ஒரு ஹோட்டலுக்கு போயிருந்தப்ப பக்கத்து டேபிளில் வந்த அமர்ந்தாங்க
ஒரு குடும்பம். மெனுகார்டை பாத்து அந்தம்மா அந்த சப்ஜீல பனீர் இருக்கும்
வேண்டாம்! இதுவும் பனீர் வேண்டாம்னு சொல்லிகிட்டே இருந்தாங்க.
பனீர் சாப்பிட்டா தப்பில்லம்மான்னு மகன் சொல்லவும் அவங்க பதில்,
“பனீர் சாப்பிட்டா குண்டாகிடுவோம்!!!”
உண்மையில் பனீர் நல்லதா கெட்டதா? பெரிய குழப்பம் தான் நமக்கு.
பனீர் எப்படி செய்யப்படுது?
மற்ற நாடுகளில் செய்யப்படும் சீஸ்வகைகளில்
இது முற்றிலும் வேறானது. ரென்னட் என்று சொல்லப்படும் enzyme சேர்க்கப்படாதது.
அதனால் சுத்தமான வெஜீடேரியன்கள் தாரளமாக பயப்படாமல்
எடுத்துக்கொள்ளலாம். (ஆமாம் நீங்க சீஸ் வாங்கும் பொழுது அதில்
ரென்னட் இருக்கா இல்லையான்னு பாப்பீங்களா? இல்லையா?
அது மாமிச வகையைச் சார்ந்தது)
பாலில் எலுமிச்சம் ரசம்/தயிர் ஊற்றி திரியவிட்டு, அதை துணியில்
வடிகட்டி வைத்து செய்வது தான் பனீர். அந்தத் தண்ணீர் வே வாட்டர்
என பெயர். சப்பாத்தி மாவு பிசையலாம். அதிகமாக வாந்தி
எடுப்பவர்களுக்கு அந்த வே வாட்டர் கொடுத்தால் சக்தி கிடைக்கும்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் பனீரை மிகச்சிறந்த புரதச் சத்து தரும் ஒரு
உணவாக சொல்கிறார்கள். பனீரில் கொழுப்புச் சத்தே கிடையாது.
நாம் பருப்பு போட்டு செய்யும் சாம்பார், கூட்டு வகைகளில்
கிடைக்கும் புரதச் சத்தை விட அளவான புரதமே பனீரில் இருப்பதால்
நாம் தாரளமாக பனீரை சாப்பிடலாம் என சத்தியம் செய்கிறார்கள்
நிபுணர்கள்.
பனீரீல் கால்சீயமும் இருப்பதால் எலும்புகளுக்கும் பற்களுக்கும்
நல்லது. வளரும் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது. காய்கறிகளுக்கு
நோ சொல்லும் குழந்தைகளுக்கு அதில் கொஞ்சம் பனீர் சேர்த்து
கொடுத்துவிடுங்கள். அதிகம் புரதம் என்பதால் எளிதில்
செரிமானமாகாது. அதனால் அளவோடு கொடுங்கள்.
கடைகளில் லோ ஃபேட் பனீர், டோஃபு பனீர் ஆகியவையும் கிடைக்கிறது.
கடையில் வாங்குவதில் க்ரீம் சேர்க்கப்பட்டிருக்கலாமாம். வீட்டிலேயே
செய்யலாம் எப்பூடி? வருது வீடியோ!!
வாரத்திற்கு 3 நாள் பனீர் உணவில் சேர்க்கப்படுவதால் உடம்புக்குத்
தேவையான புரதச்சத்து, கால்சியச்சத்து கிடைச்சிடும். பால் குடிக்க
அடம் பிடிக்கும்குழந்தை கூட பனீர் விரும்பி சாப்பிடும். நல்லா
சாப்பிடக் கொடுங்க. நீங்களும் எடுத்துக்கோங்க. பனீர் சிறியவர்கள்,
பெரியவர்கள் அனைவருக்கும் நல்லது.
குழப்பம் தீர்ந்துச்சா? இனி தெகிரியமா ஹோட்டலில் பனீர் ஐட்டங்களுக்கு
ஆர்டர் கொடுக்கலாம். அதைவிடவும் சூப்பரா நீங்களே வீட்டில் செய்யலாம்.
சாப்பிடவாங்க ப்ளாக்குல இப்ப சப்பாத்தி வகைகள், சைட் டிஷ்வகைகள்
பதிவுகள் வந்துகிட்டு இருக்குல்ல. அங்க வாங்க. தெரிஞ்சிக்கோங்க.
