Thursday, July 29, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி - 29.7.10

இங்க வானிலை சூப்பரா இருக்கு. சில் சில்லுன்னு காத்து.
அடிச்சு கொளுத்திய வெயிலுக்கு இதமா மழை. அங்கங்கே
மக்காச்சோளம் விக்க ஆரம்பிச்சிருக்காங்க. தணல்ல சுட்ட
மக்காச்சோளம்... அதுமேல அப்படியே எலுமிச்சை உப்புதடவி
சாப்பிட்டா... சும்மா சொகமோ சுகம். :))


மக்காச்சோளம் உடம்புக்கும் நல்லது. அதனால தாரளமா
சாப்பிடலாம். வீதிக்கு நாலு தள்ளுவண்டி அதுமேல
கரி அடுப்பு ஒண்ணுன்னு வெச்சு அழகா மக்காச்சோளம்
அடுக்கி வெச்சு விக்கறாங்க. என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க
மக்காச்சோளத்துல புலாவ் செய்யறாங்க. ரெசிப்பி கேட்டு
போடுறேன்.

******************************************************

ஆந்திராவுக்கு இல்ல இல்ல திருப்பதிக்கு ஏதோ ஆகிடிச்சு
போல. சமீபகாலமா செய்திகளில் அடிபடுவது திருப்பதிதான்.
லேட்டஸ்ட் தகவல் சிறுத்தை ஒண்ணு படிவழியா
மலை ஏறிக்கிட்டு இருந்த குழந்தை ஒண்ணை அடிச்சு
தூக்கப்பாத்திருக்கு, அவங்கப்பா எப்படியோ காப்பாத்தியிருக்காரு.
இனி படி ஏறிப்போறவங்க ஜாக்கிரதையா இருக்கணும்.

”காட்டுவழி போறப்பொண்ணே கவலைப்படாதே, மம்பட்டியான்
பேருசொன்னா புலி ஒதுங்கும் பாரு!!” பாட்டு பாடச்சொல்லலாமா?

********************************************************

தற்கொலைகள அதிகமாகிட்டு வருது. அதுலயும் இளம்பருவத்தினர்
தான் ஜாஸ்தி!! கல்லூரிப் பெண்கள்/ஆண்கள் இப்படி நிறைய்ய.
திருப்பதி காலேஜுல எம் சீ ஏ படிச்சிட்டிருந்த பொண்ணு
செத்தா எப்படி இருக்கும்னு பாக்க தற்கொலை செஞ்சிருக்காளாம்!!
என்னத்த சொல்ல??? பிள்ளைங்களுக்கும் பெத்தவங்களுக்கும்
இடையே விழும் இடைவெளிதான் இதுக்கெல்லாம் காரணம்.
ஆரோக்கியமான மனசை விதைக்க மறந்திட்டாங்க.

எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற ப்யூட்டி பார்லரில் ஒரு
பொண்ணு வேலை பாத்துக்கிட்டு இருந்துச்சு. 2 வருஷமா
நல்ல பழக்கம். ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்கும். நல்லா
கல கலன்னு பேசும். சில நாளா அந்தப் பொண்ணக் காணோம்.
உடம்பு சரியில்லை போலன்னு நினைச்சேன். விசாரிச்சதுல
தற்கொலை செஞ்சுகிட்டு செத்து போயிட்டாளாம்!!! மனசுக்கு
வருத்தமா இருக்கு. காதல் தோல்வியாம். 20 வருஷம்
வளர்த்த அப்பா அம்மாவை நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்டேன்.
அந்தப் பொண்ணோட பேரு மம்தா. அவளோட ஆத்மா
சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.
*******************************************************

என்னோட ஃவேரீட் டைரக்டர் கே.விஸ்வநாத் ரொம்ப
நாளைக்கப்புறம் படம் டைரக்ட் செஞ்சிருக்காரு. எப்பவும்
”சுப” அப்படின்னு ஆரம்பிக்கற டைட்டில் வெப்பாரு.
இந்தத் தடவை “சுபப்ரதம்”. ம்யூசிகல் டிலைட்டா
வந்திருக்கும். அல்லரி நரேஷுக்கு இந்தப் படத்துலேர்ந்து
நல்ல பேரு கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க. படம்
பாக்கணும்.


பாக்க வேண்டிய லிஸ்ட்ல இன்னொரு படமும் இருக்கு,
அது காமெடியன் சுனிலை வெச்சு சூப்பர் டைரக்டர்
ராஜமொளலி எடுத்திருக்கு”மரியாதை ராமண்ணா”.
இரண்டு படமும் பாத்துட்டு விமர்சனம் எழுதறேன்.

************************************************
அந்தேரி தாத்தா மறைந்து இன்றோடு 8 நாள் ஆச்சு.
2 வாரத்துக்கு முந்தி தாத்தாகிட்ட பேசும்போது
“நான் தான் ஹைதைக்கு வரமுடியாதுன்னு” சொன்னாரு.
“அதுக்கென்ன தாத்தா பசங்களை கூட்டிகிட்டு
பாம்பேக்கு நானே வரேன்னு!” சொல்லியிருந்தேன்.
எங்க அம்மம்மா வீட்டுலதான் உடம்பு முடியாம
இருந்தாரு. அம்மம்மாகிட்ட.”கலா குழந்தைகளைக்
கூட்டிகிட்டு வர்றேன்னு சொல்ல்யிருக்கா!” அப்படின்னு
சொல்லிக்கிட்டே இருந்தாராம். ஆனா அதுக்குள்ள
எல்லாம் முடிஞ்சிருச்சு. இவ்வளவு சீக்கிரம் ஆகும்னு
நினைச்சு கூட பாக்கலை. மனசை வருத்தும் விஷயம்]
இது.


அந்தேரி தாத்தா, என் மாமாக்கள், தம்பி, ஆஷிஷ்
என நாலு தலைமுறை ஆட்களை வைத்து படம்
எடுக்கவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாம
போயிடிச்சு.

தாத்தாவின் உடல் ஒரு தேஜஸோடு இருந்ததாகவும்
கட்டியிருந்த கைகளை விடுவித்து பார்த்த பொழுது
தவம் செய்வது போலவும் இருந்ததாம். மாமா
சொல்லியிருந்தார். தாத்தாவுக்கு பக்தி அதிகம்.
அவரோட ஆசிர்வாதம் எப்போதும் இருந்தா போதும்.
**************************************************

7 comments:

Vidhya Chandrasekaran said...

கலவையான உணர்வுகளைத் தந்த பிரியாணி:) :(

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வித்யா

மங்களூர் சிவா said...

அந்தேரி தாத்தாவுக்கு அஞ்சலிகள்.

சாந்தி மாரியப்பன் said...

எங்கூர்ல இப்பல்லாம் ஸ்வீட்கார்னை சுட்டு விற்கிறாங்க. மக்காச்சோளம் சாப்ட திருப்தியே இல்லை. ஸ்வீட்கார்னை வெச்சு கப்கார்ன் வேண்ணா செய்யலாம். இது ஒட்டவேயில்லை :-))))

pudugaithendral said...

வருகைக்கு நன்றி சிவா

pudugaithendral said...

அப்ப ஒரு எட்டு ஹைதைக்கு வந்திட்டு போறது அமைதிச்சாரல்.

pudugaithendral said...

நன்றி சிநேகிதி