Thursday, September 23, 2010

பிள்ளையார் சதுர்த்தி கொசுவத்தி




பிள்ளையார் சதுர்த்திக்கு அப்பா எந்த சைஸ்ல பிள்ளையார்
வாங்குவாங்கன்னு ஆசையா இருக்கும். அம்மா வேலை
பார்த்த ஸ்கூல்ல வெளியே ஒரு பகுதியை பிள்ளையார்
செய்யறவங்க தங்கி பிள்ளையார் செய்ய கொடுத்திடுவாங்க.
மார்கெட்டுக்கு பக்கம் என்பதால் இந்த ஏற்பாடு.

களிமண்ண வெச்சு அச்சுல வார்த்து விதம் விதமா
சின்னதும் பெரிதுமா பிள்ளையார் செய்வாங்க. ஸ்கூல்ல
தான் செய்வாங்க என்பதால் அம்மா சொல்லிவெச்சு
மொதோ நாளே கொண்டு வந்திடுவாங்க. சில பேர்
வீட்டுல அன்னைக்கு காலேலதான் காஞ்சும் காயம
இருக்கும் பிள்ளையாரை பலகைல வெச்சு எடுத்துகிட்டு
வருவாங்க. நானும் அப்பா கூட போய் எருக்கன் பூ மாலை,
அருகம்புல், கெஞ்சி கூத்தாடி நான் என் உண்டியல்லேர்ந்து
தர்றேன்னு சொல்லி பிள்ளையாருக்கு குடை எல்லாம்
வாங்கி வருவோம்.



அன்னைக்கு சாயங்காலமே புனர் பூஜை செஞ்சு குளத்துல
கரைச்சிடுவோம். கொழுக்கட்டை வகையராக்களுடன்
பிள்ளையர் சதுர்த்தி முடிஞ்சிடும். 14 வயசு இருக்கும் போது
ஒரு வாட்டி ஹைதையில் இருந்த உறவினர் வீட்டுக்கு
வந்தபோது கலர் கலரா பெயிண்டடிச்சு பெரிய்ய்ய்ய்ய
சைஸ்ல பிள்ளையார் எடுத்துகிட்டு போறதை பாத்ததும்
நம்ம ஊர்ல என்ன பூஜை செய்யறோம்னு நினைச்சேன்.
10 நாள் வெச்சிருந்து 11ஆம் நாள் தான் கரைப்பாங்கன்னு
கேள்விப்பட்டதும் செம ஆச்சரியம். ஆனா இப்ப பூமியைக்
காப்பாத்த அதே களிமண் பிள்ளையார்கள் இக்கோ ஃப்ரெண்ட்லி
விநாயகான்னு விக்கப்படுது. இதுதான் காலத்தின் சுழற்சியோ!!


மும்பையில் இருந்த பொழுது அங்கே நடந்த பூஜைகள்,
கொண்டாட்டங்கள் நல்லதொரு அனுபவம். விசர்ஜனத்துக்காக
லீவு விடும் அளவுக்கு இருக்கும். இப்போ ஹைதையில்
அதே போலத்தான். நேற்று விசர்ஜன். (இங்கே கணேசா
நிமர்ஜனம்னு சொல்வாங்க). எங்க அப்பார்ட்மெண்டிலும்
இந்த வருடமும் கணேச சதுர்த்தி நல்லா நடந்துச்சு.



எல்லோரும் பணம் போட்டு பெரிய்ய கணேசா வாங்கி
வந்து பூஜை. அம்மா அப்பா இங்கே இருந்ததால முதல்
நாள் பூஜை அவங்களை செய்யச் சொன்னோம். யார்
வீட்டு பூஜையோ அவங்க பிரசாதம் செஞ்சு கொண்டு 
வரணும். சும்மா கொஞ்சமில்லை கிட்டத்தட்ட 65 பேருக்கு
காணும் அளவுக்கு. :)))


