Monday, February 21, 2011

எங்க ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப மாறிப்போச்சுங்க!!!

அடிக்கடி சொந்த ஊருக்கு போறவங்களுக்கு ஊரில் ஏற்படும்
மாற்றங்கள் பெருசா தெரியாது. என்னிய மாதிரி ஆடிக்கொரு தரம்
அமாவாசைக்கொரு தரம் போறவங்களுக்கு, நம்ம ஊரு தானா!!
இதுன்னு தோணும்!

நானிருந்த புதுகையா இதுன்னு நினைக்கற மாதிரி பல
மாற்றங்கள்!! எங்க ஊருக்கு!! சிக்னல் போட்டப்பவே
புதுமையா பாத்தம். இது இங்க இருந்துச்சுன்னு நினைச்ச
இடத்துல அந்த கட்டிடம் இல்லை! புதுகையின் அடையாளமா
இருந்த விக்டோரியா வளைவை இடிச்சு தள்ளியதக்கப்புறம்
அந்தப் பக்கம் நிதானமா இப்பத்தான் போனேன். ஐசிஐசி பேங்க்
இருக்கும் அந்தக் கட்டிடம் அழகாத்தான் புளு கலர்ல மினுக்குதுன்னாலும்
ஆர்ச் இல்லாத அந்த இடம் வெறுமையைக் கொடுக்குது.

சமீபத்துல ஒரு புத்தகத்துல வைரமுத்து அவர்களின் ஊரில்
தியேட்டர் ஒன்றை இடிச்சிட்டாங்கன்னு அதைப்பத்தி
போட்டிருந்தாங்க. எங்க ஊருல ஒரு காலத்துல நிறைய்ய
தியேட்டர்கள் இருந்துச்சு. எஸ்.வீ.எஸ், சரவணா தியேட்டர்களோடு
பழநியப்பா தியேட்டரும் காணாம போயிடிச்சு. மிச்சம் இருந்தது
ஈனா,சாந்தி, ஆர்கேபி, வெஸ்ட் டாக்கிஸ் தான். இந்த
வாட்டி வெஸ்ட் டாக்கீஸ் பக்கம் போனா ஷாக் தான்! பாழடைஞ்ச
கட்டிடமா நிக்குது. அதையும் இடிக்கப் போறாங்கன்னு கேள்விப்பட்டு
திக்குன்னு ஆயிடிச்சு. இந்த தியேட்டர்ல தான் க்யூல நின்னு
அம்மாவோடு தேவர் மகன் படம் பாத்தது!!!
இப்படி சாதாரணமான தியேட்டர்களை பராமரிக்க முடியாமல்
இல்லாவிட்டா மற்ற ஏதோ காரணத்தால இடிச்சிடறாங்க.
மல்டிப்ளக்ஸ் இல்லாட்டி ஏசி தியேட்டர்களின் டிக்கெட் விலையைப்
பாத்து” கட்டுபடியாகாதுண்ணேன்!! கட்டுபடியாகாதுண்ணு”
சொல்லிக்கிட்டு திருட்டு வீசீடி வாங்கிப்பாக்க வேண்டிய
நிலைக்கு தள்ளிப்பிட்டு திருட்டு வீசிடியில படம் பாக்காதீங்க,
தியேட்டருக்கு வாங்கன்னு சொல்றாங்களே!! என்ன நியாயம்????

அப்பா புதுகை கோபரேடிவ் வங்கியில அப்பா வேலை செய்யும்
பொழுது ஒவ்வொரு வருடமும் வங்கியிலேர்ந்து காலண்டர்
கொண்டு வருவாரு. தேதி,நாள் எல்லா காலண்டருலையும் தான்
இருக்கு. ஆனா எனக்கு அந்தக் காலண்டர் ரொம்ப பிடிக்கும்!
காரணம் காலண்டரின் மேலே சின்னதா வங்கியோட படம்
இருக்கும். பிங்க் கலர்ல சூப்பரா இருக்கும். அதையும் மாத்திப்புட்டாங்க.
மேலே கூம்பு மாதிரி இருப்பதை மாத்தலை ஆனா முகப்பை
நீளக்கலர் கண்ணாடி கொண்டு அழகு செஞ்சிருக்காங்க!!
அசிங்கமா இருக்கற மாதிரி இருக்கு!!

