Tuesday, July 27, 2010

இயற்கையின் சுவையிலே!!!!


மாமா தலைவலிக்கு மருந்து கொடுப்பதைப்பத்தி
பசங்களுக்கு சொல்லி வெச்சிருந்தேன். அதனால எப்ப சாப்பிட்டாலும்
தாத்தாவுக்கு ஒரு மெசெஜாவது அனுப்பாட்டி பசங்களுக்கு
தின்னது செரிக்காது. :)


போன மாசம் எங்க பெரிய மாமா ஹைதை வந்திருந்தாரு.
வீட்டுக்கு பக்கத்துலேயே AMUL ஐஸ்க்ரீம் பார்லர் வந்திருக்குன்னு
பசங்க மாமா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க. உடனே
மாமா நாங்க இப்பல்லாம் வால்ஸ், அமுல் சாப்பிடறதில்லை.
நேச்சுரல்ஸ்தான். செம டேஸ்ட். அப்படின்னு சொன்னாரு.
ஹைதையில இருக்கணுமேன்னு கேட்டு பேராண்டிகிட்ட
நெட்டுல தேடுடான்னு! சொல்ல கருமமே கண்ணாயிரமாக
ஆஷிஷும் தேடி கண்டு பிடிச்சிட்டான். பஞ்சாரா ஹில்ஸில்
இருக்கு கடை. அங்க மட்டும்தான் இருக்கு.

மாமாவை வெளியே சாப்பிட கூட்டிகிட்டு போயிட்டு வந்த
பிறகு நேச்சுரல்ஸ் போகணும்னு பசங்க தொணத்த ஆரம்பிச்சிட்டாங்க.
ஏற்கனவே இங்க புயலும், மழையுமா இருக்கு. இதுல ஐஸ்க்ரீம்
சாப்பிட்டா அம்புட்டுதான்ன்னு நோ சொன்னேன். மாமாவிடுவாரா
“என்ன நீ? உனக்கு தலைவலின்னா நான் என்ன மருந்து
கொடுப்பேன். பிள்ளைகளை ஏன் மாத்தறன்னு!!” சொல்லி
கூட்டிகிட்டு போயிட்டாரு. :))

ஆஹா!!! என்ன ஒரு ருசி. இளநீர் வழுக்கையில் ஐஸ்க்ரீம்.
சாப்பிடும்போது அங்கங்கே இளநீர் வழுக்கை வருது. செம சூப்பர்.
அந்தந்த பழத்தை ஒரிஜனலா சேத்து செஞ்சிருக்காங்க.
அன்னாசி, சப்போட்டா, பலாப்பழம்னு ஒவ்வொண்ணும் செம
ருசி. சாக்லேட் ஐஸ்க்ரீம் கூட வித்தியாசமான சுவையில்
நல்லா இருக்கு. டேஸ்டுக்கு கொஞ்சம் வாங்கி ருசி பார்த்து
எது பிடிச்சிருக்கோ அதை வாங்கிக்கலாம். கோன்/ கப்ல
கொடுப்பாங்க. குறிப்பிட்ட தொலை தூரத்துக்கு ஹோம்
டெலிவரியும் உண்டு.

மும்பையில் பிரசித்தமான ஐஸ்க்ரீம் கடை இந்த நேச்சுரல்ஸ்.
இணைய தள முகவரி இங்கே:

மும்பை தவிர ஜெய்பூர், அஹமதாபாத், ஷிரடி,நாசிக்,
ஹைதராபாத், புனே, கோல்ஹாபூர்,  கோவா, பெங்களூரு
ஆகிய ஊர்களில் கடை வெச்சிருக்காங்க.  ஒவ்வொருவரும்
கண்டிப்பா டேஸ்ட் செஞ்சு பார்க்க வேண்டிய ஐஸ்க்ரீம்
வகைகள் இவை. ப்ரஸர்வேடிவ்ஸ் இல்லாத இயற்கை
சுவை. நேச்சுரல்ஸ் ஐஸ்க்ரீம்னு பேரு வெச்சிருப்பது
ரொம்ப சரி.

எதிர் பார்த்தது போல மூக்கடைப்பு, ஜலதோஷம்
ஏதும் வரலை என்பது கூடுதல் சந்தோஷம்.

மாமாவின் கைங்கர்யத்தால பசங்க இப்ப ஐஸ்க்ரீம்னா
நேச்சுரல்ஸ்தான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

18 comments:

Thenral said...

