Saturday, November 20, 2010

மனது வலிக்கும் தருணங்கள்

கிட்டத்தட்ட 6 மாத காலமாக நான் அவ்வளவாக பதிவு
போடுவதில்லை. என் வேலைப்பளு ஒரு புறம் என்றாலும்
கணிணி முன் உட்காரும் பொழுது என் மனதுக்குள் ஓடும்
ஒரு வரி “நம்ம நட்புக்கள் யாரும் இப்போது இல்லையே??”
என்பதுதான். இது எனக்கு ஒரு பெரிய குறை.

நண்பனை இழப்பது என்பது மிகப் பிரிய சோகம்.
வலையுலகம் எத்தனையோ நட்புக்களையும், உறவுகளையும்
தந்திருக்கிறது. இது அனைவரின் அனுபவமாக இருக்கும்.
பழையன கழிதலும் புதியன் புகுதலும் வேறு எதற்கு
வேண்டுமானாலும் தகுமே தவிர நட்புக்கு இல்லை.

எழுத(!!!) வந்து 3 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில்
என் ஆரம்பகாலத்தில் இருந்த நட்புக்கள் பலர் இப்போது
வலையுலகை விட்டே ஓடிவிட்டார்கள். அவரவர்கள்
பார்வையில் அது சரி. ஆனால் என்னவோ மனதுக்கு
அது ஒருகுறையாக அமைந்துவிட்டது. எப்போதும்
அவர்களைப்பற்றியெல்லாம் நினைத்துப்பார்ப்பது உண்டு.

நட்பு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நண்பர்களிடம்
இருக்கும் புரிதல் உறவினர்களிடம் கூட அமையாது.
எப்போதும் எங்கேயும் நட்பை விட்டுக் கொடுக்க
முடியாது, கூடாது. எங்கிருந்தாலும் தொடர்பில்
இருக்க முயற்சிக்க வேண்டும். இருகரம் சேர்ந்தால்தான்
ஓசை எழுப்ப முடியும். எதிர் தரப்பிலிருந்து பதில்
வரத்து குறைந்தால் நாளடைவில் அந்த நட்பு
கட்டெறும்பாகி காணாமல் போய்விடும்.

இப்படியெல்லாம் மனசு பாதிக்கும்னு பலர் உணர்வதே இல்லை.
அதனால “நாடோடிகள்” சினிமா பாணியில் பாடம்
புகட்டியே ஆகவேண்டும். யாருக்கு? எல்லாம் நட்புக்களுக்குத்தான்.

இனி யாராவது நான் ஓடிடறேன், விலகிடறேன், டாடாபைபை,
நிக்கட்டுமா?போகட்டுமா? அப்படிங்கற ரீதியில பதிவு போட்டு
அப்ஸ்காண்டாக பாத்தா சும்மா விடுறதில்லை. ஆட்டோ,லாரி,
ஹெலிகாப்டர் இப்படி ஏதோ ஒண்ணு தேவைக்கு ஏற்ப
பார்த்து அனுப்பி வைக்கப்படும்.கண்டிப்பா இது நடக்கும்.

உடனடியா அனுப்ப வேண்டியது அஹம் ரஸனையாஸ்மி
அப்படின்னு சொல்லிக்கும் ஃப்ரெண்ட் ஆதிமூலகிருஷ்ணன்
வீட்டுக்குத்தான். (ஆமா ஃப்ரெண்ட் இந்த ரஸனையாஸ்மி
அப்படின்னா ரஸிகா ரசிகன்னு அர்த்தமா???!!)

ச்சும்மா இருக்க முடியாம வாக்கெடுப்பெல்லாம் நடத்தி
டார்ச்சர் தாங்க முடியலை. அவரோட ப்ளாக்ல
வலது பக்கம் ஓட்டுப்பெட்டில்லாம் வெச்சிருக்காரு.

யாரங்கே!!! சீக்கிரமா ஃப்ரெண்ட் ஆதிமூலகிருஷ்ணன் வீட்டுக்கு
ஒரு ஆட்டோ, ரெண்டு லாரி, 2 ஹெலிகாப்டர் அனுப்பிவைச்சு
என்னன்னு கொஞ்சம் கவனிங்க.



