Sunday, February 20, 2011

நலம் தானா?!! நலம் தானா?!!

என்ன? எல்லோரும் சொளக்கியமா இருக்கீகளா?
ஊருக்கு போயித்திட்டு வந்திட்டேன். ஆனா பாருங்க
நம்ம கணிணிக்கு பெரிய ஜுரம் வந்திருச்சு. அதை
ஹாஸ்பிடலில் வெச்சு வைத்தியம் பாத்து கொண்டாந்தாங்க.
சரிதான்... அப்பா, அம்மா வந்திருக்கிற நேரம் அவுகளோட
இருக்கலாம்னு வலைப்பக்கம் வராம இருந்திட்டேன்.அத்தோட
மகனுக்கு ப்ரீபோர்டு பரிட்சை வேற!
கோவிச்சுக்கிடாதீக!!!

அம்மம்மா,தாத்தா வந்ததுல குட்டீஸுக இரண்டும் செம குஷில
இருக்காக! ஒரு நாள் டீவி பார்த்துகிட்டு இருந்தாரு தாத்தா!
ஸ்கூல்லேர்ந்து வந்து பேரன் சேனலை திருப்பிக்கிட்டு இருக்க
”ஹை!! சூப்பர் படம்னு!” ஒரு சேனலை வெச்சு பாக்க
ஆரம்பிக்க,தாத்தா “அந்த சேனல்ல நல்ல படம்டா தம்பி”
அப்படின்னு சொல்ல. இதுதான் தாத்தா சூப்பர்னு சொல்ல
அந்தக் காமெடியை மட்டும் பாத்திட்டு உங்களுக்கு உங்க
சேனல் வைக்கறேன்னு சொன்னாரு. (பேரன் பாத்துகிட்டு
இருந்த படம் “காதலிக்க நேரமில்லை”!!! தாத்தா பாத்தது
“ஏப்ரல் மாதத்தில்” :)) )

ரொம்ப நாளைக்கப்புறம் இந்த வாட்டி என்னோட ரயில் பயணம்
ரொம்பவே இனிமையா இருந்துச்சு. சென்ற பதிவுல துளசி
டீச்சர் சொன்னாப்ல சக பயணிகளும் சுமூகமா இருக்கறவங்களா
வந்தா பயணம் இனிக்கும் தானே!. மறக்க முடியாத ரயில் சிநேகம்.
எதிர் சீட்டுல உக்காந்திருந்தவரு அம்ருதாவை பார்த்து தன்
உறவினர் மகள் மாதிரி இருப்பதா சொல்ல பேச்சு ஆரம்பிச்சது.
பரஸ்பரம் அறிமுகத்தின் போது நானொரு முன்னாள் மாண்டிசோரி
ஆசிரியைன்னு சொன்னதுதான் தாமதம், பக்கத்து சீட்டுக்கார
தனது மகளின் பள்ளி அனுபவத்தை ஆரம்பிச்சாரு.

பணத்தை கொட்டுறேன், எல்லாம் அவங்க சொல்லிக் கொடுக்கணும்னு”
சொல்ல ஆரம்பிச்சது கச்சேரி. ஆசிரியையா அவங்க பங்கைச்
செய்யணும்னு சொல்றீங்க, பெற்றோரா, தகப்பனா உங்க பங்குக்கு
என்ன செய்யறீங்கன்னு கேக்க? மத்தவங்களும் யோசிச்சாங்க.
பக்கத்துல இருந்த் 1 வயசு குழந்தையோட அப்பாவும் கச்சேரில
சேந்துக்க சுவாரசியம் ஆரம்பமானது. எதிர் சீட்டுல இன்னொரு
நண்பர் படிப்பு சம்பந்தமா சில சீடிக்களை வியாபராம் செய்பவராம்.
அவரும் சேர்ந்துக்க செம ஜாலி.

