Tuesday, November 02, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 2/11/10

தீபாவளி அவசரத்துல பிரியாணி போட மறந்துட்டேன். :)
இது ஆந்திரா ஷ்பெஷல் பிரியாணி.

நேற்று ஆந்திரபிரதேசத்துக்கு பர்த்டே. (ஆந்திரபிரதேசம்
உருவான நாள்) தெலங்கானா அரசியல் கட்சி காரங்களும்,
எப்பவும் அவங்களுக்கு அல்லக்கையா இருக்கற உஸ்மானியா
மாணவர்களும் கறுப்புக்கொடி குத்தி பந்த், வன்முறை
எல்லாம் செஞ்சாங்க. டீவில ஒரு பக்கம் என்.டி.ஆர்
ஸ்டேடியத்துல முதல்வர் கலந்துகிட்ட நிகழ்ச்சி, இன்னொரு
பக்கம் அடிதடின்னு காட்டிகிட்டு இருந்தாங்க.
கே.சி.ஆரோட பொண்ணு கருப்பு கலர் புறாவை பறக்கவிட்டு
தன்னோட எதிர்ப்பை காட்டினாங்க!!!! இந்தக் கலாட்டாவுக்கு
பயந்து டெல்லி பப்ளிக் பள்ளி ஞாயிற்றுக்கிழமை பள்ளிவெச்சு
நேத்து லீவு விட்டிருந்தாங்க!!! எங்க பிள்ளைங்களுக்கு
நேத்து ஸ்கூல் இருந்துச்சு. காய்கறி வாங்கலாம்னு மார்கெட்
போனேன். ஆஹா.... காத்து வாங்கிகிட்டு இருந்துச்சு
மார்க்கெட். அழகா தேவையான சாமான்களை வாங்கிகிட்டு
வந்திட்டேன்!!!

*******************************************************

”தாங்கமுடியலடா சாமி விருது” அமெரிக்காவாழ் தெலங்கானா
காரங்களுக்கு கொடுக்கலாம்!! நேற்று டீவியில இவங்களையும்
பேசவிட்டாங்க(ச்சும்மா 5 நிமிஷம் தான்) அம்புட்டு பேரும்
கறுப்பு சட்டை போட்டுகிட்டு இருந்தாங்க. அவங்க சொன்ன
மேட்டர்தான் விருதுக்கு பரிந்துரை செய்ய வெச்சுச்சு.

அதாவது தெலங்கானால இருக்குற ஆந்திரா காரங்க எல்லாம்
ஓடிப்போயிடனுமாம்! எங்க வீட்டுக்கே வந்து, எங்க சாப்பாட்டை
சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க. இதுதான் பிரச்சனை!!! நீங்க
போனாத்தான் எங்களுக்கு விடிவுகாலம் ரேஞ்சுல பேசினாங்க.

மக்களே! நீங்க அமெரிக்காவுல உக்காந்துகிட்டு இப்படி பேசுவதுல
இன்னா நியாயம்பா??? ஒபாமா சீக்கிரம் பத்தி விட்டாருன்னா
அப்பத் தெரியும்?? இந்தப் பாட்டுதான் இப்ப நிலமை!
***********************************************************
தீபாவளிக்கு சட்டம் எல்லாம் போட்டிருக்காங்க. பட்டாசு
வெடிக்கும் நேரம் பத்திதான் சொல்றேன். சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பு படி இரவு 10 மணிலேர்ந்து அதிகாலை 6 மணிவரை
பட்டாசுக்கு நோவாம். ஆந்திராவுல அதை ரொம்ப அதிகாரப்பூர்வமா
அறிவிச்சு அமுல் படுத்த சொல்லியிருக்காரு எங்க ஊரு
போலீஸ்கார் ஏ.கே.கான். ஆனா இந்த வடநாட்டுக்காரங்க
சிலருக்கு தீவளி அன்னைக்குத்தான் புத்தாண்டு. அவுக
விடிய விடிய... விடிய விடியன்னு பட்டாசு கொளுத்துவாங்க.
அவுகளை எல்லாம் சட்டம் ஒண்ணும் செய்யாது போல!!!
உங்க ஊருல எப்புடி???!!!
********************************************************
இந்த வாட்டி குளிர் சீக்கிரமே ஆரம்பமாகிடிச்சு. தெலங்கானா
பகுதிகளில் இரவு நேர வெப்பம் 19 டிகிரி. :))) மேடக்கில்
ஆரம்பமே 15 டிகிரி. இந்த நிலமைல வடமேற்கு மழைவேற!!!
ச்சும்மா குளிருதுல்ல்லன்னு சொல்லும் நிலமை. குவார்ட்டர்
அடிச்சா மாதிரி இருக்கு வானம். சாயந்திரம் 5 மணிக்கே
கும்மிருட்டா இருக்கு. ஆரம்பமே இப்படின்னு இன்னும் 3 மாசத்தை
எப்படித்தான் ஓட்டப்போறோமோ!!!
*****************************************************
அம்புட்டும் ஆந்திரா மேட்டரா இருக்கேன்னு புலம்பாதிங்கப்பா.
சுவாரசியமான சமாசரம் ஒண்ணு இருக்கு. சென்னைஅம்மாக்கள் அப்படின்னு ஒரு இணையதளம்.
அங்க போய் பாருங்க. நீங்களும் சேர்ந்துக்கலாம். நிறைய்ய
விஷயங்களை பகிர்ந்துக்கலாம். எங்க ஊருக்கும் ஒரு தளம்
இருக்கு. நான் சேர்ந்திட்டேன். உங்க ஊர் பேரைப்போட்டு
கூகுள் ஆண்டவர் கிட்ட கேட்டுப்பாருங்க(eg.mumbaimoms)
கிடைச்சா சேர்ந்து மகிழுங்க. ரொம்ப உபயோகமா இருக்கு
இந்தத்தளம்னு பேப்பர்ல படிச்சேன்.
******************************************************]
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்14 comments:

துளசி கோபால் said...

