Wednesday, September 29, 2010

பெற்றோர்களுக்கு அவசியமான ஒரு வலைப்பூ

குழந்தை வளர்ப்பில் முக்கியமான பங்கு பெற்றோர்களுக்கு
இருப்பது போல குழந்தை நல மருத்துவருக்கும் இருக்கு.
குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆரம்பிக்கிரது இவர்களது
வேலை. மிகவும் ஸ்ட்ரெஸ் தரும் மருத்துவத்துறையில்
இருப்பதாலோ என்னவோ பல மருத்துவர்கள் எதையும்
பெற்றோர்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
நோய்க்குண்டான மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு
அனுப்பி விடுவார்கள்.

என் அம்மாவின் ஒன்று விட்ட தம்பி ஒரு குழந்தை
நல மருத்துவர். அம்ருதா பிறந்த உடன் தலையை இஞ்ச்
டேப் வைத்து அளந்து பார்த்து, கைகளில் பென்சில் கொடுத்து
பிடிக்கிறாளா என்றெல்லாம் செக் செய்தார். 1 1/2 நாளிலேயே
அம்ருதாவுக்கு ஜாண்டிஸ் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து
உடன் போட்டோதெரப்பி கொடுக்க ஏற்பாடு செய்தார்.

அப்போதுதான் எனக்கு குழந்தை நல மருத்துவரின்
முக்கியத்துவம் புரிந்தது. தலையின் அளவை வைத்து
மூளையின் சைஸை கண்டுபிடிப்பார்களாம்! கையில்
கொடுப்பதை பிடிக்கும் சக்தி, திறன் இவற்றை சோதித்து
ஏதும் பிரச்சனை என்றால் ஆரம்பித்திலேயே கண்டு
பிடிப்பார்கள் என குழந்தை நல மருத்துவரின் பங்கு
சொல்லிவிட முடியாது. வெறும் காய்ச்சலுக்கும், ஜுரத்துக்கும்
மட்டும் மருந்து கொடுக்கும் மருத்துவர் போல இல்லை.

சரி இவ்வளவு ராமாயணம் ஏன்? எனது சென்ற பதிவுக்கு
ஒரு குழந்தை நல மருத்துவரிடமிருந்து வந்திருந்த
பின்னூட்டத்தை தொடர்ந்து அவரின் வலைப்பூக்களை
சென்று பார்த்தேன். வியந்தேன். எப்படிப்பட்ட நிகழ்வுகள்
பெற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமோ அவற்றை
மிக அழகாக தொகுத்து தனது வலைப்பூவில் தந்திருக்கிறார்
டாக்டர்.ராஜ்மோஹன்.

பலருக்கும் உதவும் என்பதால் அவரின் வலைத்தளங்களை
இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

குழந்தை நலம் வலைப்பூ:

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

குழந்தையின் ஜிப் அவிழ்க்கும் போது மாட்டிக்கொண்டால்?

உங்கள் குழந்தையின் உயரத்தைக் கணிக்க 
 
இப்படி நிறைய்ய்ய இருக்குங்க அவரது வலைப்பூவில்.

இந்தப் பதிவின் மூலம் மதிப்பிற்குரிய டாக்டர்.ராஜமோஹன்
அவர்களுக்கு நமது பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து
பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து
வைத்து பதிவு போட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.





10 comments:

Thenral said...

Very useful post!!!!Continue.........

Pandian R said...

நல்ல தகவல். மிக்க நன்றி.

ஏதும் சும்மா கொசு வந்தி சுத்தியிருப்பீங்கன்னு நினைச்சு வந்தேன். நிசமாவே நல்ல செய்தி :)

பாண்டியன்
புதுக்கோட்டை

pudugaithendral said...

மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க தென்றல்.

நன்றி

pudugaithendral said...

ஏதும் சும்மா கொசு வந்தி சுத்தியிருப்பீங்கன்னு நினைச்சு வந்தேன். நிசமாவே நல்ல செய்தி :)//

ச்சும்மா கொசுவத்தி மட்டுமே சுத்திகிட்டு இருந்தா நல்லா இருக்காதுல்ல. அதான். :)) வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

நானும் இப்பத்தான் சமீபத்துல இவரை ஒரு தளத்துல பாத்துட்டு, உடனே ரீடர்ல சேத்துகிட்டேன்!!

ஆன்லைன்லயும் கேள்வி கேக்க ஒரு ஆள் கிடைச்சா விடுவோமா??!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...nice and useful post...

Unknown said...

நன்றி புதுகை தென்றல் அவர்களே !!!

pudugaithendral said...

நன்றி புவனா,

pudugaithendral said...

வருகைக்கு நன்றி டாக்டர்

momsnetwork said...

Great Blog...Thanks for sharing....