Wednesday, June 30, 2010

லீவு லெட்டர் யார் கிட்ட கொடுக்க??!!!

ஆஷிஷையும் அம்ருதாவையும் கடைக்கு கூட்டிகிட்டு
நடந்து போய்க்கிட்டு இருந்தேன். அவங்களுக்கு ஷூ வாங்கத்தான்.
ரொம்ப டயர்டா இருந்துச்சு. அதோட கால் வலி வேற.
10 நாளா கால் எப்ப பிசகினிச்சுன்னு தெரியாமலேயே
கணுக்கால்கள் இரண்டுலயும் வலி. பத்தாததுக்கு
குதிங்கால் வலியும் சேர்ந்துக்குச்சு. எங்க அவ்வா
ஒரு டயலாக் சொல்வாங்க. “அழுதழுது பெத்தாலும்
பிள்ளை அவதானே பெறணும்னு” அதென்னவோ எனக்கு
எப்பவுமே அப்படித்தான். வலியோ என்ன கொடுமையோ
என் வேலையை யார் தலையிலையும் கட்ட முடியாது!:(


As I am suffering from severe leg pain i need 3 days
rest. kindly grant me the same and treat my absence
as leave அப்படின்னு ஆபீஸ்ல வேலை செஞ்சா லெட்டர்
எழுதி கொடுக்கலாம். நான் லெட்டர் எழுதி யார் கிட்ட
கொடுக்க? கொடுத்தாலும் நமக்கேது ஓய்வுன்னு ஆஷிஷ்
அம்ருதாகிட்ட பேசிகிட்டே நடந்துகிட்டே இருந்தேன்.

நீ லெட்டர் எல்லாம் எழுத வேண்டாம்மா! எங்ககிட்ட
சொன்னா போதும் நாங்க பாத்துப்போம் - இது ஆஷிஷ்.

உங்களுக்கு ஸ்கூல் திறந்தாச்சே, நீங்க இப்ப பிசி கண்ணான்னு
சொல்ல ஆமாம்லன்னு அம்ருதா. அப்பா கிட்ட சொல்வோம்
அப்படின்னு சொன்னாங்க. அவர் கிட்ட சொல்லலாம் பாவம்
அவரு என்ன செய்வாரு? வேலையோ வேலைன்னு அவர்
சுத்திகிட்டு இருக்காரு.

நீ சமைக்க வேணாம்னு வேணாம் சொல்லலாம். சாப்பாடு
வெளியில் பாத்துக்கலாம். ஆனா இந்த இஸ்திரி, வேலைக்காரங்க
டும்மா அடிக்கறது, போன் கால்ஸ், கொரியர் இதுக்கெல்லாம்
எந்திரிச்சு வந்துதானே ஆகணும்!!. வெறுத்தே போச்சு.
எல்லா கொடுமையும் அந்த வலி இருக்கும்போதுதான் வரணுமான்னு
செம கோபம் வந்து என்ன செய்ய.

எங்க அம்மம்மா சரியாத்தான் சொன்னாங்க. ஆபீஸ் வேலைக்கு
கூட 58 வயசுல ரிட்டய்ர்மெண்ட் கிடைக்கும். ஆனா வீட்டுல
வேலைக்கு ரிட்டயர்மெண்ட், லீவு எல்லாம் கிடையாதுன்னு.
அம்மம்மா வாயில சக்கரை தான் போடணும்.

அம்மம்மா ஞாபகம் ஜாஸ்தியாகி பசங்க கிட்ட நேத்து
”நான் போய் ஒரு வாரம் எங்க அம்மம்மா கிட்ட இருந்துட்டு
வர்றேன்ன்னு” சொன்னேன். தாரளமா போம்மா, கூடவே
நாங்களும் வர்றோம்!!! அப்படின்னு இரண்டு பேரும் கோரஸா.
இதுக்கு நான் எதுக்கு அங்க போகணும்.:)