நானும் அம்மாவும் வெண்பொங்கல், கொத்சு, வடை, சட்னி,
கடலைப்பருப்பு பாயசம், தயிர்சாதம் எல்லாம் செஞ்சிருந்தோம்.
என்னுடைய கொத்சு இங்கே ரொம்ப ஃபேமஸ்.  ( அதுக்கு
அப்பார்ட்மெண்ட் தோழிகள் வெச்சிருக்கும் பேரு பருப்பில்லாத
சாம்பார். :)) ரோசய்யாவை கூப்பிட்டு இப்படி எல்லாம் சாம்பார்
வெச்சு சமையலறை பட்ஜட்டை கட்டுப்பாட்டில் வெச்சிருப்பதாக
சொல்லி பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செஞ்சு அதை லைவ்
டெலிகாஸ்ட் செய்ய டீவி 9 வேற கூப்பிடறதா சொல்லிக்கிட்டு
இருந்தாங்க.)



ஃப்ரண்ட் வீட்டு கணேசா

மொத்தம் 7 நாள் கணேசா வெச்சிருந்தோம். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வீட்டு பிரசாதம். பலவீட்டு சோற்று ருசியில்
கட்டுண்டு கிடந்தோம். போன வருஷம் பூஜை முடிந்ததும்
ஆஷிஷும், அம்ருதாவும்தான் கணேசா ஸ்லோகம்
சொன்னாங்க. இந்த முறை அதே ஸ்லோகத்தை
எல்லோரும் சொல்லும் வண்ணம் ப்ரிண்ட் எடுத்து
ஜெராக்ஸ் போட்டு எல்லோர் கையிலயும் கொடுத்து
சொல்ல சொல்லிட்டேன். ( அடுத்த வருஷம் நான் இந்த
அப்பார்ட்மெண்ட்ல இல்லாட்டியும் என் ஞாபகம் கொஞ்சமாவது!!!
வரும்ல) :))



ganesha 2010

6ஆவது நாள் அப்பார்ட்மெண்டில் இருந்த ஆண்குழந்தைகள்
அனைவரையும்  உட்கார  வைத்து  பூஜை செய்யச் சொன்னோம்.
7ஆவது நாள்  அன்று நாங்கள் விசர்ஜனம் செய்ய திட்டம்.
அன்று வெள்ளிக்கிழமையாகவும் இருக்க பெண்குழந்தைகள்
அனைவரையும் உட்கார வைத்து பூஜை செய்ய சொன்னோம்.

அனைவரும் மாடர்ன் ட்ரெஸ் இல்லாமல் ட்ரெடிஷனல்
ட்ரெஸ்ஸில் வரவேண்டும் என்று சொன்னதும் முறைத்தார்கள்.
”நான் அடுத்த வருடம் இங்கே இருக்க மாட்டேன்ல!!” எனக்காக
கண்ணுங்களா!!” என்ற கெஞ்சலுக்கு மதிப்பு இருந்தது.
அழகாக பாவடை தாவணி, குட்டி பெண்கள் பாவடை, சட்டையில்
வந்து கலக்கினார்கள். ஆரத்தி முடிஞ்ச அடுத்த கணம் எல்லாம்
அப்ஸ்காண்ட். :)) எல்லாம் ட்ரெஸ் சேஞ்சுக்குத்தான்.




உட்டி அடிக்க வேண்டுமே!!! மேள வாத்தியம் முழங்க
எங்கள் தெருவே அதிர ஆனந்த நடனமாடி தண்ணீர் அடித்து
விளையாடி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் எல்லாம்
ஆட்டம் போட்டோம்.





எல்லாம் முடித்து உடை மாற்றி அப்பார்ட்மெண்ட் நண்பர்
ஒருவர் ஏற்பாடு செய்திருந்த  சாப்பாடு  சாப்பிட்டு கணேசனை
லாரியில் ஏற்றிக்கொண்டு ஹுசைன் சாகர் நோக்கி பயணம்.
இந்த முறை மிக அதிசயமாக அயித்தான் ஊருக்கு ஏதும்
போகாமல் 7நாளும் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாமளும் விசர்ஜனுக்கு போவோமான்னு கேக்க!! சரின்னு
சொல்ல எல்லாம் லாரியில் ஏறிக்கிளம்பினோம். அந்தாக்‌ஷரி
பாடிக்கொண்டு செம ஆட்டத்துடன் நடு நடுவில் பேண்ட்
வாத்யத்துடன் வரும் கணேசாவுக்கு “கண்பதி பப்பா மோரியா”
என கத்திக்கொண்டு போனோம்.

