Tuesday, January 25, 2011

UN SUNG HEROINES!!!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பெண் ஒரு பெண் உண்டுன்னு எல்லாம்
நல்லாச் சொல்வாங்க ஆனா எல்லா பெண்களுக்கும் புகழாரம் கிடைக்கறதில்லை.
இராமனோடு காட்டுக்கு போன சீதைக்கு பெயர் கிடைச்ச மாதிரி,
14 வருடம் தன் அண்ணனை காக்க நானும் காட்டுக்குபோவேன்னு போன
லட்சுமணனின் மனைவியின் தியாகம்... அதைப்பத்தி பெருசா
யாருக்குமே தெரியாது! அவளோட சோகம், தனிமை, பிரிவு இதெல்லாம்
கட்டாயம் பாராட்டப்பட்டு சரித்திரத்துல இராமாயணம்னு சொல்லும் பொழுதே
சீதையின் பெயரோடு லட்சுமணனின் மனைவி ஊர்மிளையின் பேரும்
சொல்லப்படணும். ஆனா இல்லை. இந்த மாதிரி மறக்கப்பட்ட
ஹீரோயின்கள் தான் UN SUNG HEROINES.

ஆரம்பம் முதலே நாட்டுக்காக உயிர்விட்ட தியாகிகளைப்பற்றி அதில்
சில பெண்கள் இருந்தால் அவர்களைப்பற்றி படிச்சு அவங்க தைரியம்
பார்த்து வியந்திருக்கிறோம், மரியாதை செலுத்தறோம். ஆனா
அந்த ஆண்கள் தன் வீட்டையும் மறந்து நாட்டின் மீது அக்கறை
செலுத்த காரணம் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்கள்.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லைன்னு
பாட்டு எழுதிகிட்டு பாரதியார் இருந்தார். ஆனா அவங்க மனைவி
அடுத்த வேளை சோறு சமைக்க முடியாமல் கஷ்டப்பட்டு குடும்பத்தை
எப்படியோ காப்பாத்தினாரே!!

இப்படி எத்தனையோ பேர்!!! அப்படி பட்ட பெண்களாலும் தான்
நமக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதால் அத்தகைய பெருமைமிகு
பெண்களுக்கு “ராயல் சல்யூட்”.

ஹைதையே ஆர்மி ஏரியாவுக்குச்சுற்றிதான் இருக்கிறது. ஒவ்வொருமுறை
அந்தப்பாதையை கடக்கும் பொழுதும் அந்த காவலர்களை பார்க்கும்பொழுதும்
இந்த லட்சுமணர்கள் தன் கடமையை ஆற்ற அவரை அனுப்பி வைத்திருக்கும்
ஊர்மிளையின் ஞாபகம்தான் வரும். பலர் அன்னையின் அனுமதி பெற்று
வந்திருப்பார்கள். எப்போது ஊருக்கு போவோம் எனும் எண்ணம் அவர்களுக்கு
இருக்கும். தன் கணவன் வந்து செல்லும் நாளுக்காக காத்திருக்கும் அந்த
காதல் மிகுந்த மனைவியின் ஏக்கமும் தான் நம்மை சுதந்திரமாக
பயமில்லாமல் வாழ வைக்கிறது என எண்ணும் பொழுது அவர்களின்
தியாகத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. மரண நேரக்கூடும்
என தெரிந்தும் தைரியமாக தேசிய படையில் சேர்ந்திருக்கும் காவலர்களுக்கு
தன் மகளை கொடுத்திருக்கும் அந்த மகான்களுக்கும் என் வந்தனம்.

பார்டர் படத்தில் இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் என்னுடைய
இந்த நினைப்பு இன்னும் அதிகமாகும்.

ஊரிலிருந்து வந்திருக்கும் கடித்தத்தில் தங்கள் நல்வரவை எதிர்பார்க்கிறேன்
என எழுதிருப்பாள் அந்தக் காதலி. கர்ப்பமான மனைவியை அருகிலிருந்து
பார்த்துக்கொள்ள வேண்டிய நேரத்திற்கு கூட இருக்க முடியாமல் எல்லையிலிருந்து
நாட்டைக் காக்கும் அந்த காவலர்களுக்கு என் வணக்கங்கள்.

