Monday, February 28, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி- 28/2/11

ஆந்திராவில் குளிர் காலத்தில் எதிர் பார்த்த வெப்பம்
வெய்யில் காலம் நெருங்கும் பொழுது சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.
ஒரு பக்கம் ஜகன் அண்ணா உண்ணாவிரதமா இருக்காரு.(டாக்டர்
உடம்பை குறைக்கச் சொல்லியிருப்பாரோ!!) தெலங்கானா பிரச்சனையில்
போன வாரம் நடந்த பந்த் பத்தாதுன்னு மார்ச் 5லேர்ந்து ஆர்ப்பாட்டம்
அதிகமா இருக்கும்னு சொல்லியிருக்காங்க. ஈஸ்வரா..... காப்பாத்துப்பா!!
மார்ச் 1 முதல் 9த்க்கு போர்டு எக்ஸாம்( சிபிஎஸ்ஸி ல இந்த வருஷத்
த்லேர்ந்து ஆரம்பிசிச்ருக்காங்க) அப்புறம் 10க்கு எக்ஸாம் எல்லாம்
வருது. இவங்க பிரச்சனையில வருங்காலத்தூணளின் வாழ்க்கை
கேள்விக்குறியாகிடாம இருக்கணும்!!!

அதான் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை கொடுத்திருக்காங்கள்ல.அதுல
அவங்களே சொல்லியிருக்கும் 6 திட்டங்களில் ஒண்ணை செலக்ட்
செஞ்சு தீர்த்து விட வேண்டியதுதானே!! ஹைதை யூனியன் டெரிட்டரி
ஆனா எம்புட்டு நல்லா இருக்கும்!!

******************************************************************

ஆந்திர அசெம்பிளி அமளி துமளி பட்டுச்சு. கவர்னர் நரசிம்மன்
அறிக்கை படிக்கும் பொழுது மைக்கை பிடிச்சு ஒடைச்சது, அவரது
சேரைத் தள்ளிவிட்டது, அவர் படிச்சுகிட்டு இருக்கும் பொழுது பேப்பரை
உருவப்பாத்ததுன்னு செம ஹாட்..

ஜெய்பிரகாஷ் நாராயண் அவர்களை ஒரு எம்பியோட டிரைவர்
தலையில் அடிச்சிருக்காரு. அடிடா அவனைன்னு ஏவிவிட்டது
மாண்புமிகு.கேசிஆரோட புத்திரன் கேடிஆர்.
அசெம்பிளிக்கு போகும் ஆளுங்களுக்கே இந்த கதின்னா சும்மா இருக்கும்
மிஸ்டர் பொதுஜனத்துக்கு பாது காப்பு ஏது???
************************************************************
இரயில்வே பட்ஜட் பாத்தேன். ஆஹா!! ஆஹா!! படக் படக்னு
கோவிச்சிக்கினு தீதீ பட்ஜெட் படிச்சது காணக் கண் கொள்ளாக்
காட்சி. கோவத்துல ஸ்கூல் பொண்ணு மாதிரி அவிக படக்னு
உக்காந்து கிட்டது கூட நல்லாத்தான் இருந்துச்சு. எலக்‌ஷன்
வரப்போறதால கட்டணத்தை உயர்த்தாம இருந்தாக. ஆந்திராவுக்கு
நிறைய்ய ட்ரையின் விட்டிருக்காக. எங்க புதுக்கோட்டைக்கும்
மன்னார்குடிக்கும் இடையே ரயில் பாதையை சீரமைச்சு ரயில்
விடப் போறாங்களாம்!! இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தவிர
வேற ஏதாவது ஒரு ட்ரையின் புதுகையிலேர்ந்து சென்னைக்கு
விட்டா புண்ணியமாப்போகும்!!

இன்னைக்கு மத்திய பட்ஜட். பாப்போம் என்ன பண்ணப்போறாங்கன்னு!
ஒழுங்கா வரிகட்டுற மாசச்சம்பளக்காறங்க வயித்துல பால் சொட்டாவது
வார்த்தா சரி. (ரொம்ப நாளா மண்டைய குடையற விஷ்யம் ஒண்ணு
இருக்கு. மாசச் சம்பளக்காரங்க கிட்ட மட்டும் சம்பளத்துலேர்ந்து
வரிக்குன்னு பிடிச்சுகிட்டுத்தான் சம்பளமே தர்றாங்க. ஆனா மத்தவங்க
வரியே கட்டாம ஏய்ச்சு பிட்டு போறாங்களே!! அவிங்கள ஒண்ணுமே
செய்ய முடியாதா!! ஏன்??!!!)
*********************************************************************
என்னக் கொடுமையோ தெரியலை!! புதுமையா இருக்கு.
திடும்னு மேகம் இருட்டுது மழை வர பாக்குதுன்னு நினைக்கும் பொழுதே
அடிச்சு ஊத்துது வானம். மப்பும் மந்தாரமாத்தான் இருக்கு. நடக்கட்டும்.
****************************************************************
ஆரம்பிச்சிருச்சு கிரிக்கெட் திருவிழா. அதுவும் பசங்களுக்கு பரிட்சை
இருக்கும் பொழுதுதான் இந்தத் திருவிழா வரும். இந்த வாட்டியும்
இப்படித்தான். பசங்களை படிக்க விடாம செய்ய என்னன்ன நடக்கணுமோ
அத்தனையும் நாட்டுல நடக்குது. நாமதான் பத்திரமா பாத்துக்கணும்.
*******************************************************************

ஊருக்கு போயிருந்தேன்ல. அங்க நடந்த ஒரு மேட்டரை கட்டாயம்
சொல்லியே ஆகணும். தெரிஞ்சவங்க கூட பேசிக்கிட்டு இருந்தப்ப
இந்த கரண்ட் கட்டால ரொம்ப பிரச்சனை! நமக்கு கரண்ட் இருந்தா
கேபிள் காரனுக்கு கரண்ட் இல்ல! போரடிக்குதுன்னு சொன்னாங்க.

