இராமயணத்திற்கும் நாசிக்கிற்கும் தொடர்பு இருக்கிறது. வனவாசத்திற்கு
புறப்பட்ட இராமர், சீதை லட்சுமணருடன் தங்கியது இங்கே தான்.
அதுவும் பஞ்சவடியில் (பஞ்ச=5, வடி= மரம்) 5 ஆலமரங்கள் இருக்கும்
இடத்திற்கு பஞ்சவடியென்று பெயர். அங்கு செல்வதற்கு முன் இந்த
த்ரிவேணி சங்கமம் சென்றோம். கங்கா காட் என்று அழைக்கப்படும்
இந்த இடத்தில் அருணா,வருணா,கோதாவரி ஆகிய 3 நதிகளும்
சங்கமிக்கின்றன்.
பல்லக்கில் சாமியை ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என
ஒரு பெண் வீதியை அடைத்து கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.
மிக நேர்த்தியாக அந்தப் பெண் போட்டுக்கொண்டிருந்ததை அனைவரும்
பார்த்துக்கொண்டிருந்தனர். இதோ அந்தக்கோலம்.
இதுதான் கபிலேஷவரர் கோவில். இந்தக்கோவிலில் ஒரு சிறப்பு
உண்டு. இங்கே நந்தி கிடையாது. நந்தி இல்லாத சிவன் கோவிலே
கிடையாது. ஆனால் இங்கே மட்டும் ஏன் விதிவிலக்கு? சிவனுக்கு
ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை நந்திதேவர் தீர்த்துவைத்தாராம். சொல்லிகொடுப்பவர்
எவரும் குரு. எனவே சிவன் இங்கே தனக்கு குருவாக இருந்து நந்திதேவர்
உபதேசித்ததால் நந்திதேவர் இங்கே இருக்கவேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
நகரத்தார் உருவாக்கியிருக்கும் முருகன் கோவில் ஒன்று தரிசித்தோம்.
நகரத்தார் வீடு போன்ற அமைப்பில் முற்றத்தில் அழகன் முருகன்
அமர்ந்திருக்கிறான். புத்தாண்டு அன்று என்னை தரிசிக்காமல்
இருக்கவேண்டாமென அப்பன் முருகன் தரிசனம் தந்துவிட்டான்.
அங்கேயிருந்து “காலாராம் கோவில்” சென்றோம். கருங்கல் சிலையில்
சீதா,ராமர், லட்சுமண உருவங்கள். 1782ஆம் ஆண்டு கட்டப்பட்ட
கோவில் இது. அங்கேயிருந்து நடக்கும் தூரத்தில்
பஞ்சவடி. இங்கே சீதாகுகை இருக்கிறது. உள்ளே கஷ்டபட்டு நுழைந்து
பார்த்தால் சீதா பூஜித்த சிவலிங்கம் தெரியும். இங்கேயிருந்துதான் சீதையை
இராவணன் கடத்தி சென்றதாக சொல்கிறார்கள். எதிரில் பத்ராசலத்தில்
வைத்திருப்பது போல ராவணன் சீதை அபகரிப்பதை வண்ண சிற்பங்களாக
அமைத்து வைத்திருக்கிறார்கள்.
நாசிக் ட்ரிப்பில் ரசித்து ரசித்து சாப்பிட்ட அயிட்டங்கள்!!!
மஹாராஷ்ட்ராவில் பிரசித்தமான வடாபாவ். ம்ம்ம்ம்ம்
ஒருகாலத்தில் எனது நித்திய உணவாக இருந்த ஐட்டம்.
பசங்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. அதுவும் நாசிக்கில்
வாசுதேவ் எனும் கடையில் கிடைக்கும் வடாபாவ் சூப்பர்.
அப்புறம் மஹாராஷ்ட்ரர்கள் மட்டும் அறிந்திருக்கும் ஒரு ஷ்பெஷல்
“மிசல் பாவ்”. சாப்பிட்டால் முகமெல்லாம் வியர்த்து கொட்டும்.
எஸ்ஸு கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால் நல்ல சத்து.
முளைகட்டிய பயறுகளால் செய்யப்படுவது. சப்ஜி மாதிரி.
அதை ப்ரட்டுடன் சாப்பிடவேண்டும். புனேவில்தான் சூப்பராக
இருக்கும். நாசிக்கிலும் ரசித்தேன்.