Me the first!Hmmm...Ice cream pathi solli naakil echil ooravaithuviteergal!

சிநேகிதி said...

சென்னைக்கு எப்ப வரும்....? வரும் பொழுது நாங்களும் ..வாங்கி சாப்பிடுவோமுல...

மங்களூர் சிவா said...

/
டேஸ்டுக்கு கொஞ்சம் வாங்கி ருசி பார்த்து
எது பிடிச்சிருக்கோ அதை வாங்கிக்கலாம்.
/

ஹும் எங்களைப்பத்தியெல்லாம் தெரியலை அந்த கடைக்காரனுக்கு!

மங்களூர் சிவா said...

பேச்சிலரா இருக்கறப்ப நானும் என் ஃப்ரெண்ட் ரெண்டு பேர் தெனைக்கும் லஞ்ச்-க்கு ஒரு ஹோட்டல் போவோம் அன்-லிமிடட் மீல்ஸ், மூணே மாசம் கடைய காலி பண்ணிகிட்டு ஓடிப்போயிட்டான் :)))

ஐஸ்கிரீம் கடை பேர் என்ன சொன்னீங்க நேச்சுரல்ஸா மைண்ட்ல வெச்சிக்கிறேன்!!
:)

புதுகைத் தென்றல் said...

நீங்கதான் மொதோ தென்றல்,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

சென்னைக்கு கூடிய சீக்கிரத்தில் வரலாம்.
ஆனா நீங்க பெங்களூரோ, ஹைதையோ போனால் மறக்காமல் சாப்பிட்டு பாருங்க. வருகைக்கு நன்றி சிநேகிதி

புதுகைத் தென்றல் said...

ஹும் எங்களைப்பத்தியெல்லாம் தெரியலை அந்த கடைக்காரனுக்கு!//

:))

புதுகைத் தென்றல் said...

ஐஸ்கிரீம் கடை பேர் என்ன சொன்னீங்க நேச்சுரல்ஸா மைண்ட்ல வெச்சிக்கிறேன்!!//

ரைட்டு. அடுத்த பதிவர் சந்திப்பு பெங்களூரில் நேச்சுரல்ஸ் ஐஸ்க்ரீம் பார்லரில்தான்னு தெரிஞ்சு போச்சு சிவா. :) வருகைக்கு நன்றி

வித்யா said...

குட். இங்கயும் ரியல் ப்ரூட் ஐஸ்க்ரீம் கிடைக்குது. சபதத்தால இன்னும் போகல:)

LK said...

chennaila keetha ??

புதுகைத் தென்றல் said...

வொய் சபதம் வித்யா?????

புதுகைத் தென்றல் said...

வாங்க எல்கே,

சென்னைக்கு இன்னும் வரலை. சீக்கிரம் வந்திடும்.

அப்பாவி தங்கமணி said...

ஜில்லுனு ஒரு போஸ்ட் போட்டுடீங்க... சூப்பர்

அமைதிச்சாரல் said...

inorbit க்கு ஒரு நடை போயிட்டு வரணும். மழைபெஞ்சாத்தான் எம்பொண்ணு கூடுதலா ஐஸ்க்ரீம் சாப்பிடுவா.. உங்க பதிவை காமிச்சா அம்புட்டுதான்.அப்புறம் அவளுக்கும் தலைவலி வந்தா என்னாகிறது :-))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

அதானே பார்த்தேன். நல்ல விஷயம்லாம் சென்னைன்னா காத தூரம் ஓடிருவானுங்களே.!

அப்புறம் அந்த ஐஸ்கிரீமை இந்தளவுக்கு விளக்கியிருக்கணுமா? பாருங்க, ஸ்டொமக் பர்னிங்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி புவனா

புதுகைத் தென்றல் said...

ஸ்டொமக் பர்னிங்.//

சந்தோஷமா இருக்கு ஃப்ரெண்ட். :)))
வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆமாம் அமைதிச்சாரல்,

எங்களுக்கும் அப்படித்தான். 5 வருஷமா சைனஸ் அதிகமா இருப்பதால மழை காலத்துல, குளிர் காலத்துல ஐஸ்க்ரீம் சாப்பிடறதையே விட்டுட்டேன்.

அப்புறம் அவளுக்கும் தலைவலி வந்தா என்னாகிறது //
அதுக்காக ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்தா சரியா போயிடப்போகுது. :)))