விழவேண்டும் என்பது போல இருக்கிறது நாசிக். நாசிக்கிலிருந்து
45 நிமிட பயணத்தில் இருக்கிறது த்ரயம்பகம். ஜோதிர்லிங்கங்கலில்
ஒன்று இந்த த்ரயம்பகம். ஜனவரி 1 ப்ரதோஷமாம். அதுவும்
சனிபிரதோஷம். மிக மிக விசேஷம். இது ஏதும் தெரியாமல்
அங்கே ஓரளவு கூட்டத்தை எதிர்பார்த்துச் சென்ற எனக்கு
செம கூட்டம் பார்த்து கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தது.
வரிசையில் நின்றிருந்தோம். திடும்மென எல்லோரும் கோவிலின்
பின்புறம் இருக்கும் இடத்திற்கு வரவும் அந்த வழியாக தரிசனம்
என்று சொல்ல கடைசியில் நின்றிருந்த நாங்கள் ஓடி கம்பிகளுக்குள்
புகுந்து முதலில் நின்றோம். இந்த வழியாக மஹாசிவராத்திரியின்
போதுதான் தரிசனத்திற்கு அனுமதிப்பார்களாம்.
நாங்கள் சென்ற பொழுது மஹா பூஜை ஆரம்பமாகி விட்டது
சீக்கிரம் தரிசனம் செய்து வரும்படி அறிவிப்பு நடந்து கொண்டிருந்தது.
தள்ளுமுள்ளு கூட்டம். திருப்பதியில் நடக்கும் ”ஜரகண்டி” போல
கையை பிடித்து தள்ளியே விட்டுக்கொண்டிருந்தார்கள் போலிஸார்.
1 நிமிடம் கூட நின்று தரிசிக்க விடாமல் அப்படி என்ன என்று
கத்திவிட்டேன்.” அவ்வளவு தூரத்திலிருந்து தரிசனத்திற்கு வருகிறோம்.
இப்படியா நடத்துவீர்கள்!!” என்று சீர ஓரமாக நின்று கண்ணாடியில்
தெரியும் பிம்பத்தை தரிசிக்க அனுமதித்தார் ஒரு பெண்போலிஸ்.
இந்த ஜோதிர்லிங்கத்தில் லிங்கத்தின் மேல்பாகம் இல்லாமல் இருப்பது
விசேஷம். இதோ கோபுர தரிசனம்.
ருத்ரனின் ரூபமாக போற்றி அணியப்படும் ருத்ராட்சங்கள் விற்றுக்
கொண்டிருந்தார்கள். பஞ்சமுகி, சதுர்முகின்னு சொல்வாங்க. நமக்கு
தெரியாம ஏமாந்திடக்கூடாதுன்னு போட்டோ மட்டும் எடுத்துகிட்டோம்.
நாகலிங்கம் மாதிரி இருந்த ருத்ராட்சம் ஒட்டினதா? தானா வளர்ந்ததான்னு
இப்ப வரைக்கும் சந்தேகம் தான் எனக்கு.!!
கோவிலுக்கு செல்லும் முன் கூட்டம் கூட்டமாக மாடுகள்,
அவற்றிற்கு அருகில் அகத்திக்கீரைகள் விற்கும் அம்மணிகள்.
கோவிலுக்கு போய் வந்தபின் மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுத்தோம்.
த்ரயம்பகத்தில் இன்னொரு சிறப்பு சுற்றி அமைந்திருக்கும் சைய்யாதிரி
மலையில் 2 மணிநேரம் ஏறி பார்த்தால் கோதாவரி உற்பத்தி ஆகும்
இடத்தை பார்க்கலாம். அங்கே சொட்டிக்கொண்டுதான் இருக்குமாம்.
நமக்கு அதெல்லாம அகாது என்பதால் என்னைப்போன்ற சோம்பேறிகளுக்காக
நந்தி வாயிலிருந்து கொட்டும் கோதாவரி ஒரு குளமாக அடிவாரத்தில்
இருக்கிறது. அதைப் பார்த்து ப்ரோட்சனம் செய்து கொண்டோம்.