7ஆம் நாள் என்பதால் ரொம்ப நேரம் எடுக்காமல் சீக்கிரம்
ஹுசைன்சாகரை அடைந்தோம். க்ரேன்கள் ஏறபாடு
செய்து வைத்திருக்கிறார்கள். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே
கணேசர் தண்ணீரில் மூழ்குவதுபோல இருக்கு. விக்ன
விநாயகனை அனுப்பி வைக்க மனசுதான் இல்லை.






அப்பார்ட்மெண்ட் வந்ததும் எல்லோரு மனதிலும் ஒரு சோகம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை வருத்தம்.
”நாளேயிலேர்ந்து நம்ம வீட்டுலதாம்பா டின்னர். மறந்த
வாக்குல யாரும் கீழேன்னு நினைச்சு சமைக்காம இருந்திடாதீங்க!!!”
என்று ஒரு ஃப்ரெண்ட் ஜோக் அடிக்க, நிஜமாகவே இந்த 7 நாட்களும்
அனைவரும் வசுதேவ குடும்பகமாக ஒன்றாக சேர்ந்து
பூஜித்து, மகிழ்ந்து இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

இதற்காகத்தான் பெரியவர்கள் பண்டிகைகளை கண்டுபிடித்தார்களோ
என்னவோ!!! நாங்களும், இன்னொரு குடும்படும்  எங்க சொந்த அப்பார்ட்மெண்டை வாடகைக்கு விட்டு இங்கேயே இருந்து விட வேண்டுமாம்.
அனுப்ப மாட்டோம் என சில தோழிகள்.  பிறந்த வீட்டுக்கு
வருவது போல நாங்கள் இரண்டு குடும்பமும் வந்து விடுகிறோம்
கவலையே படாதீர்கள்!! என்று சொல்லி பிரிய மனமில்லாமல்
அவரவர் வீட்டுக்கு சென்று படுத்த போது அதிகாலை 1 மணி.

17 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

உங்கள் அன்புக்குக் கட்டுப்பட்டு பாரம்பரிய உடையில் குழந்தைகள் வந்ததும், நிகழ்ச்சி முடிந்தது பறந்து போய் உடைமாற்றி வந்ததும் கற்பனை செய்தாலே அழகு:))!

pudugaithendral said...

ஆமாம் ராமலக்‌ஷ்மி,

மாடர்ன் ட்ரெஸ் மங்காத்தாக்கள் மஹாலட்சுமிகளாய் வலம் வந்ததில் அவரவர் குடும்பத்து பெரியவர்களுக்கு ஒரே சந்தோஷம். பண்டிகை நாளன்றாவது இப்படி பார்க்க வேண்டும் என்பது எங்கள் ஆசைன்னு அவர்கள் சந்தோஷமா சொன்னப்ப எனக்கும் மனசு சந்தோஷமா இருந்துச்சு. ஆனாலும் எங்கள் அப்பார்ட்மெண்ட் குட்டீஸ்கள் எல்லாம் ஸ்வீட் ராஸ்கல்ஸ். ஐ லவ் தெம்.

வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

ம்ம்.. ரொம்ப சந்தோஷமாக் கொண்டாடிருக்கீங்க.. சந்தோஷம்!!

ஆமா, எல்லாரும் பிள்ளையாரை விசர்ஜனம் செய்வது பற்றித்தான் எழுதுறீங்களே தவிர, எதனால், ஏன் அந்தப் பழக்கம் வந்தது என்று எழுதமாட்டேங்கிறீங்களே!!

கோமதி அரசு said...

தென்றல், அருமையான பதிவு.

