Tuesday, January 11, 2011

முக்திதாம் தரிசனம்

நாசிக் போய் சேரும் பொழுது மதியம் 2 மணி. நாசிக்கில் அயித்தானின்
அக்கா மகள் இருக்கிறார். அவரும் எங்களுடன் ஷீரடிக்கு வந்திருந்தார்.
நல்ல பசி. சித்தப்பா அழைத்துச் சென்றது ஒரு சூப்பரான பஞ்சாபி
ரெஸ்டாரண்டுக்கு. சின்னதாக ஆரம்பித்து இப்போது அந்த இடத்திற்கு
முன்னால் டெண்ட் போல போட்டு எக்ஸ்டண்ட் செய்திருக்கிறார்கள்.
அருமையான சுவையான உணவு. லஸ்ஸி...ம்ம்ம்ம் யம்மி!!

அடுத்து அந்த ஹோட்டலுக்கு எதிரே இருக்கும் முக்திதாமுக்கு
சென்றோம்.


நாசிக்கிற்கு செல்லும்பொழுது கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடம் இது.
எல்லா தெய்வங்களையும் ஒருங்கே இங்கே பார்த்துவிடலாம். எந்த ஊரில்
தெய்வம் எப்படி இருக்குமோ அதே போல் வைத்திருக்கிறார்கள். இதை
உருவாக்கியது மறைந்த ஸ்ரீஜெயராம்பாய் எனும் அம்மையார்.
12 ஜோதிர்லிங்கங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.
மார்பிளில் அமைந்திருக்கும் இந்த இடம் சுத்தமோ சுத்தமாக,
பக்தி ததும்ப வடிவமைத்திருக்கிறார்கள். புகைப்படம்,வீடியோவிற்கு
அனுமதி இல்லை. பகவத் கீதையின் 13 அத்தியாங்களையும் உள்புற
சுவற்றில் வடிவமைத்திருக்கிறார்கள்.
இதுதான் முக்திதாமின் முகத்துவாரம்:ஆனால் இங்கே இருந்த கார்த்திக்ஸ்வாமி(அதான் நம்ம முருகன்) சிலை
இருந்த இடத்திற்கு மட்டும் தடுப்பு போட்டு பெண்களுக்கு அனுமதி
இல்லைன்னு வெச்சிருந்தாங்க. மராத்தியர்கள் வழக்கப்படி முருகன்
பேச்சிலர் :) அதனால அவரைப்பார்த்தா கல்யாணம் ஆகாம போயிடும்னு
நினைப்புன்னு சித்தப்பா சொன்னாரு. நமக்கு பிள்ளையார் பேச்சிலர்.
ஆனா வடக்கே அவருக்கு 2 மனைவி, பிள்ளையாருக்கு தங்கச்சி
சந்தோஷிமாதான்னு சொல்வாங்க. தெற்கே முருகனுக்கு 2 மனைவி!!

ஷீரடி, பண்டரிபுரம் என எல்லா இடத்துக்கு ஒரு ரவுண்ட் போயிட்டு
வந்தாப்ல இருந்தது முக்திதாம்.

அடுத்த நாள் (ஜனவரி1) லஞ்சுக்கு எனக்கு குஜராத்தி சாப்பாடுதான்
வேணும்னு சொன்னதும் சித்தப்பா கூட்டிகிட்டு வந்தது முக்திதாமுக்குதான்!!!
கோவிலுக்கு வலப்பக்கத்தில் இருக்கும் HOTEL PUROHIT YATRI -NASIK ROAD,
இங்கே கூட்டமா இருந்தாலும் ரிசர்வ் செஞ்சு பொறுமையா இருந்து
அந்த சாப்பாட்டை ரசிக்கணும். அன்லிமிட்டட் சப்பாத்தி, சோறு,
கறிவகைகள். ஒரு ப்ளேட் 100 ரூபாய்தான். செம ருசி. அதுவும்
மினி கச்சோரி டேஸ்ட் இப்பவும் நாக்குலயே இருக்கு!!

இரவு டின்னருக்கு போனீங்கன்னா குஜராத்தி கிச்சடி + கடி எஞ்சாய்
செய்யலாம். மதிய சாப்பாட்டுக்கும் கடி(நம்ம ஊர் மோர்க்குழம்பு,
வித்தியாசமாய் இருக்கும்) உண்டு. சாப்பாட்டோட உபசரிப்பு
சொல்லப்பட வேண்டிய விஷயம். அன்னைக்கு செம கூட்டம்.
ஹோட்டலின் உரிமையாளரும் பரிமாறி வந்தவங்களை சரியா
கவனிச்சது சூப்பர்னு பாரட்டவேண்டிய விஷயம்.

இந்த ஹோட்டல் காரங்களுக்கு ரொம்பதான் தெகிரியம்.
“எங்கள் வாடிக்கையாளர்கள் தாரளமாக எங்கள் ஹோட்டல்
சமையலறையை பார்வை இடலாம்னு” போர்டே வெச்சிருக்காங்க.
அவங்களோட சுத்தத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை!! அதிக
கூட்டமா இருந்ததால் போய் தொந்திரவு செய்ய வேணாம்னு
வந்திட்டேன். இல்லாட்டி போய் போட்டோ எடுத்திருப்பேன்.
குடிக்க கொடுக்கும் தண்ணீர் கூட சுத்தீர்கரிக்கப்பட்டதுதான்.