இங்கே குளித்தால் கோதாவரி ஸ்நானம். த்ர்யம்பகத்தில் பித்ரு காரியங்கள்
(இறந்தவர்களுக்கு செய்வது) செய்கிறார்கள். கோவிலுக்கு அருகிலேயே
இவை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சு
விஷ்ணு அனந்த சயனமாக படுத்திருக்க அதற்கு பக்கத்தில்
சின்ன குழியில் எடுக்க எடுக்க தண்ணீர் வந்து கொண்டே
இருக்கிறது. மேலெ மலையிலிருந்து வரும் கோதாவரியாம்
அது. நாமே எடுத்து விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்யலாம்.
எப்பவும் சிவன் தான் அபிஷேகப்பிரியராக தலைக்கு மேலே
தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும். இங்கே விஷ்ணு!!
சின்னதாக கறுப்பாக அழகாக இருக்கிறது.
த்ர்யம்பகம் செல்லும் வழியில் அஞ்சனேரி என்று ஒரு இடம்.
இதுதான் அனுமன் பிறந்த இடமாம். பார்க்க போகலாம் சித்தப்பான்னு
சொன்னேன். மலைமேல ஏறணும்னு சொன்னது, நான் இங்கயே
இருந்து மனசால தரிசனம் செஞ்சுக்கறேன்னு சொல்லிட்டேன். :)
மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம். கேட்பது மகா புண்ணியம்.
|
நேற்றைய பதிவில் சொல்லியிருந்த படி குஜராத்தி சாப்பாடு
சாப்பிட்டோம். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு. நாம
எம்மாத்திரம். தூக்கம் சொக்க எல்லோரும் வீட்டுக்குபோய் நல்லா
தூங்கி எந்திரிச்சு, சூடா டீ குடிச்சு, கிளம்பியாச்சு!
எங்க போனோம். அடுத்த பதிவுல...
13 comments:
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்
உங்கள் தயவில் எங்களுக்கும் ஜோதிர்லிங்கத்தில் த்ரயம்பக தரிசனம். மிக்க நன்றி சகோ.
புகைப்படங்களும் கட்டுரையும் அருமை. எல்லா இடத்திலும் இந்த ஜருகண்டி தொல்லைதான் சகிக்க முடிவதில்லை.
நன்றி சமுத்ரா
வாங்க வெங்கட் நாகராஜ்,
எல்லா இடத்திலும் இந்த ஜருகண்டி தொல்லைதான் சகிக்க முடிவதில்லை.//
மக்கள் தொகை அதிகமாகப்போனதின் பலனா? இல்லை பக்தி பெருகிப்போச்சா புரியலை. ம்ம்ம்ம்
வருகைக்கு நன்றி
ஜோதிர் லிங்க தரிசனத்திற்கு நன்றி. மக்கள்தொகையும் அதிகம் ,வாழ்வில் நிம்மதிக்காக கோவில் செல்வோரும் அதிகம்.
//
த்ரயம்பகம் எஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம்..."/
த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்
நாங்க போன போதும் செம கூட்டம்.ஆனால், தள்ளுமுள்ளு இல்லாமல் தரிசனம் நல்லா கிடைத்தது.
புகைப்படங்களும், கட்டுரையும் அருமை. இந்த ம்ருத்யுஞ்சய மந்திரத்தை கேட்டால் மரண பயம் அகலும் என்று சொல்வார்கள். பகிர்வுக்கு நன்றி.
மக்கள்தொகையும் அதிகம் ,வாழ்வில் நிம்மதிக்காக கோவில் செல்வோரும் அதிகம்.//
வாங்க எல்கே,
அதுவும் சரிதான்.
//த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்//
சுட்டிகாட்டியதற்கு நன்றி இதோ மாத்திடறேன்.
வாங்க அமுதா,
நீங்களும் போயிருக்கீங்களா? ரொம்ப சந்தோஷம். நான் போனது ஜனவரி1 + ப்ரதோஷம் அதுவும் சனிப்ரதோஷமாச்சே. அதான் அம்புட்டு கூட்டம். :))
வருகைக்கு நன்றி
வாங்க கோவை2தில்லி,
ம்ருதுயுஞ்சய மந்திரத்தின் மகிமையே மகிமை.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
கோபுரதரிசனம் கோடி புண்ணியம்.. கும்புட்டுக்கறேன் :-)
அங்கயும் ஜருகண்டி வந்துட்டதா.அருமையான பதிவு.
Post a Comment