சின்ன வயசுல எங்க அப்பா சும்மாநானாச்சுக்கும் நான் வீட்ட
விட்டு ஓடிப்போறேன், உங்க தொல்லை தாங்கலைன்னு சொல்வார்.
“உடனே நான் அப்பா நீங்க இல்லாம எனக்கு ஜுரம் வந்திடும்
நானும் உங்க கூட வர்றேன் அப்படின்னு சொல்ல, தம்பி,
அம்மாவும் கூட வர்றதா சொல்வோம்” உங்க கிட்ட இருந்து
தப்பிக்கத்தான் நான் வீட்டை விட்டு போறேன்னு சொல்றேன்,
நீங்களும் கூட வர்றதா இருந்தா நான் ஏன் ஓடிப்போகணும்னு”
வீட்டுக்குள்ள வந்து உக்காந்திருவாரு. :)) இப்ப என் கதையும்
அப்படித்தான் இருக்கு.

ஹோம் மேக்கர்கள் எல்லோருக்கும் இந்த நிலைதான்.
ஆனா அசால்டா வீட்டுல இருக்கறவங்களுக்கு என்ன வேலை?
எப்ப பாரு டீவி பாத்துகிட்டு, தூங்கிகிட்டு இருப்பாங்கன்னு
சொல்ற கூட்டமும் இருக்கத்தான் செய்யுது.

கொஞ்சம் யோசிங்க பாஸ். உடம்பு சரியில்லாட்டியும் லீவு
லெட்டர் கொடுத்தோ, கொடுக்காமையோ பங்க் அடிச்சிட்டு
ரெஸ்ட் எடுக்க கூடிய வேலை இல்லை ஹோம் மேக்கர்.
ஹவுஸ் வொய்ஃபா இருப்பது ஈசி இல்லை.


27 comments:

Pandian R said...

100 சதம் உண்மை. காலை 5 மணிக்கு கிளம்பி மாலை வீடு வந்து சேந்தாலும் இன்னும் என் தாயாருக்கு ஒரு காபி வேணும்னாலும் தானேதான் போட்டுக்கணும். ஆனால் சிலீப்பர் கோச்சில ஊருக்கு வந்த மகன் டயர்டா இருப்பான் அப்டின்னு அடுத்த நாள் காலை எனக்கும் சேர்த்து காப்பி போடும். ஓய்வில்லாத வேலை. இன்றைக்கும் அவர் சொல்லும் வாக்கியம் இப்டி நடமாட சக்தி இருக்கையிலேயே போய் சேந்திடனும்னு.

pudugaithendral said...

வாங்க ஃபண்டூ,
நலமா?
//ஓய்வில்லாத வேலை.//

புரிதலுக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நூற்றுக்கு நூறு உண்மை. ”ஹோம் மேக்கர்” என்ற பெரிய வார்த்தையைச் சொல்லி விடுகிறோம். ஆனாலும் அவர்கள் செய்யும் வேலைகள் அவ்வளவு அங்கீகரிக்கப்படாதது சோகம்.

அலுவலகத்திலும் வேலை செய்து விட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்து வீட்டு வேலையும் செய்யும் தோழிகளின் பாடு இன்னும் திண்டாட்டம். :)

pudugaithendral said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஆபீஸ், வீடுன்னு ஓடுற பெண்கள் வாழ்க்கை கஷ்டம் தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அவங்க வெளியே போய் வேலை பாக்கறாங்கன்னு கொஞ்சமாவது இரக்கம் காட்டுவாங்க.

அது ஹோம் மேக்கர்களுக்கு சான்சே இல்லை.

சாந்தி மாரியப்பன் said...

//ஹவுஸ் வொய்ஃபா இருப்பது ஈசி இல்லை//

நல்லா சொல்லுங்கப்பா. இங்கியும் சேம் ப்ளட்தான்.. இதுல என்ன ஒரு ஆறுதல்ன்னா, இப்ப பொண்ணுக்கு லீவுன்னதால ஒரு வேளைக்கான சமையலை அவ பாத்துக்கறா.

Vidhya Chandrasekaran said...

100% உண்மைக்கா:(

சில சமயம் ரொம்பவே வெறுப்பா இருக்கு:(

மங்களூர் சிவா said...

பதிவு அருமை.