மொத்ததத்துல முக்திதாம் போனா மனசுக்கும் இதம்,
வயித்துக்கும் இதம்.

HOTE PUROHIT YATRI,
PURELY VEGETARIAN GUJ.THALI RESTAURANT,
BEHIND PUNJAB NATIONAL BANK,
MUKTIDHAM TEPLE,
NASHIK ROAD - 422 101
PHONE 0253-2463883


18 comments:

ஷர்புதீன் said...

:)
பணம் அச்சடிக்கும் ஊரில் செலவா!! (அட கவிதை!!!?)

Chitra said...

அருமையான பகிர்வு. நன்றி.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஷர்புதீன்,

சித்தப்பா வேலை செய்வது அந்த பிரஸ்ஸில்தான். 2 கட்டு மட்டும் கொடுங்க போதும்னு சொல்லி வெச்சிருக்கேன் :))

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி சித்ரா

அமைதிச்சாரல் said...

நாசிக்கில் காலாராம் மந்திர்,அப்புறம் பஞ்சவடி தரிசனம் செஞ்சீங்களாப்பா.. ரொம்ப பழமையான கோவில்கள். இங்கேதான் லஷ்மணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்ததா சொல்லுவாங்க. அதான் நாசிக்ன்னு பேர் வந்ததாம் :-))

நோட்டு அச்சடிக்கிற இடத்துக்கும் ஒரு சுற்றுலா போயி எங்களுக்கு படம் காமிச்சிருக்கலாமுல்ல :-))))))

புதுகைத் தென்றல் said...

நோட்டு அச்சடிக்கிற இடத்துக்கும் ஒரு சுற்றுலா போயி எங்களுக்கு படம் காமிச்சிருக்கலாமுல்ல :-))))))//

வெளிலேர்ந்து போட்டோ எடுக்கறேன்னு சொன்னதுக்கே சித்தப்பா,”தாயே! திங்கக்கிழமை நான் ஆபீஸ் போகணுமா வேணாமான்னு !!” கேட்டாரு. செம செக்யூரிட்டி. :))

அன்புடன் அருணா said...

நிறைய புது தகவல்கள் !நன்றி!

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி அருணா

RVS said...

//கார்த்திக்ஸ்வாமி// அப்படியா கூப்புடறாங்க.. நல்ல பெயர்..

எனக்கும் ரெண்டு கட்டு வேணும்.. ப்ளீஸ். ;-)

கோவை2தில்லி said...

சுற்றுளா, சாப்பாடு வெரைட்டிகள், சுத்தம் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் அழகாக விவரித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி சகோ.

priya.r said...

நல்ல பதிவுங்க .,முக்தி தாம் பற்றி தெரிந்து

கொள்ள உதவியதற்கு நன்றி

இந்த மாதிரி புண்ணிய இடங்களை பார்க்க

ஆவலாக இருக்கிறது .,

ஆமாம் ;நீங்க 707 பதிவுகளை இது வரை

போட்டு இருக்கீங்களா ! என்ன ஒரு கடின உழைப்பு !

சிறந்த சாதனை ! உங்களுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்
தங்களை போன்ற கல்வியாளர்களும் சாதனையாளர்களும் நேரம் ஒதுக்கி எனது ப்லோகுக்கு வந்து

எனது இளைய மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னதற்கு மிக்க நன்றி தென்றல் மேடம்....

Today You made my day madam!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல் வெகு நாட்களுக்குப் பிறகு இப்பதான் வருகிறேன். ஸ்ரீ சாயிபாபா தரிசனத்துக்கு வந்துஇருக்கிறிர்களா. இனிக் கட்டாயம் நான் படித்தே ஆக வேண்டும். மிக மிக நன்றி.
சாரல் சொல்லி இருப்பது போல ஸ்ரீ ராமாயணத்தின் பல காட்சிகள் இங்கே நடந்தேறியதாகத் திரு வேளுக்குடி சொல்வார்.

புதுகைத் தென்றல் said...

வாங்க ஆர்வீஎஸ்,

தாரளமா இரண்டு கட்டு எடுத்துக்கோங்க. வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

சாப்பாட்டு பத்தி சொல்லி வயிற்றெரிச்சலை கொட்டிகாட்டா தின்னது செமிக்காதுல்ல. :)))
வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

புதுகைத் தென்றல் said...

Today You made my day madam!//

வாங்க ப்ரியா,

மேடம்னெல்லாம் கூப்பிட்டு அன்னியபடுத்திடாதீங்க. எல்லோருக்கும் தென்றல் தான். வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

மகனின் பிறந்தாளுக்கு செல்லவேணுமென திட்டமிட்டு தள்ளி போய், வருடக்கடைசியில் வரவழைத்து எங்கள் கையால் சேவையும் செய்து கொண்டார். வருகைக்குமிக்க நன்றி