Monday, September 06, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 6/9/10

ஹைதைக்கு இன்னொரு புகழ் கிடைத்திருக்கிறது. ஹைதை
ஷ்பெஷல் ஹலீம்க்கு இப்பொழுது உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
ரம்ஜான் நேரத்தில் “ஹலீம்” எனப்படும் ஷ்பெஷல் உணவு தயார்
செய்யப்படும். ஹைதையில் கிடைக்கும் எத்தனையோ ஷ்பெஷல்
உணவுகளில் ஹலீமுக்குத்தான் முதல் முறையாக GI (geographical indication)
அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. திருப்பதி லட்டு, டார்ஜிலிங் டீ, கோவா ஃபினி,
பனாராஸ் பட்டு வரிசையில் இனி ஹைதை ஹலீமூம். ஹலீம் தயாரிப்பாளர்கள்
சங்கத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

***********************************************************

சென்ற வருடம் மழையே பெய்யாமல் வரண்ட மாநிலமாக
அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் பேய் மழை பெய்து புயல்,
வெள்ளம். ஆனால் இந்த வருடம் உல்டா. ஆரம்பம் முதலே
சரி மழை. புயல், வெள்ளத்தால் பாதிப்பு. பல இடங்களில்
விளைச்சல் பாதிப்பாம். பெஞ்சாலும் கஷ்டம், காஞ்சாலும்
கஷ்டம்!!! வாழ்க்கை ரொம்ப குஷ்டமப்பா!!!!!
******************************************************

தாத்தாவுக்குப் போனை போட்டு வாங்க வாங்கன்னு சொல்லிக்கிட்டு
இருந்தாங்க பசங்க. அவங்க தாத்தா, அம்மம்மா மட்டுமில்லாம
எங்க அம்மம்மா, தாத்தா, மாமா வந்ததுல இரண்டு பேருக்கும்
செம குஷி. ஒரே கொஞ்சல்ஸ்தான். அவங்கள்லாம் ஊருக்கு
போனதும் இப்ப எங்க அப்பா அம்மாவை விடலை. ஸ்கூலுக்கு
போயிட்டு வர்ற நேரம் தப்ப மிச்ச நேரமெல்லாம் தாத்தா, அம்மம்மா
கழுத்தை கட்டிகிட்டு கிடக்கறாங்க. மெத்தயை கொண்டு வந்து
கீழே ஹாலில் போட்டுகிட்டு அம்மம்மா, தாத்தகூடத்தான்
படுப்பதும். அடுத்த வாரம் ஊருக்கு போறாங்க. டிக்கெட்டை
கேன்சல் செஞ்சிடுங்க!!!ன்னு புலம்ப ஆரம்பிச்சாச்சு.
அவங்க ஊருக்கு போனதுக்கப்புறம் கந்தன் தான் என்னை
காப்பாத்தணும்!!!!

************************************************************
பட்டாலும் சிலருக்கு புத்தி வராது. அந்த லிஸ்ட்ல உஸ்மானியா
பல்கலைக்கழக மாணவர்களும் இருக்காங்க. தாமதமான ரிஸல்ட்ஸ்,
அதனால தாமதமாகும் பட்டமளிப்பு, ஸ்ட்ரைக்கால வேலை
கிடைக்க கஷ்டம்னு அவங்க நிலை இருந்தாலும், திரும்பவும்
தெலுங்கானா பிரச்சனையை கிளப்பிக்கிட்டு இருக்காங்க.
இந்தப் பசங்களை வெச்சு அரசியல் நடத்தியாவாது தன்
செல்வாக்கை அந்தக் கட்சி காட்டிக்கணுமா??? இவர்களின்
வாழ்க்கையை காவு வாங்கி வாழத் துடிப்பது நியாயமா???
சொல்லுங்க நல்லவங்களே!!! வருங்காலத் தூண்களின்
எதிர்காலத்தை சிதச்சிட்டு அதன்மேலேயா ஒரு மாநிலத்தை
உருவாக்கப்போறீங்க!???!!!!
***************************************************
ஆரம்பமாகப்போகிறது விநாயகச்சதுர்த்தி. பெரிய பெரிய
உருவத்தில் பிள்ளையார் பார்க்கலாம். வைசாக்கில் ஒரு
ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் ஹைதை கைரதாபாத்தில்
செய்யப்படும் பெரிய பிள்ளையாருக்காக மிகப்பெரிய
சைஸில் லட்டு ஒன்றை செஞ்சு ஷ்பெஷல் வண்டியில்
அனுப்பி வைக்கப்போறாராம். அதற்காக 50 கிலோ சர்க்கரை,
25 கிலோ நெய் அப்படின்னு படிச்சேன். ஆனந்த
விநாயகர் ஆனந்தமா எல்லாரையும் வெச்சுக்கட்டும்.
***************************************************

11 comments:

Vidhya Chandrasekaran said...

பதிவு அலைன்மெண்டில் ஏதோ ப்ராப்ளம் இருக்கிறது. சரி பாருங்கள்.

நட்புடன் ஜமால் said...

பட்டாலும் புத்தி வராது

சரியா சொன்னீங்க

Anonymous said...

டெம்ப்ளேட்ல என்னவோ பிரச்சனை. படிக்க முடியலை

ADHI VENKAT said...

ஹைதை ஆவக்காய பிரியாணி சூப்பர். இங்கேயும் இந்த வருஷம் மழை பெஞ்சுக்கிட்டே இருக்கு.

pudugaithendral said...

மொதல்ல அப்படி இருந்துச்சு. இப்ப சரியா இருக்கு வித்யா

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ஜமால்

pudugaithendral said...

இப்ப பாருங்க சின்ன அம்மிணி

pudugaithendral said...

சென்னையிலேயே மழை பெய்யும்பொழுது மத்த இடத்திலெல்லாம் பெய்யாதா கோவை2தில்லி :)) வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

இன்னும் அலைன்மெண்ட் சரியாகல தென்றல், பாருங்க.

ஊருக்குப் போனதும் பாட்டி, தாத்தாதான் இவங்களை ரொம்பமிஸ் பண்ணுவாங்க;

பல்கலைக் கழக மாணவர்கள் - திருந்த மாட்டாங்க போல!!

//வருங்காலத் தூண்களின்
எதிர்காலத்தை சிதச்சிட்டு அதன்மேலேயா ஒரு மாநிலத்தை
உருவாக்கப்போறீங்க!???!!!!//

நல்ல கேள்வி; தெலுங்குல பதிவு ஆரம்பிச்சு, அதுல போடுங்க இந்தக் கேள்வியை!! நாலு பேராவது படிச்சு யோசிக்கட்டும்!!

சாந்தி மாரியப்பன் said...

டெம்ப்ளேட்ல என்னவோ பிரச்சினை இருக்குப்பா.. பாதி பதிவு right sidebarக்கு போயிடுது. படிக்கமுடியலை..

ஊன்றிப்படிச்சதில் புள்ளையாரை மட்டும் கண்டுக்கிட்டேன் :-))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

super kalakkal biriyani...