35 comments:

Thamira said...

உங்கள் வார்த்தைகளில் இருக்கும் அன்பையும், உணர்வுகளையும், சிலரை இழந்த வலியும் நன்கு புரிகிறது.

உங்களைச் சமாதானம் செய்வதற்காக சொல்லவேண்டுமானால் நான் வைத்திருக்கும் ஓட்டுப்பெட்டி சும்மா விளையாட்டுக்குதான். அப்படியெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போய்விடமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். இன்னொரு விஷயம் யாதெனின், எல்லா விஷயங்களுமே எப்போதாவது ஒரு முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும். அது பிளாக்குக்கு ரொம்பவே பொருந்தும். அதானால்தான் நம்மோடு வந்த பலரைக் காணவில்லை என நம்மைப் போன்றவர்கள் வருந்த நேர்கிறது. சமீபத்தில் அமிர்தவர்ஷினி அம்மா, சின்ன அம்மிணி (துவக்கத்திலிருந்தே என்னை வாசித்து ஊக்குவித்துவந்தவர்) ஆகியோர் வலையுலகை விட்டுச்சென்றது ஒரு இழப்பாக எனக்குத் தோன்றியது.

இயல்பாகவே எனக்கு சில நண்பர்களுடன் வலையுலகு தாண்டிய ஒரு நட்பு ஏற்பட்டது நல்லது என்றுதான் சொல்லவேண்டும். உறுதியான, ரசனையான அந்த நட்புகளை வலையுகின் பரிசாக கருதுகிறேன். ஆகவே இனி நான் வலையுலகு விட்டுச்செல்ல நேர்ந்தாலும் எனக்கு பெரிய இழப்பாகவெல்லாம் இருக்காது என்றே கருதுகிறேன்.

அனைவருக்கும் இவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிதே.

இதை பொதுவெளியில் சொல்லக் கூச்சமாக இருந்தாலும் உண்மை என்பதால் சொல்கிறேன். ரசனை சார்ந்து பிடித்திருந்தாலும், நட்பு கொண்டிருந்தாலும் பெண் என்பதாலேயே உங்களைப் போன்ற பலரின் நட்புகளையும் ஆராதிக்கமுடியாமல் தாண்டிச் செல்லக்கூடிய சூழலில் இருக்கிறோம்.

மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி.

Thamira said...

.

துளசி கோபால் said...

என்ன இப்படி சொல்றாரு!!!!!
சின்ன அம்மிணி அமித்து அம்மா எல்லாரும் வலை உலகைவிட்டுப்போயிட்டாங்கன்னு!!!!!!

நெசமாவா? நான் அவுங்கெல்லாம் இப்போ வாழ்கையில் ரொம்ப பிஸி. எழுத நேரமில்லை.பொறகு வருவாங்கன்னுல்லே நினைச்சிருந்தேன்!

என்னங்க புதுகைதென்றல்,

நட்புகளை இழப்பதின் வலியைச் சொன்னது உண்மைதாங்க.

நமக்குத் தொழில் எழுத்து. அதை எழுதுவதோடு நம்ம கடமை முடிஞ்சுருதுன்னு நான் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கேன். திரும்பிப்பார்க்க நேரமில்லை.

pudugaithendral said...

வாங்க வாங்க நம்ம ப்ளாக் பக்கமே வந்து ரொம்ப நாளாச்சு,

உங்க ஓட்டுபெட்டி ச்சும்மானாச்சுக்கும்னு எனக்கும் தெரியும். ஆனா பலர் சொல்லாமல் கொள்ளாமல் போனது வருத்தமாத்தானே இருக்கு. ரொம்ப நாளா இதைப்பத்தி பதிவு எழுதணும்னு நினைச்சிருந்தேன். இன்னைக்கு எதேச்சையா உங்க ப்ளாக்கை படிச்சு அதில் இந்த ஓட்டுப்பெட்டியை பார்த்ததும் பதிவு போட்டே ஆகணும்னு போட்டேன்.

pudugaithendral said...

