Tuesday, December 28, 2010

fruit & milkஐ ஹேண்டினில் ஏந்தி!!!!

எங்க மாமா ஒருத்தர் இந்தப் பாட்டை
அருமையா பாடினார். ஆனா கேட்டமாதிரி
ட்யூன் இருக்க நடுவுல ஆங்கில கலந்த மாதிரி இருக்கேன்னு
ஆச்சரியப்பட்டேன். இந்த பாட்டு முக்கால்வாசி
மாமா இந்த மாதிரி பாடுவார்.


fruit & milkஐ handinil ஏந்தி
பவள mouthil Smilenai சிந்தி
கோல peocock போல யூ வருவாயே
கொஞ்சும் parrote அமைதி கொள்வாயே...

இப்படி அந்தந்த ட்யூன்களில் நாமே பாடல்களை
எட்டுகட்டுவது ஒரு சுகம். அப்படி சில பாடல்கள்
இதோ...
**********************************************
நாங்க தாக்குவது நிர்மாவை
(எல்லோரும் இப்படித்தான்னு நினைக்கிறேன்)
வாஷிங் பவுடர் நிர்மா..
ஆயாவீட்டுல குருமா!!
மணமணக்கும் குருமா
பூரியோடு வருமே!!
வளைச்சு அடிப்போம் நாமே!!
ஆயாவீட்டுல குருமா!!

********************************************
மேரே சொப்பனோக்கி ராணி கப் ஆயேகி தும்
அருமையான ஆராதனா படப் பாட்டு.
ஆனா தம்பி அதை
அவனுக்கு மிகவும் பிடித்த மிளகு ரசம்
வெக்கும் அன்னைக்கெல்லாம் இப்படி பாடுவான்!!

“ஜீரகால மிரிகால சாறு! சாறு!”
ஹோய் ஜீரகால மிரிகால சாறு சாறு.


*******************************************

என் ஃப்ரெண்டோட தங்கச்சியை அவங்க ஆயா
எப்பவும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
பொறுத்து பொறுத்து பாத்த அந்தப் பொண்ணு
பாட்டு படிச்சு பாட்டியை கடுப்பேத்திடிச்சு.
இப்பவும் மறக்க முடியாத பாட்டு அது.

பூஞ்சிட்டு குருவிகளா
புதுமெட்டு தருவிகளா
பாடத்தான் போறேன் பாட்டு
புதுக்கோட்டை கிழவியைப் பாத்து
அம்மாடி ஆத்தாடி பொல்லாத கிழவியடா
டொய் டொய்ய்ய்...

:))))))))))) எங்க அவ்வாவையும் நாங்க இந்தப் பாட்டு பாடி
கலாய்ச்சது தனிக்கதை!!

************************************************
அயித்தானும் சாதராணம் இல்லை.

ஆஹா இன்ப நிலாவினிலே பாட்டில் ஒரு வரி
வருமாம். அதை இப்படி பாடுவாங்களாம்.
அனுதினம் செய்வார் போளி... அதை நாம் ரசிப்போம் ஜாலி
அப்படின்னு அவங்க ஸ்டைல் பாட்டு.

நீங்களும் இந்த மாதிரி எட்டுக்கட்டி பாடியிருப்பீங்களே!!
அதை பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க.

அனைவருக்கும் மனமார்ந்த ஆந்கில புத்தாணு நல்வாழ்த்துக்கள்.
பிறக்கும் ஆண்டு எல்லாவித வளங்களையும், மனமகிழ்ச்சியும்
தருமொரு ஆண்டாக மலர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

videoku:


19 comments:

வெங்கட் நாகராஜ் said...

நிறைய பாடல்களை நானும் இப்படி மாற்றி மாற்றி பாடுவேன்....

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

மில்க்கும் ஃப்ரூட்ஸும் ஹாண்டில்....தம்பி பாடுவான்.
அநேகமாக எல்லா 60கள் பாடல்களும்
லாஃபி லாஃபி என்னை ஜெயில் போட்டாய்...கண்டு பிடிங்கோ.

மாமா பையன் ஒரு வயசு இருக்கும் போது அவனை த் தூளியில் இட்டு நாங்கள் பாடும் பாட்டு,
ஸ்மால் பேபி எங்க ஸ்மால் பேபி,
அது இந்தப் புதுப் பாட்டைக் கேட்டு எழுந்து உட்கார்ந்து கொள்ளும்:)

புதுகைத் தென்றல் said...

அப்படியா!!

அவற்றையும் ஒரு பதிவா போடுங்களேன்!! ரசிக்கலாம்.

நன்றி வெங்கட் நாகராஜ்

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,
சிரித்து சிரித்து என்னை சிறையில் பாட்டும் சின்ன பாப்பா எங்க செல்லபாப்பா சொன்ன பேச்சை கேட்டாத்தான் நல்ல பாப்பா பாட்டுமா!!

வருகைக்கு நன்றி

கோவை2தில்லி said...

நல்ல கலக்கலான பகிர்வு. எங்கள் வீட்டிலும் இப்படி பாடுவதுண்டு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

kadar said...

enaku egappatta paatu theriyum but. inka solla mudiyathu. ellam ketta paattu..... college la ithavida enna vela iruku....

kadar said...

enaku egappatta paatu theriyum but. inka solla mudiyathu. ellam ketta paattu..... college la ithavida enna vela iruku....

வித்யா said...

புத்தாண்டு வாழ்த்துகள் சிஸ்:)

கோபிநாத் said...

கலக்கல் ;)

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாணு நல்வாழ்த்துக்கள் ;)

அன்புடன் அருணா said...

இரண்டு மனம் வேண்டும் பாட்டு படாத பாடு படும்!!!உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கோவை2தில்லி

புதுகைத் தென்றல் said...

ஓஹோ அப்படியா கதிர்!! :))
வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி வித்யா

புதுகைத் தென்றல் said...

நன்றி கோபி தம்பி

புதுகைத் தென்றல் said...

அப்படியா அருணா,

வருகைக்கு நன்றி

நானானி said...

புதுகைதென்றல்,
நல்ல புது ரூட் கண்டிபிடிச்சிருக்கீங்க..குட்!
நாங்கள் ஆங்கில வார்த்தைகள் போட மாட்டோம்...வார்த்தைகளை மாத்தி போட்டுப்பாடுவோம். ஹையோ! சட்டுனு ஞாபகம் வரமாட்டேங்குதே!!
வந்ததும் வருகிறேன். சேரியா?

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)!

Jaleela Kamal said...

-- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி said...

நாங்களும் ஸ்கூல் days லையே... வாஷிங் பவுடர் நிர்மா... மாமா வீட்டுல குர்மா பாடியதுண்டு அக்கா... உங்க பதிவ பாத்து அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... சூப்பர் போஸ்ட்... உங்களுக்கும் ஹாப்பி நியூ இயர் அக்கா...