அப்புறம் இருக்கவே இருக்கு. காந்தா போஹா. வெங்காயம்
போட்டு செய்யப்படும் அவல் உப்புமா.
நாசிக்கில் கிடைக்கும் சிவ்டா( chivda) கொஞ்சம் காரமாக இருக்கும். ஆனால்
இந்த லக்ஷ்மிநாராயண் சிவ்டா கொஞ்சம் இனிப்பாக நன்றாக் இருக்கும்.
2 பாக்கெட் வாங்கிக்கொண்டேன். அடுத்த முறை நீங்கள் யாரும்
நாசிக்கோ, பூனேவோ சென்றால் இதை ருசி பார்க்க மறக்காதீர்கள்.
செல்லும் இடத்தில் சிறப்பான இடங்களை பார்ப்பது மட்டுமல்லாமல்
அந்த இடத்தின் ப்ர்த்யேகமான உணவு பதார்த்தங்களையும் ருசி
பார்த்தால்தான் அந்த இடத்தின் கலாசாரத்தை நாம் புரிந்து
கொள்ள முடியும். உணவு கலாசாரத்தின் ஒரு அங்கமாயிற்றே!!!
இத்தோடு ஷனிசிங்கனாபூர், ஷீரடி, நாசிக் பயண குறிப்புக்கள் முடிந்தது.
14 comments:
:)
வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி ஷர்புதீன். புது போட்டோ நல்லா இருக்கு. :)
நாசிக்கில் என் நண்பர் இருக்கிறார். சென்னை வரப்ப வாங்கிட்டு வர சொல்றேன் அதை. பஞ்சவடி ரெண்டு மூன்று இடம் இப்படிதான் குறிப்பிடப் படுகிறது. எது சரியான இடம் என்று தெரியவில்லை . சேலம் அருகில் பொய்மான் கரன் என்று ஒரு இடம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்த்தால் அந்தக் கரட்டில் மான் நிற்ப்பது போல் காட்சி அளிக்கும்
மஹாராஷ்ட்ராவின் தேசிய உணவா வடா பாவை அறிவிச்சுருக்காங்க :-)))
வாங்க எல்கே,
//நாசிக்கில் என் நண்பர் இருக்கிறார். சென்னை வரப்ப வாங்கிட்டு வர சொல்றேன் அதை. //
சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுங்க.
பஞ்சவடி ரெண்டு மூன்று இடம் இப்படிதான் குறிப்பிடப் படுகிறது. எது சரியான இடம் என்று தெரியவில்லை . //
இங்கயும் அந்தக் குழப்பம் இருக்கு. பத்ராசல்ம் பக்கத்துல இராமர் இருந்தப்பதான் சீதையை தூக்கிகிட்டு போனதா சொல்றாங்க.
வருகைக்கு நன்றி
வாங்க எல்கே,
அதுக்கு போட்டியா தாக்கரே&கோ காந்தா போஹாவுக்கு சப்போர்ட் செய்யறாங்க.
வருகைக்கு நன்றி
நல்ல பகிர்வு. வடாபாவ் கொடுத்து முடிச்சு இருக்கீங்க! நன்றி.
பயணக் கட்டுரை அழகாய் இருந்தது.
சாமிக்கு சாமி. சாப்பாடுக்குச் சாப்பாடு:)
நாசிக்கைத்தான் திரு வேளுக்குடி சீதை அபஹரிக்கப்பட்ட இடம் என்று சொல்வார்.அந்த உணவுப் பண்டங்களப் பார்க்கும்போது மீண்டும் பூனா போக ஆசையாக இருக்கிறது.
வாங்க வெங்கட்,
வருகைக்கு நன்றி
நன்றி கோவை2தில்லி
சாமிக்கு சாமி. சாப்பாடுக்குச் சாப்பாடு:)//
ஆமாம் வல்லிம்மா,
வருகைக்கு நன்றி
அய். நானும் புனேயில் இருந்த போது ஒருமுறை நாசிக் வந்து த்ரிம்பகேஸ்வரரை தரிசித்து பஞ்சவடி பார்த்திருக்கிறேன். அருமையான அனுபவம். பகிர்வுக்கு நன்றி.
( நீங்கள் புதுக்கோட்டையா, நான் புதுகை ஆலங்குடி. )
வாங்க சிவகுமரன்,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நான் புதுகையே தான். நீங்களும் நம்ம ஊருதான் என்பதில் ரொம்ப சந்தோஷம்
Post a Comment