Friday, July 02, 2010

கோவிந்தனின் நகைகள் கோவிந்தா!!!

திருப்பதி வெங்கடாஜலபதி பத்தி நிறைய்ய மகிமைகள்
சொல்வாங்க. நேர்ந்துகிட்டதை கொடுக்காட்டிப்போனா
வட்டியும் முதலுமா வாங்கிடுவான்னு. ஆனா இப்ப
அந்த கோவிந்தனின் நகைகளே கோவிந்தா போட்டுட்டாங்க.
பாவம் அந்த பரந்தாமன்.

கோவிந்தனுக்கு பக்தர்கள் காணிக்கையாக முடி, காசு
மட்டும் கொடுப்பதில்லை. தங்கம், வைரமாகவும்
கொடுப்பது வழக்கம். அப்படி எத்தனையோ நகைகள்
அந்த பரந்தாமனின் திருமலை தேவஸ்தானத்திடம் இருக்கு.
ஆனா அதிமுக்கியமான சில நகைகள் மாயமாகிருக்கு.
அதுவும் கொடுத்ததற்கு சாட்சிகள் பலமா இருக்காம்.



கொடுத்தது யாரோ அல்ல ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணதேவராய மஹாராஜா.
தனது ஆட்சி காலத்தில் 7 தடவை ஆண்டவனை தரிசிக்க
தனது பட்டத்து ராணியுடன் போயிருக்கிறார். ஒவ்வொரு முறையும்
அவர் அந்த கோவிந்தனுக்கு நகைகளை சமர்பித்து ஆனந்தமடைந்திருக்கிறார்.

அந்த நகைகளைத்தான் இப்ப காணோமாம். கிருஷ்ண தேவராயரின்
500ஆவது பிறந்தநாளை ஒட்டி பிரம்மாண்டமாக நிகழ்ச்சி ஏற்பாடு
செய்ய ஆந்திர அரசு ஏற்பாடு செய்ததுகொண்டிருக்கிறது. ஜனாதிபதி
பிரதிபா பாட்டில் அவர்களையும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக்க
திட்டம். அந்த சமயத்தில் தான் ராயர் அவர்கள் இறைவனுக்கு
சமர்ப்பித்த நகைகளை படம் பிடிச்சு போட்டு அதை இறைவனுக்கு
ஒரு நாள் சார்த்தி அழகு பாக்கலாம்னு திட்டம் போட்டு திருப்பதி
தேவஸ்தானத்தை கேட்டிருக்காங்க. ஆனா அங்கே ,”அப்படி ஏதும்
நகைகள் இருப்பதா தெரியலைன்னு”!! சொல்றாங்க.


திருவாபரணங்களை பாதுகாக்கும் துறையில் அரசு காலத்தில்
எந்த ஆபரணங்களையும் தாங்கள் யார் கொடுத்ததுன்னு
குறிப்பில் வெச்சுக்கலை, அதனால ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயர்
கொடுத்தது எந்த நகைகள்னு தெரியாது!!!” அப்படின்னு
சொல்லிட்டாங்க. அரசன் கொடுத்தாலும் சாதாரண மானுடன்
கொடுத்தாலும் அப்ப அதை சமமாத்தான் பாத்தாங்க. அப்படின்னு
சொல்லும் தேவஸ்தானம் 1953ல் ஆனந்தநிலையத்தில் தங்ககூரை
வேய ராயரின் நகைகளை கருக்கிட்டோம்னு சொல்றாங்க.


ஆனா மீடியாவோ நகைகளை கருக்கவில்லை, அதை
திருடிட்டாங்க, மறைச்சிட்டாங்கன்னு
சொல்றாங்க.1521ல் கடைசியாக கிருஷ்ணதேவராயர் கோவிலுக்கு
வந்தபோது கொடுத்த நகைகள் 1523ஆம் வருஷமே காணாம
போயிடுச்சாம்!!! இதற்கு சரித்திர ஆதாரம் இருப்பதா தேவஸ்தானத்
தலைவர் சொல்லியிருக்கிறார்.


திருப்பதி தேவஸ்தானம் சமீப காலமா
ரொம்பவே சர்ச்சைக்குள்ளாகுது. அங்கே வழங்கப்படும்
சேவா டிக்கெட்டுகளில் மோசடி, வீ.வீ.ஐ.பீக்களுக்கு
வழங்கப்படும் ஷ்பெஷல் தர்ஷன் என ஏகப்பட்ட விவகாரம்.
திருமலை அர்ச்சகர்கள் ஹைதைக்கு வந்து முதலைமைச்சர்
ரோசைய்யா அவர்களிடம் மனு கொடுக்கும் அளவுக்கு இரண்டு
தரப்பினருக்கும் இடையே சர்ச்சைகள். இப்ப இது வேற!!!!

