தொடர் பதிவு எழுத விதூஷ் கூப்பிட்டிருக்காங்க.
இதோ என் பதில்கள்:
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
புதுகைத் தென்றல்
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
என் நிஜப் பெயர் .கலா ஸ்ரீராம். பிறந்த ஊர் புதுக்கோட்டை.
புதுகையில் பெயர் சொன்னால் புரிந்து கொள்ளக்கூடிய குடும்பத்திலிருந்து
வந்தவள். அதை என் அடையாளமாக்கிக்கொள்ள ஊரின் பெயரை
பேருல சேத்தேன். ”தென்றல்” சில சமயம் புயலாகவும் வீசும். :)
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
இம்சை அரசியோட வலைப்பூ விகடன் வரவேற்பரையில்
வந்ததைப் படிச்சு வேடிக்கை பாக்க வந்தேன், பினாத்தல் சுரேஷ்
வைஃபாலஜி எழுதி கலாய்ச்சுகிட்டு இருந்தாரு. அதைப்பாத்து
பொங்கி எழுந்து ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா எழுத
ஆரம்பிச்சேன்.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஹஸ்பண்டாலஜி வகுப்பில் நடந்த ஹாட் ஹாட் பின்னூட்டங்கள்
மூலம் என் எழுத்து எல்லோருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்புன்னு
நினைக்கிறேன். அதைத்தவிர பிரபலமாகன்னு ஏதும் பெருசா செஞ்சிடல.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
PRE MENSTURAL SYNDROME போன்ற சில பெண்களுக்கே உண்டான
பிரச்சனைகள் வெளியே பலருக்கும் தெரியாது. (தனக்கு இருப்பது
பெண்களுக்கே தெரியாது) அதை ஆண்களும் உணரணும்னு என்னோட
நிலையை எழுதி அதைப்பத்தி புரிஞ்சிக்க வெச்சதை பெருமையா
நினைக்கிறேன். என்னுடைய சில அனுபவங்கள் பலருக்கு உதவும்னு
அதை பகிர்ந்ததும் உண்டு. அதனால நல்ல விளைவுகள்தான்
இருந்திருக்கு.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிவு எழுதுவதை பொழுது போக்கா எப்பவும் நினைக்கலை.
எனது இந்த வலைப்பூவிலும் சரி பேரண்ட்ஸ் கிளப் வலைப்பூவிலும் சரி
ஒரு ஆசிரியையாக பெற்றோர்களிடமிருந்து என்ன எதிர் பார்ப்பார்களோ
அதை, ஒரு தாயாக என் அனுபவப்பகிர்வை, எனது ஆசிரியைப்
பயிற்சி அனுபவங்களை, பயண அனுபவங்களை பலருக்கு
உபயோகப்படும் என்பதால் பகிர்கிறேன். நட்பு, அன்பு
உறவுகளும் இப்போ என் பேங்க் பேலன்சில் நிறைய்ய்ய்ய்ய்ய இருக்கு.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
எனக்காக என் புதுகைத் தென்றல்
சமூகத்திற்காக பேரண்ட்ஸ் கிளப்
யேசுதாஸ் அவர்களின் பாடல்களின் தொகுப்பு
வலைப்பூவான கானக்கந்தர்வன் - இவை நான்
ஆரம்பித்தது.
அம்மாக்களின் வலைப்பூக்கள், சாப்பிடவாங்க,
தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி, இவற்றிலும்
அவ்வப்போது எழுதுவேன்.
தெலுங்கு பாடல்களுக்கு மதுர கீதாலு,
ஹிந்தி பாடல்களுக்கு வசய்லோக்கல்.
அம்புட்டுதாங்க.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
கோபம் எல்லாம் எப்பவும் இருந்தது இல்லை. எல்லார் மேலயும்
பொறாமை மட்டும் உண்டு. ஒவ்வொருவருவரும் தனது
பார்வையில் கோர்வையா எழுதும் விதம், தனக்கென ஒரு
பாணி அமைச்சு எழுதுவது ரொம்ப பிடிக்கும். நாம எழுத
நினைச்சதை அதைவிட அழகா எழுதிட்டாங்களேன்னு
பொறாமை பட்டிருக்கேன். அனைவரின் ரசிகை நான்.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
மை ஃப்ரெண்ட் அனு, மங்களூர் சிவா, ரசிகன், இப்படி
நிறைய்ய பேர் என்னை ஊக்குவிச்சிருக்காங்க. இவர்களோட
ஊக்குவித்தல்கள்தான் என்னை எழுத வெச்சது. ஆனா
ரொம்ப நன்றி சொல்ல வேண்டியது பினாத்தல் சுரேஷ்
அண்ணாவுக்குத்தான். அவருக்கு எதிரா வகுப்பு ஆரம்பிக்க
போய் இப்ப 3ஆவது வருஷம் முடியப்போகுது + 650 போஸ்டும்
போட்டாச்சு. (ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா நிறைய்ய
பேர்கிட்ட திட்டு வாங்கிகட்டிகிட்டிருக்கேன். ரங்கமணிகளுக்கு
எதிரா பதிவு போடுவதாலும் நல்ல பேரெல்லாம் இல்லை) :)
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
தம்பி அப்துல்லா தன் பதிவுல சொல்லியிருப்பது போல
நம்ம வலைப்பூவை படிக்க வந்ததே பெருசு. இதுல
என்னைப்பத்தி இன்னும் வேற என்னத்த சொல்ல.