முற்றுப்புள்ளி எதுக்கு???!!!

எழுதுவதை நிறுத்தினாலும் வந்து படித்து கருத்து சொல்லி இல்லாவிட்டால் மடலில் தொடர்பு கொண்டு என இருந்தால் தொடர்பில் இருப்பது போல இருக்கும். ஒரேயடியா தலைமுழுகிட்டு போயிடறாங்க சிலர்.
//
இதை பொதுவெளியில் சொல்லக் கூச்சமாக இருந்தாலும் உண்மை என்பதால் சொல்கிறேன். ரசனை சார்ந்து பிடித்திருந்தாலும், நட்பு கொண்டிருந்தாலும் பெண் என்பதாலேயே உங்களைப் போன்ற பலரின் நட்புகளையும் ஆராதிக்கமுடியாமல் தாண்டிச் செல்லக்கூடிய சூழலில் இருக்கிறோம்.//

கண்டிப்பா இது நானும் ரிப்பீட்டிக்கறேன். எங்களுக்கும் அந்தத் தடை இருக்கத்தான் செய்கிறது. நட்பில் ஏன் இந்த பேதம் எனும் கேள்விக்கு விடையறிவார் யாரோ!
நீங்க ஏதும் ஃபீல் பண்ணாதீங்க. ஆனா வலையுலக விட்டுப்போனா ஆட்டோ,லாரி, ஹெலிகாப்டர் எல்லாம் அனுப்பி வைப்பேன் சொல்லிட்டேன். :)))))

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

சிலர் விலகியது கூட தெரியாமல் போயிடுது. என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோமேன்னு தேடினா தேடிக்கிட்டு இருப்போம்.

இந்த நட்புக்கள் எல்லாம் வந்து ஊக்குவிக்காட்டிப்போனா தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது சந்தேகம் தான். அதனால் எனக்கு எழுத்து என்பது நட்புக்களிடம் பகிர்வது போல. ஒரு லெட்டர் எழுதற மாதிரின்னு வெச்சுக்கோங்க.

வருகைக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமித்து அம்மா பிசி தான் நிஜம்மாவெ குட்டிப்பாப்பாவோட..
சின்னம்மிணி ப்ளாகை கூகிள் தூக்கிட்டு போயுடுச்சு அதான் காரணம்..

எஸ்.கே said...

நட்பின் இழப்பு பெரும் வேதனையை தருகிறதுதான்! உங்கள் வார்த்தைகளில் அது தெரிகிறது!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மாவே நீங்க சொல்றது போல பதில் கடிதம் கூட போடாதவங்க மேல வருத்தம் கோவம் எல்லாம் எக்கச்சக்கமா வருது.. ஆனா அதையும் புலம்பும்போது சிலர் சொல்வாங்க.. அவங்களோட மகிழ்ச்சி வேறெங்கோ இருக்குதுன்னா அதை தொந்திரவு செய்யாத நட்பா ஏன்நீங்க இருக்கக்கூடாதுன்னு.. ஹ்ம்.. இப்படின்னா அப்படின்னா இப்படி மனசு சஞ்சலமடைவதுகு ஒன்னும் காரணமே தேவையில்ல போங்க நமக்கு..

ஆயில்யன் said...

//எதிர் தரப்பிலிருந்து பதில்
வரத்து குறைந்தால் நாளடைவில் அந்த நட்பு
கட்டெறும்பாகி காணாமல் போய்விடும்.//

ஆமாம் ! ஆமாம்! :(((

இங்ஙனம்
சி & பெ பா க்ரூப்ஸ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆதிக்கு சைடு பட்டையில் ஓட்டுபோடலைன்னாலும் பதிவுக்குஓட்டுபோடுகிறோமே.. அது அவர் எழுதுவதை ஊக்க்ப்படுத்தத்தானே :)

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

அமித்து அம்மா பிசி தான் நிஜம்மாவெ குட்டிப்பாப்பாவோட..
சின்னம்மிணி ப்ளாகை கூகிள் தூக்கிட்டு போயுடுச்சு அதான் காரணம்..//

அப்புட்டேட்டுகளுக்கு வளர நன்னி அக்கா :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிடைச்சா இடத்துல ஆயில்யன் போஸ்டர் ஒட்டரார் பாருங்க.. அவங்களுக்குமட்டும் நீங்க் பதில் கமெண்ட் போடலையாமே ? :))

வெங்கட் நாகராஜ் said...

