நம் குடும்பத்தில் அனைவருக்கும் ஒரு ரோல் மாடல் நீங்கள்.
தாய் இறந்த பிறகு தங்கையை 3 வயதிலிருந்து வளர்த்தெடுத்த
தாயுமானவன். (என் ஆருயிர் அம்மம்மாதான் அந்தத் தங்கை)
என் உலகில் ஆண்கள் என்ற என் பதிவில் உங்களைப்பற்றி
கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும் என்று பதிவு போட்டிருந்தேன்.
அவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர்.
பரோபகாரி தங்களால் வைத்தியச் செலவு, திருமணச்செலவு,
கல்விச்செலவு பெற்றவர்கள் எத்தனையோ பேர்.
தானாக படித்து முன்னேறி மும்பை வருமான வரித்துறை
அதிகாரியாக வேலை பார்த்தது இன்று வரை எங்களுக்கு
பிரமிப்பு!!
காஞ்சி காமகோடி வேத ரக்ஷண ட்ரஸ்டில் பாம்பே சுப்பராமன்
என்று பெயர் சொன்னால் போதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்!!
அந்த அளவுக்கு பணி ஓய்வுக்கு பின்னால் தன்னை
ட்ரஸ்டுடன் இணைத்துக்கொண்டு இலவசமாக சேவை செய்து
ஊர் ஊராக அலைந்து திரிந்த உங்கள் எறும்பு போன்ற சுறு சுறுப்பு!
இன்று காலை வந்த அந்தச் செய்தி மிகுந்த துயரத்தை தந்தது!
88 வயதில் இறைவனடி சேர்ந்து விட்டீர்கள். 15 நாள் முன்பு
வரை 88 வயது இளைஞனாக சுற்றி சுற்றி வந்த உங்கள் கால்கள்
இப்போதுதான் ஓய்வை பார்த்திருக்கிறது!
வயதாகிவிட்டது என்று சொன்னாலும் மனது கலங்குகிறது தாத்தா.
சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்
தங்கள் மனப்பான்மை எங்கள் அனைவருக்கும் வரவேண்டும்.
எப்போதும் நீங்கள் எங்கள் ரோல் மாடல்தான்.
தாங்கள் பெரிதும் மதித்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர
சுவாமிகள் காலடிகளில் ஐக்கியமாகிவிட்டீர்கள். தங்களது
ஆன்மா சாந்தி அடைய எங்கள் பிரார்த்தனைகள்.
கண்ணீர் நெஞ்சங்களுடன் :((((
உங்கள் கலா, ஸ்ரீராம்,
ஆஷிஷ் அம்ருதா.
8 comments:
என்னுடைய அஞ்சலிகளும்..
நீங்கள் திருமணத்தின்போது “வரதட்சணை அளிக்கமாட்டேன்,பட்டுப்புடவை கட்ட மாட்டேன்” என்ற கொள்கையைக் கற்றுத்தந்த தாத்தாதானே??
ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
எனது அஞ்சலிகளும் தென்றல் அவருக்கு..
ஆழ்ந்த இரங்கல்கள்.
தாத்தாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தென்றல். அதுவும் உத்தம மனிதர்களை இயற்கைக்குக் கொடுப்பது வயது ஆகிவிட்டது என்றாலும் துயரமே. அன்னாருக்கு என் அஞ்சலிகள். அவர் கற்றுத்தந்த நன்மைகள் நிலைக்கும்.
அமைதிச்சாரல், வித்யா, அப்துல்லா, தேனம்மை,அருணா, வல்லிம்மா நன்றி.
ஆமாம் அப்துல்லா அதே தாத்தாதான். அம்மாவின் தாய்மாமா இவர்.
பெரியவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்... (ஆழ்ந்த இரங்கல்கள் அக்கா)
Post a Comment