Monday, January 24, 2011

இராகம்!! தாளம்! பல்லவி!!

பேர் சொன்னால் போதும் தரம் விளங்கும்னு சொல்வது போல
புதுக்கோட்டை அப்படின்னு எங்க ஊரு பேரைச் சொன்னாலே போதும்
எல்லோருக்கும் நல்லாத்தெரிய அளவுக்கு புகழ் பெற காரணம்
மே மாதத்தில் அங்கே நடக்கும் நரசிம்ம ஜெயந்தி + கச்சேரிகள்.
பெரிய பெரிய பிரபலங்கள் நிகழ்ச்சிகள் நடக்கும். எம் எஸ் அம்மால்லாம்
வந்திருக்காங்க. பக்கத்துலேயே தஞ்சாவூர் என்பதாலும், இப்படி
கச்சேரிகள் நடக்கும் இடம் என்பதாலும் எங்க ஊரில் அங்கங்கே
பாட்டு,வீணை, வயலின், மிருதங்கம்,நடன வகுப்புக்கள் நடக்கும்.

அம்மாவின் கொள்ளுத்தாத்தா சிதம்பர பாகவதர். ஸ்ரீராமதாஸ் சரிதத்தை
தெலுங்கில் எழுதியவர். ஆண்கள் கூட மிக அழகாக பாடும் குடும்பத்தில்
வந்த அம்மாவும் பாட்டுக் கற்றுக்கொண்டார். இப்போதும் நல்ல
குரல்வளம் அம்மாவுக்கு. ஏனோ அவ்வாவுக்கு அம்மா பாடுவதில்
இஷ்டமில்லாமல் போக அம்மாவின் குரல் அமுங்கித்தான் போனது.
ஆனாலும் பண்டிகைநாட்களில் அம்மா பாடும் மாயா தீதஸ்வருபீனியும்,
ஸ்ரீ சத்யநாராயணாவும் கேட்கும் போது அம்மாவின் குரல்வளத்தில்
உருகிப்போவேன்.

இப்படிப்பட்ட குடும்பத்தில் வந்த நான் பாடத்தெரியாவிட்டால் எப்படி
என்று யோசித்து என் அவ்வா(!!) வரவீணா ம்ருதுபாணி பாட்டு
சொல்லிக்கொடுத்து அம்மா பாட்டுபயின்ற சீனு சாரிடமே என்னை
பாட்டுக்கிளாஸுக்கு சேர்த்துவிட்டார். அம்மா பெரிதாக எந்த
ரியாக்‌ஷனும் காட்டவில்லை. பெண் பார்க்க வந்தால் பாடத்
தெரிந்திருக்க வேணுமென என் 14 வயதில் பாட்டுக்கற்றுக்கொள்ள
அனுப்பினார் அவ்வா. சீனு சார் மிக நல்ல கலைஞர். குரல்வளத்தோடு
அவர் வீணையிலும் வித்தகர். வீணையை வைத்துக்கொண்டுதான்
பாட்டு சொல்லித்தருவார். வீணை + வாய்ப்பாட்டு என நிதம்
வகுப்பே ஒரு கச்சேரி போல இருக்கும். நேரடியாக கீர்த்தனைகள்
சொல்லிக்கொடுத்தார்.

சுதாமயி சுதா நிதி- ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்
பாடல் எனக்கு ரொம்ப இஷ்டமாக இருந்தது. துலசி தல முலசே
என பல பாடல்கள் கற்றேன். 1 வருஷம் நடந்தது பாட்டுகிளாஸ்.
நான் இவ்வளவு அழகா பாட்டுகத்துகிட்டாலும் யாரும் என்னை
என்ன கத்துகிட்ட? பாடிக்காட்டு! என்று கேட்கவே இல்லை.
வகுப்பில் சேர்த்த அவ்வாவும் கேட்கவில்லை, அம்மாவும்
அப்பாவும் வேலை பிசியில் என் பாட்டுக்கிளாஸா ஞாபகம்
இருக்கும்! நொந்து நூலாகி ஒரு நாள் நான் இனி பாட்டு கிளாஸ்
போகமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதற்கும் பெரிதாக
ரியாக்‌ஷன் இல்லை!!!அம்மாவுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்த குருவிடம் நாமும்
கற்க போனால் எல்லாவற்றிற்கும் அவரோடு கம்பேரிசன் நடக்கும்.
அம்மாவைப்போல இல்லாவிட்டாலும் எனக்கென ஒரு தனிபாணி,
குரல் இருந்ததால் எந்த கமெண்டும் இல்லை. ஆனால் என்னை
ஊக்குவிக்க ஆள் ஏதும் இல்லாததால் ஒரு குறையாக தோன்றி
நல்ல திறமையை வளர்த்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

