ரொம்ப பாவமாக இருக்கிறது. இத்தனை காலமாக காலேஜுக்கு
போய்க்கொண்டிருந்த நடிகரின் வாரிசு நடிக்க வந்து முதல்
படம் ரிலீஸாகி இருக்கும் இந்த நேரத்தில் இன்று அவர்
மாரடைப்பில் இறந்துவிட்டதாகச் செய்தி. அவரது
குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இறங்கல்கள்.
இரண்டு வாரத்துக்கு முன்பு தான் காபி வித் அனுவில்
மகனுடன் வந்து கலந்து கொண்டிருந்தார் முரளி.
மிக அருமையாக இருந்தது நிகழ்ச்சி. சக்ஸஸிற்கான
காரணம் கடினமான உழைப்பு என்று சொன்னார்.
கன்னட தேசத்திலிருந்து வந்து தமிழ்நாட்டில் தன்னை
நிலைநாட்டிக்கொண்டு மைக் முரளியாக எல்லோர்
மனதிலும் இடம் பிடித்தவர்.
இதயம் படத்தில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த
ஒன்று.
தஞ்சாவூர் மண்ணெடுத்து இந்தப் பாடல் விரும்பாதவரும்
உண்டா!!!
48 வயதில் உதிர்ந்து விட்ட இந்தக் கலைஞனுக்கு என்
இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
10 comments:
முரளிக்கு அஞ்சலி. ஆர்ப்பாட்டமில்லாத நடிகர்
ஆழ்ந்த இரங்கல்கள்.
வெகு காலமாக கல்லூரி மாணவனாகவே நடித்தவர். செய்திகளில் 46 வயது என்று சொன்னது போல் இருந்தது. அவர் நடித்த பகல் நிலவு படம் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.
அட ராமா. பாவமே. ஒரு நல்ல முகம் அவருக்கு. லக்ஷ்மியோட நிகழ்ச்சியில் கூட அவர் தான் கறுப்பாக இருந்தததால் தனக்குச் சினிமா சான்ஸ் மறுக்கப் பட்டதாகச் சொல்ல ஆரம்பித்தார். மனமார்ந்த அஞ்சலிகள். சிறப்பான நடிகர்.
இக் கலைஞனின் ஆத்மா சாந்தி அடைய என்னுடைய பிரார்த்தனைகள்.
வெங்கட்.
அஞ்சலிகள்!!!
"தென்றல் வீசியதில் மகிழ்ந்தவர்கள்" என்பதை கிளிக் பண்ணி வரவேண்டியதாய் இருக்கிறதே மேடம்?
அடக்கடவுளே...மிகவும் கஷ்டமாக இருக்கின்றதே...
என் அஞ்சலிகளும்...
திரு முரளி அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.......
இரங்கலை இங்கும் பதிவு செய்கிறேன்
Post a Comment