32 comments:
இப்போதைக்கு ஜூனியரின் ஃபேவரைட் லிஸ்டில் பனீரும் உண்டு. டாக்டரும் குழந்தைகளுக்கு நல்லதுதான். தினமும் ஒரு சிறிய க்யூப் தரலாமென சொல்லியிருக்கிறார்.
வருகைக்கு நன்றி வித்யா
எனக்கும் பனீர் குறித்து இருந்த ஒரு பெரிய பயம் இந்தக் கட்டுரையால் நீங்கியது. நன்றி. ஆயினும் அதன் டேஸ்ட் எனக்குப் பிடிக்காதே.! :-))
வாங்க ஃப்ரெண்ட்,
ஊர் பயணம் எல்லாம் எப்படி?
பனீர் டேஸ்ட் பிடிக்காதா! இங்க வாங்க நான் செஞ்சு தர்றேன் அப்புறம் சொல்லுங்க.
நல்ல பகிர்வு சகோ. மிக்க நன்றி.
நல்லா விளக்கிச்சொல்லிட்டீங்க
உள்ள ஒரு பயம் இருந்தது..குழந்தைகளுக்கு செய்துட்டு, கொஞ்சமா சாப்பிடனுமோ நாமன்னு..:)
பனீர் பற்றிய பகிர்வு நல்லாயிருக்குங்க. என் மகளும் பனீர் அவ்வளவா சாப்பிட மாட்டா. அதனால அவளுக்கு ”பனீர் பராத்தா” செய்து கொடுத்துடுவேன்.
எனக்கும் பன்னீர் பற்றிப் பயம் இருந்ததுப்பா. கொலஸ்ட்ராலுக்குக் கெடுதின்னு நினைத்தேன்.
ஆனால் ஆதி சொல்கிற மாதிரி அது மேல விருப்பம் வருமான்னு சந்தேகமா இருக்கிறது;)
நல்ல பதிவுக்கு நன்றி.
நானும் பனீரை ஒதுக்கி வந்தேன். பதிவு தெளிவு செய்தது. நன்றி தென்றல்:)!
பனீர் பற்றி அருமையான தகவல்...பகிர்வுக்கு நன்றி...இனிமேல் எல்லொரும் வீட்டிலும் பனீர் தான் பாருங்க...
நன்றி வெங்கட் நாகராஜ்
அந்த பயமே வேண்டாம் கயல்விழி,
என்னுடைய டயட் ப்ளானில் நான் கண்டிப்பா வாரத்துக்கு 3 முறை பனீர் சாப்பிட்டே ஆகணும். நல்லதை தின்போம். நலமுடன் வாழ்வோம்.
வாங்க கோவை2தில்லி,
பனீர் பராத்தா சூப்பர். பனீர் புர்ஜி செஞ்சு கொடுத்து பாருங்களேன்.
வருகைக்கு நன்றி
வாங்க வல்லிம்மா,
உங்களுக்கு ரொம்பவும் நல்லது. நாம கால்சியம் சப்ளிமண்ட் எடுத்துக்கறதே இல்லை. அந்தக் குறையை இது போக்கிடும். பயப்படாம சாப்பிடுங்க.
வருகைக்கு நன்றிம்மா
பனீர் சாப்பிடறது நல்லதுதாங்க!ஹோட்டல்லே பனீர் சாப்புடுறதுதான் தப்பு! ஒரு மாதம் முன்னாலே NDTVலே ஹோட்டலில் பனீர் எப்புடி செய்றாங்கன்னு சொன்னாங்க!பார்த்தப்புறம் அய்யய்யோஓஓ!!
வாங்க ராமல்க்ஷ்மி,
பலருக்கு இந்த குழப்பம் இருக்கு. வருகைக்கு நன்றி
நன்றி கீதா ஆச்சல்
நீங்க வேற அருணா,
அவங்களுக்கு நியூஸ் கிடைக்கணும்னு பரபரப்பு உண்டாக்கும் நியூஸா காட்டுவது இந்த சேனல்களுக்கு வாடிக்கையா போச்சு. அவங்க சொல்வதில் கொஞ்சம் நிஜம் இருக்கும். இன்னும் சொல்லப்போனா எந்த 5 நட்சத்திர ஹோட்டல்களில் கூட ஹைஜீனிக் சாப்பாடு கிடைக்காதுன்னு அயித்தான் சொல்வாரு.
வருகைக்கு நன்றி
பனீரில் புரதம் மட்டுமல்ல, கொழுப்பும் உண்டு. பாலில் உள்ள கொழுப்புச்சத்தை தனியாக எடுத்துவிட்டுப் பிறகு பனீர் செய்தால் கொழுப்பு அளவாக இருக்கும். முழு கொழுப்புச் சத்தையும் நீக்குவது சாத்தியமில்லை.
