Thursday, January 13, 2011

கோதவரித்தாயே!!! உனக்கா இந்த நிலை!!!!1


சொட்டு சொட்டா சொட்டி, குளம்போல இருக்கும் கோதாவரியை பாத்தாச்சு.
சுழித்து ஓடும் கோதாவரியைப் பாக்கனுமேன்னு ஆசை. சித்தப்பா கூட்டிகிட்டு
போனாரு. பத்ராசலத்தில் ஓடும் நதி, பாபிகொண்ட ட்ரிப் (போட்டில்
போனேனே! ஞாபகம் இருக்கா? இல்லாட்டி இங்க ஒரு எட்டு போய்
பாத்திட்டு வாங்க.) இதெயெல்லாம் நினைச்சுகிட்டு அங்க போனா...???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். மழை நேரத்துல மொத்த இடமும்
மறைஞ்சு போயிடுமாம். இப்ப இவ்வளவுதான் தண்ணி!!!


சரி அதுவாவது சுத்தமா இருக்கான்னு பாத்தா??? ப்ச்...
அதுல ஓடுறது தண்ணியே இல்லை. சுத்தி இருக்கும் ஆலைகளிலிருந்து
வரும் கழிவுதான்!!!! எங்கயோ பிறந்து கல்யாணம் செஞ்சுகிட்டு
போன இடத்துல கஷ்டபடற பொண்ணுவிட கேவலம். பிறந்த
வீட்டுலேயே கொடுமை நடக்குது!!! இங்கே இவ்வளவு கேவலமா
இருக்கும் கோதாவரி சுழித்து ஓடும் தெய்வீக நதியாக பத்ராசலம்,
ராஜமுந்திரி பக்கம் வருவது எப்புடி???? கடவுளே!!!


அப்புறம் ஒரே குழப்பம். பத்ராசலம் போனபோது லட்சுமண சூர்ப்பனகையின்
மூக்கை அறுத்த இடம், இராவணன் சீதையை அபகரித்த இடம், சீதை
குளித்து, புடவை ஆறப்போட்ட இடம் என பல இடங்கள் பார்த்தோம்.
இங்கே நாசிக்கிலும் லட்சுமண் ரேகா என்று ஒரு இடம். அங்கேதான்
சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததாக இந்தச் சிலை வைத்திருக்கிறார்கள்.

சூர்ப்பனகைக்கு இன்னொரு பெயர். நாசிகா. அவளது பெயரால்
தான் இந்த இடத்திற்கு நாசிக் என்று பெயர் வந்திருக்கிறது.

இப்போழுது இருக்கும் இந்தியவரைபடத்திற்கும் இராமயண கால
வரைபடத்திருக்கும் வித்தியாசம் இருந்திருக்கும். இதுவும்
கோதாவரி தீரம்,அதுவும் கோதாவரி தீரம். எல்லாம் பக்கத்துலேயே
தான் இருந்திருக்கும்.


இன்னொரு முக்கிய விஷயம் இங்கே கோதாவரியோடு கபில
தீர்த்தமும் வந்து இணைகிறது.

சீதை தன் இரு குமாரர்களுடன் இருப்பது போல சிலையும்
வைத்திருக்கிறார்கள்.


நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க. ஆனா விஞ்ஞான
முன்னேற்றத்திற்கு நாம் பலிகொடுப்பது நதிகளை என்றால் அதன்
விளைவுகள் மோசமானதால்ல இருக்கும்?? இதைப்பத்தி
அரசாங்கம் ஏதும் செய்யாமல் இருப்பது மனதுக்கு வேதனையாத்தான்
இருக்கு. புலிகளுக்காக குரல் எழுப்பவது போல( save tigers)
இனி நதிகளை மாசுபடுத்துவதற்கும் குரல் எழுப்ப வேண்டியது
மிக அவசியாகிகிட்டு வருதுன்னு நினைக்கிறேன்.

பதிவு பெருசா போனதால... மீதி அடுத்த பதிவுல.

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

பயண அனுபவம் இனிமை. கோதாவரி மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள பெரும்பாலான நதிகளின் நிலை இதுதான் - தண்ணீரைவிட கழிவுகளே அதிகம் இருக்கிறது :(

அமைதிச்சாரல் said...

நதியெல்லாம் சாக்கடையாக்கி ரொம்ப காலமாச்சுப்பா..

புதுகைத் தென்றல் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருந்ததக்க விஷயமாச்சே!!

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆனா இங்கே ஆந்திராவுல கிருஷ்ணாவும் சரி கோதாவரியும் சரி கொஞ்சம் நல்லாவே இருக்குதுன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.

கோவை2தில்லி said...

பயணக் கட்டுரை நன்று. தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீரை நதிகளில் கலப்பதால் உடல் நலக் கேடுகளும் வருகிறது. எப்பொழுது மாறுமோ?

வல்லிசிம்ஹன் said...

அதுவும் நீங்கள் அங்கே போனது இப்பதானே தென்றல். மழை நீரால் நிரம்பி இருக்கும் என்றுதான் நினைத்தேன்.
அங்குமா இந்தக் கேவலம்.

அப்பாவி தங்கமணி said...

Super rounding pola irukke akka...

Godhavarinu oru super telugu padam kooda vandhadhe... after seeing that I wanted to go there once

Naasik peyar vandha kadhai never heard, thanks for sharing

Nice post...waiting for more...

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

//தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீரை நதிகளில் கலப்பதால் உடல் நலக் கேடுகளும் வருகிறது. எப்பொழுது மாறுமோ?

அதான்ப்பா கொடுமையே!!

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

எனக்கும் செம ஷாக் தான். வருகைக்கு நன்றிம்மா

புதுகைத் தென்றல் said...

வாங்க புவனா,

அந்த கோதாவரி படம் பார்த்து ட்ரிப் போனது பத்ராசலத்துக்கு பக்கத்துல. அதைப்பத்தி முன்னாடி பதிவு எழுதி லிங்க் கொடுத்திருக்கேன். நல்ல ரவுண்டிங் தான்.

வருகைக்கு நன்றி

priya.r said...

நல்ல பதிவு தென்றல் அக்கா !
நேற்றே வந்து கமண்ட்ஸ் போட்டு போனேன் அக்கா!
என்ன ஆகிற்று என்று தெரியவில்லை ?!

கரை புரண்டு ஓடும் கோதாவரி என்று படித்து இருக்கிறேன் ;தற்போதுள்ள நிலை மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது .,
எங்கள் ஊரான மேட்டூர் அணையில் காவிரி நீர் நிறைந்து இருப்பது சற்று ஆறுதலான விஷயம் !

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு திருநாள் வாழ்த்துக்கள் !