* * * * * *

ஹைதராபாத்க்கு ஒரு ரிட்டன் ஃப்ளைட் டிக்கட் எடுத்து குடுத்தா அந்த கொரியரை வந்து நான் வாங்கி குடுக்க மாட்டேனா???

தாரணி பிரியா said...

ம் வீட்டுல அம்மா இருக்கறதால இந்த கஷ்டம் எல்லாம் இல்லாம இருக்கு :). அவங்க பாவம் இனியாவது வேலை செஞ்சு தரணுமுன்னு தோண வைக்கறீங்க:)

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

பசங்க சின்னக்குழந்தையா இருக்கறவங்களை நினைச்சு பாருங்களேன் ரொம்ப கஷ்டம். அந்த ஸ்டேஜெல்லாம் நாமதான் தாண்டி வந்தோமான்னு இருக்கு.

வருகைக்கு நன்றிப்பா

pudugaithendral said...

சில சமயம் ரொம்பவே வெறுப்பா இருக்கு:(//

ஆமாம்னு சொல்லி மனசை தேத்திக்க வேண்டியதுதான்.

வருகைக்கு நன்றி வித்யா

pudugaithendral said...

ஹைதராபாத்க்கு ஒரு ரிட்டன் ஃப்ளைட் டிக்கட் எடுத்து குடுத்தா அந்த கொரியரை வந்து நான் வாங்கி குடுக்க மாட்டேனா???//

தங்கம். இப்படியாபட்ட தம்பிக்கள் இருக்கும்போது என்ன கவலை. :)

pudugaithendral said...

அவங்க பாவம் இனியாவது வேலை செஞ்சு தரணுமுன்னு தோண வைக்கறீங்க:)//

நன்றி ப்ரியா

Anonymous said...

ஆனாலும், லீவு நாட்கள்ல சமைக்கிறேன் பேர்வழின்னு கிச்சன் உள்ளே புகுந்திடுவோம். வெளியே வரும் போது சூறாவளி தாக்கின மாதிரி இருக்கும். அப்புறம் கழுவிற தொடைக்கிற வேலை எல்லாம் இரண்டு மடங்கா அம்மா செய்ய வேண்டி இருக்கும். இதுக்கு நானே சமைக்கறேன்னு கை எடுத்து கும்பிடுவாங்க. ஹி ஹி.

படிக்க வந்தப்புறம் கொஞ்சம் அதிகமாக பொறுப்பு வந்திருக்கு. வீட்டுக்குப் போனா முதல் ஒரு வாரம் அம்மா சமைச்சு போட்டா நன்னா திங்கறது. அப்புறம் நாமலே கொஞ்சம் உதவுறது. (ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொல்ல வர்றேன்.)

Anonymous said...

//ஆபீஸ், வீடுன்னு ஓடுற பெண்கள் வாழ்க்கை கஷ்டம் தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அவங்க வெளியே போய் வேலை பாக்கறாங்கன்னு கொஞ்சமாவது இரக்கம் காட்டுவாங்க.

அது ஹோம் மேக்கர்களுக்கு சான்சே இல்லை.//

Objection your honour. எங்க வீட்டுக்கு அம்மம்மா வரும் போது என் பொண்ணுக்கு ஓய்வே இல்லையான்னு புறுபுறுப்பாங்க. நீ போய் ரெஸ்ட் எடுடா செல்லம்ன்னு அம்மாகிட்ட‌ சொல்லிட்டு அவங்களோ சமையல் வேலை பாப்பாங்க. இதில இருந்து என்ன தெரியுறதுன்னா, அம்மாமாருக்கு பிள்ளைங்கள தாங்கு தாங்குங்குன்னு தாங்கற குணம். நாமலும் ஹைய்யானு ஏறி உங்காந்தடறோம். தப்பு யார் மேல? ஹி ஹி.

ஹுஸைனம்மா said...

//உடம்பு சரியில்லாட்டியும் லீவு
லெட்டர் கொடுத்தோ, கொடுக்காமையோ பங்க் அடிச்சிட்டு//

நிறைய பெண்கள் உடல்நலம் பேணுவதென்பதே இல்லாமல், நோய் முற்றிய பின்பு மருத்துவரை நாடுவதும் இதனால்தான்!!

