Wednesday, December 08, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க- நிறைவுப்பகுதி

பார்ட்டி முடிஞ்சதும் செகண்ட் கோட் பெயிண்ட் அடிக்க
சொல்லியிருந்தேன். நவம்பர் 27 புதுவீட்டுக்கு சாமான்
சிப்டிங் அப்படின்னு திட்டம் போட்டாச்சு. இவங்களை
இப்படியே விட்ட என் திட்டம் நிறைவேறாது. ஆகவே
தினமும் இங்கேயே வந்து தங்கி வேலை வாங்கினேன்.

கண்ணாடிக்கதவுகளை ஃபிட் செய்ய திங்கள்கிழமை
வரச்சொல்லியிருந்தேன். ஆளைக்காணோம்!!! மரவேலைகளுக்கு
பாலிஷ் போட வரும் ஆளையும் காணோம். இருவருக்கும்
போன அடிச்சு அடிச்சு கைதான் வலிச்சிச்சு. :(( புதன் கிழமை
காலையில் வருவதாக சொன்னாங்க. நான் வந்து
உக்காந்திருந்தேன். அவங்களைக்காணோம்.

பாத்ரூம் கம்மோட் ஃபிட் செய்ய 3 நாள் ஆகும்னு
வியாழக்கிழமை வந்த ப்ளம்பர் சொன்னார்.
பீபீ ஏற ஆரம்பிசிச்சு. அன்னைக்கு வந்த பாலிஷ் காரர்
கையில சாமான் ஏதும் கொண்டு வராம அட்வான்ஸ்
பணம் கொடுங்கன்னு கேக்க நல்லா காய்ச்சு காய்ச்சின்னு
காய்ச்சி,”நாளைக்கு வா வேலையை முடி, பணம் தரேன்னு”
கத்தி அனுப்பினேன். கண்ணாடிக்கதவுகள் வந்து வெச்சாங்க.

இங்கே ஹைதையில் ஒரே ஒரு பிரச்சனை அது இங்கே
இருப்பவர்கள் “லேட் லத்தீபுகள்”. மெல்ல 12மணிக்குத்தான்
வேலையை ஆரம்பிப்பாங்க. மால்கள் கூட 11 மணிக்குத்தான்
திறக்கும்.ப்ளம்பர் டைல்ஸை உடைச்சு மட்டும் வெச்சிட்டாரு.
“கல் ஆகே ஃபிட் கரேங்கே மேடம்”(நாளைக்கு செய்யறாராம்)
அப்படின்னு போயிட்டாரு. நல்ல வேலை கீயிசர் வெச்சிட்டாரு.
12 மணிக்கு வந்து வேலை ஆரம்பிச்சா எப்ப
முடியும்? வெள்ளிக்கிழமை இரவாகியும் பாலிஷ் வேலை
முடியலை. ”இன்று போய் நாளைவா!!””ன்னு அனுப்பி
வெச்சிட்டு வீட்டுக்கு வந்து கட்டையை சாச்சதுதான் தெரியும்.

அடுத்த நாள் சனிக்கிழமை சாமான் எடுக்கறோம். காலேலியிருந்து
பேக்கிங் நடக்குது. அதுக்குள்ள அயித்தானும் பிள்ளைங்களும்
புத்தகங்களை கொண்டு போய் வெச்சிட்டு வந்தாங்க.
10.30மணிக்கு ”அமாலி” சாமான் எடுப்பவங்க வந்தாங்க.
4 பேர் சொல்லியிருந்தோம். 3 பேர்தான் வந்திருந்தாங்க.
பாலிஷ்காரங்க காத்திருப்பதா சொல்லவும் நானும் அம்ருதாவும்
கிளம்பி அங்கபோக கீழே வந்தா சின்னதா ஒரு ஆட்டோ நிக்குது.
நாங்க கேட்டிருந்ததோ பெரிய லாரி. ஒரே லாட்டுல அடிச்சிடலாம்னு!!

என்னய்யா??ன்னு கேட்டா,”ஹிஹி... அந்த லாரி வேற இடத்துக்கு
போயிருக்குன்னு!” சொல்ல இனி கத்தி ஒண்ணும் செய்ய முடியாது,
வேலை முடியனும்னு சாமானை ஏத்தி கொண்டுவந்தாங்க. 4 ட்ரிப்
தான் அடிச்சாங்க. ஆனா அதுக்கே சாயந்திரம் 5 மணி ஆக்கிட்டாங்கன்னா
எம்புட்டு நல்ல காரியக்காரங்கன்னு பாருங்க. :((

4 மணிவரைக்கு சோறு கூட சாப்பிடலை. நானும் அம்ருதாவும்
இங்கே, ஆஷிஷுஅயித்தானும் அங்கே!! எங்க சாப்பிட?
அப்புறம் 3ஆவது ட்ரிப்பின் போது அயித்தான் பாவ்பாஜி
வாங்கிட்டு வந்து கொடுக்க எல்லோரும் சாப்பிட்டோம்.
சக்ஸச்ஃபுல்லா கம்மோட் ஃபிட் செஞ்சிட்டாரு ப்ளம்பர்.
“ஷாம் தக் யூஸ் கர் சக்தே ஹே” அப்படின்னு சொல்ல
7.45மணிக்கு பழைய வீட்டுக்குப்போய் ஹீட்டர் போட்டு
குளிக்கலாம்னு போனா ட்ரான்ஸ்பார்மர் ஒண்ணு வெடிச்சு
நோ கரண்ட். :)) அரைமணிநேரம் வெயிட் செஞ்சு குளிச்சு
ஃப்ரெஷ்ஷாகி திரும்ப கொஞ்ச சாமான் எடுத்துகிட்டு புது
வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, கட்டையை அப்படி சாச்சோம்.