ரோடுகள் விரிவுபடுத்தறாங்கன்னு கடைகள் உள்வாங்கி இருக்க,
பாதாள சாக்கடைகள் போடப்பட்டதன் அடையாளமா குண்டும்
குழியுமா வீதிகள். அளவு எடுத்தாப்ல அழகா இருந்த
வீதிகளா இதுன்னு இருக்கு. அங்கங்க புது ரோடு போட
மண்ணும்,ஜல்லியும் கொட்டி வெச்சிருக்காங்க. அந்த மண்ணெல்லாம்
மேடு மாதிரி ஆகி கிடக்கு.

நம்ம ஊரின் அடையாளம்னு நான் நினைப்பது கடைவீதிகளைத்தான்.
நகைக்கடைக்கு தனி வீதியே இருக்கும். ஆனா இந்த நகைக்கடை
வீதியிலையும் மாற்றம். டாடா கோல்டு ப்ளஸ், ஜோஸ் ஆலுக்காஸ்
போன்ற பெரிய கடைகள் ஆக்கிரமிக்க பாரம்பரிய சின்னக்கடைகள்
காத்துவாங்கிகிட்டு இருக்கு. நகைக்கடை வீதியில வேறக்கடைகள்
வந்திருக்கு.
கடைவீதியில் ராம் சைக்கிள்&கோ பாக்கும் பொழுது இந்தக் கடை
பசங்க படத்துல வந்துச்சே! நம்ம ஊரின் அடையாளாமாச்சேன்னு
போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டேன் (அப்ப இந்தக் கடையும்
எஸ்வீஆரும் தான் சைக்கிளுக்கு ஃபேமஸ்) கடை உரிமையாளரைக்
கேட்காம போட்டோ எடுக்கக்கூடாதுன்னு மெல்ல அவங்க கிட்ட
போயி போட்டோ எடுத்துக்கலாமா? நான் பீசிசி பேங்க ரமணி
சாரோட பொண்ணுன்னு! சொன்னேன். உங்களுக்கு அறிமுகமாம்மா!
நல்லாத்தெரியும், தாராளமா போட்டோ எடுத்துக்கங்கன்னு சொன்னாரு.
ஊருல அறிஞ்ச குடும்பம்தான் எங்களதுன்னாலும் அப்பா ரிட்டையர்
ஆகி 10 வருஷமாச்சு. நான் ஊரை விட்டு வந்து 18 வருஷமாச்சு.
இன்னமும் என்னை ரமணி மகள்னு ஞாபகம் வெச்சிருக்காங்கன்னு
நினைக்கும் பொழுது சந்தோஷமா இருந்துச்சு. அப்படியே க்ளுகோஸ்
ஏத்தினாப்ல ஆகிடிச்சு.

ஆஷிஷ் கேட்டுகிட்டதனால பேக்கரி மஹாராஜாவுலஅவருக்கு
பிடிச்ச கேக்குகள்பேக் செஞ்சு எடுத்துகிட்டு வந்தேன்.
எங்க ஊரு பக்கம் போனா இந்த பேக்கரி மஹாராஜாவுல கிடைக்கும் கேக்குகளை மட்டும் ருசி பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க. மதிய சாப்பாடு சாப்பிட கொஞ்சம் நேரம்தான் இருக்கும். கடைவீதியில பர்ச்சேஸ்
செஞ்சுகிட்டு இருந்தேன். அம்ருதம்மா அம்மா பேக்கரி மஹாராஜாவுல
கேக் வேணும்னு” கேட்டாங்க. இப்ப வேணாம்மா சாப்பிடணும்னு
சொல்ல இந்தக் கேக் ருசி எங்கயும் வராதும்மான்னு ஒரே
கெஞ்சல்ஸ்தான்!!! சரின்னு வாங்கிக்கொடுத்தேன். பேக்கரி மஹாராஜாவுக்கு
நிறைய்ய கிளைகள் ஊரெங்கும் இருக்கு.

முந்தி மாதிரி ஜவுளி வியாபரமும் இல்லைன்னு தான் தோணுது.
முதலியார் சில்க் பேலஸ், வாழைமரத்து ஜவுளிக்கடை
எல்லாம் பாவமோன்னு நினைச்சேன். தாரகை கடை வந்தபோது
இந்தக் கடைகளுக்கு நல்ல அடி. இப்ப அங்கயும் கூட்டம் இல்லை.
திருச்சியிலேயே போத்திஸ், சென்னை சில்க்ஸ்னு வந்திருச்சு.
தவிரவும் இப்ப எல்லோரும் அடிக்கடி சென்னை அப்படி இப்படின்னு
போறதாலயும் வியாபாரம் டல்லுதான்.

