றலாகிப்போவதால் அந்த ஊருக்கு மாற்றிக்கொடுக்கும்படி
கேட்டு கடிதம் எழுதச் சொன்னாரு. சொன்ன 5ஆம் நிமிஷம்
நான் லெட்டரை எழுதி அவர் கையில் கொடுத்திட்டேன்.
(எம்டனோட ட்ரையினிங் அப்படி). கூட பயிற்சி எடுக்கறவங்க
எல்லாம் காலேஜ் படிச்சவங்க, படிக்கறவங்க. நானோ அப்பத்தான்
+2 முடிச்சிருந்தேன். எல்லோரும் எப்படி எங்க ஆரம்பிப்பதுன்னு
முழிச்சுகிட்டு இருந்தாங்க. சரியா முறையா எழுதியது நான்
மட்டுமே. மாஸ்டர் பாராட்டி நீதான் கரெக்டா செய்வேன்னு நினைச்சேன்,
உங்க அப்பா பேங்கல வேலை செய்வதால உனக்கு சொல்லிக்
கொடுத்திருப்பாருன்னு கெஸ் செஞ்சேன், சரியா இருக்கு”
அப்படின்னு சொன்னார். பேங் சிலிப்ஸ் எழுதுவது, எல்லாம்
அப்பா சொல்லிக்கொடுத்திருந்தாரு. பேங்க்ல இருக்கும் பழைய
ஃபார்ம் ரெண்டு கொண்டு வந்து கொடுத்து இதை ஃபில் அப்
செய் பாப்போம்னு! சொல்வார்.

இந்த மாதிரி ட்ரையிங்கினால தனியா தெகிரியமா
என்னால் கடிதம் எழுத முடியும், எந்த வங்கியோ, இல்லை
எந்த விதமான விண்ணப்ப படிவமோ அதை பூர்த்தி
செய்யும் திறனையும் காலேஜ் சேரும் முன்னரே
எனக்கு கை வரும்படி அப்பா சொல்லிக்கொடுத்திருந்தாரு.

என்ன கொஞ்சம் அன்பா சொல்லிக்கொடுத்திருந்திருக்கலாம்!
அவருக்கு தெரிஞ்சது அம்புட்டுத்தான். தன் தந்தையையே
பார்த்திராதவர். தாத்தா சாகும்போது அப்பாவுக்கு இரண்டு
வயசு. அவர் உணர்ந்திராததால் அந்த பாசத்தை எங்களுக்கும்
கொடுக்கத் தெரியவில்லை போல. அதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
ஆனாலும் எம்டனில் வளர்ப்பில்  நான் தனியாக,
எல்லாவற்றையும் செய்து கொள்ளும் திறனுள்ளவளாக
இருப்பதில் சந்தோஷமே! நன்றி அப்பா!!





20ஆம் தேதி தந்தையர் தினம். இந்த வாட்டி ரமணிசாருக்கு
இரண்டு வாழ்த்தா சொல்லணும். 20 ஆம் தேதி தந்தையர்தினம்.
21 அவரது திருமண நாள். 38 வருடங்கள் முடிகிறது.

எப்போதும் நீங்கள்திட்டியதையும், சீப்பின் கெட்டியான பாகத்தால் அடித்தையும்மறக்க முடியாத மகளிடமிருந்து  அன்பான
 தந்தையர் தின வாழ்த்துக்களுடன் இனிதான
திருமண நாள் வாழ்த்துக்களும்.


33 comments:

எல் கே said...

//அழுதுகிட்டே அப்பா சொல்ல //

எதுக்கு அப்பா அழுதார்?? நீங்கதான அழுகனும்.. ??

உங்கள் அப்பாவிற்கு தந்தையர் தின மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

அப்பாக்கும் அம்மாவுக்கும் பூங்கொத்துடன் வாழ்த்துக்கள்!
அச்சச்சோ எம்டன்னு சொல்லிட்டீங்களே!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

Vidhya Chandrasekaran said...

மணநாள் வாழ்த்துகள்.

Thamira said...

சே.. அது 'அதிக அட்ச' அல்ல 'அதிக பட்ச'.!

Thamira said...

மிக அழகான பதிவு. உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துகள்.

(அப்படியே உங்க அதிகப் அட்ச வயசு 37ங்கிறதையும் கண்டுபிடிச்சுட்டேனே.. ஹையா..)

pudugaithendral said...

வாங்க எல்கே,

ஒரு கமா போட விட்டுட்டேன். கலாய்ச்சிட்டீங்க. :))

வருகைக்கு நன்றி அப்பா, அம்மா திருமண நாள். உங்க வாழ்த்தையும் சொல்லிடறேன்.

pudugaithendral said...