அடுத்த நாள் காலையில் எழுதிருக்கவே முடியவில்லை.
பசங்க பாவம். அதுவும் ஆஷிஷும் அம்ருதாவும்
மேலே ஏறி இறங்கி கால் ஒரே வலி. அடுத்தநாள்
முதல் பசங்க ஸ்கூலுக்கு போய் ஆகணுமேன்னு
நல்லா ரெஸ்ட் எடுக்க வெச்சேன். அந்த வீட்டைப்போல
ரெண்டு பேருக்கும் பஸ் வீட்டு வாசலிலேயே வருது.
அதைவிட குஷி காலையில் 30 நிமிடம் எக்ஸ்ட்ராவா
கிடைக்குது பசங்களுக்கு. அங்கே காலைல 7 மணிக்கு
பஸ். இங்கே 7.30க்குத்தான்.:))

அஷ்ட கஷ்ட பட்டாலும் சொந்த வீட்டுல இருப்பது
ஒரு சுகம். எதுவும் சுலபமா கிடைச்சிட்டா அதோட
அருமை தெரியாதுன்னு சொல்வாங்க. இந்த் வீட்டோட
அருமை பசங்களும் நல்லாவே உணர்ந்திருக்காங்க.
இன்னமும் சின்னச் சின்ன வேலைகள் பாக்கியிருக்கு.
மொத்த அப்பார்ட்மெண்ட்டில் எங்களையும் சேர்த்து
இரண்டு குடும்பம்தான் வந்திருக்கு. பெயிண்ட், வார்னிஷ்
வாசம்... சில ப்ளாட்டுகளில் டும் டும்னு மரவேலை
நடக்கும் சத்தம்... எல்லாவற்றுக்கும் இடையில்
வாழ துவங்கி 11 நாள் ஆயாச்சு.

HOME SWEET HOME!!!!


31 comments:

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க!வாழ்க! :)

pudugaithendral said...

வருக வருக

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் :)

pudugaithendral said...

நன்றி சிவா

ராமலக்ஷ்மி said...

வாழ்க வாழ்க வளமுடன்!

// 30 நிமிடம் எக்ஸ்ட்ராவா//

ஆமா அரைமணியானாலும் அந்தக் காலையிலே அமிர்தமாச்சே:)!

pudugaithendral said...

ஆமா அரைமணியானாலும் அந்தக் காலையிலே அமிர்தமாச்சே:)!//

வாங்க ராமலக்‌ஷ்மி,

ஆமாம் ரொம்பவே அமிர்தம். பசங்க நிதானமா சாப்பிட்டு கிளம்பலாம். இல்லாட்டி 6.30க்கே ப்ரேக்பாஸ்ட் சாப்பிடவேண்டி இருந்தது. எனக்கும் வேலையை அவசரப்படாம செய்ய முடியுது. முக்கியமா ஒரு இடத்துல உக்காந்து காபி குடிக்கலாம்:))

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள். புத்தம் புதிய வீட்டில் டிஸ்டம்பர், பெயிண்ட் வாசனையுடன் இருப்பதில் கூட ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது போல.... குழந்தைகளுக்கு அரை மணி நேரம் அதிகம் கிடைப்பது சந்தோஷமான செய்தி. இங்கே விரைக்கும் குளிரில் குழந்தைகள், 06.30 - 07.00 மணிக்கே ரெடியாகி பள்ளி வாகனத்திற்காக நிற்கும் நிலை.

மீண்டும் வாழ்த்துக்கள்....

துளசி கோபால் said...

அர மணியா!!!! ஆஹா..... அனுபவிக்கத்தான் வேணும்!

கொஞ்சநாளில் இந்த சத்தம் பழகிரும். அப்புறம் எல்லா ப்ளாட்டுக்கும் ஆட்கள் வந்துட்டாங்கன்னா அதுவும் ஒரு ஜாலிதான்.

சந்தோஷமா இருங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹோம் ஸ்வீட் ஹோம்..:)
குழந்தைகளுக்கு கூட அரமணி கிடைச்சது ரொம்ப நல்லது.. எஞ்சாய்ங்க..:)

Vidhya Chandrasekaran said...

மகிழ்வாய் உணர்கிறேன்.

வாழ்த்துகள் அக்கா.

ADHI VENKAT said...

நிறைவுப் பகுதி அழகா போட்டிருக்கீங்க. வாழ்த்துக்கள். இங்க தில்லியில் கூட காலைல 11 மணிக்கு மேல தான் கடையெல்லாம் திறப்பாங்க.