பனீர் மக்கனி, புர்ஜி இருந்தா என் ரங்க்ஸுக்கு இன்னொரு ரொட்டி உள்ளே போகும். பனீர் டிக்காவும் அப்படித்தான் :-))
And it tastes much better than Tofu. :-)
வாங்க டாக்டர் ஐயா,
எல்லா கொழுப்புமே கெட்டது இல்லைன்னு எங்க டயட்டீஷியன் சொன்னாங்க. எதுவுமே அளவோடு இருக்கலாம் தப்பில்லை. 200கிராம் பனீரில் மிஞ்சிப்போனால் 4 பீஸ் (சின்ன சதுரமாக) சாப்பிட போகிறோம். அம்புட்டுதான்.
வருகைக்கு நன்றி
வாங்க அமைதிச்சாரல்ம்,,
பனீர் டிக்கா ம்ம்ம் சூப்பரா இருக்கும்.
வருகைக்கு நன்றி
வாங்க சித்ரா,
பால் உடம்புக்கு சேராதவங்க டோஃபு பனீர் உபயோகப்படுத்துவாங்க. சோயா பாலும் உடம்புக்கு நல்லதாச்சே!!
வருகைக்கு நன்றி
என் வீட்டம்மா செய்யும் பனீர் பட்டர் மசாலாவுக்கும் பாலக் பனீருக்கும் நான் அடிமை
இப்படி
பிட்டை போட்டே காலத்தை ஓட்டுவோர் சங்கம்
மங்களூர்
வாங்க தம்பி,
ஹஸ்பண்டாலஜியில மாங்கு மாங்குன்னு வரிஞ்சி கட்டிகிட்டு பின்னூட்டம் போட்ட ஆளா இது???!!!!
பனீர் பட்டர் மசாலாவும், பாலக் பனீரும் இப்படி மாத்திடிச்சே!!
:)))
வருகைக்கு நன்றி
//200கிராம் பனீரில் மிஞ்சிப்போனால் 4 பீஸ் (சின்ன சதுரமாக) சாப்பிட போகிறோம். அம்புட்டுதான்.//
இது ஒன்னும் ஜோக்கில்லையே.ஹி ஹி. நாங்க ஒரு டிஷ் பனீரையே தனியா ஆடர் பண்ணி வெட்டுற ஆளுங்க. பனீரில் சீஸ் மாதிரி நிறைய கொழுப்பில்லை. பொரிக்காமல், கீரையுடன் சேர்த்து சமைப்பது ரொம்ப நல்லது. அப்புறம் எதையும் அளவா சாப்பிட்டா (உன்ன மாதிரி ஒரு பிளேட்டு பனீரான்னு கேட்டா அப்பாவி தங்கமணி கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்) பிரச்சினை இல்லை.
மாமா சொல்றதும் சரி தாங்க்கா. 5 ஸ்டார் ரெஸ்டோரன்டிலும் நாங்க நினைக்கற மாதிரி சுத்தம்னு சொல்ல முடியாது. மலேசியா போன போது ஹில்டனில் கிடைச்ச அனுபவம். ஸப்பா ஆள வுடுங்க.
//பனீர் சாப்பிட்டா குண்டாகிடுவோம்//
ஹும்க்கும்... இல்லேனா மட்டும்...;)))
நல்ல informative போஸ்ட்... ஆனா எனக்கு என்னமோ பனீர் டேஸ்ட் சுத்தமா பிடிக்காதுங்க... எவ்ளோ வாட்டி வித விதமா ட்ரை பண்ணியாச்சு... என்னமோ சுத்தமா பிடிக்கல... இதை ஈஸியா உள்ள தள்ரதுக்கு எதுனா வழி இருந்தா சொல்லுங்க...:)
//அனாமிகா துவாரகன் said... உன்ன மாதிரி ஒரு பிளேட்டு பனீரான்னு கேட்டா அப்பாவி தங்கமணி கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்//
இந்த பொண்ணை உங்க ப்ளாக்ல இருந்து block பண்ண வழி இல்லையா புதுகை அக்கா..:)))
வருகைக்கு நன்றி அனாமிகா,
5 நட்சத்திரமென்ன 6 நட்சத்திரமென்ன அங்கே நடக்கும் அட்டூழியங்களைக் கண்டால் கொடுமையா இருக்கும். நேரடியாகவே சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.
:(
இந்த பொண்ணை உங்க ப்ளாக்ல இருந்து block பண்ண வழி இல்லையா புதுகை அக்கா..:)))/
:)
Post a Comment