வலையுலக நட்போ, கல்லூரி நட்போ, அதை இழக்கும்போது கண்டிப்பாக வலி இருக்கத்தான் செய்கிறது சகோ. நான் தொடரும் சில பதிவர்கள் கூட நிறைய நாள் பதிவிடாமல் இருக்கும்போது, ”என்ன ஆச்சு, ஏன் பதிவே போடுவதில்லை” என்ற கேள்விகள் மனதில் வருகிறது. நல்ல பகிர்வு.

எல் கே said...

@ஆதி

சின்னம்மிணி ,பதிவுலகை விட்டு போகவில்லை. கூகிள் ஸ்பேம் பிரச்சனையில் அவரது பதிவு அழிந்துவிட்டது . அவர் மீண்டும் விரைவில் வருவார்

ADHI VENKAT said...

நட்புக்களை இழப்பது என்றும் வலி நிறைந்தது தான்.

சாந்தி மாரியப்பன் said...

இப்போ நீங்க, ஆடிக்கொருதடவை அம்மாவாசைக்கொரு தடவைன்னு இடைவெளிவிட்டு பதிவு போடும்போதுகூட, என்னாச்சோன்னு தோணுது தென்றல்.

அம்மிணியும்,அ.அம்மாவும் சீக்கிரமே வருவாங்கன்னு எதிர்பார்ப்போம்..

வல்லிசிம்ஹன் said...

என்னப்பா தென்றல் ,நீங்க எல்லாம் இப்படிச் சொன்னால் நாங்க எங்க போறது.
சின்ன அம்மிணியை கூகிள் பஸ்ஸில் பார்த்தேன்.ஊருக்கு வந்திருக்காங்களான்னு தெரியாது.
அமித்து அம்மா,பாப்பா விஷயம் ரொம்ப சந்தோஷம். தான்கீஸ்பா முத்து.

தமிழ் அமுதன் said...

நான் கூட இப்படி ஃபீல் பண்ணி இருக்கேன் ...!ஆரம்ப காலத்துல என்னை எல்லாம் ஒரு பதிவர் அப்படிங்குற ஒரு நிலமைக்கு கொண்டுவந்ததே அப்போ இருந்த நட்புகள்தான்...!

பதிவுலகை விட்டு போய்ட்டாங்கன்னு சொல்லிட்டீங்களே ...! நான் அப்படி நினைக்கல எல்லாம் திரும்ப வருவாங்கன்னு எதிர்பார்த்து காத்துட்டு இருக்கேன்..!

அமித்து அம்மா மட்டும் ரஜினி போல இப்போ வருவேன் அப்பொ வருவேன்னு சொல்லிட்டு இருக்காங்க..! பையன ஸ்கூல்ல சேர்த்துட்டுதான் வருவாங்க போல...!;)

ஹுஸைனம்மா said...

பதிவுலகைப் பொறுத்தவரை,
“போறவங்க சொல்றதில்லை
சொல்றவங்க போறதில்லை”!!

எல்லாருக்குமே ஒரு கட்டத்துல ஒரு saturated feeling வந்துடுது, அதனாலத்தான் ஒரு இடைவெளி வந்துடுது. அதுவும் சில சம்யங்களில் தேவைதானே, ஒரு புத்துணர்வோடு மீண்டு வர!!

பழகின நண்பர்கள் இல்லேன்னாக்கூட எழுதப் பிடிக்காதுதான். ஆனா பாருங்க, புதுசா வந்த நான் உங்களுக்கு ‘பழகின’ ஃப்ரண்டு மாதிரி ஆகிடலையா? அதுபோல வரும், போகும். நம்ம மனசை இங்கே எழுதிக் கொட்டிடணும், அவ்வளவுதான்.

pudugaithendral said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கயல்விழி

pudugaithendral said...