எதுக்கு கஷ்டப்படணும்? பேசாம டிஷ் டீவி வாங்கிப்போடுங்களேன்னு!
சொன்னேன். அதுக்கு அவுங்க என்ன சொல்லியிருப்பாங்கன்னு
நினைக்கறீக!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அட போம்மா! கேபிள்ல புது படம்லாம் போடறான்ல!! அது நீ
சொல்ற டிஷ்ஷுல வராதே!!..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



15 comments:

எல் கே said...

//"ஹைதை ஆவக்காய பிரியாணி- //

இதைப் பார்த்து விட்டு என் மனைவி சமையல் குறிப்புன்னு சொன்னாங்க .. அவங்களை இப்படி ஏமாத்திவிடீன்களே

ஷர்புதீன் said...

hai............yyaa! me first!

துளசி கோபால் said...

மனபாரத்தை இதைப் படிச்சுத் தீர்த்துக்கிட்டேன்:-)

Chitra said...

அட போம்மா! கேபிள்ல புது படம்லாம் போடறான்ல!! அது நீ
சொல்ற டிஷ்ஷுல வராதே!!..



.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... அவங்க அவங்க கவலை அவங்களுக்கு!

pudugaithendral said...

வாங்க எல்கே,

//"ஹைதை ஆவக்காய பிரியாணி- //

இதைப் பார்த்து விட்டு என் மனைவி சமையல் குறிப்புன்னு சொன்னாங்க .. அவங்களை இப்படி ஏமாத்திவிடீன்களே

:)) ஹைதை ஆவக்காய பிரியாணிங்கற பேர்ல வர்ற கதம்ப செய்திகளின் தொகுப்பு அப்படின்னு சொல்லிடுங்க.

pudugaithendral said...

வாங்க ஷர்புதீன்,

எல்கே முந்திகிட்டாரு

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க டீச்சர்

மனபாரத்தை இதைப் படிச்சுத் தீர்த்துக்கிட்டேன்:-)

ஆஹா வருகைக்கு ரொம்ப நன்றி

pudugaithendral said...

வாங்க சித்ரா,

ரீஜண்ட் படம்லாம் போட்டிடறாங்களா அதனால் ஒண்ணும் செய்ய முடியலை. வருகைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

என்.டி.ஆர். தெரியும். கேசிஆர், கேடிஆர் - ஆர் இவங்க? :-))

ஆந்திராவைப் பாக்கும்போது, தமிழ்நாடு எவ்வளவோ தேவலையோன்னு தோணுது. பாவம் நீங்க. தெலுங்கானா பிரச்னையை இப்பத்திக்கு தீக்கமாட்டாங்க. தீத்துட்டா அப்புறம் அரசியல் பண்ண என்ன இருக்கு?

ADHI VENKAT said...

ஹைதை ஆவக்காய பிரியாணி நல்ல காரசாரமா இருந்தது!

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

என்.டி.ஆர். தெரியும். கேசிஆர், கேடிஆர் - ஆர் இவங்க? :-))

ஸ்மைலியும் நீங்களே போட்டுட்டீங்க :)) கேசி ஆர் (சந்திரசேகர ராவ்) தான் தெலங்கானா ராஷ்ட்ரா சமிதி கட்சியின் தலைவர். அவரோட தவப்புதல்வர் கேடி ஆர் (ராமாராவ்)


சீக்கிரத்துல ஒரு முடிவு தெரியாட்டி அம்புட்டுதான்.

pudugaithendral said...

ஆந்திராவைப் பாக்கும்போது, தமிழ்நாடு எவ்வளவோ தேவலையோன்னு தோணுது. //

ஹ ஹ ஹா காமடி பண்றீங்களே ஹுசைனம்மா

pudugaithendral said...

வருகைக்கு நன்றி கோவை2தில்லி

வல்லிசிம்ஹன் said...

தமிழ்நாட்டில யாரவது போராடிட முடியுமா தென்றல். !!நீங்க வேற. என்ன இருந்தாஅலும் உங்க ஊர்க்காரங்பிள்ளைங்க நல்லபடியாப் பரீட்சை எழுதணும்னு வேண்டிக்கறேன்.களுக்குக் காரம் அதிகம்:)

settaikkaran said...

//இன்னைக்கு மத்திய பட்ஜட். பாப்போம் என்ன பண்ணப்போறாங்கன்னு!
ஒழுங்கா வரிகட்டுற மாசச்சம்பளக்காறங்க வயித்துல பால் சொட்டாவது வார்த்தா சரி. //

இப்படி நீங்க குறைப்பட்டுக்குவீங்கன்னுதான் பிரணாப்தா வெறும் சம்பளம் மட்டும் வாங்குறவங்க ரிட்டர்ன்ஸ் ஃபைல் பண்ண வேணாமுன்னு சொல்லிட்டாரு. போதுமா? :-)