தன் நகைகள் இருக்கும் இடத்தை அந்த கோவிந்தன் தான்
தெரியப்படுத்தணும். தான் வேண்டிகிட்டதை கொடுக்க மறந்தவனிடம்
வட்டியும் முதலுமாக வாங்கும் கலியுக தெய்வம் நகைகளை
களவாடியிருந்தா அவர்களுக்கும் தண்டனை வட்டியும்
முதலுமா கொடுக்கட்டும்.



12 comments:

துளசி கோபால் said...

நானும் செய்தியை நேற்று தெலுகு சானல் ஒன்றில் பார்த்தேன்.

பெருமாளே....உனக்குமான்னு சொல்லத்தான் முடிஞ்சது:(

Pandian R said...

நல்லா சத்தம் போட்டு சொல்லுங்க. சொன்னா நம்ப மேல பாயறாங்க.

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

பெருமாளே....உனக்குமான்னு சொல்லத்தான் முடிஞ்சது//

அவனுக்காக நாம பிரார்த்தனை செஞ்சுக்க வேண்டியதுதான்

pudugaithendral said...

வாங்க ஃபண்டு,

இங்க டீவில காலை, மாலை, இரவுன்னு இதைப்பத்திதான் ஷ்பெஷல் நிகழ்ச்சிகள் நடக்குது. பாக்க பாக்க மனசு வேதனையா இருக்கு.

வருகைக்கு நன்றி

AKM said...

இந்து மதம் போலத்தான்.. திருமலையும்.. பல கல்லடிகள் அபவாதங்கள் பரப்பப்பட்டாலும் அதன் பெருமைக்கு எந்த பங்கமும் வராது.. சில காலம் முன் அந்த புனித மலையில் மற்றொரு மதத்தின் கோவில் கட்டவும், அது சம்பந்மாமாய் பிரச்சார வாசகங்கள் எழுதியும் மலையின் மகிமையை குலைக்க நினைத்தவர் என்ன ஆனார்.. எப்படி அந்த விபத்து நேர்ந்தது என இன்னும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.. (ஆனால் அவரை இயக்கியவர் இருக்கிறார்..)ஆனால் ஒன்று ப்ரெண்ட்.. அந்த மதத்தின் தேவனே இது போன்ற செயல்களை விரும்புவதில்லை.. ஆனால் சில ஜென்மங்கள் இந்த சதியை செய்து கொண்டுதான் இருக்கும்.. ஆனால் அதை தடுக்க, வெளிப்படுத்த நேரம் வரும்போது எல்லாம் வல்ல வேங்கடவன் செயல்படுவான்..ஓம் நமோ நாராயனா..

சாந்தி மாரியப்பன் said...

கொஞ்சம் ஏமாந்தா பெருமாளுக்கேவா... :-((

pudugaithendral said...

வாங்க ஏகேஎம்,

நீங்க சொல்வதும் சரிதான். லட்டுக்கள் கூட தயாரிக்கும் காண்ட்ராக்டையும் கூட மத்தவங்களுக்கு கொடுத்திட்டதா கேள்வி!!

//தடுக்க, வெளிப்படுத்த நேரம் வரும்போது எல்லாம் வல்ல வேங்கடவன் செயல்படுவான்..ஓம் நமோ நாராயனா..//

அதனாலதான் இப்ப இந்த குட்டு வெளிப்பட்டிருக்குன்னு நான் நினைக்கிறேன். பாப்போம் வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் அமைதிச்சாரல் :(

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அடகொடுமையே.... கோவிந்தவுக்கே கோவிந்தாவா... கஷ்டம் தான் போங்க

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல் ஜயா டிவியில் பார்க்கும்போது அங்க கூட இப்படி நடக்குமா என்று வியந்தேன். மற்ற ஊழல்கள் பற்றி நன்றாகவே தெரியும். இது புதிது.அதுதான் அரசு அன்று தெஇய்வம் நின்று என்று சொல்லி இருக்கிறார்களே.

pudugaithendral said...

ஆமாம் புவனா
:(

pudugaithendral said...

இந்த உலகத்துல எது வேணா நடக்கும் வல்லிம்மா. என்ன செய்ய. கேஸு கோர்ட்டுக்கு போயிருக்கு பாப்போம்.