எல்லோரும் பாடினால் கேட்க ஆள் வேண்டாமா!! நான் அந்த
லிஸ்டில் சேர்ந்தேன். இனிமையான இசையை ரசிக்க இஷ்டம்.
அதுவும் என் மானசீக குருநாதர் யேசுதாஸ் குரலில் பாடல்கள்
என்றால் இகம் பரம் எதுவும் தெரியாது. ரசனை ரசனை!
கேள்வி ஞானம் இவைகளால் இப்போதும் பாடுவது உண்டு.
சினிமா பாடல், கர்நாடக சங்கீதம் என பேதம் கிடையாது.
இசை அது ஒன்று தான்.

அப்பாவும் நல்ல ரசிகர். ஒவ்வொரு வருடமும் தியாகய்ய ஆராதனை
கண்டிப்பாய் பார்ப்பார். இன்று தியாகய்யருக்கு 164ஆவது ஆராதனை
மிகச்சிறப்பாக நடந்தது. தூர்தர்ஷனில் பார்த்து ரசித்தேன்.


எந்தரோ மஹானுபாவுலு....


ரசிக்கும் அனைவர்களுக்கும் அந்த தியாகப்ரம்மத்தின் பாடல்கள்
மனதை மயக்கும். இராம பக்தி பெருகும்.


18 comments:

Samudra said...

நல்ல பதிவு? you mean ராகம் தானம் பல்லவி???

Chitra said...

very nice. :-)

வித்யா said...

அருமையான பாடல்கள். பகிர்விற்கு நன்றிக்கா.

புதுகைத் தென்றல் said...

வாங்க சமுத்ரா,

இராகம் தாளம் பல்லவின்னு கரெக்டாதான் சொன்னேன். நான் பாட்டு கத்துகிட்டதை ராகம் + தாளம்னு ஆரம்பிச்சு பல்லவி ஆரம்பிக்கும் நேரத்துல நின்னு போனதை சூசகமா சொன்னேன். :))

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி வித்யா,

நன்றி சித்ரா

சேட்டைக்காரன் said...

சங்கீதம் குறித்து அதிகம் அறிந்திராத போதிலும், அருமையான பகிர்வு!

பி.கு: யூ-டியூப் அகலத்தை குறைக்க முடியும். Edit HTML போய், அகலத்தை 460 எனவும், உயரத்தை 280 எனவும் மாற்றலாம்.

அமைதிச்சாரல் said...

நித்யஸ்ரீயின் குரலில் 'எந்தரோ' அருமை..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. நன்றி சகோ...

வெங்கட்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_24.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ நான் பாட்டு கத்துகிட்டதை ராகம் + தாளம்னு ஆரம்பிச்சு பல்லவி ஆரம்பிக்கும் நேரத்துல நின்னு போனதை சூசகமா சொன்னேன். :))//

:)))

புதுகைத் தென்றல் said...

வாங்க சேட்டைத்தம்பி,

அப்படியே செஞ்சிடறேன்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கயல்விழி

kadar said...

athu ennaaa alva? pudukottai alvava? thirunelveli alva than theriyum yenaku..

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு. ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லாத காரணத்தினாலேயே பலரது திறமைகள் வெளி வருவதில்லை.

புதுகைத் தென்றல் said...

வாங்க காதர்,

அது அல்வா இல்லை அவ்வா.

பாட்டியை அவ்வா என்பது பழக்கம்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேணும்னு சும்மாவா சொன்னாங்க.

வருகைக்கு நன்றி

kadar said...

ha ha... naanum kelvi patu iruken avvanaa paatinu. anyway avvaa kooda alvaa mathiri than... chooo.. chweeet....still i am not wrong.... lolz. (keezha vizhundhaalum meesaila man ottalaila...lolz)

kadar said...

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று

i like it for ever. also the place u used it... cheer up.....