மேலே சொல்லியிருக்கும் பதில்களிலேயே என்னியப்பத்தி
எல்லோருக்கும் நல்லா தெரிஞ்சிருக்கும். :))
ஒரு குழந்தையின் வளமான எதிர்காலம் பெற்றோர்
இருவரின் கைகள்களில்தான் என்பதை உணர்ந்து
அதை நடைமுறைப்படுத்தி என் குழந்தைகளுக்கு
இனிதான குழந்தைப்பருவத்தை தர முயற்சி செய்து
கொண்டிருக்கும் ஒரு தாய்.
***************************************************************
சரி சிலரை மாட்டி விடணுமாமே! செஞ்சிடுவோம்.
பரிசல்காரன்
அப்பாவித் தங்கமணி
கயல்விழி முத்துலெட்சுமி
அமைதிச்சாரல்
சர்வேசன்
28 comments:
ஹஸ்பண்டாலஜில நிறைய தெரிஞ்சுக்கிட்டோம் :)
வாங்க சின்ன அம்மிணி,
நீங்களே ஸ்மைலியையும் போட்டுட்டீங்களா!! நானும் இரண்டு ஸ்மைலி போட்டுக்கறேன். :))
வருகைக்கு நன்றி
ஆஹா.. சூப்பரோ சூப்பர்...
இது மாதிரி பின்னூட்டம் போடும் என்னை போன்ற வலைப்பதிவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க??
// ”தென்றல்” சில சமயம் புயலாகவும் வீசும். :) //
ஒரு தென்றல் புயலாகிப் போனதேன்னு பாட்டு போடுவீங்களா?
// அதைப்பாத்து
பொங்கி எழுந்து ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா எழுத
ஆரம்பிச்சேன். //
எப்ப டீன் ஆகப் போகிறீர்கள்?
// அதைத்தவிர பிரபலமாகன்னு ஏதும் பெருசா செஞ்சிடல. //
இதுவே சூப்பர்... இதுக்கு மேல வேற என்ன செய்ய வேண்டும்??
// நட்பு, அன்பு
உறவுகளும் இப்போ என் பேங்க் பேலன்சில் நிறைய்ய்ய்ய்ய்ய இருக்கு.//
உண்மையான வார்த்தைகள்.
இவ்ளோ fastஆ... சூப்பர். :)
ஹஸ்பண்டாலஜிதான் highlight
:)
// தம்பி அப்துல்லா தன் பதிவுல சொல்லியிருப்பது போல
நம்ம வலைப்பூவை படிக்க வந்ததே பெருசு. //
என்னே ஒரு தன்னடக்கம்... :-)
நானும் மூணு ஸ்மைலி போட்டுக்குறேன் :)))
ஆஹா.. சூப்பரோ சூப்பர்...
இது மாதிரி பின்னூட்டம் போடும் என்னை போன்ற வலைப்பதிவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க??//
வாங்க இராகவன்,
பதிவை படிக்க நேரமில்லை போல இருக்குன்னு நினைப்பேன்.
இராகவனோட பின்னூட்டங்களுக்கு மட்டுமே தனிப்பதிவு போடணும் போல இருக்கே :)
ரொம்ப நன்றி இராகவன்
ஹஸ்பண்டாலஜிதான் highlight//
நன்றி வித்யா
வருகைக்கு நன்றி அப்துல்லா
நீங்களுமா கூப்புட்டுட்டீங்க..
எல்லாமே ஏற்கனவே சொல்லி சொல்லி எல்லாருக்கும் போரடிச்ச பதிலாச்சேப்பா அதான் சொல்றதுக்கு யோசிச்சிக்கிட்டிருக்கேன்..
வாங்க முத்துலெட்சுமி,
ஆற்றுல புதுவெள்ளம் வர்றதுபோல வலையுலகத்துக்கு புதுமுகங்கள் வந்துகிட்டு இருக்காங்கள்ல.அவங்களுக்கு நம்மை அறிமுகப்படுத்திகிட்டா மாதிரி இருக்குமே!!
வருகைக்கு நன்றி
சூப்பர்க்கா.
சூப்பர்!!!
nice :))))
கடைசி பாரா நச்!
நல்லாருங்க.
முகமூடிய கழட்டாம இருக்க முடியாது போலருக்கே :)
:-))) இது பதிவை படிச்சப்புறம்தான் போட்டேன்.
தொடர்பதிவை சீக்கிரமே தொடருகிறேன்..
ரைட்டுண்ணேன் ;)))
அனைவருக்கும் நன்றி
அருமை, நீங்கள் குறிப்பிட்ட பல விசயங்கள் தேடி படிக்க வேண்டும்.
பதிவை தொடர்ந்திட்டேன்.
http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_28.html
பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..
http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html
done. :)
http://surveysan.blogspot.com/2010/08/q.html
Post a Comment