சமீபத்துலதான் இவங்களைப்பத்தி புத்தகத்துல படிச்சேன்.
ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு. இதுவும் சாத்தியமான்னுதான்
நினைச்சேன். ஆனா இன்னைக்கு அவங்க ஷோவை டீவில
பாத்ததும் நம்பமுடியாததை நம்பித்தான் ஆகணும்னு ஆகிடுச்சு.
ஃபேஷன் டிசைனிங்கில் வாழ்க்கையின் உச்சத்தை தொடணும்னு
நினைச்ச பொண்ணுக்கு வாழ்க்கை இப்போ வீல்சேரில்.
தலையும் கைகளையும் தவிர உடம்பில் எந்த பாகத்தையும்
இவங்களுக்கு உபயோகத்துல இல்லை. ஆனா டீவில இவங்க
ஷோ பாக்கும்போது அப்படி ஒரு குறைபடே இல்லாத மாதிரி
தெரியுது. தன்னம்பிக்கையோட, சிரிச்ச முகத்தோட சூப்பரா ஷோ
நடத்துறாங்க. பிரபலங்களை பேட்டிக்காணும் CLOSE ENCOUNTER
WITH SUZY எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இன்னாள் சுஜி,
முன்னாள் சுஜாதா. இந்த நிகழ்ச்சிக்காக சேர்ந்தாப்ல உட்காருவதால
தனக்கு தீவிரமான முதுகுவலி வருவதாக பேட்டியில் சொல்லியிருந்தாங்க.
சாதாரண தலைவலிக்கே முக்கி முனகுவோம். ஆனா
இந்தப் பொண்ணை பாத்தா சத்தியமா அந்த முனகலை அப்படியே
விழுங்கிட்டு எந்திரிச்சு வேலை பாக்கப்போயிடுவோம்னு தோணுது.
இந்தப்பொண்ணையும் ஒருத்தன் பணத்துக்காக ஏமாத்திட்டு
போயிருக்கான் என்பது இன்னொரு சோகமான விஷயம்.
ஆனாலும் தன் தன்னம்பிக்கையை இழக்காம உலகத்துக்கே
மெசெஜ் சொல்லும்படி வாழும் சுஜிக்கு என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
தெலுங்கில் அவரோட பேட்டி வீடியோ ஒன்றை இங்கே
தருகிறேன். பாஷை புரியாவிட்டாலும் பாருங்கள். அவரின்
தன்னம்பிக்கை, வலியை மறைத்துக்கொண்டு வாழும்
மனோபாவம் புரியும்.
இவருடன் பேட்டி முடிந்த பின்னர்தான் இவருடைய உண்மை
புரிந்து பாலகிருஷ்ணா, பிரகாஷ் ராஜ் மற்றும் நாகார்ஜுனா
அதிர்ந்தே போனார்களாம்!!!!
தன்னம்பிக்கைக்கு மறுபெயர் இனி சுஜிதான்.
8 comments:
பகிர்விற்கு நன்றி அக்கா.
வருகைக்கு நன்றி வித்யா
பகிர்வுக்கு நன்றி தென்றல்... கொஞ்சம் ஆடிப்போயிட்டேன்.
முழு வீடியோவையும் தெலுங்கு பாஷை புரிந்த அளவிற்குப் பார்த்தபோது ஒன்று எனக்குப் புரிந்தது - சுஜிக்குக் குறை என்று யாராலும் இந்த வீடியோவினைப் பார்த்து சொல்ல முடியாது என்பது. அவர்களது தன்னம்பிக்கை மெச்சத்தக்கது. பகிர்வுக்கு நன்றி.
நானும் தான் அமுதா,
வருகைக்கு நன்றி
சுஜிக்குக் குறை என்று யாராலும் இந்த வீடியோவினைப் பார்த்து சொல்ல முடியாது என்பது.//
ஆமாங்க தன்னோட வலிகளையும் மறைச்சுக்கிட்டு சிரித்த முகத்தோடு ஷோவை நடத்துவதை பார்க்கும்போது ப்ரமிப்பாவும் இருக்கு.
வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்
அந்தப் பெண்ணின் முகத்தில் எத்தனை சந்தோஷம். தன்னம்பிக்கை.
உற்சாகம் பிறக்கிறதுப்பா. நன்றி தென்றல். அருமையான பகிர்வு. கொஞ்சம் புரிந்தது.புரியாவிட்டாலும் ஓகே. அவளிடமிரிந்து புறப்படும் பாசிடிவ் என்ர்ஜி, பார்ப்பவர்களைக் கட்டாயம் சென்றடையும்.
ஆமாம் வல்லிம்மா,
பாசிடிவ் எனர்ஜி எல்லோருக்கும் கிடைக்கணும்.
வருகைக்கு நன்றி
Post a Comment