Thursday, January 20, 2011

அரே ஓ சாம்பா!!!

மறக்கமுடியாத படம் ஷோலே!! ஷோலேவை ரீமேக் செய்ய நினைச்சு
அம்ஜத்கானின் குரல் இப்ப கம்பீரமா இல்லைன்னு அவரை அந்த
ரோலுக்கு நிராகரிச்சாங்கன்னு படிச்சு சிரிச்சுகிட்டே இருந்தேன்.
அமிதாப்புக்கு 67 வயசு, ஹேமமாலிஹி 60, தர்மேந்த்ரா 70, சஞ்சீவ்
குமார் பரலோகத்துக்கே போயிட்டாரு!! ஆனா ரீமேக் செஞ்சாலும்
அந்த மாதிரி படம் வருமா??? சந்தேகம் தான். பட படன்னு ஹேமா
மாதிரி பேச கூட யாராலும் முடியாது!

சரி ஷோலே புராணம் இப்ப எதுக்கு? என் மகனுக்கு எங்கேயிருந்துதான்
காரைப்பத்தியும், ஹோட்டல்ஸ் பத்தியும் இன்பர்மேஷன் கிடைக்குதோ??!!!
எங்க வெட்டிங் டேக்கே இந்த ஹோட்டலுக்கு போகணும்னு சொன்னான்.
ஏனோ அன்னைக்கு அங்க போகல. சரி தங்கச்சி பர்த்டேவுக்காகவாது
அங்கே போகணும்னு சொல்லிட்டார். பேகம்பேட்டில் இருக்கும்
”ஷோலே” அப்படிங்கற ஹோட்டல். அந்த தண்ணி டேங்கிலேர்ந்து
எல்லாமே சூப்பர். வீரு,ஜெய் வீடுன்னு எழுதி அங்க அவங்க போட்டோ
வெச்சிருந்தாங்க. அதுல அமிதாப் படம்தான் கொடுமை!!!


ஹேமமாலினி ஷோலேவுல அழகா இருப்பாங்க. அவங்களை ஏதோ
அரக்கி மாதிரி வரைஞ்சிருந்ததுதான் கொடுமை. ஆனா டாகூர், அம்ஜத்கான்,
அந்த ஜெயலர் அஸ்ரானி போட்டோக்கள் அருமையா இருந்தது.


சாப்பாட்டு மேட்டருக்கு வருவோம். அலாகரட்டி மெனுதான். பைசா வசூல்னு
சொல்வாங்களே அது இங்கே நிஜம். விலையும் அநியாயம் இல்லை.
தக்காளி சூப் இன்ஸ்டண்ட்டால செய்யாம ஒரிஜனலா செஞ்சிருந்தாங்க.
சுவை அபாரம். “Desi ghee ki paratha" அப்படின்னு ஒண்ணு இருக்கு.
நம்ம ஆலு,கோபி, பனீர் பராத்தக்கள்தான். ஆனா நெய் சொட்டச்சொட்ட. தொட்டுக்க
தயிர் ம்ம்ம்ம்... ஒரு ப்ளேட் 2 (நாலு ஹாஃப்) கொடுக்கறாங்க.
விலை 110/-. லொகிக்கி கோஃப்தான்னு நம்ம சுரைக்காய் கோஃப்தா
சாப்பிட்டோம். சூப்பர். இந்த ஹோட்டலின் ஷ்பெஷாலிட்டின்னு எனக்கு
பட்டது உணவு ஃப்ரெஷ்ஷா இருப்பதால சுவை நல்லா இருக்கு.
(சில ஹோட்டலிகளில் மிஞ்சியதை சூடு செஞ்சு கொண்டு வந்து
கொடுப்பாங்க)

burrp.com இந்த ஹோட்டலை தன்னோட
லிஸ்டில் சேத்திருக்கு.

celebrity hotels குருப்பை சேர்ந்தது இந்த ஹோட்டல். ஹைதை
ஷமீர்பேட்டீல் செலிபிரட்டிரிசார்ட் இருக்கு. பிரஜய் வாட்டர் ஃப்ரண்ட்
எல்லாம் இவங்களோடதுதான்.