தன்னுடைய ஒவ்வொரு சின்னச்சின்ன சந்தோஷத்தையும் விட்டுவிட்டு
ஏக்கங்களுடன் வாழும் சிப்பாய்களின் தாய்கள், மனைவி இவர்களுக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.உடனிருக்கும் சிப்பாய்களே தன் உறவினர்களாக நினைத்து தங்கள் கடமையை
அவர்கள் நிறைவேற்ற, கண்கண்ட தெய்வமான கணவனையும், மகனையும்
தேசத்துக்கு அர்ப்பணித்து பெரிய கடமையைச் செய்து அந்த மன நிறைவில்
வாழ இவர்களின் தியாகத்தில் நாம் வாழ்கிறோம். இதை நம் பிள்ளைகளுக்கும்
எடுத்துச் சொல்லி அவர்களுக்கும் புரியவைப்போம் தியாகம் எவ்வளவு
பெரியதென்பதை!!!

ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.

16 comments:

எல் கே said...

//இதை நம் பிள்ளைகளுக்கும்
எடுத்துச் சொல்லி அவர்களுக்கும் புரியவைப்போம் தியாகம் எவ்வளவு
பெரியதென்பதை!!!

ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.//

உண்மை.... நம்முடைய கடமை இது

Chitra said...

தன்னுடைய ஒவ்வொரு சின்னச்சின்ன சந்தோஷத்தையும் விட்டுவிட்டு
ஏக்கங்களுடன் வாழும் சிப்பாய்களின் தாய்கள், மனைவி இவர்களுக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

...Very touching!

புதுகைத் தென்றல் said...

வாங்க எல்கே,

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி சித்ரா

ஹுஸைனம்மா said...

//லட்சுமணனின் மனைவியின் தியாகம்... அதைப்பத்தி பெருசா
யாருக்குமே தெரியாது!//

ஆமாப்பா.. Unsung heroines... இவங்களைப் பத்தி யாருமே யோசிக்கிறதில்லை.. பாரதியார்க்கு கண்ணம்மா போல, காந்திக்கு கஸ்தூர்பா, இன்னும் நிறைய.. இவங்களோட மன உணர்வுகளும் மதிக்கப்படவேண்டும்.

புதுகைத் தென்றல் said...

இவங்களோட மன உணர்வுகளும் மதிக்கப்படவேண்டும்.//

பாராட்டப்படவேண்டும்.

வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு தென்றல்.

//சிப்பாய்களின் தாய்கள், மனைவி //

போற்றுவோம். வணங்குவோம்.

வந்தே மாதரம்.

கோவை2தில்லி said...

"தன்னுடைய ஒவ்வொரு சின்னச்சின்ன சந்தோஷத்தையும் விட்டுவிட்டு
ஏக்கங்களுடன் வாழும் சிப்பாய்களின் தாய்கள், மனைவி இவர்களுக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

...Very touching!"

நானும் சித்ரா சொன்னதை வழிமொழிகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

எப்பவுமே இவர்களைப் பற்றி யாருமே யோசிப்பதே இல்லை. நீங்க அவங்களை நினைவில் கொண்டு வந்ததற்கு நன்றி சகோ. நல்ல பகிர்வுக்கு நன்றி!

அப்பாவி தங்கமணி said...

Very touching post akka... very well written too... timely one


ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்

புதுகைத் தென்றல் said...

வாங்க ராமலக்‌ஷ்மி,

வருகைக்குமிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

நன்றி கோவை2தில்லி

புதுகைத் தென்றல் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

சிப்பாய்களின் மனைவிகள், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் மனைவிகள், சேல்ஸ் ரெப்களின் மனைவிகள்னு நிறைய்ய தியாக கூட்டம் இருக்கு. சிப்பாய்களின் மனைவிகள் நாட்டுக்காக தியாகம் செய்யறாங்க. உன்னதமானது. தன் குடும்பத்தினருக்காக மற்றவர்களின் மனைவிகள் செய்யும் தியாகமும் பலரால பேசப்படறதே இல்லை.(அவளுக்கென்ன புருஷன் வெளிநாட்டுல சம்பாதிச்சி கொட்டுறான் எனும் பெயர்தான் கிடைக்கும்)

வரும் ஆனா வராது எனும் ரீதியில் வந்து செல்லும் கணவன் அவர் இல்லாத சமயங்களில் குடும்பத்தை தனியாளாக நிர்வாகிப்பது என கஷ்டங்கள் அனுபவிக்கும் பொழுதுதான் புரியும்.

வருகைக்கு நன்றி சகோ

புதுகைத் தென்றல் said...

நன்றி தங்கஸ்,

சுரேகா.. said...

இந்தப்பாடலைக் கேட்டு காரணமே இல்லாமல் ஒவ்வொருமுறையும் கண்ணீர் வரும்..

அருமையான நினைவுகளை சிறப்பாக மீட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்!

புதுகைத் தென்றல் said...

வாங்க தலைவரே,

ரொம்ப நாளா ஆளைக்காணோமே!! நலமா??

வருகைக்கு நன்றி