எம்டன்னு சொல்லிட்டீங்களே!//

இப்ப மட்டுமா சொன்னேன்,, நிறைய்ய வாட்டி நான் எம்டன் மகள்னு சொல்லியிருக்கேனே. அப்பா ரொம்ப கண்டிப்பானவர். எம்.மகன் நாசர் மாதிரியேதான்.

வாழ்த்தையும் பூங்கொத்தையும் அனுப்பிடறேன்.

pudugaithendral said...

நன்றி ஜமால்

pudugaithendral said...

நன்றி வித்யா

pudugaithendral said...

வாங்க ஃப்ரெண்ட்,

அக்கா அக்கா நீ அக்காயில்லை பதிவுலயே சில பல க்ளூக்களை கொடுத்திருந்தேனே. இப்ப புதுசாதான் கண்டுபிடிக்கணுமா. என் வயசு 37தான்.

வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட் வாழ்த்துக்களை சொல்லிடறேன்.

கோமதி அரசு said...

உங்கள் அம்மா,அப்பாவிற்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்!


தந்தையர் தின வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அட வித்யாசமான ஆனா உண்மையான அப்பா பதிவு. எம்டன் மகளுக்கு முதல் வாழ்த்துகள். ஏன்னா,அதனாலதான் இப்போ அஷிஷ்,அமிர்தா ரொம்ப நல்ல பிள்ளைகளா அன்பானவங்களா இருக்காங்க. இருப்பாங்க.
எம்டன் சார் வரும்போது சீப்பை எல்லாம் ஒளிச்சு வச்சிருங்கப்பா:)

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் ரமணி சார்.

அன்புடன்

மங்களூர் சிவா

எம்.எம்.அப்துல்லா said...

//ரிட்டயர்ட் ஆகும்போது மேனேஜர்

//

அந்த மேனேஜர் எங்க அப்பாவின் தொழில் வளர்ச்சிக்கு குடுத்து உதவிய லோனை எங்கள் தலைமுறை என்றும் மறக்காது.

அப்பா,அம்மாவுக்கு இனிய மணநாள் வாழ்த்துகள். எங்க அப்பா அம்மாவுக்கு போன மாசம்தான் 50 வது மணநாள் முடிஞ்சது :)

Anonymous said...

அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க தென்றல்

pudugaithendral said...

சொல்லிடறேன் கோமதி அரசு

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

இப்ப அப்பா அடிப்பது இல்லை. ஏன் என்னைத் தவிர யாரையும் அடிச்சதில்லை. என்னோட கம்பேர் செய்யும் போது தம்பிக்கு விழுந்த அடிகள், திட்டுக்கள் கம்மிதான்.

ஆனா அந்தக் கண்டிப்பும் கறாரும் தான் என்னை ஒழுங்கா வெச்சிருக்குன்னு நம்பறேன். வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாழ்த்துக்களை சொல்லிடறேன் சிவா

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அப்துல்லா,

கூட்டுறவு வங்கியும் அப்பாவும் அப்படியே ஒண்ணுமண்ணா கலந்த மாதிரி அங்கேயே ஒட்டி உறவாடியவர் அப்பா. அதை ஒரு வேலையா நினைச்சதில்லை.

உங்க அப்பா அம்மாவுக்கு என்னோட தாமதமான வாழ்த்தை சொல்லிடுங்க. வருகைக்கு நன்றி

pudugaithendral said...

திருமண நாள் வாழ்த்தை சொல்லிடறேன் சின்ன அம்மிணி

மங்களூர் சிவா said...

/
என்னோட கம்பேர் செய்யும் போது தம்பிக்கு விழுந்த அடிகள், திட்டுக்கள் கம்மிதான்.
/

இப்ப அதுதான் பிரச்சனையா??

கார்த்தி எங்கிருந்தாலும் இந்தியா வந்து 4 அடி வாங்கிகிட்டு போகவும்
:))))

AKM said...

ரமணி சாருக்கு வாழ்த்துக்கள்.. எனக்கு அவரைத்தெரியும் ஆனா பாருங்க.. அவருக்கு என்னை அவ்வளவா தெரியாது..(உங்க பாணியில் அவ்வ்வ்வவவவவவவ்வ) அதேசமயம் நானும் அவரும் இன்னொரு நண்பரும் ரமணி சாரின் நண்பர் ஒருவரின் தம்பி வாழ்க்கைக்காக பெண் வீட்டாரிடம் பஞ்சாயத்து பேச சென்றிருந்தோம்.. பஞ்சாயத்து என்றதும் நான் பெரிய ஆள் என நினைக்க வேண்டாம்.. அப்போது நான் சின்ன பையன் தான்..ரமணி சார் மிகுந்த தண்மையுடன் பேசினார்.. ஆனால் எங்கள் முயற்சி வெற்றி அளிக்க வில்லை.. தேவகோட்டை பயணம் அது..சின்ன பையன் ஏன் பஞ்சாயத்து போனேன் சந்தேகம் வரும்.. ஒன்று அந்த மாப்பிள்ளை எனக்கு தெரிந்தவர்.. இரண்டு அப்போது நான் பாரம்பரியமிக்க பிரபல பத்திரிக்கையின்
புதுக்கோட்டை பகுதியின் சிறப்பு நிருபர் .. anyway.. அவரும் அவர்தம் துணைவியாரும் நீண்ட காலம் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்..

pudugaithendral said...

