Wednesday, December 22, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 22/12/10

ஆரம்பிச்சிட்டங்கய்யா!! ஆரம்பிசிட்டாங்கன்னு சொல்வது போல
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க. அண்ணாத்தே சந்திரபாபு நாயுடு
திடும்னு வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு உண்ணாவிரதம் இருக்கப்
போறேன்னு ஆரம்பிச்சாரு. சரி ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு
விரதம் + உண்ணாவிரதம்னு நினைச்சுகிட்டேன். :))

எனக்கு எப்பவுமே சந்திரபாபு நாயுடு மேல மரியாதை உண்டு.
ஹைதையை ஒரு மெட்ரோ ரேஞ்சுக்கு கொண்டு வந்ததுலயும்,
ஐடி கம்பெனிகள் இன்னைக்கு கொடிகட்டி பறப்பதிலயும்
இவரோட பங்கு நிறைய்யவே. அப்பவே அரசு அலுவலகங்களில்
வெப்கேமரா வெச்சு சாட் செஞ்சு, எங்கும் கணிணி, எதிலும்
கணிணின்னு கொண்டு வந்து தங்கு தடை இல்லாம வேலை
நடக்க வெச்சவர். ஆந்திராவைப்பத்தி அதிகம் தெரிஞ்சிருக்க
வாய்ப்பில்லாத வெளிநாடுகளில் கூட சந்திரபாபு நாயுடு ஊருன்னா
புரிஞ்சக்கூடிய ஒரு செல்வாக்கு அவருக்கு உண்டு.

எலக்‌ஷனில் தோற்க காரணம் விவசாயிகளை அவர் கண்டு
கொள்ளவே இல்லை என்பதுதான். அதனால் இப்ப அந்த
விவசாயிகளின் ஓட்டுக்களுக்காக மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு அரசு அறிவிச்சது
பத்தாதுன்னு, மேலும் வேணும்னு கோரிக்கை வெச்சு
இந்த உண்ணாவிரதம். குண்டுகட்டா தூக்கிகிட்டு போய்
ஹாஸ்பிடலில் சேர்த்ததற்கப்புறமும் உண்ணாவிரதம்
தொடர்ந்துகிட்டு இருக்கும்பொழுது மத்திய அரசு 400 கோடி
ரூபாய் பட்ஜட் ஒதுக்கியிருப்பதா சொல்லியும் உண்ணாவிரதத்தை
கைவிடலை. இதுக்கு மேலயும் என்னத்த எதிர் பார்க்கிறார்.
இழப்பை ஓரளவுதான் சரிக்கட்ட முடியும். விவாசியகளின்
நிலை பாவமா இருந்தாலும் அரசால எவ்வளவு செய்ய முடியும்?
புரியலை!!

கோயிந்து கொஸ்டின்:

எல்லாம் சரி! ஐயாவை அரெஸ்ட் செஞ்சு ஹாஸ்பிடலில்
சேர்த்தற்கு தெலுகு தம்பிக்கள் கொதிதெழுந்து பஸ்களை
கொழுத்தி, கடை அடைப்பு செய்து வன்முறையில்
ஈடுபட்டார்களே!! இதற்கு நஷ்ட ஈடு யாரு தரப்போறாங்க??
*************************************************************
ஜகன் அண்ணாவும் விஜயவாடாவில் ஒரு லட்சம் பேரை
கூட்டு சேத்துகிட்டு 48 மணிநேர உண்ணாவிரதம் அதுவும் தன்
பிறந்த நாள் அன்னைக்கு ஆரம்பிச்சிருக்காரு. அதுக்கு
வந்து போன ஆளுங்கட்சி எம் எல் ஏக்களுக்கு பரேட்
இருக்குன்னு நினைக்கிறேன். திரும்ப எலக்‌ஷன்
வந்தாலும் வரலாம். சிச்சுவேசனுக்கு தகுந்த பாட்டு
மைண்ட்ல ஓடுது. அது இன்னான்னா,”இராம ஆண்டாலும்
இராவணன் ஆண்டாலும் எனக்கொண்ணும் கவலையில்லை!!”
:(((
**********************************************************

வெங்காயம் விலையேற்றம்!! இதுதான் இப்ப செய்தி.
அதிக பட்சமாக 80ரூபாய் விற்குது.(எங்க ஊர்ல 60)
இன்னும் 3 வாரத்துக்கு இப்படித்தான் இருக்கும்னு மத்திய அரசு சொல்லிட்டாங்க.
இரண்டுகிலோ வெங்காயம் வாங்குவதும் 2 கிராம் வெள்ளி
வாங்குவதும் ஒண்ணாபோச்சே!!

