Friday, July 02, 2010

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களும் சில ஞாபகங்களும்

ஹுசைனம்மா ஊருக்கு போறதா சொல்லி மடல் அனுப்பியிருந்தாங்க.
நல்லா எஞ்சாய் செஞ்சுட்டு வாங்க ஹுசைனம்மா!!

அவங்க மடல் பாத்ததுக்கப்புறம்தான் எனக்கும் கொசுவத்தி
சுத்தினிச்சு. இலங்கையில் இருந்தப்போ ஜூலை, ஆகஸ்ட்
மாதங்களுக்காக காத்திருப்போம். அப்போதான் அங்கே
வருட கடைசி பரிட்சை முடிந்து பிள்ளைகளுக்கு
லீவு. அப்பத்தான் இந்தியா வருவோம். வருடத்துக்கு
ஒரு முறை மட்டும்தான் வருவோம் என்பதால
நல்லா ப்ளான் செஞ்சு எங்கே போகவேண்டும், யார் யாரை எல்லாம்
பாக்க வேண்டும்னு திட்டம் போட்டு வருவோம்.

15 நாள்தான். அயித்தானோட வந்து அவரோடவே ஊருக்கு
திரும்பிடுவோம். அவருக்கு சோத்துக்கும் கஷ்டம் வரப்டாதில்லை.
அவருக்கும் 15 நாள் லீவு. சோ நோ போன் கால்ஸ்!, நோ லேப்டாப்!
ஜாலியோ ஜாலின்னு இருக்கும். அப்பா, அம்மா எங்க வருகைக்கு
காத்திருப்பது போல எங்களுக்காக காத்திருக்கும் இன்னொரு ஜீவன்
மறைந்த சுப்பிரமணியன் மாமா(அயித்தானோட அண்ணன்)

அநேகமா திருச்சிக்குத்தான் வந்து இறங்குவோம். அம்மாவீட்டுக்கு
ஒரு மணிநேரத்துல போய் சேர்ந்திடலாமே! அப்புறம் சென்னையிலிருந்து
கிளம்ப வசதியாக இருக்கும்னுதான். அப்பா அம்மா கார் எடுத்துகிட்டு
திருச்சி ஏர்போர்டுக்கு வந்து காத்திருப்பாங்க. பசங்க பாஞ்சு ஓடி
கட்டிக்குவாங்க. ”தாத்தா ஏன் அம்பாசிடர் கொண்டுவந்தீங்கன்னு?”
செல்லமா சண்டை போட்டுகிட்டே ஆஷிஷ் வருவான்.

கிளம்புமுன்னாடியே அம்மம்மாவுக்கு ஆர்டர் போட்டிருப்பாங்க
பசங்க. இட்லி மிளகாப்பொடி, ரவா லட்டு, தீபாவளி லேகியம்
எல்லாம் செஞ்சு வெக்கச் சொல்லி. அதை விடவும் ஆஷிஷுக்கு
புதுகை போறோம்னாலே குமார் அண்ணா கடை தோசை!

எங்க வடக்கு 4 வீட்டுக்கு பக்கத்துல டீ கடை வெச்சிருந்தாரு
குமார் அண்ணா. இப்ப அதோட டிபன் கடையும் நடக்குது.
உலகத்துல எங்கயும் அந்தக் கடைக்கு ஈடா ரோஸ்டட் தோசை
கிடைக்காது என்பது ஆஷிஷோட ஒபீனியன். இப்பவும் புதுகை
போனா கடைக்கு போயிடுவான். “வா மாப்பிள்ளைன்னு” இவனுக்காக
ரோஸ்ட் போட்டு கொடுப்பாரு.

இந்தியா வரும்போது பிள்ளைகளுக்கு நம்ம தேசத்தை சுத்தி
காட்டுவதுன்னு கட்டாயமா வெச்சிருந்தோம். நம்ம தேசம்
அவர்களுக்கு அந்நியப்பட்டுடக்கூடாது + நம் கலாசாரமும்
தெரிஞ்சிக்கணும்ல்..

இப்படி ஒரு ஆகஸ்ட் மாத பயணத்தின் போதுதான் அயித்தானோட
அண்ணா, அண்ணி, அக்கா, மாமா, நாங்க நாலு பேரும்
கொடைக்கானல் போனோம். ஒரு பெரிய வீடு வாடகைக்கு
எடுத்து தங்கினோம். ரொம்ப எஞ்சாய் செஞ்சோம். அதுவும்
அயித்தானோட அண்ணா, பசங்க கூட இருந்த அந்த நேரம்
ரொம்ப பிடிச்சிருந்ததா சொன்னாரு. “வருஷத்துக்கு ஒருவாட்டி
நம்ம மொத்த குடும்பமும் இந்த மாதிரி வெளில வரணும்,
சேர்ந்து போகணும்டா”அப்படின்னு தம்பிகிட்ட சொன்னாரு.


இங்க வந்த பிறகு நாங்க சேர்ந்து தில்லி போகத்திட்டம்
போட்டிருந்தோம். ஆண்டவனோட திட்டம் வேறயா இருந்து
மாமாவை தன் கிட்ட கூட்டிகிட்டாரு. :(  (ஸ்டைலா கூலிங்கிளாஸ்
எல்லாம் போட்டுகிட்டு நிப்பதுதான் மாமா. ஆஷிஷை கட்டிகிட்டு
நிக்கிறாரு)

மாமாகூட நெல்லூருக்கு போனது அங்கே பக்கத்தில்
இருக்கும் இடங்களை சுத்தி பாத்ததுன்னு ஒரே கொண்டாட்டமா
இருக்கும். அம்மா அப்பா கிட்ட இரண்டு நாள் இருந்துட்டு
மாமா,அத்தை கூட 3 நாள் இருப்போம். எங்களை ஃப்ளைட்
ஏத்திவிட முடிஞ்சா மாமா ஒரு எட்டு சென்னை வராம
இருந்ததில்லை.

இப்பவும் இந்த நினைவுகளை அசைபோடாம இருக்க
முடியறதில்லை. ஜூலை 8 மாமாவுக்கு பிறந்தநாள்.
பசுமை நினைவுகள் எப்போதும் இனிக்கும். அதை
நினைச்சு பாப்பதே ஒரு சுகானுபவம்.




10 comments:

மங்களூர் சிவா said...

நல்ல கொசுவத்தி.

ஜூலை ஆகஸ்ட்ல மங்களூர்க்கு வாங்களேன்.

pudugaithendral said...

வாங்க சிவா,

இப்பலீவு இல்லையே! லீவுல வர்றேன்

சுரேகா.. said...

அனுபவப்பகிர்தலில்..உங்களை விஞ்ச ஆளே கிடையாது!

வணக்கம் தலைவி! வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

நல்ல கொசுவத்தி:)

pudugaithendral said...

thanks sureka

pudugaithendral said...

thanks vidya

ஹுஸைனம்மா said...

Hi, Thanks for remembering me. Enjoying the holidays with almost no access to net!!

My regards to you!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் பதிவுங்க... ரெண்டரை வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு போற நாளை எண்ணிகிட்டு இருக்கேன் நான்... தீவாளிக்கு போலாம்னு...

pudugaithendral said...

போனில் அழைத்து பேசியது சந்தோஷமா இருந்தது ஹுசைனம்மா.
நல்லா எஞ்சாய் செய்ங்க.

pudugaithendral said...

ஆஹா அருமை புவனா