சுற்றம்,நட்பு எல்லாம் ஒன்ராக சேர்ந்து பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சிதான் தென்றல்.

பண்டம் ஈகைதான் பண்டிகை என்பார் மகரிஷி.

எல்லா வீட்டு பண்டமும் பகிர்ந்து உண்பது மகிழ்ச்சிதான்.

pudugaithendral said...

எல்லாரும் பிள்ளையாரை விசர்ஜனம் செய்வது பற்றித்தான் எழுதுறீங்களே தவிர, எதனால், ஏன் அந்தப் பழக்கம் வந்தது என்று எழுதமாட்டேங்கிறீங்களே!!//

கேள்வி கேக்காம பின்னூட்டம் போடறிதில்லைன்னு சபதம் எடுத்திருக்கீங்க போல :)) ஆனா இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது. கேட்டு விசாரிச்சு கண்டிப்பா பதிவு வரும்

pudugaithendral said...

பண்டம் ஈகைதான் பண்டிகை என்பார் மகரிஷி.//

ஆஹா எவ்வளவு எளிமையா அழகா இருக்கு. நன்றி கோமதி அரசு

எம்.எம்.அப்துல்லா said...

// அம்மா வேலை
பார்த்த ஸ்கூல்ல

//

ஹல்ல்ல்லோ ஓவர் தன்னடக்கம் உடம்புக்கு ஆகாது. உங்க அம்மா வேலை பார்த்த ஸ்கூல் உங்க தாத்தா ஆரமிச்ச ஸ்கூல்னும் சொல்லுங்க :)))


// ஆனா இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது. கேட்டு விசாரிச்சு கண்டிப்பா பதிவு வரும்

//

நான் சொல்றேன்க்கா. அப்ப பிரிட்டிஷ் காரங்க காங்கிரசின் பொதுக்கூட்டங்களுக்குத் தடை செஞ்சிருந்தாங்க. மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்ட பொதுக்கூட்டம் முக்கியம்.சரின்னு நம்ம “மராட்டிய சிங்கம்” பாலகங்காதார திலகர் ஒரு ஐடியா பண்ணுனாரு. எல்லாரும் நம்ம பிள்ளையாரை வீட்டுல இருக்குற கேணில கரைக்காதிங்கப்பா, அப்படியே எடுத்துகிட்டு நம்ம ஜூகு பீச்சாண்ட வந்துகினீங்கன்னா அல்லாரும் மொத்தமாகூடி கரைச்சுகினு அப்படிக்கா ஒரு கூட்டமும் போட்டு பேசிக்கலாம்.வெள்ளக்காரன்னால ஒன்னியும் பண்ண முடியாதுன்னு சொன்னாரு. சரினுட்டு நம்ம பம்பாய் மக்கள்லாம் அவங்க அவங்க பிள்ளையாரை தூக்கிகினு பீச்சாண்டவந்தாங்க.அங்கே சுதந்திர உனர்வு ஊட்டப்பட்டது. அப்படி ஒரு நல்ல நோக்கிற்காக துவங்கிய சதிர்த்து ஊர்வலங்கள் இன்று சில இடங்களில் சில சுயவிஷமிகளால் திசை மாறிப்போவது கொடுமை :(

அதேமாரிக்கா நான் பார்த்தவரை இந்துக்கள் பயமின்றி ஒரு நண்பனிடம் முறையிடுவதுபோல் வணங்கும் ஒரே சாமி பிள்ளையார்தான். ஹி இஸ் நாட் ஒன்லி எக்கோ பிரண்டி, ஹி இஸ் யூசர் ஃபெரண்ட்லி ஆல்சோ :)

துளசி கோபால் said...

நல்ல கொண்டாட்டமா இருக்கேப்பா.

சூப்பர் விருந்தா ஏழு நாளும்!!!! அடடா..... அங்கே வந்துருக்கலாமோ!!!!

க்ரேன் ஐடியா சூப்பர்ப்பா.