Chitra said...

Congratulations!!!!

வாழ்க வளமுடன்!

ஹுஸைனம்மா said...

// 30 நிமிடம் எக்ஸ்ட்ராவா//

ஹி..ஹி.. ஸேம் பிளட்.. இங்க 15 நிமிஷம்.. ஆனாலும் கோல்டன் டைம்ஸ்தான்..

/அஷ்ட கஷ்ட பட்டாலும் சொந்த வீட்டுல இருப்பது ஒரு சுகம்//

அதே, அதே!!

//வாழ துவங்கி 11 நாள் ஆயாச்சு.//

அதுக்குள்ளே 6 பதிவும் போட்டாச்சு!! ஓவர் ஸ்பீடா இருக்குதே? ;-)))))

சாந்தி மாரியப்பன் said...

எங்க பில்டிங்கிலும் நாங்கதான் முதல்ல குடிபோனோம்.. அனேகமா பத்துப்பதினஞ்சு நாளுக்கப்புறம்தான் ரெண்டாவது ஃபேமிலி வந்துச்சு.. அதுவரை ஒர்ரே பூத்பங்களா எஃபெக்ட்டுதான் :-))

pudugaithendral said...

வாங்க வெங்கட்,

விரைக்கும் குளிரில் கஷ்டமாத்தான் இருக்கும். வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

அதுவும் ஒரு சுகம் தான். வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க கயல்,

எஞ்சாயோ எஞ்சாய் தான் :))

pudugaithendral said...

நன்றி வித்யா

pudugaithendral said...

நன்றி கோவை2தில்லி,

பெங்களூர் கூட அப்படித்தான். இலங்கையில் இருந்தப்போ அங்கே சீக்கிரமா கடை திறந்து சீக்கிரமா மூடிடுவாங்க. சாயந்திரம் எழுமணிக்கு கடை மூடிடுவாங்க. எனக்கு பகல் 12 மணிக்குள்ள பர்ச்சேசிங் எல்லாம் முடிஞ்சிடும். வெயில் உச்சியில இருக்கும்பொழுது வீட்டுக்கு வந்திடலாம். இப்ப நிலமை வேறயா இருக்கு. உச்சிவெயிலில் வெளியே போனாத்தான் எதுவும் செய்யமுடியும்ங்கும் போது கஷ்டமா இருக்கு.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி சித்ரா

pudugaithendral said...

அதுக்குள்ளே 6 பதிவும் போட்டாச்சு!! ஓவர் ஸ்பீடா இருக்குதே? ;-)))))//

ஏதோ இந்த வீட்டுவேலைகள் வந்ததால நீங்கள்லாம் இத்தனைநாளா தப்பிச்சிருந்தீங்க. இனி உங்களை எல்லாம் அந்த ஆண்டவன் தான் காப்பாத்தணும். சீக்கிரமா 1000ம் பதிவுகள் போட்டு விழா கொண்டாட வேண்டாமா??!! :))))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

அதுவரை ஒர்ரே பூத்பங்களா எஃபெக்ட்டுதான் :-))//

:)) நம்மளைக்கண்டு எதுவும் ஓடிடும் பாருங்க.

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் தென்றல் . என்னவோ நாங்களே வேலை செய்த அலுப்பு உங்க வார்த்தைகள் உணர வைக்கிறது. புது வீட்டில் மிக மிக சந்தோஷமாக இருக்க வேண்டும்.
பிறகு வீட்டின் படங்அள் போடுங்கள். இங்கிருந்தே பர்த்து ரசிக்கிறேன்:)

Thamira said...

நீங்க கட்டுரையை முடிச்ச அழகுல.. அப்பாடின்னு எங்களுக்கே அத்தனை அவஸ்தைக்கு அப்புறம் வீடு குடிபோன மாதிரி ஒரு நிம்மதியும், மகிழ்ச்சியும்.

வாழ்த்துகள்.!

குட்டீஸ்க்கு என் அன்பு.!

கோபிநாத் said...

யப்பா...!!!!!

கடைசி பத்தியை அப்படியே ஒரு ரீப்பிட்டே ;)

மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;)

அமுதா said...

வாழ்த்துக்கள் தென்றல்!!!! புதுவீட்டில் என்றென்றும் தென்றல் வீச...

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

சீக்கிரமா படங்கள் போடுறேன். உங்கள் ஆசிர்வாதத்துக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

அத்தனை அவஸ்தைக்கு அப்புறம் வீடு குடிபோன மாதிரி ஒரு நிம்மதியும், மகிழ்ச்சியும்.//

:))) நன்றி ஃப்ரெண்ட். குட்டீஸுகளுக்குச் சொல்லிடறேன்.

pudugaithendral said...

வாங்க கோபி,

மிக்க நன்றி

pudugaithendral said...

நன்றி அமுதா,

எங்க ரொம்ப நாளா உங்களையும் காணோம்???

அன்புடன் அருணா said...

ஆஹா !!பதிவுக்கு ஒன்று புது வீட்டுக்கு ஒன்றாக ரெண்டு பூங்கொத்து!!