Thursday, December 02, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!!!!!

நம்ம சொந்த வீடு நம்ம விருப்பத்துக்கு தகுந்த மாதிரி இருக்கணும்னு
நினைப்பது தப்பில்லையே!! அந்த நினைப்போட ஹைதைக்கு
வந்து இறங்கியதிலேர்ந்து வீடு தேட ஆரம்பித்தோம். என்னைப்
பொறுத்த வரை வீட்டில் சமையற்கட்டும், பாத்ரூமும் வசதியோட
இருக்கணும். ஆனா நம்ம நாட்டுல அந்த இரண்டு இடமும்
ரொம்பவே சின்னதா இருக்கும்!!! அதனாலேயே பல வீடுகளை
வேணாம்னு சொல்ல வேண்டியதா போச்சு. என் மனசுல தனிவீடு
ஆசை எப்பவும் இருக்கும். அதுவும் ட்யூப்ளஸ் ஹவுஸ் ரொம்பவே
இஷ்டம். அப்படிப்பட்ட வீடுகளை பாத்தோம். அதுவும் கூட
சொல்லிக்கற மாதிரி இல்லை.:( நல்லா இருந்தா ஊருக்கு
கடைசியில இருக்கு, இல்லாட்டி விலை நம்ம பட்ஜட்டுக்கு
அடங்காம போனிச்சு. :(((

ஹைதையில் பிரசித்தமான பல பில்டர்கள் ப்ராஜக்ட்களைப்
போய்ப் பார்த்தோம். முன்னாபாய் எம் பீபீ எஸ்ஸில் சொல்வது
போல,”ஆரம்பிச்ச உடனேயே முடிஞ்சு போகும்” டைப்பா
தெரிஞ்சிச்சு. சில இடங்களில் அம்புக்குறி போட்ட போர்டு
இருக்கும் ஏரியாவை சுத்தி சுத்தி அது கடைசியில் ஊர்கடைசிக்கு
போனுச்சு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்படி
வீடு பாப்பதிலேயே போய் ஒரு நேரத்துல வெறுத்துப்போய்
கொஞ்ச நாளைக்கு கேப் விடுவோம்னு விட்டோம். எங்க
நல்ல நேரம். சதுர அடி விலை நல்லா குறைஞ்சிச்சு.

திரும்பவும் தேட ஆரம்பிச்சோம். இந்த வாட்டியும்
சரியா அமையலை. அப்பத்தான் நாங்க குடியிருந்த
அப்பார்ட்மெண்டில் இருக்கும் நண்பர் தனது நிலத்தை
அப்பார்ட்மெண்ட் கட்ட விட்டிருப்பதாச் சொன்னார்.
எங்களை கூட்டிகிட்டுப்போய் காட்டினார். சரியா கட்டப்படாத
நிலையில அமைப்பு புரியலை. வேணாம்னு சொல்லிட்டேன்.
ஆனா கொஞ்சம் தளம் போட்ட நிலையில் திரும்பவும்
கூட்டிகிட்டுப்போனார். கிச்சன் நான் நினைச்சபடி இருக்கு.
3 பெட்ரூம், 3 பாத்ரூம். ஆனா ஒரே ஒரு பாத்ரூம்
மட்டும் பொதுவா இருக்கு. மத்த இரண்டும் அட்டாச்ட்.
சரி எல்லாமே சரியா அமையாது ஏதாவது ஒரு வகையில
காம்ப்ரமைஸ் செஞ்சுதான் ஆகணும்னு!! ஓகே சொல்லும்
முன்னாடி பசங்களை கூட்டிகிட்டுப்போயி காட்டினோம்.
அவங்களுக்கும் பிடிச்சிருக்கணும்ல!!!

ஆஷிஷுக்கு செம குஷி. ஏன்னா?? இந்த வீட்டுலசாமிக்கு
தனியா சின்னதா ஒரு ரூம். :)) அதனால ஐயாவுக்கு
தனி ரூம் கொடுக்க வாய்ப்பு இருக்கு. அம்ருதம்மாவுக்கும்
தனி ரூம். எனக்கும் அயித்தானுக்கும் இந்த வீட்டில்
இருக்கும் சிட் அவுடு ரொம்ப பிடிச்ச இடம். ரெண்டு
சேர் போட்டு அமைதியா உக்காந்து டீ குடிக்கலாம். :))
சரி வாங்கிடலாம்னு முடிவு செஞ்சு பணம் அட்வான்ஸ்
கொடுத்திட்டு லோனுக்கு அப்ளை செஞ்சோம். லோன்
வாங்க தகுதி இருந்தாலும் 2 பேங்குல என்னவோ முடியாதுன்னு
சொல்ல திக்குன்னு ஆயிடிச்சு. ஒரு வழியா இன்னொரு வங்கி
லோன் கொடுத்தாங்க. பணத்தை வாங்கி நண்பரிடம்
கொடுக்கும் வரை உயிரே இல்லை.

அப்புறம் என்ன நடந்துச்சு????? அடுத்த பதிவுல



25 comments:

Paleo God said...