குழந்தைகளோட நேரம் செலவழீப்பங்களான்னு கேக்க பேந்த பேந்த
முழிச்ச அந்த அப்பாக்களை பாக்க பரிதாபமா இருந்துச்சு. டீச்சரை
எல்லாம் சொல்லிக்கொடுக்கணும்னு சொல்றீங்க, ஆனா ஆசிரியர்
பயிற்சி இல்லாதவர் பயிற்சி கொடுத்தா ஒத்துக்கறீங்க! டாக்டருக்கு
படிக்காதவங்ககிட்ட மருத்துவம் பாக்க மாட்டீங்க தானே! இது
மாத்திரம் ஓகேவான்னு கேக்க ஒருத்தர் ஆமாங்க! இந்தக் கோணத்துல
யோசிக்கலியேன்னு சொன்னார்.

உங்க ஒரு குழந்தையை கட்டி மேக்க முடியலைன்னு கத்தறீங்க,
டீச்சருங்களை நினைச்சு பாருங்க! அப்படின்னு நம்ம பேரண்ட்ஸ்
கிளப்பில் எழுதின பல மேட்டருங்களை பகிர்ந்துகிட்டேன். நீங்க
சொல்வது நியாயங்க! நானும் இனி என் பிள்ளைகளோட நேரம்
ஒதுக்கறேன்!அப்படின்னு ஒரு நண்பர் சொல்ல மனதுக்கு இதமா
இருந்துச்சு. என் மகளுக்கு இப்ப ஒரு வயசு! வீட்டுல இங்கிலீஷ்
மட்டும்தான் பேசப்போறேன். என் மகளுக்கு ஆங்கிலம் தெரியணும்.
அப்படின்னு ஒருத்தர் சொல்ல,”ஆங்கிலம் எப்படியும் கத்துக்கலாம்!
ஆனா தாய்மொழியை நாமதான் வீட்டுல சொல்லிக்கொடுக்கணும்னு!!
சொல்ல அவர் யோசிக்க ஆரம்பிச்சாரு. பிரபாலமான பள்ளியில்
சேர்த்து பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெஸ் அதிகம் தரணுமா?? இப்படி
பல டாபிக்குளில் பேச்சு சுவாரசியமா நடந்துச்சு.

உங்க பாயிண்டுக்கள் ரொம்ப உபயோகமா இருந்துச்சு. சுவாதிங்கற
தெலுங்கு பத்திரிகையில் என் நண்பர் இருக்காரு, அவரை உங்களை
வந்து சந்திக்க சொல்றேன். இப்ப நீங்க எங்க கிட்ட பகிர்ந்துகிட்டதை
பத்திரிகையில சொல்லுங்க. பல லட்சம் பேருக்கு சென்று சேரும்னு!
சொல்ல எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை! (என்னோட
விவரங்களைத் தராமலே வந்திட்டேன்!! :) பேசி முடிச்சுட்டு தூங்கி
எந்திரிச்சு தாமதமாக சென்னையை அடைந்த ட்ரையினிலிருந்து இறங்கி
7.50க்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க ஓடும் அவசரத்துல
மறந்து போச்சு)

குருவாயூர் எக்ஸ்பிரஸ் சூப்பர். மதியம் வைகையை பிடிக்கும்
வரை காத்திருக்காமல் திருச்சியை அடைய சூப்பர் வழி இது.
திருச்சியில் அப்பா அம்மா வந்து காத்திருக்க சங்கீதா ஹோட்டலில்
சூப்பரா லன்சை சாப்பிட்டு புதுகை போய் சேர்ந்தாச்சு.

சனிக்கிழமை காலை பல்லவனில் கிளம்பி சென்னை வந்து,
சென்னையில் என் தோழியை சந்திச்சு, மாம்பலத்தில்
பர்ச்சேஸ் முடிச்சு :) செண்ட்ரலில் நுழையவும் எங்க ட்ரையின்
ஷ்டேஷனுக்கு வரவும் சரியா இருந்துச்சு. அப்பா, அம்மாவுக்கு
பக்கத்து கம்பார்ட்மெண்ட். மாத்தலை. அசதியா இருந்ததால
சாப்பிட்டு தூங்க போயிட்டோம்.