மெனு கார்ட்ல ஷோலே டயலாக்குகள், ஷோலே பத்தின அபூர்வ படம்,
இருக்கு. மெனு கார்ட்ல கடைசியா கப்பரோட படம் போட்டு அவரோட
ஃபேமஸ் டயலாக் ஒண்ணு.

தூர் தூர் காவோன் மே ஜப் பச்சா ரோத்தா ஹை!!
தோ மா கெஹ தீ ஹை!

சோ ஜா பேட்டா! சோ ஜா பேட்டா!

வர்ணா கப்பர் ஆ ஜாயேகா!!

DHOOR DHOOR GAAOON MEIN

JAB BACHA ROTHA HEIN

THO MA KAHATHE HAI

SO JAA BETA... SO JAA

VARNA

GABBAR AA JAYEGA!!!!

டெஸ்ட்டாக சூப்பர் ரஸமலாயுடன் டின்னர் இனிதே நிறைவேறியது.

celebrity hotels இந்த லிங்குல ஹோட்டலோட சில போட்டோக்கள்.


16 comments:

Chitra said...

sounds good. Enjoy!

புதுகைத் தென்றல் said...

taste is also good :))

varugaiku nandri chithra

எல் கே said...

haithai vantha anga saappodaren

அமுதா கிருஷ்ணா said...

ஹைதைக்கு ஒரு நடை வரணுமே..

அமைதிச்சாரல் said...

கித்னே ஆத்மி தே :-)))

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

அரே ஓ சாம்பா! ஹோலி கப் ஹே!!

:)))))

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://rasithapaadal.blogspot.com/2011/01/blog-post_20.html

புதுகைத் தென்றல் said...

வாங்க எல்கே,

எங்க வீட்லயும் சாப்பிடலாம். 10நாள் ட்ரிப் வெச்சு வாங்க. சுவைக்கலாம்

புதுகைத் தென்றல் said...

கண்டிப்பா வாங்க அமுதா,

நானும் இருக்கேன்

புதுகைத் தென்றல் said...

எல்லோருக்கு ஷோலே டயலாக்குகள் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிடிச்சில்ல..

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்

புதுகைத் தென்றல் said...

வாங்க வெங்கட்,

நம்ம கட்சியின் உணவுதான் அங்கே சூப்பரா எஞ்சாயலாம்.

வருகைக்கு நன்றி

கோவை2தில்லி said...

ஹைதைக்கு கண்டிப்பா வந்திடறோம். தகவலுக்கு நன்றி.

சேட்டைக்காரன் said...

ஷோலே-யை தான் ராம்கோபால் வர்மா ரீமேக் பண்ணி வாங்கிக்கட்டிக்கினாரே? கப்பர்சிங் வேஷத்துலே அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் வேஷத்துலே மோகன்லால்-னு! :-)

ஆனா, ஹோட்டல் ஐடியா படு சூப்பர்! :-)

புதுகைத் தென்றல் said...

கண்டிப்பா வாங்க கோவை2தில்லி,

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

ஆமாம் சேட்டைத்தம்பி,

சூப்பரா இருக்கு. சாப்பாடும் நல்லாவே இருந்ததுச்சு.

வருகைக்கு நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் said...

இவ்வளவு எழுதறவங்க.. இந்த இந்திச் சொற்களுக்கு அர்த்தமும் எழுதியிருக்கலாம். :-)

புதுகைத் தென்றல் said...

அக்கம் பக்கத்து கிராமங்களில் பசங்க தூங்காட்டி அவங்க அம்மாக்கள் இப்படித்தான் சொல்வாங்களாம்! அது என்னன்னா? தூங்கிடுப்பா! இல்லாட்டி கப்பர் வந்திடுவான்.

ஓகேவா ஃப்ரெண்ட்