வெங்காயத்தை பத்தி மட்டுமே கவலைப்பட்டுகிட்டு இருப்பவங்களுக்கு
மேலும் ஒரு ஷாக்கிங் ந்யூஸ். பூண்டு கிலோ 340ரூபாய்.
எந்த காய்கறியும் கால்கிலோ 10ரூபாய்தான். சாமானியனின்
நிலை??????
பெட்ரோல் விலை ஏறியாச்சு. ஆட்டோ மினிமம் 12 லேர்ந்து 14.
அப்புறம் ஒவ்வொரு கிலோமிட்டருக்கும் 8ரூபாய். அதனால்
மத்த விலைகளும் ஏறியாச்சு. மாசசம்பளக்காரங்களுக்கு
அதே சம்பளம்தான்!!! பட்ஜட்ல துண்டு இல்ல பெரிய
கோலாபூர் பெட்ஷீட் தான். :(((
***********************************************************
எங்க ஊர்ல இன்னொரு விஷயம். குளிர். குறைந்த பட்சமா
8.9 ஹைதையில். அரக்குவெளியில் 4ஆம். ஹை ஜாலியா
இருக்கு. குளிருக்கு இதமா இழுத்து போத்திக்கினு தூங்கலாம்.
:))) பகலில் கூட தண்ணீர் ஜில் ஜில் ரமாமணியா இருக்கு.
இன்னம் கூட குறையுமாம். ஐ லவ் திஸ் கிளைமேட்.
*********************************************************

20 வயதுலேர்ந்து 30 வயதுக்குள் இருக்குற, ஐடித்துறையில்
வேலை பார்க்கும் கணவன்,மனைவிகள்தான் அதிகமாக
விவாகரத்து கேட்பதா வக்கீல்கள் சொல்லியிருக்காங்க.
தனது துணைக்காக கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத
நிலை இருப்பதால சின்ன பிரச்சனையும் பெரிசாகி விவாகரத்து
கேக்கறாங்களாம்!
மத்த கேஸ்களுக்கு நேரங்காலம் பாக்காம வேலை வேலைன்னு
ஓடுவது, கணிணியை கட்டிகிட்டு அழுவது, கர்ணணுக்கு
கவச குண்டலம் போல போனை வெச்சுகிட்டு சுத்துவது
போன்றவை மற்ற காரணங்களாம்.

என் ஹஸ்பண்டாலஜி பாடங்கள் 100% உண்மை!!!
**************************************************

12 comments:

சாந்தி மாரியப்பன் said...

எங்கூர்லயும் இன்னிக்கு காலைலேர்ந்து வெங்காயம் 70 ரூபா ஆகிட்டது. பூண்டு கால்கிலோ 70 ரூபாய் :-)))

வாழ்க ஓட்டுப்போட்ட நாமெல்லாம் :-))))

Thamira said...

இங்கேயும் குளிர் தாங்கலை. காலையில் 8 மணிக்கு கூட எழுந்திருக்கமுடியாமல் கடுப்பாவுது.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

வாழ்க ஓட்டுப்போட்ட நாமெல்லாம்//

ம்ம்ம் அதே அதே

pudugaithendral said...

காலையில் 8 மணிக்கு கூட எழுந்திருக்கமுடியாமல் கடுப்பாவுது.//

:)) சென்னையில் குளிர் ஆச்சரியம் அதைவிட ஆச்சரியம் ரமா & சபா உங்களை 8 மணி வரை தூங்க விடுவது. நல்லதில்லையே. அடுத்த வாட்டி ஊருக்கு வந்தால் உங்க வீட்டுக்கு கண்டிப்பா வந்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிடிச்சு.

ஹுஸைனம்மா said...

//பட்ஜட்ல துண்டு இல்ல பெரிய
கோலாபூர் பெட்ஷீட் தான்//

இலவசமா கோலாப்பூர் பெட்ஷீட் கிடைக்க வைக்கும் அரசு வாழ்க!!

(ஹி.. ஹி.. பழக்கதோஷம்)

ADHI VENKAT said...

இங்க தில்லியில் வெங்காயம் 70 ரூ. பூண்டு 300ரூ. தக்காளி 35 ரூ. மற்ற காய்கறிகளும் விலை அதிகம் தான். குளிர் அதிகமாக தான் இருக்குது. நல்ல பகிர்வு.

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

ஹி.. ஹி.. பழக்கதோஷம்)//

:))

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,
எங்க ஊர்ல வெங்காயம் அம்பதே ரூவாத்தான். :))
வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

ஹைதை ஆவக்காய் பிரியாணி காரசாரமா – வெங்காய காரமா இல்ல இருக்கு. கோலாபூர் பெட்ஷீட் தருவதை விட்டு, இந்த அரசு ஜெய்ப்பூரி ரஜாய் குடுக்கலாம், குளிருக்கு இதமா இருக்கும் : ) அய்யய்யோ இந்த இலவசம் குடுத்து குடுத்து மக்களை கெடுத்துட்டாங்கப்பா. நீங்க பட்ஜெட்ல விழற போர்வையா சொன்னீங்க!

pudugaithendral said...

வாங்க வெங்கட்,

நான் பட்ஜட்ல துண்டு விழுவதை பெட்ஷீட்னு சொன்னேன். :)
வருகைக்கு நன்றி

SurveySan said...

:) வெங்காயம் பூண்டு இல்லாம இனி எல்லாரும் வரிசையா சமையல் குறிப்பு பதிவுபோட்டா விடிவு பிறக்கும்.

pudugaithendral said...

vanga surveysan,

athayum thodar pathiva poda sollalam :))