அப்படிச் சொல்றவங்களை நான் சும்மா விடுறதில்லை!! :-)))

அன்புடன் அருணா said...

உங்களவரை லீவு போட்டு ஒரு வாரம் உங்க home maker வேலைக்கு proxy பார்க்கச் சொல்லுங்க!

pudugaithendral said...

அனாமிகா

எல்லார் வீட்டுலயும் அம்மா தாங்கு தாங்குன்னு தாங்கிகிட்டு இருக்க மாட்டாங்க. அதுக்கு நான் ஒரு உதாரணம். இந்த 15 வருஷத்துல நான் மொத்தமா அம்மா வீட்டுக்கு போனது 6 மாசம் கூட இருக்காது. எங்க அம்மா வேலைக்கு போய்கிட்டு இருந்து அப்புறம் வீ ஆர் எஸ் வாங்கினதக்கப்புறம் நான் இலங்கை போய்விட அம்மா என் வீட்டுக்கு அடிக்கடி வருவது என்பதும் நோ சான்ஸ்.

இப்ப வந்தாங்கன்னா கூட வயசாயிடிச்சே நம்ம வீட்டுக்கு வந்து ஓய்வு எடுக்கட்டும்னு இருந்துடுவேன்.

அதனால் onjection overruled

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

நான் உடம்பு சரியில்லைன்னா அனவுன்ஸ் செஞ்சுட்டு ரெஸ்ட் எடுத்திடுவேன். நான் நல்லா இருந்தாத்தானே மத்தவங்களை கவனிக்க முடியும். ஆனா அந்த நேரத்துல கூட தவிர்க்க முடியாத வேலை வந்தா வேற வழியில்லை செஞ்சு தான் ஆகணும்

pudugaithendral said...

உங்களவரை லீவு போட்டு ஒரு வாரம் உங்க home maker வேலைக்கு proxy பார்க்கச் சொல்லுங்க!//

ஹைய்யோ ஹையோ, எனக்கு அழுவதா சிரிப்பதான்னே தெரியலை. ஒரு நாள் லீவு போட்டாலே பிரச்சனைஆகிடும் பெரிய போஸ்ட்ல இருக்கும்போது ஒரு வாரம் லீவு. நல்ல ஜோக் போங்க.

வருகைக்கு நன்றி

Thamira said...

ஓகே. நா ஒண்ணும் சொல்லலை, அமைதியாப் போறேன். ஹிஹி..

மாதேவி said...

சிரமமானதுதான். ஆனால் உடல்நலத்தையும் பார்த்துக்கணும்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்

pudugaithendral said...

ஆமாம் மாதேவி,

வருகைக்கு நன்றி

அன்புடன் நான் said...

இல்லத்தரசியா இருக்கிறதுல இம்பூட்டு கடினமா?
வீட்டுக்குள்ளே சுத்துகிற உங்களுக்கு இம்பூட்டு வலி இருந்தா.... வீட்டை தவிர எல்லா இடத்தையும் சுத்துகிற எங்களுக்கு எவ்வளவு வலி இருக்கும்?
நாங்க யாருகிட்டையாவது சொல்லுறோமா?

அன்புடன் நான் said...

உங்க வலி குணமாகி மகிழ்வுடன் இருக்க வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வீட்டை தவிர எல்லா இடத்தையும் சுத்துகிற எங்களுக்கு எவ்வளவு வலி இருக்கும்?
நாங்க யாருகிட்டையாவது சொல்லுறோமா?//

நல்லா ஜோக் அடிக்கறீங்க. ஆபிஸுக்கு லீவு போட்டுட்டு ஒரு நாள் முழுக்க வீட்டுவேலை ஒரு ஹோம் மேக்கரைப்போல செஞ்சு பாருங்க. அதை பதிவா போடுங்க. அப்புறம் தெரியும். வருகைக்கு மிக்க நன்றிங்க

Radhakrishnan said...

அவரவர் கஷ்டம் அவரவருக்கு. விரைவில் வலி நிவாரணம் அடைய வேண்டுகிறேன்.