வாங்க ஏகே எம்,
அப்பாவைத் தெரியாதவங்க யாரும் இருந்தாத்தானே அதிசயம். இப்போதைய தலைமுறைக்காரர்களுக்குத்தான் அப்பா,அம்மாவைத் தெரிந்திருக்காது.

உங்க வீடு திருக்கோகர்ணத்தில் கோவில் வீதியில் மெயின் ரோட்டில் இருக்கு சரியா? உங்க வீட்டிலேர்ந்து வலது பக்கம் பாத்தா திருவப்பூர் கோபுரம் தெரியும் இடது பக்கம் பார்த்தா கோகர்ணேஸ்வரர் கோவில் கோபுரம். இது சரின்னா நீங்க பத்திரிகையின் நிருபர் என்பது எனக்குத் தெரியும்!:) அப்பா ஒரு தடவை சொல்லியிருக்கார். வாழ்த்தை கண்டிப்பா சொல்லிடறேன்.

pudugaithendral said...

கார்த்தி எங்கிருந்தாலும் இந்தியா வந்து 4 அடி வாங்கிகிட்டு போகவும்//

ஏன் தம்பி. சரி நடக்கட்டும். :))

எல் கே said...

/
வருகைக்கு நன்றி அப்பா, அம்மா திருமண நாள்.//

அதை மறந்து விட்டேன்.. என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க

அபி அப்பா said...

இன்னாது அப்பா அடிச்சாங்களா? எனக்கு தெரிஞ்சு புதுகைல ஒரு வக்கீல் கேசே இல்லாம இருக்காரு. அவரை புடிச்சு கேஸ் போட்டுடுவோம் அப்பா மேல:-)))


நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்! அப்பாவுக்கும் உங்களுக்கும் தான்!

ஹுஸைனம்மா said...

நிறைய நல்லவங்களுக்கு ஜூன்லதான் கல்யாண நாள் வருது போல!! (எனக்கில்ல :-( )

இனிய வாழ்த்துகள், உங்களுக்கும்!!

சேம் பிளட், மூத்த பொண்ணு நான் வாங்கின அளவுக்கு அம்மாகிட்ட யாரும் வாங்கலை!! :-(( அப்பா அடிக்கிறதில்லை.

ஒரு விஷயம் பாருங்க தென்றல், நம்ம அம்மாப்பா கிட்டருந்து நாம வாங்கின அடிக்கு குறைவில்ல!! ஆனா, அதுக்கு குறைவில்லாம நாம அவங்கள இன்னும் அதிகமா நேசிக்கத்தான் செய்றோம்.

ஆனா, இந்தக் காலத்துல பிள்ளைங்க மேல கைய வைக்கவே, ஏன் அதட்டறதுக்கே பயமாருக்கு!! என்னன்னவெல்லாமோ சொல்றாங்க!!?? இந்தப் (பழக்கமில்லாத) பொறுமைக்குப் பயந்தே ரெண்டோட (பிள்ளைகளை) நிறுத்திக்கிறாங்க போல இப்பல்லாம்!!
;-)))))))

pudugaithendral said...

கண்டிப்பா சொல்லிடறேன் எல்கே

pudugaithendral said...

வாங்க அபி அப்பா,

கல்லை உளியால அடிச்சாத்தானே அழகான சிலை கிடைக்குது. அப்பா அடிச்சதையெல்லாம் கணக்குல எடுத்துக்க கூடாது. வருகைக்கு நன்றி வாழ்த்தைச் சொல்லிடறேன்

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

நாம அடி வாங்கின மாதிரி நம்ம பசங்களை அடிக்கக்கூடாதுன்னு அடி மனசுல ஒரு எண்ணம் எப்பவும் ஓடுதே அதுவே கூட நம்மளை கொஞ்சம் அடக்கி வெச்சிருக்குன்னு நான் நினைக்கிறேன்.
//இந்தப் (பழக்கமில்லாத) பொறுமைக்குப் பயந்தே ரெண்டோட (பிள்ளைகளை) நிறுத்திக்கிறாங்க போல இப்பல்லாம்!! //
அதுவும் சரிதான். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் பதிவுங்க... கோபம் இருக்கற எடத்துல தானே குணம் இருக்கும்... சூப்பர்.... அப்பா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்....

pudugaithendral said...

வருகைக்கு நன்றி புவனா