சரியான நேரத்துக்கு செகந்திராபாத் அடைய போகுதுன்னு ஆனந்தப்
பட்டுகிட்டு இருந்த நேரத்துல ஷ்டேஷனுக்கு 5 நிமிஷம் முன்னாடி
போட்டுட்டாங்க ரெட்!! ஷ்டேஷனில் ப்ளாட்பார்ம் காலியில்லை!!
40 நிமிடங்கள் கழிச்சு!! ஷ்டேஷனில் நுழைஞ்சிச்சு ட்ரையின்.
அயித்தான் வந்திருந்தாரு ஷ்டேஷனுக்கு. வந்தக் கதையை
சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா அதுக்குள்ள அப்பா, அம்மா
திரும்பி போகும் நாளும் வந்திடிச்சு. ஆமாம் இந்த வாரக் கடைசியில
கிளம்பறாங்க.

இனி தொடர்ந்து பதிவுகள் வரும். சந்திப்போம்


13 comments:

ஹுஸைனம்மா said...

Welcome back!! அம்மாப்பாவொட பிஸின்னு நினைச்சேன். கம்ப்யூட்டர் சதியா?

ரெயில் பயணங்களில் பெற்றோர்களுடன் பேசினதை இன்னும் விவரமா, தனிப் பதிவா போட்டிருக்கலாம்.

”காதலிக்க நேரமில்லை” - ஆல்டைம், ஆல்-ஏஜ் ஃபேவரைட்!!

அன்புடன் அருணா said...

A teacher is always a teacher!

புதுகைத் தென்றல் said...

வாங்க ஹுசைனம்மா,

வந்தேன். நலமா? ரயில் பயணங்களில் நான் பேசியது பேரண்ட்ஸ் கிளப்புல தனித்தனி பதிவா இருக்கே.

ஆமாம் காதலிக்க நேரமில்லை எப்பவும் எல்லோராலும் விரும்பி பார்க்கப்படும் படம் தான்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க அருணா,

A teacher is always a teacher!//

ஆமாம்!! ஆமாம். மாத்த முடியுமா! ரத்தத்துல ஊறினதாச்சே!! :))

வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

we all are fine


இனி தொடர்ந்து பதிவுகள் வரும். சந்திப்போம்


sure sure :)

வல்லிசிம்ஹன் said...

இன்னிக்குத்தான் உங்களுக்கு மெயில் செய்யணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.!! நினைத்தேன் வந்தாய் ஆகிவிட்டது. அம்மா அப்பாவை இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்குச் சொல்லுங்களேன்.

வெங்கட் நாகராஜ் said...

சற்று இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. நல்ல பகிர்வு. ஊர் எல்லாம் சென்று வந்ததால் இடைவெளி என்று நினைத்தேன். கணினி சதியா?

அமைதிச்சாரல் said...

உங்களுக்கும் கம்ப்யூட்டருக்கும் லீவு முடிஞ்சதா.. வந்து ஜோதில கலந்துக்கோங்க :-)))

புதுகைத் தென்றல் said...

வாங்க தம்பி

நலம் என்பதை அறிந்து சந்தோஷம். :)

புதுகைத் தென்றல் said...

வாங்க வல்லிம்மா,

அம்மா அப்பா 15 நாள் இருந்தாலே அதிகம். இந்த வாட்டி இன்னும் 5 நாள் கூடவே இருக்காங்களே!!:))

வருகைக்கு நன்றிம்மா

புதுகைத் தென்றல் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

கம்ப்யூட்டர் சதி செஞ்சதாலத்தான் நீங்க எல்லோரும் தப்பிச்சீங்க :))

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

இதோ கலந்துக்கறேன் அமைதிச்சாரல்.

வருகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

வாங்கோ வாங்கோ!!

நானும் ரொம்ப நாள் கழிச்சி பதிவு படிக்க வந்திருக்கேன் :))