இல்லேன்னா சென்னையில் கடற்கரை ஓரத்தில் நடக்கும் இடமெல்லாம் காலில் பட்டதுபோல் இல்லாமல்:( போனவருசம் திருவான்மியூர் கடற்கரையில் பார்த்து நொந்து போயிட்டேன். இத்தனைக்கும் விஸர்ஜனம் முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சுதான் அங்கே போயிருந்தேன்.

pudugaithendral said...

// ஆனா இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது. கேட்டு விசாரிச்சு கண்டிப்பா பதிவு வரும்

//

நான் சொல்றேன்க்கா.//

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்வாங்க. இனி ஹுசைனம்மா எத்தனை கேள்விகள் வேணாலும் கேட்கட்டும். :)) நிஜம்மாவே எனக்கு இது புது நியூஸ் அப்துல்லா, தெரியாத ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டேன் அதுக்கு காரணமா இருந்த கேள்வி கேட்கும் திலகம் ஹுசைனம்மாவுக்கு நன்றிகள்

pudugaithendral said...

அதேமாரிக்கா நான் பார்த்தவரை இந்துக்கள் பயமின்றி ஒரு நண்பனிடம் முறையிடுவதுபோல் வணங்கும் ஒரே சாமி பிள்ளையார்தான். ஹி இஸ் நாட் ஒன்லி எக்கோ பிரண்டி, ஹி இஸ் யூசர் ஃபெரண்ட்லி ஆல்சோ :)//

ஆமாம் அப்துல்லா,
மஞ்சளைப்பிடிச்சு வெச்சாலும் குளக்கரை மண்ணை பிடிச்சு வெச்சாலும் வந்து உக்காந்திடுவார். வெல்லம் படைச்சா கூட போதும். அதனாலதான் அவரை எல்லோருக்கும் பிடிக்கும்.

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

ஃபுல் கட்டு தான் 7 நாளும். அக்கம் பக்கத்து ஃப்ளாட்டுகள் சத்தமே இல்லாம இருக்க நாங்க அடிச்ச கூத்து செம கூத்து. வகை வகையா செஞ்சு கணேசன் பேரைச்சொல்லி சாப்பிட்டோம்.

ஹுசைன் சாகர் ஆழம் ஜாஸ்தில்ல அதனால இந்த ஐடியா.

ஹுஸைனம்மா said...

//பிள்ளையாரை வீட்டுல இருக்குற கேணில கரைக்காதிங்கப்பா//

அல்லோ, ரீட் மை க்வெஸ்டின் அகெய்ன். பிள்ளையாரை ஏன் கரைக்கணும்கிறதுதான் என் கேள்வியே தவிர, ஏன் கடல்ல கரைக்கணும்கிறது இல்ல!!

அக்காவுக்கு என்னா சந்தோஷம் தம்பி கைகொடுத்தவுடனே!! நாங்க விட்டுடுவோமாக்கும்??

:-)))

சாந்தி மாரியப்பன் said...

எங்க ஊர்லயும் நேத்துத்தான் விசர்ஜன் முடிஞ்சது. எங்கூர் கண்பதியைப்பத்தி போட்ட பதிவு இதோ.. மும்பையில் கண்பதி எப்படி பிரபலமாச்சுன்னு ஒரு ரெண்டுவரி விளக்கம் இதுல இருக்கு :-)

//http://amaithicchaaral.blogspot.com/2010/09/blog-post_14.html//

Thamira said...

பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செஞ்சு அதை லைவ்
டெலிகாஸ்ட் செய்ய டீவி 9 வேற கூப்பிடறதா சொல்லிக்கிட்டு
இருந்தாங்க.//

மறக்காம எங்களையும் கூப்பிடுங்க. :-))

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

வந்து படிக்கறேன்.

pudugaithendral said...

நல்லாயிருக்கீங்களா ஃப்ரெண்ட். கண்டிப்பா கூப்பிடறேன். :)

அபி அப்பா said...

அருமை அருமை! நல்லா இருந்தது பதிவு. ஆனா ஓட்டு போட முடியவில்லை. கொஞ்சம் என்னான்னு கவனிங்க!