சூப்பர் பிரியாணி.

நேத்துதான் கேரளப்பிறவி தினமும் கூட.

மூணு சமஸ்தானங்களைச் சேர்த்து கேரள மாநிலம் உருவான நாள்.

ராத்திரி பனிரெண்டரைக்கு ஒத்தவெடி வெடிக்கறாங்க யாரோ நம்ம ஏரியாவில்:(

இங்கேயும் குளிர் ஆரம்பிச்சுருக்கு. அஞ்சரைக்கெல்லாம் இருட்டு. வெயிலுக்குப் பயந்து வெளியே போகாம இருந்தால் இப்போ இருட்டுக்குப் பயந்து அடைஞ்சு கிடக்கறேன்.
எதிரில் வரும் வண்டிகளுக்கெல்லாம் விளக்கை ஃபுல் பீம்லே நிரந்தரமா வச்சுருக்கானுங்க......'டிம்' செய்யும் ஸ்விட்ச்சை உடைச்சுப்போடாச்சோ என்னவோ:(


இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

புதுகைத் தென்றல் said...

வாங்க நலமா!!

ராத்திரி பனிரெண்டரைக்கு ஒத்தவெடி வெடிக்கறாங்க யாரோ நம்ம ஏரியாவில்:(//

அது ஒண்ணே போதுமே தில்லானா மோகனம்பாளில் ஒத்த வெடியை போட்டு மேளக்காரர் கையை ஒடிச்சா மாதிரி தூக்கத்தை அப்படியே உருவிடும் :(

எதிரில் வரும் வண்டிகளுக்கெல்லாம் விளக்கை ஃபுல் பீம்லே நிரந்தரமா வச்சுருக்கானுங்க......'டிம்' செய்யும் ஸ்விட்ச்சை உடைச்சுப்போடாச்சோ என்னவோ//
அப்படி ஒண்ணு இருப்பதே மக்களுக்குத் தெரியாம இருக்கும். இது மட்டும் அகில இந்திய அளவுல ஒரே மாதிரிதான்

வருகைக்கு நன்றி. என்னோட வாழ்த்துக்களை கோபால் சாருக்கும் சொல்லிடுங்க

ஹுஸைனம்மா said...

//தெலங்கானால இருக்குற ஆந்திரா காரங்க எல்லாம்
ஓடிப்போயிடனுமாம்//

நாட்டுக்கு, நாட்டுக்கு பிரச்னையாச்சு;அப்புறம் மாநிலத்துக்கு மநிலம் போய், இப்ப மாவட்டத்துக்கு மாவட்டமா? கொடுமை!! இப்படியே போனா, தெருவுக்கு தெருகூட சொல்வாங்க போல!!

தீபாவளி வாழ்த்துகள்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பிரியாணிங்க.. :)
அந்த விருது சூப்பர் தான்..

@துளசி ஹஹ்ஹா.. ஃபுல் பீம் போடுவது இந்தியாவில் எல்லாருக்கும் ரொம்பத்தான்.. நடுவில் கருப்பு வட்டம் வரைஞ்சு விடுவாங்க ஸ்கூல் படிக்கும் போது பாத்திருக்கேன். இப்பல்லாம் கூட இரண்டு லைட் சேர்த்து அது ம் மஞ்சள் நீலம்ன்னு இனி தான் இருக்கு ஃபாக் வரப்போது அப்ப பாருங்க.. :)

Porkodi (பொற்கொடி) said...

happy deepavali to you and family thendral!

அன்புடன் அருணா said...

அம்மாக்கள் குழுவில் சேர்ந்தாச்சு ஏற்கெனவே!!!...குளிர் இங்கேயும் வந்தாச்சே!!!தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்துக்கும்! இங்கெல்லாம் விடிய விடிய பட்டாசுதான் கேட்பாரில்லை!!!!:))

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

தெலங்கானா தனிமாநிலம் வேணும்னுதானே போராட்டங்கள் நடக்குது. நீங்க சொல்றபடியும் நடக்கலாம்!! ஏதும் சொல்றதுக்கு இல்ல

நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கயல்,

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி பொற்கொடி

புதுகைத் தென்றல் said...

வாங்க அருணா,

மிக்க நன்றி

HEALER said...

good. keep it up

சுரேகா.. said...

ஆவக்கா பிரியாணி அற்புதம்..!

// குவார்ட்டர்
அடிச்சா மாதிரி இருக்கு வானம். //

உங்க நகைச்சுவை உணர்ச்சி இருக்கே!! பின்றீங்க!!

ஏன் இன்னும் அடுத்த பதிவைக் காணும்?

புதுகைத் தென்றல் said...

நன்றி ஹீலர்

புதுகைத் தென்றல் said...

வாங்க தலைவரே,

புது வீட்டுக்கு போற வேலைகளில் ரொம்பவே பிசி. அங்க போய் செட்டிலானப்புறம் தான் தொடர்ச்சியா பதிவுலகுக்கு வந்து அம்புட்டு பேரையும் டெர்ரராக்க முடியும். :))) அதுவரைக்கும் எல்லோரும் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்.