Thursday, October 14, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 14/10/10

சானியா மிர்சா, லியாண்டர் ஆகியோர் அதிர்ச்சி தோல்விகளைத்
தந்தாலும் எப்படியோ 3ஆவது இடத்தில் இந்தியா. தங்க, வெள்ளி,
வெண்கல பதக்கங்களை வென்று தலை நிமிரச் செய்த தங்கங்களுக்கு
ஒரு ராயல் சல்யூட்.

************************************************************

எந்திரன் பாத்தாச்சு. ரஜினியின் கெட்டப் பிடிச்சிருந்தது. வில்லன்
ரோபோ மூன்றுமுகம் ரஜினி கெட்டப்பில் சில மாற்றங்களுடன்
பாக்கும் பொழுது நன்றாக இருக்கிறது. ரொம்ப நாளைக்கப்புறம்
ஹீரோ & ஆன்டி ஹீரோவாக ரஜினி. கலக்கித்தான் இருக்கிறார்.
எனக்கென்னவோ ஐஸ்வர்யா ராய்க்கு வயதானது நன்றாகவே
தெரிவது போல் இருக்கிறது!!!! படத்தை பத்தி எல்லோரும்
விமர்சனம் எழுதி முடித்துவிட்டார்கள். ரஜினியின் நடிப்பு
இந்தப் படத்தில் மிகச்சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
டெக்னிக்கலாக மிகவும் உழைத்திருக்கிறார்கள்.

***********************************************************
கோன் பனேகா க்ரோர்பதி அமிதாப் அவர்களின் பிறந்தநாள்
அன்று ஆரம்பமானது (11 அக்டோபர்) 68 வயது முடிந்தும்
அந்த ஸ்டைல், அந்த லாவகம் படையப்பா படத்தில் நீலாம்பரி
ரஜினிக்கு சொல்லும் டயலாக் இவருக்கும் பொருந்தும்.
”வயசானாலும் ஸ்டைலும், அழகும் இன்னமும் குறையலை!!”

இந்த முறை கோன் பனேகா கொஞ்சம் வித்தியாசமாகவே
இருக்கு. லைஃப் லைன்களில் மாற்றம், ஜாக்பாட்டாக 5 கோடி
எல்லாவற்றுடன் ரொம்ப ”செண்டியாக” ஷோ இருக்கிறது.
ரியாலிட்டி ஷோக்களில் எனக்கு பிடிக்காதது இதுதான். கேபிஸி
இதற்கு விதிவிலக்காக இருந்தது. இப்ப இங்கயுமா!!! என
நினைக்கத் தோணினாலும் குஜராத்தில் சிறிய கிராமத்திலிருந்து
வந்த பள்ளி ஆசிரியர் 25 லட்சம் ஜெயித்தது சூப்பர்.
***************************************************

கொலை, கொள்ளைகள் அதிகமாகி இருப்பதை தினமும்
செய்தித்தாள்களில் படிக்கிறோம். சமீபகாலமாக கற்பழிப்பு
சம்பவம், சின்ன வயதுப்பிள்ளைகள் பலியாவது என்றும்
படிக்க நேரும்பொழுது மனது வலிக்கிறது. இவற்றுக்கிடையில்
குல கவுரவுத்துக்காக காதலர்களை கொல்லும் பெற்றோர்கள்
எனும் எண்ணிக்கையும் கூடுகிறது!!! ஏன் இந்த நிலை
இறைவா? நண்பர் நர்சிம் கூறியிருப்பது நல்ல தீர்வு!


******************************************************

நவராத்திரி முடியப்போகிறது. அசுரனை அழித்து அன்னை
அனைவரையும் காத்த நந்நாள் விஜயதசமி. நாமும்
நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல்ல
எண்ணங்களை வளர்த்து அழகான வாழ்வு வாழவேண்டும்.
அனைவருக்கும் விஜயசதமி/தசரா நந்நாள் வாழ்த்துக்கள்


*****************************************************

6 comments:

எஸ்.கே said...

தொகுப்பு நன்றாக உள்ளது!

சுல்தான் said...

திரும்பவும் இந்தியா ஷட்டில் மூலம் இரண்டாமிடத்தை பிடித்து விட்டது. இங்கிலாந்து மீண்டுவர வாய்ப்புகளில்லை.

மங்களூர் சிவா said...

belated b'day wishes to dear Ashish.
Nice post esp. Enthiran. Ais looking oldy but thalaivar rocks
:)

புதுகைத் தென்றல் said...

நன்றி எஸ்.கே

பதிவு இடும் பொழுது 3ஆவது இடத்திலிருந்தது. சைனா நெஹ்வாலால் இரண்டாம் இடத்துக்கு வந்தது மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி

வருகைக்கு நன்றி சிவா

வித்யா said...

நவராத்திரி வாழ்த்துகள் அக்கா.

ஹுஸைனம்மா said...

காமன்வெல்த்: நானும் சல்யூட் அடிச்சுக்கிறேன், ஜெயிச்சவங்களுக்கும், போராடினவங்களுக்கும்!!

ஆமா, ஐஸ் வயசு தெரியுது!! ரொம்ப மேக்கப் போட்டா ரஜினிக்கு மேட்சாகாதுன்னு விட்டுட்டாங்களோ என்னவோ!! ;-))))