வாங்கிட்டீங்களா?

மகிழ்ச்சி :)

ILA (a) இளா said...

துளசி டீச்சருக்கு அப்புறம் வீடு கட்டுன கதையா? பலே பலே

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) தொடருங்க

வெங்கட் நாகராஜ் said...

அட வீடு வாங்கின கதையா? ”வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்”னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. சொல்லுங்க, படிக்க நாங்க ரெடி…

அமுதா கிருஷ்ணா said...

திகில் கதை தான் நாம் வீடு வாங்குவதும்.தொடரட்டும்.

venkat said...

வீட்டைக் கடிப்பார்
கல்யாணம் பண்ணிப்பார்.
என்று சும்மாவா சொன்னார்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வீடு நோக்கற படலம்.. ஹைய்யோ :-)))).உண்மையைச்சொல்லணும்ன்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும், அதுவும் மாதிரிக்காக ரெடி செஞ்சுருக்கும் ஃபர்னிஷ்டு ஃப்ளாட்டை கண்டிப்பா போயி பாத்துடுவோம் :-))

எஸ்.கே said...

சுவாரசியமாக செல்கிறது!

Anonymous said...

//என்னைப் பொறுத்த வரை வீட்டில் சமையற்கட்டும், பாத்ரூமும் வசதியோட இருக்கணும். ஆனா நம்ம நாட்டுல அந்த இரண்டு இடமும் ரொம்பவே சின்னதா இருக்கும்!!! அதனாலேயே பல வீடுகளை வேணாம்னு சொல்ல வேண்டியதா போச்சு//

எல்லா பொம்மணாட்டிங்களும் ஒரே மாதிரி தானா? எங்க வீட்ல வீடு பாக்கறப்போ முதல்ல எங்க அம்மா பாக்கறது பாத்ரூம் அப்புறம் கிச்சன். நானும் அதே மாதிரி தான் ஆக்கிட்டு வாறேன். விளங்கிடும்னு (மைன்ட் வாய்ஸ் சொல்லுது. எல்லாம் இந்த அடிப்பாவி அக்காவோட சகவாசம்.)=))

Anonymous said...

நீங்க எழுதறதைப் பார்த்த நீங்க முன்னால உக்காந்து பேசற மாதிரி இருக்குக்கா

Anonymous said...

ஹை வட எனக்கா?

pudugaithendral said...

வாங்க ஷங்கர்,
வாங்கி கிருஹப்ரவேஷம் முடிச்சு புது வீட்டுக்கும் வந்தாச்சு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க இளா,

ஆமாம் இதுவும் வீடு கட்டின கதைதான்.
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

கண்டிப்பா முத்துலெட்சுமி,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் வெங்கட்,

பெரியவங்க எதையும் அனுபவிச்சுத்தான் சொல்லியிருப்பாங்க. இதோ அடுத்த பாகம் எழுதிடறேன்.
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

சொன்னாப்ல திகில் கதைதான். திடுக் திடுக் திருப்பங்கள் வருதே.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் வெங்கட்,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆமாம் அமைதிச்சாரல்,
அதை வெச்சே நமக்கு சில ஐடியாக்களை தேத்தலாம் பாருங்க. :)
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி எஸ்.கே

pudugaithendral said...

வாங்க அனாமிகா,

எல்லோரும் அப்படித்தான்னு நம்புறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நீங்க எழுதறதைப் பார்த்த நீங்க முன்னால உக்காந்து பேசற மாதிரி இருக்குக்கா//

நான் எழுதிய கடிதங்களைப் படித்து என் தோழி இப்படித்தான் சொல்வாள்.

பாலராஜன்கீதா said...

//வாங்கி கிருஹப்ரவேஷம் முடிச்சு புது வீட்டுக்கும் வந்தாச்சு.//
வாழ்த்துகள்

Pandian R said...

veedu katti mudicha paththaadhu. indha pathivu series-um mudichathan periya comment-a ezhuthuvom

cheena (சீனா) said...

அன்பின் புதுகைத் தென்றல் - வீட்டைக் கட்டிப்பார் னு சொல்லி இருக்காங்க - ஃப்ளாட் வாங்கறதும் எளிதான செயலா இல்ல = ம்ம்ம்ம் - நல்லாருக்கு துவக்கம் - எல்லாத்தையும் படிச்சுடறேன் - ஆஷீஷுக்கும் அம்ருத்துக்கும் தனி அறையா - மிச்சமிருக்கற ஒண்ணு உங்களுக்கு - நாங்கல்லாம் விருந்தாளியா வந்தா ஹால் தானா ? பரவால்ல - சமாளிச்சுக்குவோம். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

pudugaithendral said...

வாங்க சீனா சார்,

விருந்தாளி வந்தா ஏன் ஹாலில் படுக்கணும். யார் வந்தாலும் அண்ணனும் தங்கையும் ஒரே ரூமில் படுத்துக்கிட்டு இன்னொரு ரூமை கொடுத்திடுவாங்க. :))நீங்க வாங்க.

வருகைக்கு நன்றி