எங்க வீட்டுக்கு வாடிக்கையா பூ போட்டுகிட்டு இருந்த பூக்காரம்மாவை
பாத்து நலம் விசாரிச்சேன். அவங்க பையனுக்கு கல்யாணம்
ஆகலைன்னு விசனப்பட்டாங்க. பொண்ணுங்க ரொம்ப படிச்சிருக்கும்மா!
பையனுக்கு படிப்பு பத்தலை! எப்படித்தான் கல்யாணம் நடக்குமோன்னு?
புலம்பினாங்க. ம்ம்ம் இது யுனிவர்சல் ப்ராளமா போச்சேப்பா!!!

மொத்தத்துல ஊருக்கு போனா என்னவோ புது ஊருக்கு போன
மாதிரி ஃபீலிங் வர ஆரம்பிச்சிடிச்சு. ஆனா அந்த கொத்து
பரோட்டா போடும் சத்தமும், பரோட்டா மடித்து போட்டுக்கொண்டு
இருக்கும் சமையற்காரர்களின் கையிலயும் தான் ஊரின் ஞாபகத்தை
மிச்சம் வெச்சிருக்கோ!!!

நிரம்பி இருக்கும் செங்கல்பட்டு ஏரி:) கண்ணுக்கு இதமா இருந்துச்சு.
பல்லவனில் வரும்பொழுது போட்டோ பிடிச்சேன்.28 comments:

வெங்கட் நாகராஜ் said...

சில வருடங்கள் கழித்து நான் நெய்வேலி சென்றபோது நிறைய மாற்றங்கள் பார்த்தவுடன் எனக்கும் மனதில் ஒரு வித வலி! நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

அமுதா கிருஷ்ணா said...

சொந்த ஊர் மனிதர்களை சந்திப்பதே சந்தோஷம் தான்.

அன்புடன் அருணா said...

எப்போவாது ஊருக்குப் போகும்போது இப்படித்தான் எல்லாம் தலைகீழா ஆன மாதிரி தோணும்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
மாறவேண்டியது காலத்தின் கட்டாயம் தானே.. நமக்குத்தான் நினைவுகளில் பழயது வந்துபோகும்..

அமைதிச்சாரல் said...

ஒவ்வொரு முறையும் புதுப்புது மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும்போது லேசான ஒரு திடுக்கிடல்.. அப்புறம் பழகிப்போச்சுப்பா :-))

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

உங்களுக்குமா!!! வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

ஆமாம்பா, வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

எப்போவாது ஊருக்குப் போகும்போது இப்படித்தான் எல்லாம் தலைகீழா ஆன மாதிரி தோணும்!//

ஆமாம் அருணா

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

மாறவேண்டியது காலத்தின் கட்டாயம் தானே.. //

வாங்க கயல்,

ம்ம்ம் சரிதான். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

லேசான ஒரு திடுக்கிடல்.. //

வாங்க அமைதிச்சாரல்,

அந்த நேரத்தின் மனதின் உணர்ச்சி வார்த்தைகளால சொல்ல முடியறதில்லை!!

வருகைக்கு நன்றி

வித்யா said...

:)

மாற்றம் ஒன்றே மாறாதது..

raji said...

எனக்கு கூட எங்க ஊருக்கு போறப்ப
இதே ஃபீலிங்க்ஸ்தாங்க

Chitra said...

மொத்தத்துல ஊருக்கு போனா என்னவோ புது ஊருக்கு போன
மாதிரி ஃபீலிங் வர ஆரம்பிச்சிடிச்சு. ஆனா அந்த கொத்து
பரோட்டா போடும் சத்தமும், பரோட்டா மடித்து போட்டுக்கொண்டு
இருக்கும் சமையற்காரர்களின் கையிலயும் தான் ஊரின் ஞாபகத்தை
மிச்சம் வெச்சிருக்கோ!!!


.......நான் நெல்லைக்குப் போகும் போதும் இப்படியெல்லாம் மாறி இருக்குமோ... சில விஷயங்கள் மாறாமல் இருக்கணும் என்று வேண்டிக்கிறேன்.

