Thursday, January 27, 2011

E. V. V. Satyanarayana

E. V. V. Satyanarayana இந்தப் பெயர் டாலிவுட்டில் மிகப் பெரிய பிரபலமான
பெயர். எத்தனையோ ஹிட் சினிம்மாக்களை கொடுத்தவர்.
செல்வச்செழிப்பில் வளர்ந்தவர் திடும்மென நொடித்துப்போன விவசாயத்தில்
இருந்த 70 ஏக்கரையும் விற்று கடனடைக்கும் சூழல். கையில் இருந்த
85ரூபாய் எடுத்துக்கொண்டு சென்னை வந்தார். மனைவியையும் பிள்ளைகளையும்
பெற்றோரிடம் விட்டிருந்தார்.ஜந்த்யாலா எனும் காமெடி பட டிரைக்டரிடம்
8 வருடங்கள் வேலை பார்த்து இவர் இயக்கிய முதல் படம் தோல்வியைத்
தழுவியது.


தெலுங்கு திரையுலகின் ப்ரம்மா ராமாநாயுடு இவருக்கு படங்கள்
இயக்க வாய்ப்பு கொடுக்க அங்கே ஆரம்பித்தது இவரின் வெற்றிக்கொடி.
தனக்கென ஒரு பாணி வைத்து பெரிய பெரிய நடிகர்களுடன்
இவரது படம் வெளிவந்தன. நாகார்ஜுனா டபுள் ரோலில் கலக்கிய
ஹலோ ப்ரதர் சூப்பர் டூப்பர் ஹிட்.

சூர்யவம்சம் ஹிந்தியில் இயக்கம் இவர்தான். அமிதாப் ஹீரோ அதில்.
தமிழில் ஆல்பம் எனும் படத்தில் நடித்த ராஜேஷின் தந்தை இவர்.
தொண்டை புற்றுநோய்க்கு ஆளாகி வைத்தியம் பார்த்து சற்று
குணமடைந்திருந்தார் சத்யநாராயணா. தனது இளைய மகன்
அல்லரி நரேஷை வைத்து ஹிட் காமெடி சினிமாக்கள் இயக்கி
வந்தார். ஜனவரி 21 அன்று இரவு ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்.

ஒரு சிறந்த காமெடி பட இயக்குனர் மறைந்ததில் தெலுங்கு சினிமா
உலகிற்கு பெரிய நஷ்டமே. தரமான காமெடி படங்களுக்குத்தானே
இப்போது பஞ்சம்!!!


4 comments:

வெங்கட் நாகராஜ் said...

:(((((

Thenammai Lakshmanan said...

ம்ம்ம் வருத்தம் தரும் செய்தி..

சுரேகா.. said...

அவர் மகன் நடிக்கும் அல்லரி நரேஷ் நடிக்கும் படத்தில் என் தோழி பூர்ணாதான் கதாநாயகி!. அவர் இரவு 2.30க்கு இறந்துவிட, அதிகாலை 5மணிக்கு ஹைதை- சென்னை விமானம். அதிகாலை அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் பூர்ணா. அன்று இரவு எல்லாரும் போனில் மூன்று மணிநேரம் போராடினோம். -

நல்ல இயக்குநரை தெலுங்குப்படவுலகம் இழந்திருக்கிறது.

pudugaithendral said...

வாங்க சுரேகா,

மிகப்பெரிய இழப்பு இது.

வருகைக்கு நன்றி