நன்றி எஸ் கே

pudugaithendral said...

வாங்க பாஸ்,வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் முத்துலெட்சுமி,

ஊக்குவிக்கத்தான் எல்லாம்.

pudugaithendral said...

வருகைக்கு நன்றி எல் கே

pudugaithendral said...

ஆமாம் கோவை 2தில்லி

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

இப்போ நீங்க, ஆடிக்கொருதடவை அம்மாவாசைக்கொரு தடவைன்னு இடைவெளிவிட்டு பதிவு போடும்போதுகூட, என்னாச்சோன்னு தோணுது தென்றல்.//

கொஞ்சம் பொறுங்க. புதுவீட்டுல செட்டிலானதும் பதிவா போட்டுத்தாக்கிடறேன்.

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

அமித்து அம்மா மட்டும் ரஜினி போல இப்போ வருவேன் அப்பொ வருவேன்னு சொல்லிட்டு இருக்காங்க..! பையன ஸ்கூல்ல சேர்த்துட்டுதான் வருவாங்க போல...!;)//

ஹா ஹா ஹா

வருகைக்கு நன்றி தமிழ் அமுதன்

pudugaithendral said...

எல்லாருக்குமே ஒரு கட்டத்துல ஒரு saturated feeling வந்துடுது, அதனாலத்தான் ஒரு இடைவெளி வந்துடுது. அதுவும் சில சம்யங்களில் தேவைதானே, ஒரு புத்துணர்வோடு மீண்டு வர!!//

ஆமாம் ஹுசைனம்மா,

எனக்கும் அப்படி ஒரு இடைவெளி தேவைன்னு தோணியதாலத்தான் 6 மாசமா விட்டு விட்டு எழுதினேன். ஆனா மொத்தமா கடையை மூட என்னைக்கும் நினைச்சதில்லை. என்ன ஒரு செய்தியும் நான் பதிவுகள் மூலமா தெரிஞ்சுகிட்டதுதான் நிறைய்ய

pudugaithendral said...

பழகின நண்பர்கள் இல்லேன்னாக்கூட எழுதப் பிடிக்காதுதான். ஆனா பாருங்க, புதுசா வந்த நான் உங்களுக்கு ‘பழகின’ ஃப்ரண்டு மாதிரி ஆகிடலையா? அதுபோல வரும், போகும். நம்ம மனசை இங்கே எழுதிக் கொட்டிடணும், அவ்வளவுதான்.//

ஆமாம் கண்டிப்பா எனக்கும் அப்படித்தான் தோணும். ஆனாலும் என் கிட்ட இருக்கும் ஒரு கெட்ட குணம் பழசை மறக்க முடியாதது. இன்னமும் என் இலங்கைத் தோழிகளை நினைச்சு கிட்டே இருக்கேன்.அவங்களை விடுங்க 17 வருஷத்துக்கு முந்திய என் மும்பை ரயில் தோழிகள், மற்ற நட்புக்கள் யாரையும் மறக்க முடியலை.

வருகைக்கு நன்றி

புகழன் said...

வந்துட்டேன்

புகழன் said...

//எழுதுவதை நிறுத்தினாலும் வந்து படித்து கருத்து சொல்லி இல்லாவிட்டால் மடலில் தொடர்பு கொண்டு என இருந்தால் தொடர்பில் இருப்பது போல இருக்கும்.
//

அதனாலதான் அப்பப்ப வந்து கமென்டிட்டுப் போறேன்.

புகழன் said...

ஆனா எழுத நாளாகும் என்று தோணுது

pudugaithendral said...

வாங்க புகழன்,

நலமா? ரொம்ப நாளாச்சு, எப்படி இருக்கீங்க. அடிக்கடி வாங்க.
லேட்டானாலும் லேட்டஸ்டா வந்து கலக்குங்க. வருகைக்கு ரொம்பவே மகிழ்ச்சி.