AKM said...

hello madam
how r u..
உங்க அப்பா பேங்க் அழகாயிடுச்சுனு எழுதுவிடுவீங்கன்னு நினைச்சேன்.. ஆனா கரெக்டா சொல்லியிருக்கீங்க.. வயதான பாட்டி இயல்பான முக சுருக்கங்கள் பருத்திபுடவை என அவரின் இயல்போடு இருப்பதுதான் அழகு.. அவரே புல் மேக்அப் மாடர்ன் டிரெஸில் நின்றால் மரியாதை வரா..அந்த பாராம்பரிய கட்டிடத்தை அதன் பானியில் அழகுபடுத்தியிருந்தால் அதன் கம்பீரம் இன்னும் கூடியிருக்கும்..
ஊர் மாற்றம் பற்றி நல்ல அனலைஸ் பன்னியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்
அன்புடன்
ஏகேஎம்

புதுகைத் தென்றல் said...

வாங்க ராஜி,

இந்த வாட்டி என்னவோ எனக்கு ஊருக்கு போனாப்லயே இல்லை.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

.......நான் நெல்லைக்குப் போகும் போதும் இப்படியெல்லாம் மாறி இருக்குமோ... சில விஷயங்கள் மாறாமல் இருக்கணும் என்று வேண்டிக்கிறேன்.//

வாங்க சித்ரா,

நானும் வேண்டிக்கறேன். வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க ஏகேஎம்,

நான் நலம். என்ன ரொம்ப நாளா உங்களை ஆளைக்காணோம்? நலம்தானே?

அப்பா பாங்கு என்பதால அழகா இருக்குன்னு சொல்லிட முடியுமா. பிசிசி பேங்குக்கே உரிய பிங்க் கலரை எடுத்திட்டு ப்ளூ கலர்ல போட்டிருக்காங்க. அந்தப் பக்கம் போகும் பொழுது ஒரு ஒட்டுதலே வரலை. :( நான் பாத்து பாத்து ரசிச்ச இடம் அதுவான்னு இருக்கு.

//அந்த பாராம்பரிய கட்டிடத்தை அதன் பானியில் அழகுபடுத்தியிருந்தால் அதன் கம்பீரம் இன்னும் கூடியிருக்கும்..// ரொம்பச் சரியா சொன்னீங்க

புதுகைத் தென்றல் said...

ஊர் மாற்றம் பற்றி நல்ல அனலைஸ் பன்னியிருக்கீங்க//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏகேஎம்

கோவை2தில்லி said...

நானும் ஊருக்கு போகும் போது இந்த மாற்றங்களை கண்டு திடுக்கிட்டிருக்கேன். நாங்கள் கோவையில் 20 வருடங்கள் இருந்த அரசு குடியிருப்பையே கட்டிடம் பல வருடங்கள் ஆனதால் இடித்து விட்டார்கள் என்று தம்பி சொல்லும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது. சிறிய அறையாக இருந்தாலும் அப்போது அது அரண்மனை போல் தான் எனக்கு தோன்றியது.

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு. அந்த கூட்டுறவு வங்கி காலண்டர்.. சேம் ப்ளட்..

புதுகைத் தென்றல் said...

வாங்க கோவை2தில்லி,

ம்ம்ம்ம் எல்லா ஊரும் மாறிக்கிட்டு வருது.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சரவணக்குமார்,

உங்களுக்குமா சேம்ப்ளட்.

வருகைக்கு மிக்க நன்றி

மோகன் குமார் said...

எங்க ஊரை போட்டோவுடன் எழுதணும் போல இருக்கு.

புதுகை என நீங்கள் சொல்வது புதுக்கோட்டை தானே?

செங்கல்பட்டு ஏரி எனக்கும் ரொம்ப பிடிக்கும். ரயிலில் செல்லும் போது அதன் அழகை எப்போதும் ரசிப்பேன்

புதுகைத் தென்றல் said...

வாங்க மோகன்,

ஆமாம் புதுக்கோட்டையை சுருக்கமாக புதுகை என்பார்கள்.

உங்க ஊரைப்பத்தியும் எழுதுங்க
வருகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

நானும் வீட்டுக்காரம்மாவும் போனமாசம்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர், வீடு, படிச்ச பள்ளிகூடம் எல்லாம் பாத்திட்டு வந்தோம் அங்கயும் ரொம்ப மாறித்தான் போச்சு

vasanth thanga said...

புது குளம் பற்றி இல்லை

புதுகைத் தென்றல் said...

சூப்பர் சிவா

புதுகைத் தென்றல் said...

புதுகுளம் பக்கம் போகவே இல்லைங்க. அதையும் படம் பிடிச்சு போடணும்.
செய்வோம் :))
வருகைக்கு நன்றி